தமிழ்நாடு என்ற பெயரை உச்சரிக்கும்வரை பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நிலைத்து நிற்கும்.
இணையில்லா பெருந்தகையின் நினைவைப் போற்றுவோம்; அவர் வழி நடப்போம்!
#RememberingAnna
உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்!
கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி மாண்புமிகு பிரதமர் வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை; அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? கண்ணீர் ஏன் தெரியவில்லை?
கடந்த ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளின் அடிப்படையில், இத்தகைய ஈரப்பத அளவிற்கான தளர்வைப் பலமுறை வழங்கிய ஒன்றிய அரசு தற்போது வழங்க மறுப்பது ஏன்?
கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு எந்தவிதத்தில் நன்மை செய்யும் என நினைக்கிறீர்கள்?
உடனடியாக இவற்றை மறுபரிசீலனை செய்வதோடு, தமிழ்நாட்டின் கோரிக்கைகள் மீது நல்லதொரு முடிவெடுத்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒன்றிய அரசு நன்மை செய்யும் என நம்புகிறேன்.
இந்தியாவின் தென்கோடியில் இருக்கக்கூடிய தமிழ்நாட்டில் இருந்து நாம் பற்ற வைக்கக்கூடிய திராவிட சூடு, இன்றைக்கு ஒட்டுமொத்த நாட்டையும், டெல்லியையும் ஆட வைத்துள்ளது.
- கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள்
#DMK4TN
S.I.R. குறித்து தமிழ்நாடே புலம்பிக் கொண்டிருக்கிறது! அதை ஆதரித்து அ.தி.மு.க. உச்சநீதிமன்றம் சென்றிருப்பது வெட்கக் கேடு!
கழகத் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (14-11-2025) கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி” என்ற தலைப்பில் கொளத்தூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
இன்றைக்கு நாம் எங்கு சென்றாலும் S.I.R. பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அதைப் பேசாமல் இருக்க முடியாது என்கிற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. மக்கள் ஒவ்வொருவரும், “நாங்கள் இந்திய குடிமக்கள்தான்” என்று நிரூபிக்க வேண்டிய சூழ்நிலையில், கட்டாயத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். காரணம், தேர்தல் ஆணையம் அப்படிப்பட்ட ஒரு பெரும் சுமையை நம்மீது சுமத்தியிருக்கிறது. மக்களின் வாக்குரிமையே பறிபோகும் அளவிற்கு ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை உருவாக்கியவர்கள் யார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஒன்றியத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் இதை உருவாக்கியிருக்கிறார்கள். எவ்வாறு, விசாரணை அமைப்புகளை வைத்து, பல்வேறு மாநிலங்களில் இருக்கும் ஆட்சிகளுக்கு இன்னல்களையும் துன்பங்களையும் தந்து கொண்டிருக்கிறார்களோ, அதேபோல் தேர்தல் ஆணையத்தையும் பயன்படுத்தி அப்படி ஒரு சூழ்நிலையை அவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
ஏற்கனவே, நீங்கள் தொலைக்காட்சிகளில், பத்திரிகைகளில் பார்த்திருப்பீர்கள், படித்திருப்பீர்கள். நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் - காங்கிரஸ் பேரியக்கத்தின் இளந்தலைவர் நம்முடைய அருமைச் சகோதரர் திரு. ராகுல் காந்தி அவர்கள் வெளிப்படையாகவே வாக்குத் திருட்டைப் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை எடுத்துவைப்பது மட்டுமல்லாமல், ஆதாரங்களோடு அதைச் சுட்டிக்காட்டி வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். நான் உங்களையெல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புவது தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் உண்மையான வாக்காளர் ஒருவர்கூட வாக்காளர் பட்டியலிலிருந்து விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் திராவிட முன்னேற்றக் கழகம் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறோம். மக்கள் மன்றத்திலும் விளக்கிக்கொண்டிருக்கிறோம். ஏற்கெனவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி