Official handle of the Department of Information & Publicity, Govt. of Puducherry | புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறையின் அதிகாரப்பூர்வ பக்கம் |
புதுச்சேரி தீயணைப்பு படையினர் "ஸ்வச்சதா ஹி சேவா" திட்டத்தின் கீழ், தீயணைப்பு நிலையங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பொது இடங்களில் தூய்மையை பேணுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஸ்வச்சதா ஹி சேவா இயக்கத்தின் கீழ், யானம் பிராந்தியம் எஸ்.டி. அகரஹாரம் அங்கன்வாடி மையத்தில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்கள் பங்கேற்புடன் சுற்றுப்புறப் பகுதிகள் சுத்தம் செ���்யப்பட்டு, தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 06, 2026 - 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் & மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்க படிவம் 12D-ஐ பூர்த்தி செய்து தேர்தல் அலுவலரிடம் விண்ணப்பிக்கவும் - மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அட்டவணையை தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். இதன்படி வரும் அக்டோபர் 6 ஆம் தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 9 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற���ுள்ளது.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, தேர்தல் நடத��தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதாக மாவட்ட தேர்தல் நிர்வாகம் தெரிவித்துள்ளார்.
சங்கரன்பேட்டை மற்றும் மணக்குப்பம் கிராமங்களில் ரூ.278.80 இலட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் திட்டம் மூலம் சுமார் 4,000 பேர் பயன்பெற உள்ளனர். இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவை மாண்புமிகு முதலமைச்சர் திரு. ந. ரங்கசாமி அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி மக்களின் இல்லத்தில் சுலோச்சனா தலைமையிலான ஓவியக் குழுவினர் வரைந்துள்ள புராண ஓவியத்தை மாண்புமிகு ஆளுநர் பார்வையிட்டு, ஓவியக் குழுவினரின் முயற்சியையும் சிறப்பான கலை��்பணியையும் பாராட்டினார்.
புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை ச���ர்பில் நடைபெற்ற ஆசிரியர் திருநாள் விழாவில், மாண்புமிகு முதலமைச்சர் திரு. ந. ரங்கசாமி அவர்கள் நல்லாசிரியர் விருதுகளை வழங்கி ஆசிரியர்களை கௌரவித்தார்.
புதுச்சேரி அரசின் சார்பில் இன்று (05.09.2026) “கப்பலோட்டிய தமிழன்” வ.உ. சிதம்பரம் பிள்ளையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பாரதி பூங்காவில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பாரத ரத்னா” அன்னை தெரசா அவர்களின் நினைவு நாள் புதுச்சேரி அரசு சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது. ப���துச்சேரி பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு. அ. அன்பழகன் மற்றும் அமைச்சர்கள் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.
இ���்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய பூவி கண்காணிப்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை முதலமைச்சர் திரு. ந. ரங்கசாமி பாராட்டியுள்ளார்.
புதுச்சேரி அரசுப் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 2026ஆம் ஆண்டிற்கான டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் விருது, மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு விருது மற்றும் மாண்புமிகு கல்வி அமைச்சரின் மண்டல விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் கொண்டாடும் வகையில், களிமண் சில��கள், இயற்கை வண்ணங்கள் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பொருட்களை பயன்படுத்துமாறும், விழாக்காலங்களில் நீர்நிலைகள் மாசுபடாமல் பாதுகாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் விழிப்புணர்வு மற்றும் ஜனநாயகப் பங்கேற்பை இளைஞர்களிடையே வலுப்படுத்தும் நோக்கில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கோவா, நான்காவது மண்டல மாநாட்டில் இளைஞர்களுக்கு வாக்காளர் பதிவு, வாக்களிக்கும் உரிமை மற்றும் தேர்தல் நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ந���வடிக்கைகள்
மகளிர் மற்றும் இளைஞர்களின் சுயவேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் நோக்கில், புதுச்சேரி அரசு வேளாண் & விவசாயிகள் நலத்துறை சார்பில் காய்கறி & பழவகைகள் பதப்படுத்துதல் தொடர்பான பயிற்சி மற்றும் மானிய உதவித் திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் 01.09.2026 முதல் 10.09.2026 வரை விண்ணப்பித்து பயனடையலாம்.
குபேர் அங்காடி, பழைய சிறைச்சாலை வளாகம் மற்றும் நெல்மண்டி வளாகங்களை ஒருங்கிணைத்து நவீன வணிக வளாகமாக மறுவளர்ச்சி செய்வது தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர் திரு. ந. ரங்கசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி தயாரிப்புப் பொருட்களுக்கான இலச்சினை இன்று (21.08.2026) வெளியிடப்பட்டது. பி��்டிக் மற்றும் தேசிய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு துணைநிலை ஆளுநர் திரு. கே. கைலாஷ்நாதன் அவர்கள் இலச்சினையை வெளியிட்டார்.
புதுச்சேரி ஜீவா நகர் பகுதியில் காலாவதியான பால் பாக்கெட்டுகளை பொதுமக்களுக்குச் சுகாதாரக் கேடு விளைவிக்கும் வகையில் கொட்டும் வர்த்தகர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் ரா. அருண் அய்யாவு எச்சரித்துள்ளார்.