Tomorrow at 12 Noon, I eagerly look forward to interacting with you all on social media to share my thoughts and have an open, heart-to-heart conversation.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
மனிதகுல நலனுக்காக, தன்னையே சிலுவையில் அர்ப்பணித்த, இயேசு பெருமான் தியாகத்தை நினைவுகூரும் புனித வெள்ளி திருநாள் இன்று.
அன்பு, தியாகம், கருணை, மன்னிப்பு போன்ற உயர்ந்த பண்புகளை, நம் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவோம். அனைவரின் வாழ்விலும், அமைதியும், நலனும், சமாதானமும் நிலவட்டும்.
The barbaric terror attack on innocent civilians in Kashmir’s Pahalgam is a cowardly assault on humanity.
Such acts of extremism will never break the spirit of our nation. We stand united, resolute, and unshaken. My deepest condolences to the families of the victims and prayers for the swift recovery of the injured.
உயர்தரமான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு ஒரு சிறப்பான நாள்!
புதிய பாம்பன் பாலம் திறந்து வைக்கப்பட்டது. ராமேஸ்வரம் - தாம்பரம் (சென்னை) ரயில் சேவை கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
இன்று பிறந்த நாள் கொண்டாடும் மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. R.N. ரவி அவர்களுக்கு, @BJP4Tamilnadu சார்பாக இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் மீதும், தமிழக மக்கள் மீதும் மிகுந்த பற்று கொண்டவர். தமிழகத்தின் முன்னேற்றத்துக்காகவும், கல்விச் சீர்திருத்தங்களுக்காகவும் அயராது உழைப்பவர்.
மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. R.N. ரவி அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தமது மக்கள் பணிகள் தொடர வேண்டுமென்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
✅23இடத்தில் பாஜக போட்டி
✅30ஆண்டுகளாக போட்டியிடாத இடத்தில் போட்டி
✅11 இடங்களில் கூட்டணி இரண்டாம் இடம்
பாருங்க நோட்டா என சொன்னவங்க இப்ப வரிசைல நிற்கிறாங்க
Annamalai, another name for dedication, loyalty, and hard work❤️
இன்று மாலை, கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரையில் அமைந்துள்ள, B.V. பப்ளிக் பள்ளியின் 11 ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஆசிரியர்களையும், மாணவர்களையும் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
கோவை தெற்கு @BJP4Tamilnadu முன்னாள் மாவட்டத் தலைவர் திரு @Vasanthcovaibjp அவர்களின் கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும் B.V. பள்ளி, கல்விப் பணியில் 11 ஆண்டுகளாக சிறப்பாகச் செயல்பட்டு வருவது பெருமைக்குரியது.
பள்ளி முதல்வர், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினருக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பல நூறாண்டுகள் அவர்கள் கல்விப் பணியைத் தொடர வேண்டும். வருங்காலத் தலைமுறையை சிறப்பானதாக உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மாணவர்கள், தங்கள் பெற்றோர்களும், ஆசிரியர்களும் பெருமைப்படும்படி, சிறந்த மனிதர்களாக, தாங்கள் தேர்ந்தெடுக்கும் துறைகளில் பெரும் உயரத்தை எட்ட வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக முதலமைச்சர் திரு @mkstalin பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
1) மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில், நமது மாண்புமிகு பிரதமர் திரு @narendramodi அவர்களின் சீரிய தலைமையின் கீழ், MGNREGA நூறு நாள் வேலைத் திட்டத்திற்காக, தமிழகத்துக்கு வரலாற்றிலேயே அதிகமாக, ₹39,339 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளின் வலையில் நீங்கள் சிக்கியிருப்பதால், தமிழகத்தில் இந்தத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள பரவலான ஊழலை விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு நீங்கள் ஒப்புதல் அளிப்பீர்களா திரு @mkstalin அவர்களே?
இந்த ஊழலின் அளவைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள, ஒரு கிராமத்தை மட்டும் மேற்கோள் காட்டியிருக்கிறோம்.
2) தமிழகத்தை விட மூன்றிலிருந்து ஐந்து மடங்கு அதிகமான கிராமப்புற மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள், MGNREGA நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், தமிழகத்தை விடக் குறைவான நிதியைப் பெற்றுள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?
3) MGNREGA நூறு நாள் வேலைத் திட்டத்தின் வேலை நாட்களை, 100லிருந்து 150 ஆக உயர்த்துவதாக நீங்கள் கூறிய தேர்தல் வாக்குறுதியை எப்போது நிறைவேற்றப் போகிறீர்கள்?
திரு @mkstalin அவர்களே. கடின உழைப்பாளிகளான தமிழக மக்களுக்குச் சேர வேண்டிய நிதியைக் கொள்ளையடித்துள்ள உங்கள் கட்சி திமுக, வெறும் ஊழல் கட்சி மட்டுமல்ல; அது மோசடியான, இரக்கமற்ற, பிரிவினையைத் தூண்டும் கட்சி. (1/4)
For high handedness of one family, having a tainted cabinet, being an epicentre of corruption, turning a blind eye to lawlessness, turning TN into a haven for drugs & illicit liquor, mounting debt, dilapidated education ministry, precarious environment for women & children, divisive politics based on caste & religion, ceaseless failures in delivering good governance, flawed policies & not fulfilling electoral promises, this DMK led govt in TN will be dethroned by the people soon.
#GetOutStalin