நம்முடைய தோழமைக் கட்சிகளாக இருக்கக்கூடிய கூட்டணிக் கட்சித் தலைவர்களையெல்லாம் அழைத்து இது சம்மந்தமாக கூட்டத்தை நடத்தி பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டு, அதைத் தொடர்ந்து நவம்பர் 2 ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்துக்கட்சிக் கூட்டம் கட்சிப் பாகுபாடின்றி - பதிவு செய்யப்பட்டிருக்கும் எந்தக் கட்சியாக இருந்தாலும் - அது நமக்கு எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, நம்மை விமர்சிக்கும் கட்சியாக இருந்தாலும் சரி, எந்த கட்சிகளாக இருந்தாலும் பாகுபாடு பார்க்காமல் அத்தனை கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தோம். அந்த கூட்டத்தையும் கூட்டினோம். அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறோம். அந்த அடிப்படையில் நாம் நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிறோம். அதுமட்டுமின்றி, கடந்த 11-ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கும் மாவட்டத் தலைநகரங்களில் நம்முடைய தோழமைக் கட்சிகளின் தலைவர்களெல்லாம் பங்கேற்கக் கூடிய வகையில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்திருக்கிறோம். நம்முடைய உணர்வுகளையெல்லாம் தொடர்ந்து வெளிப்படுத்தியிருக்கிறோம். வழக்கமாகத் தேர்தலில் கழகத்தை வெற்றிபெற வைக்கும் பொறுப்பைத்தான் உங்களிடத்தில் ஒப்படைப்பதுண்டு. ஆனால் இந்த முறை, மக்களுடைய வாக்குரிமையைப் பெற்றுதரும் பெரும் பொறுப்பையும் கூடுதலாக உங்களிடம் ஒப்படைத்திருக்கிறோம். அதுவும் கொளத்தூர் தொகுதியின் செயல் வீரர்களாக விளங்கிக் கொண்டிருக்கும் உங்களிடம் சொல்லவேண்டிய அவசியமில்லை. என்னைவிட விழிப்பாக இருக்கக்கூடியவர்கள் நீங்கள். வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள் என்ற நம்பிக்கை நிறைய இருக்கிறது. நமக்கு அதிக கால அவகாசம் இல்லை. அதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நவம்பர் 4-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரையில் ஒருமாத காலம் நிர்ணயம் செய்யப்பட்டு, ஒரு மாதத்திற்குள் எல்லோருடைய கணக்கீட்டுப் படிவமும், அதாவது நாம் வாக்காளராக சேரும் விண்ணப்பப் படிவம் - அதைத்தான் கணக்கீட்டுப் படிவம் என்று சொல்கிறோம். கணக்கீட்டுப் படிவம் என்றாலும் சில பேருக்குப் புரியாது.
நாம் வாக்காளராக சேருவதற்கு ஒரு படிவம் கொடுக்கிறார்கள். இன்றைக்கு தேதி 14. பத்து நாட்கள் முடிவடைந்துவிட்டன. மீதி இருப்பது எத்தனை நாட்கள் என்று உங்களுக்குத் தெரியும். அந்த விண்ணப்பதை நாம் வாங்கிப் பார்க்கும் போது, நமக்குப் பெரிய குழப்பம் வருகிறது. தலை சுற்றுகிறது. தமிழ்நாடு அதுகுறித்து புலம்பிக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே, மேற்கு வங்கத்தில் முதலமைச்சராக இருக்கும் மம்தா பானர்ஜி அவர்கள் மிகப் பெரிய போராட்டங்களை நடத்தித் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதேபோல், கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆளுங்கட்சி மட்டுமல்லாமல் அங்கு இருக்கும் எதிர்க்கட்சியும் ஒன்றுசேர்ந்து போராட்டம் நடத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு அவர்களும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி என்று ஒன்று இருக்கிறது. அது எதிர்க்கட்சியாக இல்லை. இப்படியே சென்றுக்கொண்டிருந்தால் எதிர்க்கட்சியாக மட்டுமல்ல. உதிரிக் கட்சியாக கூட இருக்க முடியாத ஒரு சூழ்நிலை நிச்சயம் ஏற்படும். அதாவது தங்களுடைய கட்சியை டெல்லியில் கொண்டுசென்று அடமானம் வைத்துவிட்டு அந்த SIR-ஐ ஆதரித்து - அவர்கள் போட்டுக்கொண்டிருக்கும் நிபந்தனைகளை எல்லாம் ஏற்றுக்கொண்ட நிலையில் அவர்கள் அடமானம் வைத்திருக்கிறார்கள். அதை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எல்லா கட்சிகளும் உச்சநீதிமன்றத்திற்குச் செல்கிறோம்.
