Official Page For Thiru Dr V Muthuraja MBBS MLA | Member of Legislative Assembly, Pudukkottai Constituency | Deputy Secretary - DMK Unorganized Drivers Wing
வாயைத் திறங்க CM..!
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளி பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்…
திருச்சியில் செவிலியர் மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது…
கோவையில் பிஞ்சு குழந்தை பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது…
சென்னையில் ஒரே நாளில் 5 இடங்களில் 2குழந்தைகள் உட்பட 7 பேருக்கு பாலியல் தொல்லை,
ஆட்சிப் பொறுப்பேற்று 34 நாளில் 207 பாலியல் வழக்கு, அதில் 107 தவெகவினர் மீது,
சிறு பெண்கள் இங்கே…
சிங்கப் பெண்கள் எங்கே?
பிஞ்சு குழந்தைகளின் கதறல் சத்தம் கேட்கிறதா?
தேர்தல் நேரத்தில் பெண்களின் பாதுகாப்பு, குழந்தைகளின் எதிர்காலம், தமிழ்நாட்டின் நிம்மதி என்று வாக்குறுதி அளித்தவர்கள் இன்று எங்கே?
ரீல்ஸ் எடுப்பதிலும், விளம்பரங்களில் தோன்றுவதிலும், திமுக அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்தும் அரசு, மக்களின் உயிர் மற்றும் பாதுகாப்பு குறித்து பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் குறித்து முதலமைச்சர் ஏன் மௌனம் காக்கிறார்?
தமிழ்நாட்டு மக்களின் கேள்வி ஒன்றே…
பிஞ்சு குழந்தைகளின் கதறல் சத்தம் கேட்கவில்லையா?
வாயைத் திறங்க CM..!
#வாயை_திறங்க_CM
#JusticeForTamilnadu
#ProtectWomenAndChildren
வெட்கமின்றி மார்தட்டாதீர்கள்!
டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில், “இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது சிறந்த மாநிலம்” என்று பெருமை பேசுகிறீர்கள்.
ஆனால் அந்தப் பெருமைக்கு அடித்தளம் அமைத்தது யார்?
நேற்று வரை மேடைகளில் நின்று தூற்றிய, விமர்சித்த அதே 50 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள்தானே இன்று தமிழ்நாட்டை நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக உயர்த்தியுள்ளது!
கல்வி, சமூகநீதி, தொழில் வளர்ச்சி, மருத்துவம், மகளிர் முன்னேற்றம் என தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதை ஒரு நாளில் உருவானதல்ல; பல தலைமுறைகளின் உழைப்பாலும் திராவிட இயக்க ஆட்சிகளின் தொலைநோக்கு திட்டங்களாலும் உருவானது.
அந்த அடித்தளத்தின் பலனை அனுபவித்துக் கொண்டே, அதையே மறுத்து பேசுவது அரசியல் முரண்பாடல்லவா?
#DMK #TvkFails #Dmk4TN #MLA #MuthurajaMLA MuthurajaVision
மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தேன்.
இந்த சந்திப்பின் போது புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்று வரும் கழகத்தின் எதிர்கால ஆக்கப்பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து, மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களின் ஆலோசனைகளையும் வாழ்த்துகளையும் பெற்றேன்.
மக்கள் நலன், சமூகநீதி மற்றும் வளர்ச்சியை மையமாகக் கொண்டு தொடர்ந்து பணியாற்றிட தேவையான வழிகாட்டுதல்களை வழங்கிய மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களுக்கு தனது நன்றியையும் மரியாதையையும் தெரிவித்தேன்.
#MKStalin #DMK #MuthurajaMLA #development
தமிழ்நாடு அரசின் அலட்சியத்தால் நமது அரசு மருத்துவர்களுக்கு கிடைக்க வேண்டிய 152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.
அரசு வழக்கறிஞர் முறையாக வாதங்களை எடுத்து வைக்காத காரணத்தால் நமது அரசு மருத்துவர்களுக்கான வாய்ப்புகள் கைநழுவி போவது மட்டுமல்ல, நமது மாநில சுகாதாரக் கட்டமைப்புக்கே இது பின்னடைவை ஏற்படுத்தும்.
அலட்சியம் காட்டாமல் உடனடி நடவடிக்கை எடுத்து இதனை தடுத்திட தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
#SuperSpeciality #MedicalCourses #StateRights
தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever
தமிழுக்காக வாழ்ந்தவர்…
தமிழர்களுக்காக போராடியவர்…
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக இறுதி மூச்சுவரை குரல் கொடுத்தவர்…
முத்தமிழ் அறிஞரின் பிறந்தநாளில் தலைவர் கலைஞர் அவர்களை போற்றி வணங்கி, செம்மொழி நாளாக கொண்டாடுவது பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.
