காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் - ஆலந்தூர் தெற்குப்பகுதி - 164-வது வட்டக்கழக செயலாளராகவும், மாமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய நங்கநல்லூர் நேரு காலனியைச் சேர்ந்த அண்ணன் ஏசு (எ) ஜேசுதாஸ் அண்மையில் மறைந்தார்.
இன்றைய தினம் அண்ணனின் இல்லம் சென்று அவரது திருவுருவப்படத்தைத் திறந்து வைத்து மலர்தூவி மரியாதைச் செலுத்தினோம்.
மாவட்டக்கழகம் சார்பில் அண்ணன் ஏசு அவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.11 லட்சத்தை நிதியுதவியாக வழங்கினோம்.
அவரது துணைவியாரும் - மாமன்ற உறுப்பினருமான அக்கா தேவி உள்ளிட்ட குடும்பத்தார் - நண்பர்களுக்கு நம்முடைய ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்தோம்.
அண்ணன் ஏசு அவர்களின் கழகப்பற்றும் - கலைஞர் மீதும், கழகத்தலைவர் அவர்கள் மீதும் அவர் கொண்டிருந்த பாசமும் போற்றுதலுக்குரியவை.
கழக நிகழ்ச்சிகளில் கருப்பு - சிவப்புக் கொடியோடு அண்ணன் ஏசு எழுப்பிய கொள்கை முழக்கங்கள் உடன்பிறப்புகளின் செவிகளில் என்றென்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
அண்ணன் ஏசுவின் பணிகள் என்றும் நிலைத்திருக்கும்!
@thamoanbarasan
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School
திராவிட மாடல் அரசின் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக, கல்வெட்டை அகற்றுவது வெட்கமாயில்லையா திறமையற்ற @TVKVijayHQ அரசே?
#StickerCM#TVKFails
தமிழ்நாடு முதலமைச்சர் என்பதை இனி ‘தமிழ்நாடு —-------------’ என்று குறிப்பிட ஆயத்தமாகிவிட்டதா @TVKVijayHQ அரசு?
திராவிட மாடல் அரசால் முன்னெடுக்கப்பட்ட ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயரை மாற்றிய ஆமை வேக #SofaModel அரசு, நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் மற்றும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு சிறந்த, நவீன கற்றல் சூழலை உருவாக்கும் நோக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ‘முதல்வர் படைப்பகத்’தை ‘படைப்பகம்’ என்று பெயர் மாற்றியுள்ளது.
ஆட்சிப்பொறுப்புக்கு வந்த நாள் முதல் ஊடகங்களை சந்திக்காமல் வாய் கட்டு போட்டிருக்கும் முதலமைச்சர், தான் மேடைபோட்டு முழங்கிய திட்டங்களை சரிவர செயல்படுத்த முன்வராமல் தி.மு.கழக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களை முடக்கும் நோக்கில் செயல்படுவது காழ்ப்புணர்வின் உச்சம். சபாநாயகர் முதல் - #SofaModel அரசின் அமைச்சர்கள் வரை ‘தமிழ்நாடு முதலமைச்சர்’ என்றால் அது எங்கள் தலைவர் @mkstalin அவர்கள்தான் என்ற எண்ணப்போக்கில் இருப்பதால், முதல்வன், முதல்வர் என்ற பெயர்களை எல்லாம் முடக்க நினைக்கிறாரோ என்ற சந்தேகமும் எழுகிறது. மாநிலத்தின் உச்ச பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கு இவ்வளவு தாழ்வு மனப்பான்மை தேவையற்றது.
அல்லது ‘மு’ வில் தொடங்கும் சொற்களை இந்த ஆட்சியில் எந்த திட்டங்களுக்கும் சூட்டக்கூடாது, சூட்டிய பெயர்களும் தொடரக் கூடாது என தனது ஆஸ்தான ஜோதிடர் எதுவும் அறிவுறுத்தி உள்ளாரா என்று ‘மு’தலமைச்சரோ அல்லது ‘மு’தல்போட்ட அமைச்சரோ தெளிவுபடுத்த வேண்டும்.