ஆனால், இங்கு எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க. அதை ஆதரித்து உச்சநீதிமன்றத்திற்கு செல்லும் வெட்கக் கேடு நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. மக்களைச் சந்திக்க அவர்களுக்குத் தெம்பு இல்லை. அதனால்தான் இந்தக் குறுக்கு வழியை அவர்கள் நாடியிருக்கிறார்கள். எனவே, இப்படிப்பட்ட நிலையில் உங்களை எல்லாம் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, தொகுதி முழுவதும் ஒரு பூத் விடாமல் சுற்றிச் சுழல வேண்டும். அந்தக் கணக்கீட்டுப் படிவங்களை நிரப்ப நாமெல்லாம் மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் நியமித்திருக்கும் BLO-க்கும் - மக்களுக்கும் இடையே நம்முடைய BLA2-தான் துணை நிற்க வேண்டும். உதவிசெய்ய வேண்டும். ஆலோசனைகளை வழங்க வேண்டும். அதைப் பூர்த்தி செய்ய அனைத்து வகையிலும் நீங்கள் துணைநிற்க வேண்டும் என்று உங்களையெல்லாம் இந்த நேரத்தில் நான் கேட்டுக் கொள்கிறேன்.
கொளத்தூரில் வெற்றி என்பது, நிர்ணயிக்கப்பட்ட வெற்றிதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தப் பணியைப் பொறுத்தவரை, நான் வெற்றி பெறுவதில் எனக்கு இருக்கும் ஆர்வத்தை விட உங்களுக்குத்தான் அதிகமாக இருக்கிறது.
நான் எப்போதும் கொளத்தூருக்கு வரும்போதெல்லாம் சொல்வதுண்டு. என்னதான் நான் தி.மு.க.வின் தலைவராக இருந்தாலும், என்னதான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தாலும், தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மாவட்டங்களுக்கும், அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று சுற்றிச் சுழன்றுக் கொண்டிருந்தாலும், கொளத்தூருக்கு வரும் போதுதான் எனக்குப் பெரிய உத்வேகமும், உற்சாகமும் வழங்கும் வகையில் தொடர்ந்து நீங்கள் வரவேற்பைத் தந்து கொண்டிருக்கிறீர்கள். எனவே, 10 நாட்களுக்கு, 15 நாட்களுக்கு ஒருமுறை அல்லது இருமுறை நானும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன். எனவே, இந்த வாக்காளர்களைச் சரிபார்க்கும் S.I.R. வாக்கு சேகரிக்கும் பணியைப் பொறுத்தவரைக்கும், உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும், நாங்கள் செய்வதற்குக் காத்திருக்கிறோம்; தயாராக இருக்கிறோம். ஆனால், நம்முடைய பணியில் சுணக்கம் இருந்துவிடக்கூடாது. நான் ஏற்கெனவே சொன்னதுபோன்று, இந்த மாதம் 4-ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 4-ஆம் தேதி வரை என்று சொன்னாலும், பத்து நாட்கள் முடிந்துவிட்டது. எனவே, மீதமிருப்பது இன்னும் 15 நாட்கள்தான். எனவே, அதனை முடிக்க வேண்டிய பணிகளில் நீங்கள் ஈடுபடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப இருக்கிறது. அந்தப் பணியை வெற்றிகரமாக முடித்துத் தாருங்கள் என்று உங்களை அன்போடு கேட்டு, எவ்வாறு கொளத்தூர் தொகுதி, மற்ற தொகுதிகளுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கிறதோ, அதேபோல் இந்த S.I.R. பிரச்சினையில் முறையாக வாக்கு சேகரிக்கின்ற பணிகளிலும் முதலிடத்தைப் பெறும் வகையில் நீங்கள் இருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப இருக்கிறது. எனவே, அந்தப் பணியை நிறைவேற்றித் தாருங்கள்… நிறைவேற்றித் தாருங்கள் என்று அன்போடு கேட்டு உங்களையெல்லாம் சந்திக்கும் வாய்ப்பை பெற்றமைக்கு மீண்டும் ஒருமுறை எனது இதயப்பூர்வமான நன்றி, நன்றி, நன்றி! என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!
***
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த போது, திருப்பத்தூர் - குன்றக்குடி - பிள்ளையார்ப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் எழுச்சிமிகு வரவேற்பை வழங்கிய கழக உடன்பிறப்புகள் - இளைஞர் அணி தம்பிமார்கள் - பொதுமக்கள் உட்பட அனைவருக்கும் என் அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@OfficeOfKRP
வட மாநிலங்களின் மக்கள் தொகை குறைவாக உள்ள நகரங்களுக்கு மெட்ரோ வருகிறது, ஆனால் வரிகளை முறையாக செலுத்தும் நமக்கு No-வா?