காலம் உள்ளவரை தலைவர் கலைஞர் அவர்களின் நின் புகழ் வாழிய வாழியவே.
#Kalaignar103
#kalaignar #kalaignarKarunanidhi #PudukottaiMLA #DMK
#KalaignarForever
#GenZDMKMeetup
எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும், இளைஞர்களின் இதயத்தில் முதலிடத்தில் இருப்பது திமுக தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது இந்த சந்திப்பு!
ஆட்சியில் இல்லாத ஒரு இயக்கத்தின் நிகழ்விற்கு இவ்வளவு உற்சாகம், இவ்வளவு பங்கேற்பு, இவ்வளவு நம்பிக்கை என்றால், அது சாதாரண அரசியல் அல்ல… அது ஒரு கொள்கையின் மீது இருக்கும் நம்பிக்கை!
திராவிட மாடல் மீதான நம்பிக்கையும், சமூகநீதி மீதான உறுதியும், தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்த கனவும் இன்றைய இளைஞர்களின் கண்களில் தெளிவாக தெரிகிறது.
“திமுக முடிந்துவிட்டது” என்று கூறியவர்கள் இன்று இந்த எழுச்சியை பார்த்து வாயடைத்து போய் இருப்பார்கள்.
ஒவ்வொரு தலைமுறையையும் அரவணைத்து, புதிய தலைமுறையையும் அரசியலுக்குள் கொண்டு வரும் சக்தி திமுகவுக்கு மட்டுமே உண்டு.
திமுக மீண்டு வரும்…
இல்லை…
திமுக மீண்டும் வரும்!
மக்களின் பேராதரவோடு, இளைஞர்களின் பேரெழுச்சியோடு, இன்னும் வலிமையாக வரும்!
வாழ்க தமிழ்!
வெல்க திராவிடம்!
🔥🖤❤️
“முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி” என்று தேர்தல் மேடைகளில் வாக்குறுதி கொடுத்து, இன்று ரூ.50,000 வரை உள்ள கடன்களுக்கு மட்டும் தள்ளுபடி என அறிவிப்பது — விவசாயிகளை நேரடியாக ஏமாற்றும் செயல்.
5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் முழு பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்று கூறியவர்கள், ஆட்சிக்கு வந்ததும் நிபந்தனைகள் போட்டு பின்வாங்கியிருக்கிறார்கள்.
இது சாதாரண மாற்றமல்ல…
விவசாயிகளின் நம்பிக்கையை வைத்து நடத்தப்பட்ட அரசியல் மோசடி.
அதேபோல், “200 யூனிட் வரை இலவச மின்சாரம்” என்று அறிவித்து, பின்னர் 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் சலுகை கிடையாது என்று பொதுமக்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்கள்.
இப்போது மீண்டும் “பயிர்க்கடன் தள்ளுபடி” என்ற பெயரில் புதிய ஏமாற்றம்.
தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு…
ஆட்சிக்கு பிறகு ஒரு செயல்…
இப்படி தொடர்ந்து மக்களை நம்ப வைத்து ஏமாற்றும் அரசியல்தான் நடக்கிறதா CM saar?
“ஜனநாயகத்தை காப்போம்” என்று வந்தவர்கள்,
இப்போது “எண்ணிக்கையை காப்போம்” என்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள்!
பெரும்பான்மை இல்லை…
ஆனால் ஆட்சியை விட மனமில்லை…
அதனால் கூட்டணி கதவுகள் தட்டும் அரசியல் நாடகம்!
நம்பிக்கை வாக்கெடுப்பை மக்கள் நம்பிக்கையால் அல்ல…
‘பேரம்’ மூலம் கடக்க முயலும் பரிதாபம்!
ஆதரவு வாக்குக்கு பின்னால் அதிகார விலைபேச்சு!
எதிர்க்கட்சியினரை ராஜினாமா செய்ய வைத்து,
அரசியல் மாறுதல் முகாமாக மாறிய தலைமைச் செயலகம்!
இந்த அரசியல் சர்க்கஸுக்காகத்தானா மக்கள் வாக்களித்தார்கள்?
“தூய்மை அரசியல்” என்ற வசனம் பேசியவர்கள்,
இன்று “துயரம் தரும் அரசியல்” நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
NDA-வை எதிர்ப்போம் என்று மேடையில் முழங்கியவர்கள்,
இப்போது அமைச்சரவை ஆசனத்தில் அமர்ந்து
அதே அரசியலை அமைதியாக ரசிப்பதும் மக்களுக்கு புரிந்துவிட்டது!
