நவீன தமிழ்நாட்டின் சிற்பி, சமூக நீதியின் காவலர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் இன்று!
ஐந்து முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்று, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், மாநில சுயாட்சிக்காகவும், தமிழ்மொழியின் உயர்வுக்காகவும் தன் வாழ்நாளையே அர்ப்பணித்தவர். தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் இன்று நாம் காணும் உள்கட்டமைப்பு மற்றும் சமூக நலத்திட்டங்கள் அனைத்தும் அந்தத் தொலைநோக்கு பார்வையின் விளைவே!
#KalaignarForever #Kalaignar103
🖋️ கலைஞர் 103
"தமிழே உயிரே வணக்கம்..."என்று தமிழை தனது உயிர்மூச்சாக நேசித்தவர்...
"உறவுக்கு கை கொடுப்போம்... உரிமைக்கு குரல் கொடுப்போம்..."
என்று ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக
தன் எழுத்தையும் பேச்சையும் ஆயுதமாக்கியவர்...
தமிழுக்காக எழுதியவர் மட்டுமல்ல,
தமிழர்களுக்காக வாழ்ந்தவர்...
பெண்களுக்கு சம சொத்துரிமை வழங்கி,
ஏழை எளியோரின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்து,
தமிழுக்கு செம்மொழி பெருமை சேர்த்து,
தமிழர்களின் தன்னம்பிக்கையை உயர்த்திய
மக்கள் தலைவர் —
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள்.
தமிழர்களின் நெஞ்சமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும்
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளில்,
தமிழுக்காக அவர் ஆற்றிய அரும்பணிகளையும்,
தமிழர் உயர்விற்காக அவர் மேற்கொண்ட தியாகங்களையும்,
சமூகநீதிக்காக அவர் நடத்திய போராட்டங்களையும்
நன்றியுடன் நினைவுகூர்ந்து,
அவரது புகழை நெஞ்சாரப் போற்றி வணங்குகிறோம்.
சாதனைகளால் சரித்திரமானவர்...
சிந்தனைகளால் நித்தியமானவர்...
தமிழும் சமூகநீதியும் வாழும் வரை
கலைஞர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்!
#kalaignar103 #DMK #DMK4TN #𝐃𝐌𝐊𝐈𝐓𝐖𝐢𝐧𝐠
@mkstalin@Udhaystalin@DMKITwing@DMKSalem_
கொடுத்த வாக்குறுதியில் மோசடி செய்த விஜய்!
மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் என வாக்குறுதியாக சொல்லிவிட்டு, தற்போது 2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் என சொல்கிறார். அதுவும் 500 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்தினால் மட்டும்!
500 யூனிட் க்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் 200 யூனிட் இலவச மின்சாரமும் இல்லை என்பதே பெரிய மோசடி!
முன்பு இது போல நிபந்தனை இல்லாமல் அனைவருக்கும்
100 யூனிட் இலவச மின்சாரம் என்ற சலுகைகளும் தற்பொழுது இல்லாமல் போகும்...
ஆக இந்த திட்டத்தால் எந்த பயனும் இல்லாமல் போவதை விட மக்களுக்கு மேலும் சுமையையே இது ஏற்படுத்தும்...
இந்த அறிவிப்பு மறைமுகமாக மின் கட்டண உயர்வையே காட்டுகிறது
#TVKFails
#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்!
பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!
🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது!
🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.
🔥இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்.
🔥 "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!"
#SayNoToNDA
கடுமையான உழைப்பைப் போட்டு, தமிழ்நாட்டை மீட்டு, இன்று இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாட்டை கொண்டு வந்திருக்கிறோம்.
ஆனால், இந்த வளர்ச்சி போதுமா நமக்கு? போதாது! சொல்லுங்கள்... தமிழ்நாட்டுக்கு இந்த வளர்ச்சி போதுமா? நிச்சயம் போதாது! தமிழ்நாட்டை, உலக அளவில் தனி பிராண்டாக நாம் வளர்த்தெடுக்க வேண்டும்!