கோவைக்கு மெட்ரோ வேண்டும் இது நம் உரிமை 🔥
#BJPHatesTamilNadu
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு
அறிவை மையப்படுத்தி ஆட்சியைப் பிடித்து, அறிவொளியை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதையே தலையாய கடமையாக ஆற்றி வரும் தி.மு.கழகத்தின் சாதனையை இனி எவராலும் இம்மண்ணில் படைக்க முடியாது!
கருப்பும் - சிவப்பும் - நீலமும் ஒன்றிணைந்து நிற்கும்போது எப்படிப்பட்ட எதிரியும் இங்கு வாலாட்ட முடியாது என உணர்த்தும் கொள்கை மேடையாக #திமுக75_அறிவுத்திருவிழா-வை ஏற்பாடு செய்த @dmk_youthwing செயலாளர் திரு. @Udhaystalin அவர்களுக்கும், துணைநின்ற இளைஞரணியின் தம்பிமார்களுக்கும் என் பாராட்டுகள்!
திராவிடம் வெல்லும், மீண்டும் மீண்டும் வெல்லும்! அதைக் காலம் சொல்லும்!
இந்திய ஜனநாயகப் போராளி கழகத் தலைவர் அவர்களின் கரங்களை வலுப்படுத்திட திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் அதிகாரப்பூர்வ BDAகள் பட்டியல் வெளியீடு!
தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் - அமைச்சர் முனைவர் @TRBRajaa அவர்கள் அறிவிப்பு!
இந்திய அளவில் ஒரு மாநிலத்தின் அனைத்து பாகங்களுக்கும் (பூத்) தனித் தனியே பாக டிஜிட்டல் ஏஜென்டுகள் பணியமர்த்திய ஒரே இயக்கம் நமது திராவிட நாயகன் அவர்களின் தலைமையில் இயங்கும் திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே என்பது நமது கழகத்திற்கு கிடைத்திருக்கும் மகத்தான தனிப்பெரும் பெருமையாகும். ஜனநாயகத்தின் முதல் பாதுகாவலர் நமது தலைவரே. அவரது கரங்களை வலுப்படுத்த நமது இளம் தலைவர் @Udhaystalin அவர்களோடு கைகோர்த்து திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் உடன்பிறப்புகள் முன்களவீரர்களாக அணிவகுத்து நிற்பார்கள்.
கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பின்வரும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
https://t.co/FqwlWRC8wl
இந்த அறிவுத் திருவிழா,
“திராவிடம் வெல்லும்! அதைக் காலம் சொல்லும்!” என்று முழங்கும் திருவிழா!
ஒரு சூரியன்! ஒரு சந்திரன்! ஒரு தி.மு.க.தான்!
இனி இப்படியொரு இயக்கம் இந்த மண்ணில் தோன்ற முடியாது!
இன்று (08-11-2025) கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், கழக இளைஞரணி சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் “திமுக 75 – அறிவுத்திருவிழா” நிகழ்வைத் தொடங்கி வைத்து, “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திமுக 75” நூலை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார். அதன் விவரம் வருமாறு:
கருப்பு சிவப்புக் கொள்கையைத் தாங்கி, களத்தில் பணியாற்றும் இளைஞரணிப் பட்டாளம் இங்கே கூடியிருப்பதைப் பார்க்கும்போது, திருவள்ளுவர் கோட்டமே திராவிடக் கோட்டமாக மாறி இருப்பதைப் பார்த்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்!
‘காலத்தின் நிறம் - கருப்பு சிவப்பு’ எனும் அறிவுக் கருவூலத்தைத் தமிழ்ச் சமூகத்துக்கு அளிக்கின்ற நூல் வெளியீட்டு விழா, தமிழ்நாட்டின் லட்சியக் கொடியாக விளங்கும் நம்முடைய கருப்பு - சிவப்பு இருவண்ணக் கொடிக்கு வயது 75 என்பதை முன்னிட்டு வரலாற்றுக் கண்காட்சி, இருநாள் கருத்தரங்கம் - முற்போக்குப் புத்தகக் கண்காட்சி என்று இளைஞரணி முன்னெடுத்திருக்கும் இந்தக் கொள்கைத் திருவிழாவில் பங்கெடுத்துள்ள உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்!