#tvkfails
கோவை மாவட்டம் சூலூரில் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதையும் உலுக்கியுள்ளது. இந்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
கடந்த 10 நாட்களாக தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை, பாலியல் வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து மிகப்பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய அரசு இவ்வளவு சம்பவங்களுக்குப் பின்னரும் மௌனமாக இருப்பது சரியா?
சில நாட்களுக்கு முன் புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளி பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
இன்று கோவையில் சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளார்.
நாளை யார் என்ற அச்சம் தமிழ்நாட்டு மக்களிடையே உருவாகியுள்ளது.?
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பே கேள்விக்குறியாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது, குற்றச்சம்பவங்கள் தமிழ்நாட்டில் தொடர்வது மிகுந்த வேதனையளிக்கிறது.
கோவை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற கூட இதுவரை அரசு முன்வராதது ஏன் என்ற கேள்வியும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
இனி மௌனம் கலைக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் மீது உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுத்து, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு செயல்பட வேண்டும்.
#JusticeForCoimbatore
கல்வியில் சிறந்து புதுக்கோட்டைக்கு பெருமை சேர்த்த மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
உங்கள் உழைப்பும் பெற்றோரின் கனவும் இன்று வெற்றியாக மலர்ந்துள்ளது
இதே உற்சாகத்துடன் உயர்ந்த இலக்குகளை அடைந்து தமிழ்நாட்டின் எதிர்காலத்தை உருவாக்க வாழ்த்துகள்
#SSLCResults #Pudukkottai #StudentsSuccess #Congratulations #TamilNaduStudents
ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை அளவிட வேண்டுமென்றால், அந்த மாநில பெண்களின் வாழ்க்கை எந்த அளவுக்கு முன்னேறியுள்ளது என்பதைப் பார்க்க வேண்டும்.
அந்த வகையில், கழகத் தலைவர் மாண்புமிகு @mkstalin அவர்கள் தலைமையிலான அரசின் மிகச்சிறந்த மக்கள் நலத் திட்டங்களில் ஒன்றாக ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ அமைந்தது.
மாதந்தோறும் 1.31 கோடி பெண்களுக்கு வழங்கப்பட்ட இந்த உதவித் தொகை, வெறும் பண உதவி அல்ல…
பல குடும்பங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிய நம்பிக்கை.
பல பெண்களின் சுயமரியாதையை காத்த பாதுகாப்பு.
பல வீடுகளில் பசியை போக்கிய துணை.
இன்று அந்தத் தொகையை வழங்க கூட கால அவகாசம் தேவைப்படுகிறது என்றால், அதை நம்பி வாழும் பெண்களின் நிலையை யார் சிந்திப்பார்கள்?
இது மாற்றம் இல்லை…
மக்களின் நம்பிக்கையை ஏமாற்றும் செயலாகவே பார்க்கப்படுகிறது.
Reels life-ல் அரசியல் செய்வதை விட, மக்களின் Real life பிரச்சனைகளை கவனியுங்கள்.
தமிழ்நாட்டு மகளிர்களின் வாழ்வாதாரத்துடன் நேரடியாக தொடர்புடைய ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ உடனடியாக அவர்களது வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட வேண்டும்.
பெண்கள் முன்னேற்றமே,
தமிழ்நாட்டின் முன்னேற்றம்!
#MKStalin #UdhayanidhiStalin #DMK #Pudukkottai #DravidianModel #TVKFails #MuthurajaMLA #development
தமிழ்நாட்டு மக்களில் 65% வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட அரசின்
நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல்…
எதிர்க்கட்சித் தலைவர், கழக இளந்தலைவர் @Udhaystalin அவர்களின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம்.
“தூய அரசியல்”ன்னு சொல்லி மக்களை நம்ப வைத்தவர்கள்…
இன்னைக்கு குதிரை பேர அரசியலில் சிக்கியிருப்பது வேதனை.
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல்…
பொறுப்பை தட்டிக்கழிக்கும் இந்த புதிய ஆட்சியின் மீது…
தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதையே
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பதிவு செய்தார்.
#UdhayanidhiStalin #TVKFails #DravidianModel #DMK #MuthurajaMLA #development
“NEETல Scam இல்ல…
NEETஏ ஒரு Scam”ன்னு
இன்னைக்கு சொல்றதில்லை…
பல வருஷங்களாக சொல்லிட்டு இருந்தது @arivalayam தான்.
“தமிழ்நாட்டுக்கு NEET விலக்கு வேண்டும்”ன்னு தொடர்ந்து குரல் கொடுத்தார் கழகத் தலைவர் @mkstalin அவர்கள்,
“NEET என்பது ஏழை மாணவர்களின் கனவை சிதைக்கும் மோசடி தேர்வு”ன்னு கழக இளந்தலைவர் @Udhaystalin அவர்கள் எச்சரிச்சார்.
