டெல்லியில் நடைபெற்றுவரும் நீட் தேர்வுக்கு எதிரானப் போராட்டத்தைத் தொடர்ந்து, சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்றுவரும் மாணவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு எனது ஆதரவைத் தெரிவித்தேன்.
நீட் தேர்வை முழுமையாக ஒழிக்க, அறவழியில் போராடிவரும் மாணவர்களின் போராட்டம் வெல்லட்டும்.
#BanNEET #DMKforStudents #AbolishNEET #SaveStudents
நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையளிக்கிறது.
காவல்துறைக்குப் பொறுப்பு(?) வகிக்கும் முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் உட்படப் பல அமைச்சர்களும் அதிகாரிகளும் திரைப்படம் பார்க்க விடுப்பில் சென்றுள்ளதால், இன்றைய நாள் தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான்!
நாளை பணிக்குத் திரும்பிய பின்னாவது, இந்த காவல் மரணம் குறித்து வாய் திறக்கிறார்களா என்று பார்ப்போம்.
நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் போராடிவரும் மாணவர்களுக்கு திமுக சார்பில் கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி நேரில் ஆதரவு.
"We are with you to carry forward this fight".
திமுகவின் இந்த வார்த்தைகள் தான் தமிழ்நாட்டை இன்றும் காத்து வருகிறது. இனி இந்தியாவையும் காக்கும்.