தி.மு.க.வின் 75 ஆண்டுப் பயணத்தை நினைவுகூரும் இந்த விழாவிற்கு, "அறிவுத் திருவிழா" என்று உதயநிதி பெயர் வைத்திருக்கிறார். இதைவிடப் பொருத்தமான தலைப்பு வேறு இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். கழகத்தைத் தொடங்கியது "அறி"ஞர் அண்ணா! ஐம்பதாண்டு காலம் அதைக் கட்டிக் காத்தவர் முத்தமிழ் "அறி"ஞர்! கழகத்தின் முதல் தலைமையகம் பெயர் "அறி"வகம்! தலைவர் கலைஞர் கட்டிய தற்போதைய தலைமையகத்தின் பெயர் "அறி"வாலயம்'! இவ்வாறு, அறிவை மையப்படுத்தி, அறிவொளியைப் பரப்புவதையே தலையாய கடமையாக நினைத்து இயங்கி வரும் கட்சியின் 75-ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்தை, 'அறிவுத் திருவிழா' என்று சொல்லாமல், வேறு என்ன சொல்லி அழைக்க முடியும்?
உலகப் பொதுமறை வழங்கிய வள்ளுவருக்கான இந்தக் கோட்டத்தில், தலைவர் கலைஞர் விரும்பிய அறிவுத் திருவிழாவை ஏற்பாடு செய்துள்ள, இளைஞர் அணிச் செயலாளர் ‘கொள்கை இளவல்’ தம்பி உதயநிதி அவர்களையும் - அவருக்குத் துணை நிற்கும் இளைஞரணி தம்பிமார்களையும் நெஞ்சாரப் பாராட்டுகிறேன்! தலைமைக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகிறேன்!
கடந்த ஒரு மாத காலமாக, இந்த அறிவுத் திருவிழாவிற்கான பணிகளில் தம்பி உதயநிதி அவர்கள் மும்முரமாக ஈடுபட்டு இருக்கிறார் என்று முரசொலியில் செய்திகள் வந்துகொண்டே இருந்தது... நானும், “சரி, அப்படி என்னதான் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறார்கள் என்று பார்ப்போம்” என்று காத்துக் கொண்டிருந்தேன்... எதையும் இடையில் கேட்கவில்லை. இப்போது இந்த அறிவுத் திருவிழாவைப் பார்த்த பிறகு சொல்கிறேன், “என்னுடைய நம்பிக்கை வீண் போகவில்லை என்று சொல்வதைவிட, நான் நினைத்ததைவிடச் சிறப்பாகவே ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்!”. வள்ளுவர் கோட்டத்தில் நின்று சொல்கிறேன்... தம்பி உதயநிதியின் கொள்கைப் பிடிப்புமிக்க செயல்பாடுகளைப் பார்க்கிறபோது, அய்யன் வள்ளுவர் சொன்னாரே,
“மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்!” என்ற குறளுக்கேற்ப தம்பி உதயநிதி செயல்படுகிறார் என்று பெருமையுடன் சொல்கிறேன். அந்தப் பெருமையோடு அவருக்கு ஒரு வேண்டுகோளும் வைக்க விரும்புகிறேன். ஏன் என்னுடைய அன்புக்கட்டளை என்று கூட சொல்லலாம். இந்த அறிவுத்திருவிழாவை இத்தோடு நிறுத்திவிடாமல், தொடர்ந்து ஆண்டுதோறும் நீங்கள் நடத்திட வேண்டும். நிச்சயம் இளைஞரணி இதைச் சிறப்பாக நடத்தும் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப உண்டு.
முழுக்க முழுக்க சாமானியர்களால் தொடங்கப்பட்டு, 1967-இல் முதல் மாநிலக் கட்சியாக ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்த கழக வரலாற்றை, இன்று வரை மீண்டும் மீண்டும் பல்வேறு கோணங்களில், பல ஆய்வாளர்கள் ஆர்வத்துடன் ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்கிறார்கள். "ஏதோ கட்சியைத் தொடங்கினோம், அடுத்த முதலமைச்சர் நான்தான்" என்று அறிவித்தோம் என்று நாம் ஆட்சிக்கு வரவில்லை. கழகத்தின் தலைவர்களில் இருந்து, கடைக்கோடித் தொண்டர் வரை, சுற்றிச் சுழன்று பணியாற்றினார்கள். 18 ஆண்டுகள் உயிரைக் கொடுத்து ஒவ்வொருவரும் உழைத்தார்கள்! எத்தனை பத்திரிகைகள்! எத்தனை புத்தகங்கள்! எத்தனை கூட்டங்கள்! எத்தனை கொள்கை வகுப்பெடுக்கும் நாடகங்கள், திரைப்படங்கள்! எத்தனை போராட்டங்கள்! எத்தனை சிறைவாசங்கள்! எத்தனை தியாகங்கள்! எத்தனை துரோகங்கள்! தி.மு.க. உழைத்த உழைப்பு, சாதாரண உழைப்பல்ல!