அப்போ troll பண்ணினவங்க…
இன்னைக்கு Paper Leak… Exam Cancel ஆன பிறகு…
திரும்ப Re -EXAM வைக்குறேனு சொல்ற அப்போ Silent-அ இருகாங்க
இப்பவாவது புரிஞ்சுக்கிறாங்களா…? 💔
இது அரசியல் இல்ல.
லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம். ⚡
இப்போ தமிழ்நாட்டில் புதுசா அமைந்திருக்கும் TVK அரசு…
NEETக்கு எதிராக வாயை திறக்குமா…?
அல்லது…
ஒன்றிய அரசை எதிர்க்காமல் silentஆ இருக்குமா…? 🔥
#TVKFails
#NEET – Never Been Neat:
இந்த ஆண்டும் #NEET Paper Leak முறைகேடுகள் வெளிவந்து, Exam Cancel ஆகியிருக்கு. இலட்சக்கணக்கான மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்காங்க.
ஒரு தேர்வின் ஒவ்வொரு படிநிலையிலும் மோசடி நிறைந்ததாகவே நீட் இருக்கு. நான் தொடர்ந்து சொல்லி வருவதுபோல, நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான்!
ஆண்டுதோறும் மாணவர்களின் வாழ்க்கையோடும், மாநில மருத்துவக் கட்டமைப்பின் எதிர்காலத்தோடும், மக்களின் உயிரோடும் விளையாடும் நீட் தேர்வுமுறை ஒழிக்கப்படணும்.
மீண்டும் நீட் தேர்வு நடத்துனா ஏற்படும் Delay, மாணவர்களின் உயர்கல்விக் கனவில் குழப்பங்களைத்தான் ஏற்படுத்தும். அதனால, பழையபடி Plus Two தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே MBBS இடங்கள் ஒதுக்கப்படணும்.
தமிழ்நாட்டில் புதிதாக அமைந்திருக்கும் அரசும் நீட் தேர்வுக்கு எதிரான தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கணும். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் எங்க திராவிட மாடல் அரசின் சட்ட நடவடிக்கைகளை, புதிய அரசும் கையிலெடுத்து, நம் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
@CMOTamilnadu
மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டிய அரசு…
ஜோதிடர்களின் ஆலோசனையிலா இயங்கப் போகிறது? 🤔
தகுதியும் திறமையும் கொண்ட இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்க,
அரசு பதவிகளில் ஜோதிடர்களுக்கு முன்னுரிமையா?
இது நிர்வாகமா…
இல்லை மூடநம்பிக்கைக்கு அதிகாரமா?
கடந்த நமது @arivalayam கழக ஆட்சியில் அரசு மகளிர் உரிமைத் தொகையை தொடர்ந்து வழங்கிட்டு இருந்தது.
ஆனா தேர்தல் நேரத்தில் தற்போதைய
Vijay தலைமையிலான அரசு “₹2500 வழங்கப்படும்”னு பெரிய வாக்குறுதி கொடுத்தது.
ஆனா இப்போ…
மக்கள் மனசுல கேள்விகள் அதிகமா இருக்கு.
“சொன்ன வாக்குறுதிகள் எதாவது முழுசா நிறைவேறுதா…?”ன்னு மக்கள் கேக்க ஆரம்பிச்சிட்டாங்க.
“மாதம் 200 unit current free”னு சொன்னாங்க…
ஆனா இப்போ
500 unit வரை பயன்படுத்துறவர்களுக்கு மட்டும் தான் அந்த benefitன்னு rules வந்துச்சு.
“பெண்கள் பாதுகாப்பு”னு சொல்லி
Already இருந்த Pink Patrolக்கு
புது பெயர் வைத்து
“சிங்கப்படை”னு announce பண்ணாங்க.
DMK ஆட்சியில் மூடப்பட்ட 500 TASMAC கடைகளை
“மீண்டும் மூடுவோம்”னு இப்போ பேசுறாங்க…
அப்படின்னா மக்கள் கேக்குறாங்க:
“புதிய திட்டம் எது…?
Already இருந்ததை பெயர் மாற்றுறதா achievement…?” ⚡
இதனால்தான் இப்போ மக்களிடம் ஒரு அதிருப்தி slowly உருவாகுது.
“₹2500 வந்தா நல்லதுதான்…
ஆனா atleast கடந்த ஆட்சியில் வந்த ₹1000 ஆச்சும் நிறுத்தாம இருந்தா போதும்…” 🔥
-
டாக்டர் வை முத்துராஜா MBBS MLA
புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்
மாநிலத் துணைச் செயலாளர் கழக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி