A big thanku to rajya sabha MP Mr.G.K.Vasan for allowing Rs 15 lakhs from his MP fund for the constuction of storm water drain at Baroda st in ward 134 .
(From junction of Lakshmi Narayanan st to Baroda 2nd st)
மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் அமைவதற்கு உறுதுணையாக இருந்தவர்
பல கோயில்களில் திருப்பணிகள் செய்தவர்
விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் அனுப்பி வைத்தவர்
மக்களுக்கு பல நற்காரியங்களை செய்தவர்
சேதுசீமை ராசா பாஸ்கர சேதுபதி அவர்கள் நினைவு தினம் இன்று
போற்றி வனங்குகிறேன்
திருச்சி மாவட்ட காவல்துறையின் அராஜகம் முற்றிலும் ஒழிபட வேண்டும்.
இந்த காவல்துறைக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை காவல்துறையை கேட்டுக் கொள்கிறேன்...
@tnpoliceoffl@TrichyPolice@CMOTamilnadu@Udhaystalin
தேசியமும் தெய்வீகமும் தனது
இரு கண்களாகப் போற்றி வணங்கி,
தேச விடுதலைக்காக பெரும் படையைத் திரட்டிய தென்னாட்டுச் சிங்கம்,
வீர���், விவேகம், உண்மை, உறுதி ஆகியவற்றைத் தன் கொள்கையாகக் கொண்டு பொதுவாழ்வில் மிளிர்ந்த அரசியல் பேராளுமை,
ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற
தனது வாழ்நாளை அர்ப்பணித்த
“தெய்வத் திருமகனார், ஐயா பசும்பொன்
திரு. உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி மற்றும் குருபூஜை நாளான இன்று, அவர்தம் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.
#தேவர்ஜெயந்தி மற்றும் #குருபூஜை பெருநிகழ்வினை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர்கள் மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு,
#பசும்பொன் புண்ணிய பூமியில் உள்ள தெய்வத் திருமகனார் திருக்கோயிலில், @AIADMKOfficial சார்பில் மாண்புமிகு அம்மா அவர்களால் வழங்கப்பட்ட தங்கக் கவசத்தால் தரிக்கப்பட்டுள்ள அவர்தம் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வணங்கினேன்.
அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராகவும், ���ங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் போராடிய தேவர் திருமகனாருக்கு, இந்திய நாட்டின் உயரிய விருதான #பாரத_ரத்னா வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் @AIADMKOfficial கோரிக்கை விடுத்துள்ளதை நினைவுகூர்கிறேன்.
நாட்டின் விடுதலை, சமூக விடுதலையைவென்றெடுத்த தேவர் பெருமகனாரின் குருபூசையில் அவரை வணங்குவோம்!
நாட்டின் விடுதலைக்காக போராடியவரும் தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று அறிவித்து அதன்படி வாழ்ந்தவரும், அனைத்துத் தரப்பு மக்களாலும், அனைத்து அரசியல் கட்சிகளாலும் போற்றி வணங்கப்படும் தலைவருமான ���சும்பொன் முத்துஇராமலிங்கத் தேவரின் 63-ஆம் குருபூசை நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவரை வணங்குகிறேன்.
தேவர் பெருமகனாரின் பெருமைகளும், சமூகத்திற்காக அவர் ஆற்றிய பணிகளும் பட்டியலிட முடியாத அளவுக்கு நீண்டவை. சென்னை மாகாணத்தில் ஒரு சமூகத்தையே பிறப்பின் அடிப்படையில் குற்றவாளிகளாக்கும் குற்றப்பரம்பரை சட்டத்தை ஒழிக்க வேண்டும் என்ற உணர்வு தான் அவரது அரசியல் பயணத்தை வழி ��டத்தியது.
காந்தியின் தலைமையை ஏற்று காங்கிரஸ் கட்சியில் பயணம் செய்த தேவர் பெருமகனார், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களையே தம்மை வழிநடத்திச் செல்லும் தளபதியாக கருதினார். காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் நேதாஜியை வீழ்த்த காந்தியடிகள் உள்ளிட்ட தலைவர்கள் முயன்ற போது, தென்னிந்தியா முழுவதும் ஆதரவைத் திரட்டி நேதாஜியை வெற்றி பெறச் செய்தவர் தேவர் பெருமகனார்.
இந்திய விடுதலைக்காக காங்கிரசின் அங்கமாகவும், நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் சீடராகவும் இருந்து அவர் நடத்திய போராட்டங்கள் வியக்கத்தக்கவை. ஒரு சமூகத்தையே அதன் பிறப்பால் குற்றவாளிகளாக முத்திரைக் குத்தி களங்கப்படுத்தும் குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக ஆங்கிலேயர் ஆட்சியிலும், விடுதலை இந்தியாவிலும் போராடி அவர் பெற்ற வெற்றி ஈடு இணையற்றது.
தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநிறுத்த நடத்தப்பட்ட ஆலய நுழைவுப் போராட்டத்திற்கு துணை நின்றது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமது நிலங்களை வழங்கியது, தொழிற்சங்க தலைவராக இருந்து தொழிலாளர்களுக்கு உரிமைகளை வென்றெடுத்துக் கொடுத்தது என மக்களுக்காக அவர் நடத்திய போராட்டங்களும், பெற்ற வெற்றிகளு���் ஏராளம். அனைத்துத் தரப்பு மக்களுக்காக அவர் ஆற்றிய பணிகளை இந்த நாளில் மட்டுமின்றி, எந்த நாளும் நினைவு கூர்வோம்; போற்றுவோம்!
அரசியலையும், ஆன்மீகத்தையும் தனது இரு கண்களாகப் பாவித்து செயல்பட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி திருநாள் இன்று!
தனது 19ஆவது வயதிலேயே அரசியலில் தனது பயணத்தைத் தொடங்கி, ஆங்கிலேய அடக்குமுறைகளுக்கு எதிராக பல போராட்டங்களை முன்னெடுத்தார்.
அரசியலில் சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பாதையிலும், ஆன்மீகத்தில் சுவாமி விவேகானந்தர் மற்றும் சித்தர் ராமலிங்க அடிகள் அவர்களின் பாதையிலும் தன்னுடைய பயணத்தை மேற்கொண்ட மாபெரும் தலைவர் அவர்!
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின்போது உருவாக்கப்பட்ட “குற்றப்பரம்பரைச் சட்டத்தை�� ரத்து செய்யப் போராடி, வெற்றி கண்டார்.
அன்றைய அரசியல் சூழலில் “இராமநாதபுரத்தின் இளம் சிங்கம்” என்று அறிமுகப்படுத்தப்படும் அளவிற்கு துடிப்பும் தைரியமும் கொண்டவர்.
இன்றைய தினத்தில், ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களை போற்றி வணங்குவோம்!