தமிழக அரசின் சார்பாக மூன்று மாதங்களுக்கான, காவிரி நீரைப் பெற எவ்வித கோரிக்கையும் வரவில்லை - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி!
காங்கிரஸின் 5 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதற்காக கர்நாடகத்திடம் எட்டு கோடி தமிழக மக்களின் உரிமையை விட்டுக் கொடுக்கத் தயாராகிவிட்டதா விஜய் அரசு?
...............................................
டெல்டா மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக விளங்குவது காவிரி ஆகும். அதை மட்டுமே நம்பி ஏறக்குறைய 12 லட்சம் ஏக்கர் நிலங்களில் குறுவை சாகுபடி நடைபெறுகிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கிவரும் டெல்டா பகுதிக்கு உரிய நேரத்தில் காவிரி நீர் வந்து சேரவில்லை எனில், கோடிக்கணக்கான மக்களின் உணவுத் தேவைக்குப் பெரும் குந்தகம் ஏற்படும்.
காவிரி நதிநீர் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின்படி, ஒரு ஆண்டில் 177.25 டி.எம்.சி நீரை கர்நாடக அணைக்கட்டுகளிலிருந்து தமிழகத்திற்கு மாதந்தோறும் பிரித்துத் தர வேண்டும். குறிப்பாக வறட்சியான – distress காலமாக கருதப்படக்கூடிய மே மாத 2.5 tmc, ஜூன் மாத 9.19 tmc, ஜூலை மாத 31.24 tmc என மொத்தம் 42.98 டி.எம்.சி தண்ணீர் இந்த மூன்று மாதங்களில் திறந்து விடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடந்த மூன்று மாதங்களில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூடத் திறந்து விடப்படவில்லை. இதன் காரணமாக, ஜூன் மாதம் 12 ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை திறக்கப்படவில்லை; குறுவை சாகுபடியும் நடைபெறவில்லை.
"அழுத பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும்" என்பது பழமொழி. ஆனால், நாம் அழுது பெற வேண்டிய அவசியமில்லை. நீதிமன்ற உத்தரவின்படியும், காவிரி நதிநீர் ஆணையத் தீர்ப்பின்படியும் நமக்குக் கிடைக்க வேண்டிய பங்கீட்டைப் பெறுவதற்குத் விஜய் அரசு போதிய அழுத்தம் கொடுத்தாலே போதும். ஆனால், தமிழக அரசின் சார்பாக மூன்று மாதங்களுக்கான நீரைப் பெற எவ்வித கோரிக்கையும் வரவில்லை என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி அவர்கள் கூறியிருப்பது ஆச்சரியமளிக்கிறது.
எட்டு கோடி தமிழக மக்களின் நலனைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது. ஆனால், தமிழ்நாட்டின் நலனை விட்டுக் கொடுத்துவிட்டு ஆட்சியில் நீடிப்பதால் என்ன பயன்?
காங்கிரஸின் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதற்காகத் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நலனையே கர்நாடகத்திடம் தாரைவார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? மக்கள் மீது அக்கறை கொணடவர்கள் தங்களது ஆட்சி போனாலும் பரவாயில்லை என்று உரிமையை விட்டுக் கொடுக்காமல் போராடுவார்கள். ஆனால் விஜய் அவர்களோ, ஆட்சி அதிகாரத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக எட்டு கோடி தமிழக மக்களின் உரிமையை விட்டுக் கொடுத்து ஆட்சியைத் தக்க வைக்கத் தயாராகிவிட்டார் என்ற தோன்றுகிறது; இது ஏற்புடையதல்ல; தமிழக மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.
எனவே, தமிழகத்திற்கு மே, ஜூன், ஜூலை மாதங்களில் கிடைக்க வேண்டிய நீரைப் பெற முதல்வர் விஜய் அவர்கள் உரத்த குரல் கொடுக்க வேண்டுமெனவும், உடனடியாக தமிழக நீர்வளத்துறை அமைச்சரை கர்நாடகத்திற்கு நேரடியாக அனுப்பி, தமிழகத்திற்கான உரிய பங்கீட்டைப் பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் என வலியுறுத்துகிறேன்.
• டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex. MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
10.07.2026
@CMOTamilnadu
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு.விஜய் அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்றதும், மாவட்ட வாரியாக போதைப்பொருள் தடுப்புப் படை மற்றும் மகளிர் பாதுகாப்பிற்காகச் 'சிங்கப்பெண்' சிறப்பு அதிரடிப் படையை உருவாக்கி முதல் கையெழுத்திட்டுள்ளார். இதனை புதிய தமிழகம் கட்சியின் சார்பாக மனப்பூர்வமாக வரவேற்கிறோம்!
மேலும், தமிழ்நாட்டில் நெடுங்காலமாகப் புரையோடிப் போயிருக்கும் ஊழலைத் தடுக்கும் நடவடிக்கையாக, "நானும் தவறு செய்யமாட்டேன்; என்னோடு இருப்பவர்களையும் தவறு செய்யவிட மாட்டேன்" என வெளிப்படையாக பகிரங்கமாகத் தெளிவுபடுத்தியது பாராட்டுக்குரியது.
இந்த அரசு எப்படிப்பட்ட அரசாக இருக்கும் என்பதை தனது முதல் உரையிலேயே தெளிவுபடுத்திவிட்டார். அவருக்கு எமது பாராட்டுகள்; இவை அனைத்தும் நடைமுறைக்கு வர ஒவ்வொரு நாளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
@TVKVijayHQ
புதிய தமிழகம் கட்சியின் மே தின வாழ்த்து.!
உழைப்பின்றி உலகம் இயங்குவதில்லை. ஓரறிவு உயிரினங்கள் முதல் ஐந்தறிவு உயிரினங்கள் வரை அனைத்தும் உயிர் வாழவும், உணவுக்காக மட்டுமே உழைக்கின்றன. ஆனால், ஆறறிவு படைத்த மனிதன் தன் வயிற்றுப் பசிக்காக மட்டுமின்றி, வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்காகவும் உழைக்கிறான்.
இருப்பினும், எல்லாக் காலகட்டங்களிலும் மனித வாழ்க்கை அவ்வாறு அமைந்ததில்லை. மிருகங்களைக் காட்டிலும் கொடுமையான வாழ்க்கையைப் பல காலம் அனுபவிக்க நேர்ந்தது. அதிலிருந்து விடுதலை பெற உழைப்பாளிகள் - மனித குலம் விடுதலை பெற பல நூறு ஆண்டுகள் பெரும் போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது.
1886-ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில், பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் இரத்தம் சிந்தி நடத்திய போராட்டங்களின் விளைவாகவே, '8 மணி நேர வேலை' என்பது உலகெங்கும் சாத்தியமானது. அந்த மகத்தான நாளையே 'மே தினம்' அல்லது 'உலக உழைப்பாளர் தினம்' எனக் கொண்டாடுகிறோம்.
இந்த மே தின நன்னாளில், தமிழகம் உட்பட உலகெங்கும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது மே தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி
01.05.2026
இந்த அன்பு சும்மா வரல... இவ்வளவு படிச்சிட்டு எந்த எதிர்பார்ப்பும் இன்றி தந்தை வழியில் தங்களுக்காக களம் காண வந்திருக்கும் தனயனை தங்களது வீட்டுப் பிள்ளையாக நினைப்பதால் வருது..!
ஸ்ரீவில்லிபுத்தூர் வெற்றி வேட்பாளர் @DrShyamKK அவர்கள்..! 🔥🇧🇾
இராஜபாளையம் சட்டமன்ற பொது தொகுதியில் இன்று சிலர் மாற்று கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மக்களுக்கு தலைக்கு ₹100 வழங்கி கூட்டத்தை ஏற்பாடு செய்த நிலையில், புதிய தமிழகம் கட்சியின் வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் T. ரமாதேவி அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த இயல்பான,
இதோ ஆரம்பிச்சிட்டானுங்க......அரசாணை கொடுத்தோம்னு......
ஏன்டா டேய், தேவேந்திர குல வேளாளர்களை கூட்டணியில் இணைத்துக்கொள்ள விருப்பமில்லை,
தேவேந்திர குல வேளாளர்களுக்கு உரிய விருப்பத் தொகுதிகளைக் கொடுக்கவும் மனமில்லை,
எங்கே தேவேந்திரர்கள் அரசியலில் அங்கீகாரம் பெற்று விடுவார்களோ என்று சூழ்ச்சியும் செய்வாய்,
ஆனால் உங்களுக்கு தேவேந்திர குல வேளாளர்கள் ஓட்டு மட்டும் வேண்டுமாடா?
எப்படி?? தேவேந்திர குல வேளாளர் அரசாணையை நீங்கதான் கொடுத்தீங்களா? எங்கே வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு நாங்கதான் கொடுத்தோம்னு சொல்லித்தான் பாரேன்...பாமக காரன் உன்னை எதால அடிப்பான்னு அப்புறம் தெரியும்.
ஏன்டா, உங்களுக்கு தேவேந்திர குல வேளாளர்கள்னா காலம் முழுவதும் இலவச வாக்குவங்கியா மட்டுமேதான் இருக்கனுமா? ஏன் எங்களுக்கும் அதிகாரம் வரக்கூடாதா?ஏதோ தேவேந்திர குல வேளாளர் என்கிற பெயரையே இவனுங்க தான் கண்டுபிடிச்சேன்னு சொன்னாலும் சொல்லுவானுங்க போல.....
தேவேந்திர குல வேளாளர் மக்களே!
நாம்தான் உஷாராக இருக்கவேண்டும், இனி மீதமிருக்கும் 20 நாட்களும் உங்களை விலை பேச சுற்றி சுற்றி வருவார்கள், ஏதேதோ சொல்லி ஆசையைத் தூண்டுவார்கள்,
இன்னும் டெல்லியில் இருந்து ஒருவர் வேற வருவார்.......
. பாருங்க உங்க பேரும் என் பேரும் ஒரே மாதிரி இருக்குன்னு தேர்தல் வந்தா மட்டும் முழங்குவார், ஆனா பட்டியல் வெளியேற்றம் கேட்டா காது கேட்காது என்பார்.
எனவே நாம்தான் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்து நமது வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் புதிய தமிழகம் கட்சிக்கு செலுத்தவேண்டும்.
1990 - 2000 காலகட்டங்களில் இருந்த ஒற்றுமையை நாம் இப்போதும் காட்டினால் நிச்சயம் நமக்கான அரசியல் அதிகாரமும், சமூக அங்கீகாரமும் கிடைக்கப்போவதை எந்தக் கொம்பனாலும் தடுக்கமுடியாது.
சிந்தித்து வாக்களிப்போம்! நமக்கான புதிய தமிழகத்தையும் நாமே படைப்போம்!!
- தகவல் தொழில்நுட்ப பிரிவு
புதிய தமிழகம் கட்சி
தீபக் பாண்டியன் அவர்களின் கொள்கை முழக்கத்தை முன்னெடுத்து, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளார் புதியதமிழகம் கட்சி வேட்பாளரும் தீபக்பாண்டியன் அவர்களின் சகோதரியுமான இரா. தமிழ்ச்செல்வி அவர்கள்...
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் ஐயா அவர்களின் ஆணைக்கிணங்க நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் 142 திருவரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு புதிய தமிழகம் கட்சியின் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது .
சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஒரு குறிப்பிட்ட சாதி தான் உள்ளது போல.. இப்படிப்பட்ட சாதியவாதி நயினார் நாகேந்திரனை தோற்கடிப்போம்... தேவேந்திர குல வேளாளர் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி மக்கள்..