அதிமுக கட்சியை அழிக்கும் தீவிர முயற்சியில் எடப்பாடி பழனிச்சாமி !
வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்களுக்கு கட்சி பதவி அளித்து நேற்று அறிவிப்பு வெளியிட்டார் எடப்பாடி பழனிச்சாமி. வெளியிலிருந்து பார்ப்பதற்கு பழனிச்சாமி பெருந்தன்மையோடு நடந்து கொள்வது போல தெரிந்தாலும், அத்தனை தலைவர்களையும் அவமானப்படுத்தியிருக்கிறார் எடப்பாடி.
அதிமுகவின் அமைப்பு விதிகளின்படி, அவைத்தலைவர், பொதுச்செயலாளர், மாவட்ட செயலாளர் பதவிகள் தவிர்த்து வேறு எந்த பதவிகளுக்கும் அதிகாரம் என்பது துளியும் இல்லை. அனைத்து பதவிகளும் அலங்கார பதவிகளே. மாவட்ட செயலாளராக இருக்கும் ஒருவரை நீக்கி விட்டு, “துணை பொதுச்செயலாளர் ஆகவோ, கொள்கை பரப்பு துணை செயலாளராகவோ, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராகவோ” நியமிப்பதும் “உனக்கு பதவியே இல்லை போ” என்று சொல்வதும் ஒன்றுதான்.
அதிமுக என்ற கட்சி அழிந்தாலும் பரவாயில்லை. என்னை எதிர்த்தவர்களை ஒழிக்காமல் விடமாட்டேன் என்பதை தாண்டி பழனிசாமிக்கு இப்போதைக்கு வேறு நோக்கங்கள் இல்லை.
கட்சி கரைகிறதே என்று ஆதங்கத்தோடு பேசுபவர்களிடமெல்லாம், “வைகோ 20 வருடங்களாக மதிமுகவை நடத்தவில்லையா ? யார் வேண்டுமானாலும் போகட்டும். பார்த்துக் கொள்ளலாம்” என்பதையே பதிலாக சொல்கிறார்.
இப்போதும் கூட நீக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் பழைய பதவியை அளித்தால், ஆறு மாதங்கள் கழித்து கட்சி ஓரளவு எழுந்து நிற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், பழைய பதவியை தருவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற பிடிவாதத்தில் இருக்கிறார் பழனிசாமி. நீக்கப்பட்டவர்களுக்கு பழைய பதவிகளை தராமல் மீண்டும் அதிமுக ஒற்றுமையாக எழுந்து நிற்க வாய்ப்பே இல்லை.
அதிமுக நாசமாக போனால் எனக்கென்ன ? என் மீது வழக்குகள் இல்லை. பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை காண்டிராக்டர்களிடமும், பாஷ்யத்திடமும் வட்டிக்கு விட்ட 3000 கோடிக்கான வட்டிப்பணம் வருகிறது. நானும் என் குடும்பமும் நிம்மதியாக இருப்போம். “ஒரு வருடத்தில் தேர்தல் வருகிறது. அடுத்து நம்ம ஆட்சிதான்” என்று இவர் கூறும் பச்சை பொய்களை நம்பி துதிபாட சுற்றி ஒரு கூட்டம் இருக்கிறது. தேர்தலில் போட்டியிட்டு கடன்காரர்களாக இருக்கும் கட்சிக்காரன் எக்கேடு கெட்டுப் போனால் என்ன என்ற எண்ணத்திலேயே இருக்கிறார் எடப்பாடி.
“கற்பூரம் கரையலாம். கட்சி கரையலாமா ?” என்று கேட்டார் செம்மலை. கரையட்டுமே எனக்கென்ன என்கிறார் “புரட்சித் தமிழர்”
@EPSTamilNadu
திமுக ஆட்சியில், போக்குவரத்துத்துறையில் நிர்வாகக் குறைபாடும் பராமரிப்பு இல்லாமையும் காரணமாக பல சிக்கல்கள் உருவாகி வருகின்றன.
பேருந்து பற்றாக்குறை, சேவை தாமதம் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாக, மக்களின் பயணமும் நம்பிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளன.
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#Live கரூர் மாவட்டத்தில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்.
#Vote4AIADMK#Epsfor2026 https://t.co/6IQaCfEucS