அரசின் திட்டங்கள் மக்களின் குறைகளை தீர்த்து அவர்களை மகிழ்விக்க வேண்டுமே ஒழிய ‘மு’கம் சுளிக்க வைக்க கூடாது. Sticker அரசியலைக் கடந்து உருப்படியாக எதையாவது இந்த அரசு முன்னெடுக்க வேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
#MudhalvarPadaippagam #NaanMudhalvan #TVKFails
மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் கழகத்தலைவர் அவர்களின் பெயரை மறைப்பது, திமுக திட்டங்களுக்கு எல்லாம் ஸ்டிக்கர் ஒட்டுவது என அநாகரிக அரசியல் செய்யும் தவெக அரசைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன் அவர்களின் பேட்டி.
கடந்த திமுக ஆட்சியில் நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாவது பெரிய அலகை 24. 2. 2024 அன்று முன்னாள் முதலைமச்சர் கழகத்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இந்த நிலையத்திலிருந்து பெறப்படுகின்ற குடிநீர் சென்னை மட்டுமல்லாது, சென்னை புறநகர் பகுதியில் இருக்கிற செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில் செயல்படுத்தப்பட்டது. அந்த நிலையத்தின் மூலம் தென்சென்னை பகுதியில் அடங்கியிருக்கிற ஆலந்தூர் புனிததோமயர்மலை, மூவரசம்பட்டு, பல்லாவரம், கீழக்கட்டளை அதேபோல வேளச்சேரி, உள்ளகரம், புழுதிவாக்கம் , மடிப்பாக்கம் , கோவிலம்பாக்கம், நன்மங்கலம் ஆகிய பகுதிகளில் வசிக்கிற 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு தினமும் தண்ணீர் தர வேண்டும் என்ற நல்லநோக்கில் அந்த திட்டம் தொடங்கி வைக்கபட்டது.
அப்படித் தொடங்கப்பட்ட திட்டத்திற்கான கல்வெட்டும் அப்போது அதனருகே திறந்து வைக்கபட்டிருந்தது. தற்போதைய முதல்வர் இன்று ஆய்வுக்கு செல்கிறார் என மூன்று நாட்களுக்கு முன்பாகவே கம்பீரமாக நின்ற அந்த கல்வெட்டை துணியால் மூடி தலைவர் அவர்களது பெயரை எல்லாம் நீக்கி உள்ளனர். இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்ட போது கல்வெட்டு சிதிலம் அடைந்துள்ளதாகவும் ஒருவாரத்தில் சரி செய்து கொடுப்பதாகவும் கூறி உள்ளனர். இன்னும் ஒருவாரத்தில் மீண்டும் பழைய படி கல்வெட்டு சீரமைக்கப்படவில்லை என்றால் மாவட்ட திமுக சார்பில் மாபரும் போராட்டம் நடைபெறும் என்பதை எச்சரிக்கையாக தெரிவிக்க விரும்புகிறேன். இதுபோல பல இடங்களில் நாங்கள் கொண்டுவந்த திட்டங்களை மறைப்பதும், அதன் மீது ஸ்டிக்கர் ஒட்டுவதும் நடந்து வருகிறது. இது மிக மிக கண்டிக்கத்தக்கது.
இவர்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்து 50 நாள் ஆனது இதுவரை இன்னும் அவர்களுடைய திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. எனவே இதுபோன்ற வேலைகளை விட்டுவிட்டு புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
டிஎன்பிஎஸ்சி மூலம் 41 பேருக்கு வேலை கொடுத்துள்ளார்கள் அதுவும் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது தான். அப்பாயின்ட்மெண்ட் ஆர்டர் மட்டும்தான் இவர்கள் கொடுத்தது. பத்திரப்பதிவு துறையில் 3.0 கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டுவர தயாராக இருந்தது அதையும் இவர்கள் கொண்டுவந்தது போல பரப்புராங்க. இது மாதிரி திமுக ஆட்சியில் நாங்க கொண்டு வந்த திட்டங்களுக்கு எல்லாம் ஸ்டிக்கர் ஒட்டி அவர்கள் விளம்பரம் செய்யறாங்க தவிர புது திட்டங்கள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை.