சமூகத்தில் சரிபாதி மக்கள் படிப்பறிவு கூட இல்லாமல் இருந்த காலத்தில், குக்கிராமத்தில் இருக்கும் முடிதிருத்தும் சலூன் கூட மக்களின் சிந்தனையைத் திருத்தும் மையமாக செயல்பட்டது. சைக்கிள் கடை, டீக்கடை என்று ஒரு இடம் விடாமல், திராவிட இயக்க இதழ்களை ஒரு தி.மு.க.காரர் வாசிக்க, அவரைச் சுற்றி பத்து பேர் செவி வழியாகக் கேட்டு உலக வரலாற்றைத் தெரிந்து கொண்டார்கள். கிராமத்தில் இருக்கிறவர்களும் கியூபா புரட்சியை தெரிந்து வைத்திருந்தார்கள். ரஷ்யப் புரட்சியைப் பற்றி படித்து, ஊக்கமும் உறுதியும் பெற்றார்கள். இவ்வாறு நாம் பெற்ற வெற்றி என்பது இனி யாரும் படைக்க முடியாத வரலாற்றுச் சாதனை!
இந்த வரலாறு பற்றியெல்லாம் தெரியாத சிலர், நம்மை மிரட்டிப் பார்க்கிறார்கள்! இன்னும் சில அறிவிலிகள் தி.மு.க.வைப் போலவே வெற்றி பெறுவோம் என்று பகல் கனவு காண்கிறார்கள். தி.மு.க.வைப் போன்று வெற்றி பெற, தி.மு.க.வைப் போன்று உழைப்பும், அறிவும் தேவை! ஒரு சூரியன்! ஒரு சந்திரன்! ஒரு தி.மு.க.தான்! இனி இப்படியொரு இயக்கம் இந்த மண்ணில் தோன்ற முடியாது!
இந்த வரலாற்றையும் - நம்முடைய கொள்கைகளையும் - தம்பி உதயநிதி இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்ததால்தான், இளைஞரணிச் செயலாளராக அவர் பொறுப்பேற்றதில் இருந்து, லட்சக்கணக்கான இளைஞர்களை கழகத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார்! அவர்களுக்குப் பாசறைக் கூட்டங்களை நடத்தியிருக்கிறார்! முரசொலியின் கடைசிப் பக்கத்தை பாசறைப் பக்கமாக மாற்றினார்! கொள்கைகளைப் பரப்ப முத்தமிழறிஞர் பதிப்பகத்தைத் தொடங்கினார்! தொகுதி தோறும் கலைஞர் நூலகங்களை திறக்கிறார்! உங்களைப் போன்ற இளம் பேச்சாளர்களை உருவாக்குகிறார்! இப்போது, இந்த அறிவுத் திருவிழா மூலமாக, இளம் எழுத்தாளர்கள் – ஆராய்ச்சியாளர்கள் என்று உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்! இதுதான், தந்தை பெரியார் செய்த பணி! பேரறிஞர் அண்ணா செய்த பணி! தலைவர் கலைஞர் செய்த பணி! நான் விரும்பும் பணி! இதை உதயநிதி செய்வதால், தந்தை என்பதைவிட, இந்த இயக்கத்தின் முதன்மைத் தொண்டன் என்ற வகையில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைக்கு வெளியிடப்பட்டிருக்கும், “காலத்தின் நிறம் - கருப்பு சிவப்பு” புத்தகத் தலைப்பிலேயே, நம்முடைய இயக்கம் எத்தகைய மாபெரும் அறிவுக் கரூவூலமாக - கொள்கைத் தீரர்களின் கோட்டமாக இருக்கிறது என்று வெளிப்படுத்தியிருக்கிறார்கள்! நம்முடைய 75 ஆண்டுகால வரலாற்றையும் - சாதனைகளையும், 1,120 பக்கங்களில் தம்பி உதயநிதி உருவாக்க துணை நின்ற, ஆலோசனை வழங்கிய நம்முடைய மதிப்பிற்குரிய சிந்தனைக் கருவூலம் ஐயா க. திருநாவுக்கரசு அவர்கள், ஊடகவியலாளர்கள் திருமாவேலன் அவர்கள், விஜயசங்கர் அவர்கள், கோவி.லெனின் அவர்கள்… தொகுப்பாசிரியர்கள் செந்தில், சுகுணா திவாகர், நீரை மகேந்திரன், பிரகாஷ், கௌதம்ராஜ், பன்னீர் பெருமாள் என எல்லோரையும் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
திராவிட இயக்கத்திற்கு சார்பானவர்கள் மட்டுமல்ல, திராவிட இயக்கத்திற்கு வெளியில் இருந்து செயல்படுகிறவர்களும், திராவிட இயக்கத்தை விமர்சிப்பவர்களும் கூட கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள். இத்தனை கட்டுரையாளர்கள் பார்வையில், இப்படி ஒரு புத்தகம் உருவாகுவது மிகவும் சிறப்பு! இந்தப் புத்தகத்தை அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டும்!
