தலைவர் கலைஞர் ஒரு சிங்கம்!
தோல்வி பயத்தில், நாக்கில் நரம்பில்லாமல் பேசும் பழனிசாமி இனி எந்நாளும் ஆட்சிக்கு வரமுடியாது!
தலைவர் கலைஞர் ஒரு ���ிங்கம்! அந்தச் சிங்கத்தின் பிள்ளை நான். தந்தையாக மட்டுமல்ல, தலைவராக அவரை எந்நாளும் போற்றி வணங்குபவன்!
பண்பற்ற பழனிசாமி அவர்களே,
தலைவர் கலைஞர��ம் நானும் மக்களைச் சந்தித்து முதலமைச்சரானவர்கள். உங்களைப் போல, கூவத்தூர் கும்மாளங்களால், கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் பொறுப்பை ஏலத்துக்கு எடுத்தவர்கள் அல்ல!
எங்களைப் பற்றிப் பேசும் தகுதி உங்களுக்கு இல்லை! தமிழ்நாட்டுக்கு மக்கள் என்றுமே அந்தத் தகுதியை உங்களுக்கு வழங்க மாட்டார்கள்!
மே 4: மக்களின் Judgement Day-வில் உங்களுக்கான தண்டனை கிடைக்கும்!
சிறுபான்மையினருக்கு எதிரான பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணி!
‘இந்தியாவில் சிறுபான்மையினர் பெரும்பான்மையினருக்கு கீழ்படிந்து அடங்கியிருக்க வேண்டும்’ என்பதுதான் கோல்வால்கர், ஹெட்கேவார் போன்ற ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் கருத்து. இதைத்தான் இப்போது நாடு முழுவதும் பா.ஜ.க நடைமுறைப்படுத்த துடிக்கிறது. அதற்கு அடிமை எடப்பாடி பழனிசாமியின் அதிமுகவும் துணைபோகிறது.
வெளிநா���்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டமுன்வரைவு, 2026 என்ற பெயரில் ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டுவந்திருக்கும் மசோதா கிறிஸ்துவத் தொண்டு நிறுவனங்களையும் தேவாலயங்களையும் குறிவைத்து கொண்டுவரப்பட்ட மசோதா ஆகும். சாதியத்தால் ஒடுக்கப்பட்டு கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு கிறிஸ்துவ மிஷனரிகளும் தொண்டு நிறுவனங்களும் ஆற்றிய கல்வி மற்றும் மருத்துவச்சேவை, மறுக்க முடியாத மகத்தான பங்களிப்ப��. அத்தகைய சேவையை முடக்குவதற்காகவே பா.ஜ.க இத்தகைய மசோதாவைக் கொண்டுவந்துள்ளது. கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் நிதி பெறுவதைத் தடுப்பதே இதன் நோக்கம்.
ஏற்கெனவே வக்பு வாரிய திருத்த சட்டத்தின் மூலம் வக்பு வாரிய சொத்துகளைப் பறிக்க முயன்ற பா.ஜ.க அரசு இஸ்லாமியர்களின் குடியுரிமையைப் பறிக்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தைக் கொண்டுவந்தது. இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என்று நாடாளுமன்றத்திலேயே பா.ஜ.க மூத்த உறுப்பினர் பேசினார்.
‘உள்நாட்டு அச்சுறுத்தல்கள்’ என்று இஸ்லாமியர்களையும் கிறிஸ்துவர்களையும் தன் ‘சிந்தனைக்கொத்து’ நூலில் வரிசைப்படுத்தியவர் மோடியின் சிந்தனை மூலவரான கோல்வால்கர். அதையொட்டி முஸ்லீம்களுக்கு அடுத்தபடியாக கிறிஸ்துவர்களைக் குறிவைக்கிறது ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசு.
முழுசங்கியாக மாறிவிட்ட எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து வாயே திறக்கவில்லை. ‘அவர்கள் முதலில் கம்யூனிஸ்ட்களை அழிப்பதற்காக வந்தார்கள். நான் ஒன்றும் பேசவில்லை. பிறகு அவர்கள் யூதர்களை அழிப்பதற்காக வந்தார்கள். நான் ஒன்றும் பேசவில்லை. கடைசியாக அழிப்பதற்காக அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள். எனக்காகப் பேச யாரும் உயிருடன் இல்லை’ இது ஹிட்லரின் இனவெறிக்கு எதிராக எழுதப்பட்ட கவிதை. பாசிச பா.ஜ.க முதலில் முஸ்லீம்களையும் அடுத்து கிறிஸ்துவர்களையும் குறிவைக்கும். பிறகு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடி மக்களைக் குறிவைக்கும்.
இப்படிப்ப��்ட பாசிச பா.ஜ.கவையும் அதற்குத் துணைபோகும் துரோக அடிமை அ.தி.மு.க-வையும், பெரியார் பிறந்த தமிழ் மண்ணில் வீழ்த்திக்காட்டுவோம்.
#NDAFails #BJPFails #ADMKFails #FCRA
"திராவிட மாடல்" என்பது வெறும் முழக்கமல்ல; அது ஒவ்வொரு தமிழரின் வாழ்விலும் நிகழ்ந்திருக்கும் புரட்சிகரமான மாற்றம்!
ஈரோடு மற்றும் கோவையில் அலைமோதிய மக்கள் கூட்டமே இந்த நல்லாட்சிக்குக் கிடைத்த நற்சான்றிதழ். இன்று தமிழ்நாட்டின் ஒவ்வொரு இல்லத்திலும் வளர்ச்சியின் சுடர் ஒளிவீசுகிறது.
இந்த வளர்ச்சிப் பயணம் தடையின்றித் தொடர... வெற்றிகரமான 2.0 ஆட்சிக்காக...
ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
#VoteForDMK
வெற்றி ஒன்றே இலக்கு! ஓய்வின்றி உழைக்கும் கழகத்தின் செயல்வீரர்களுக்குப் பாராட்டுகள்!
நேற்றிரவு கோவையில் முதற்கட்டப் பரப்புரைப் பயணத்தை நிறைவுசெய்துவிட்டு, சென்னைக்குத் திரும்பினேன்.
இன்று காலை, தமிழ்நாடு முழுவதும் களப்பணியாற்றி மக்களின் நம்பிக்கையை வாக்குகளாக உறுதிசெய்து வரும், கழகச் செயல்வீரர்களுடன் உரையாடி, ஊக்கப்படுத்தினேன்.
மாலை, பாளைங்கோட்டையில் இரண்டாம்கட்டப் பரப்புரைப் பயணத்தைத் தொடரப் புறப்படுகிறேன்.
#VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக!