மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. @VanniTamizhVCK அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்!
தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.
பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
#BREAKING | கடும் எதிர்ப்புக்கு பணிந்த தவெக அரசு
முதலமைச்சர் விஜயின் ஜோதிடர் ராதன் பண்டிட்-ஐ அரசுப் பணியில் நியமனம் செய்த உத்தரவு வாபஸ்
#SunNews | #TVKGovt | #RadhanPandit | #Vijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
#BREAKING | தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு உரையை வாசிக்காத ஆளுநர் ரவி, இம்முறை அவையில் இருந்தே வெளியேறினார்
#SunNews | #RNRavi | #TNAssembly
இந்த நபர் போட்டிருக்கும் இந்த பதிவை நல்லா கவனிச்சீங்கன்னா ஒரு விஷயம் தெளிவாக புரியும். இதுக்குத்தான் “டூல்கிட் அரசியல்” என்று சொல்கிறார்கள். இந்த நுண்ணரசியலில் என்ன செய்வாங்கன்னா, ஒரு கருத்தை அல்லது குற்றச்சாட்டை மட்டும் தூக்கி போடுவாங்க; ஆனால் அது என்ன, எது, எதற்காக, எந்த சம்பவத்தை வைத்து சொல்றாங்க என்பதைக் குறித்து ஒருபோதும் தெளிவாக பேச மாட்டாங்க.
பொதுவாக எந்த விளக்கமும் இல்லாமல் ஒரு தகவலை மட்டும் பரப்புவாங்க. அதைப் பார்த்த மக்கள் பலரும் உண்மை என்ன என்று ஆராயாமல் நம்ப ஆரம்பித்து விடுவார்கள். இதை புரிந்துகொள்ள ஒரு உதாரணம் சொன்னா, “துப்பாக்கி” படத்தில் வரும் “ஸ்லீப்பர் செல்ஸ்” மாதிரி — என்ன செய்கிறார்கள், எதற்காக செய்கிறார்கள் என்பதே தெரியாமல், ஒரே நோக்கத்திற்காக கண்மூடித்தனமாக ஒரு வேலையை செய்து கொண்டிருப்பார்கள்.
அதே மாதிரி தான் இப்போது சிலர் சமூக வலைதளங்களில் செய்கிறார்கள். அதற்கான சிறந்த உதாரணம் இந்த ட்வீட். ஒரு வார்த்தையை போட்டுவிட்டு, அதற்கான ஆதாரமோ, விளக்கமோ, தரவோ எதுவும் இல்லாமல் மக்களிடம் சந்தேகத்தையும் கோபத்தையும் உருவாக்க முயற்சிக்கிறார்கள்.
அதனால்தான் இப்படிப்பட்ட பதிவுகளை பார்த்தவுடன் உடனே நம்பக்கூடாது. கேள்வி கேட்க வேண்டும் — “ஏன்?”, “எப்படி?”, “எதற்காக?”, “ஆதாரம் என்ன?” என்று.
ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கண்மூடித்தனமாக நம்பும் அரசியலிலிருந்து, கேள்வி கேட்கும் அரசியலுக்கு மக்கள் மாற வேண்டிய நேரம் இது. அந்த மாற்றத்தை இன்றிலிருந்தே ஆரம்பிங்க, தோழர்களே.@TimonTheFire@poornimachandr3