இந்த நேரத்தில், இளைஞரணியினருக்கு நான் ஒரு கோரிக்கை வைக்க விரும்புகிறேன்... இந்தப் புத்தகத்தில் இருக்கும் கட்டுரைகளை, காலத்திற்கு ஏற்ற மாதிரி, வீடியோக்களாக மாற்றி, சோஷியல் மீடியாவில் அனைத்து இளைஞர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்!
நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், அன்னை சோனியா காந்தி முதல் - அகில இந்தியத் தலைவர்கள் அனைவரும், தங்கள் பார்வையில் நம்மை அளவிட்டு எழுதியிருக்கிறார்கள்! ஒரு மாநிலக் கட்சியை, அகில இந்தியத் தலைவர்களும், மற்ற மாநிலத் தலைவர்களும் புகழ்ந்து எழுதுவது சாதாரணமாக நடந்துவிடாது! முக்கியமான தலைவர்கள் நம் இயக்கம் பற்றிச் சொன்ன கருத்துகளில் ஹைலைட்டாக ஒரு வரியை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றால், என் மதிப்பிற்குரிய அன்புச் சகோதரர் ராகுல் காந்தி அவர்கள், “ஒடுக்குமுறையில் இருந்து மக்களை மீட்ட இயக்கம்” என்று சொல்லியிருக்கிறார். மதிப்பிற்குரிய லாலு பிரசாத் அவர்கள், “சமூகநீதிக்காக 75 ஆண்டுகள் போராடிய இயக்கம்” என்று பாராட்டியிருக்கிறார். மதிப்பிற்குரிய சரத் பவார் அவர்கள், “கூட்டாட்சியின் வலிமையான பாரம்பரியம்” என்று சொல்லியிருக்கிறார். மதிப்பிற்குரிய சி.பி.ஐ. தேசிய செயலாளர் டி. ராஜா அவர்கள், சமத்துவத்தின் முகமாக நம்மை பார்க்கிறார். மதிப்பிற்குரிய பரூக் அப்துல்லா அவர்கள், “மதச்சார்பின்மை மற்றும் ஒற்றுமைக்காகப் பயணிப்பவர்கள்” என்று சொல்லியிருக்கிறார்! அன்புக்குரிய சகோதரர் அகிலேஷ் அவர்கள், “எங்களுக்கும் தி.மு.க.விற்கும் இருப்பது லட்சியங்களுக்கான உறவு” என்று சொல்லியிருக்கிறார். பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக விரைவில் வர இருக்கக் கூடிய, நாம் எதிர்பார்த்திருக்க கூடிய சகோதரர் தேஜஸ்வி அவர்கள், நம்மை ஜனநாயகத்தின் தோழனாகப் பார்க்கிறார். மரியாதைக்குரிய அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள், “அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவைக் கட்ட நினைக்கும் இயக்கம்” என்று சொல்கிறார்.
இப்படி, இந்தியாவே போற்றும் இயக்கமாக நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் வளர்ந்திருக்கிறது! இந்தச் சாதனைகளும் - வளர்ச்சியும்தான் பலரின் கண்களை உறுத்துகிறது! நாம் பேசும், சமூகநீதி - சுயமரியாதை - மாநில சுயாட்சி - கூட்டாட்சி - ஆகிய கருத்துகள் இன்றைக்கு இந்தியா முழுமைக்கும் பரவிவிட்டது! “என்னடா இவர்களைத் தமிழ்நாட்டிலேயே முடக்க நினைத்தால், இந்தியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்களே” என்று கோபப்படுகிறார்கள்.