எங்கள் தலைவர் தளபதி அவர்கள் 50 ஆண்டுகள் செய்ய வேண்டிய சாதனைகளை எல்லாம் 5 ஆண்டுகளில் செய்து காட்டினார். இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்த மாநிலம் என்ற தகுதியை உருவாக்கிக் காட்டினார். இன்று அவரது பெயரை கல்வெட்டில் இருந்து எடுத்துட்டா அவர் பெயர் மறைந்துவிடும் என நினைக்கிறாங்க ஆனா ஒவ்வொரு மக்களின் மனதிலும் கல்வெட்டாக பதிந்திருக்கிறார் எங்கள் தலைவர். கல்வெட்டில் நீக்கினாலும் மக்கள் மனதில் இருந்து எங்கள் தலைவர் முக. ஸ்டாலின் பெயரை நீக்க முடியாது.
இன்றும் தொடரும் மகளிர் உரிமை திட்டம், விடியல் பயணம் திட்டம், புதுமை பெண், தமிழ் புதல்வன், காலை உணவு திட்டம் இப்படி அனைத்து திட்டங்களும் எங்கள் தலைவர் பெயரை தான் சொல்லிக்கொண்டு உள்ளன. இந்த திட்டங்கள் எல்லாம் இருக்கிற வரையில் மக்கள் மனதில் இருந்து எந்த காலத்திலும் தலைவருடைய பெயரை புகழை அழிக்க முடியாது. அதேபோல நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிவிட்டார்கள். பெயரை மாற்றுவது கூட கவலை இல்லை ஆனால் அந்த வெப்சைட்டில் இருக்கக்கூடிய மாணவர்களின் வீடியோக்களை எல்லாம் நீக்கி விட்டார்கள்.
மு.க. ஸ்டாலின் பெயரை பார்த்தாலே முதல்வர் விஜய்க்கு உதறுது அதனால் தான் அவர் பெயர் உள்ள கல்வெட்டுகளை மறைத்து வருகிறார். முதல்வர் விஜய்க்கு ஒன்று சொல்லிக் கொள்கிறோம் ஸ்டிக்கர் மீது வைக்கும் நம்பிக்கைக்கு பதிலா நல்ல திட்டங்களை கொடுங்கள். அதை விடுத்து எங்களின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவது , கல்வெட்டுகளில் எங்கள் தலைவரின் பெயர் நீக்குவது போன்ற செயல்கள் தொடர்ந்தால் போராட்டம் வெடிக்கும்.
தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில், மருத்துவம் மற்றும் கல்வி உதவித் தொகையாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 25 பேருக்கு, கழக இளைஞர் அணிச் செயலாளர் - மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் ரூ.6,25,000/- மதிப்பிலான காசோலைகளை வழங்கினார்.
நிதி உதவிகளைப் பெறும் பயனாளிகளின் விவரம் வருமாறு:
#கழக_இளைஞர்_அணி
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு.@Udhaystalin அவர்கள், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் குடும்ப உறவினரான திருவாரூர் திரு.சண்முகம் அவர்களுடைய இல்லத்திருமணவிழாவில் பங்கேற்று, திரு.கண்ணன் – திருமதி.வள்ளி ஆகியோரின் பேத்தியும்,
திரு.வே.தம்பிதுரை – திருமதி.ஆனந்தவல்லி இணையரின் மகளுமான கண்மணி மற்றும் வேலூர் திரு.ஸ்ரீனிவாசன் – திருமதி.பிரியதர்ஷினி இணையரின் மகன் ஸ்ரீமாதேஷ்வரன் ஆகியோரின் திருமணத்தை பல்லாவரத்தில் இன்று தலைமையேற்று நடத்தி வைத்தார்கள்.
மணமக்கள் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துரை வழங்கினார்கள்.
சென்னை திருவேற்காட்டில் இன்று நடைபெற்ற தி.மு.கழகத்தின் தலைமை நிலைய அலுவலகச் செயலாளரும் - சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவருமான திரு.துறைமுகம் காஜா அவர்களின் மகள் வழி பேத்தி சமீனா சப்ரியத் - ஹனிஃப் கான் இணையரின் திருமண விழாவில், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு.@Udhaystalin அவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.