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்
#VoteForDMK
எல்லாவற்றையும் டெல்லியில் கேட்டு தலையாட்டும் அடிமைகள் தமிழ்நாட்டுக்கு தேவையில்லை. சுயமரியாதையுடன் மாநில உரிமைகளை காக்கும் திராவிட மாடல் ஆட்சி தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK
தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி அறிவிப்புப் பலகை SPOC - ITW தேர்தல் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்!
@DMKITwing செயலாளர் - முனைவர் திரு. @TRBRajaa அவர்கள் அறிவிப்பு!
#VoteForDMK
✨A truly proud moment for one of our very own sons of the soil and one of Tamil Nadu’s dearest friends in the industry - heartiest congratulations to Thiru. N Chandrasekaran sir !
Being conferred an honorary knighthood by the British Government in recognition of his contribution to strengthening India–UK business relations is a fitting tribute to his tireless work for the betterment of our country, India-UK trade and the Tata Group.
We are especially proud that the Tata JLR plant in Ranipet is now India’s crown jewel in UK-India auto trade⚙️
The Tata–Tamil Nadu partnership continues to create high-quality jobs, build global scale capabilities and strengthen our position as a leading industrial hub. Extremely astute, hardworking and most importantly humble and grounded, Thiru.Chandrasekaran has mastered crafts across sectors and in many ways guided us on the right path to build on our industrial strengths.
Am sure that with his support and guidance Tamil Nadu too will scale newer heights🌟
அமெரிக்கா - ஈரான் போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இன்று விரிவாக ஆய்வு செய்தேன். தற்போது பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பையும் அப்பகுதியில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மீனவர்களின் நலனையும் உறுதி செய்திடத் தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்திட வேண்டும் என்று மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.
இந்தப் போரால் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டினால் பொதுமக்களும் வணிக நிறுவனங்களும், தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளும் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, வணிக எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்களுக்குத் தேவையான அனைத்து மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் என்றும், தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தைப் பெற்று வழங்கிட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளேன்.
Held a review meeting today to assess the possible impact of the ongoing US - Iran conflict on Tamil Nadu and to chart the necessary response measures.
I have written to the Hon'ble @PMOIndia urging the Union Government to ensure the safety of Tamils living across the affected Gulf countries and to safeguard the welfare of Tamil Nadu fishermen who are currently stranded in the region.
I have also emphasised that the Union Government must ensure that the LPG Cylinder shortage arising from this conflict does not affect the public, commercial establishments, or MSME industries in Tamil Nadu. I have further urged that all necessary alternative arrangements be made for restaurants affected by commercial gas cylinder shortage and that the additional power required be secured and supplied.
#LPGCylinder
From village streets to city skylines, one message echoes across Tamil Nadu, Thiru.Muthuvel Karunanidhi Stalin is Coming Back Stronger.
#StalinWave2026
History Repeats: திருச்சி 2026!
மார்ச் 9, 2026 - திருச்சியில் ஒரு மாபெரும் அரசியல் திருவிழா. திராவிட மாடல் 2.0 ஆரம்பம்! திராவிட நாயகரின் வெற்றி நடை, சாதனைகள் தொடர, சரித்திரம் படைக்க மீண்டும் களம் காணும் திராவிட மாடல். திருச்சி மண்ணில் மீண்டும் ஒரு புரட்சி, 2021-ன் வெற்றி 2026-ல் சாதனையாக உருவெடுக்கிறது.
மக்களுக்கான ஆட்சி, மாற்றத்திற்கான எழுச்சி! திராவிடப் பேரியக்கத்தின் மாபெரும் மாநில மாநாடு - திருச்சியில் மீண்டும் ஒரு வரலாற்றுத் தடம்.
#StalinWave2026
Congratulations to Team India on winning the ICC Men's T20 World Cup 2026, defeating New Zealand in the final with a commanding performance. A proud moment for the country!
#T20WorldCup
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் தனது 73-வது பிறந்தநாளையொட்டி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் ஆகியோரது நினைவிடங்களில் மரியாதை செலுத்தி எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மகிழ்ந்தார்
#HBDCMMKStalin