எனவே, நான் பெருமையுடன் சொல்கிறேன்... இந்த அறிவுத் திருவிழா, “திராவிடம் வெல்லும்! அதைக் காலம் சொல்லும்!” என்று முழங்கும் திருவிழா! இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில், வெறும் தி.மு.க. புத்தகங்களையும் திராவிட இயக்கப் புத்தகங்களையும் மட்டும் வைக்காமல், பொதுவுடைமை இயக்கப் புத்தகங்கள் - அம்பேத்கரியப் புத்தகங்கள் - பெண்ணியப் புத்தகங்கள் என்று அனைத்து வகைப்பட்ட அரசியல் புத்தகங்களுக்கும் களமாக, முற்போக்குப் புத்தகக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்! முற்போக்கு கருத்துகளை மக்களிடம் அறிமுகப்படுத்தி, அவர்களை எழுச்சி பெற வைப்பது என்ற தந்தை பெரியார் செய்த பணியை நீங்கள் தொடர்ந்து செய்வது பெருமையாக இருக்கிறது!
இங்கு இருக்கும் இளைஞரணித் தம்பிமார்களைப் பார்க்கிறபோது, இது கூடிக் கலையும் கூட்டமாக இல்லாமல், காலந்தோறும் கொள்கைகளைக் கூர்தீட்டிக் கொள்ளும் கூட்டமாக இருப்பதால்தான், எத்தனை பெரிய எதிரிகள் வந்தாலும் - எத்தனை பெரிய தந்திரங்களைக் கொண்டும் நம்மை வீழ்த்த முடியவில்லை என்று உணர்த்துகிறது! கொள்கைரீதியாகத் தி.மு.க.வை வீழ்த்த முடியாததால், தேர்தல் ஆணையம் மூலமாக, குறுக்கு வழியில் வீழ்த்த முடியுமா என்று முயற்சி செய்கிறார்கள்! அதுதான், S.I.R.
ஏன் இந்த S.I.R-ஐ அவசர அவசரமாக நடத்த வேண்டும்? தேர்தல் நெருக்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் இது வேண்டாம் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் சொல்லியும், ஏன் நடத்த வேண்டும்? இதையெல்லாம் காது கொடுத்து கேட்காமல், தேர்தல் ஆணையம் S.I.R. பணிகளை தொடங்கிவிட்டார்கள். இதற்கு எதிராகச் சட்டரீதியாகவும் – அரசியல்ரீதியாகவும் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம், தொடர்ந்து போராடப் போகிறோம், போராடுவோம், அது வேறு!
இந்த நேரத்தில், இளைஞரணித் தம்பிமார்களிடம் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, களத்தில் வேலை செய்யும் நீங்கள், எந்தவொரு போலி வாக்காளரும் இடம்பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்! உண்மையான நம்முடைய வாக்காளர்கள் விடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்! யாருடைய வாக்குரிமையும் பறிபோகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்! அதற்காகக் களப்பணியாற்ற வேண்டும்!
நம் இயக்க வரலாறு முழுவதுமே போராட்ட வரலாறுதான்! நம்முடைய போராட்ட வரலாற்றை நினைவூட்டும் கொள்கைத் திருவிழாதான், இந்த அறிவுத் திருவிழா! முற்போக்கு விழாவாக, கருப்பு - சிவப்பு - நீலம் - சேர்ந்திருக்கும்போது எந்தக் காவியாலும் நம்மை எதுவும் செய்ய முடியாது! இந்தியாவின் ஜனநாயகத்தையும் - தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் காக்க – 2019 முதல் தொடரும் நம்முடைய பயணம், 2026-லும் மாபெரும் வெற்றியைப் பெறும்! “திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும்!” தந்தை பெரியாரின் - பேரறிஞர் அண்ணாவின் - தலைவர் கலைஞரின் - இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் - கொள்கை வாரிசுகள் இருக்கும் வரை, தமிழ்நாடு தலைகுனியாது! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
நன்றி! வணக்கம்!
#திமுக75_அறிவுத்திருவிழா
ஐயா பசும்பொன் உ. முத்துராமலிங்க தேவர் திருமகனார் அவர்களின் “118வது ஜெயந்தி மற்றும் 63வது குருபூஜை” விழாவை முன்னிட்டு, இன்று கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் தேவர் திடலில் அமைக்கபெற்ற ஐயா திருமகனார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு, ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாலை அணிவித்து,