தமிழ்நாட்டின் வளர்ச்சியை இலக்காகவும், மக்கள் நலனை மையமாகவும் கொண்டு, ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் அனைவரும் பாராட்டும் வகையில் 2026 - 27ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. நெ.மரிய வில்சன் அவர்களுக்கும், வேளாண்மை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர. வினோத் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
தொலைநோக்குப் பார்வையுடன்கூடிய திருத்திய நிதிநிலை அறிக்கையானது மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழில்முனைவோர், அரசுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கும் புதிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
வேளாண்மை நிதிநிலை அறிக்கையானது, தமிழ்நாட்டின் வேளாண் வளர்ச்சியோடு, அதன் தொழில்சார்ந்த கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு, பால்வளம், உணவுப் பொருட்களைப் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுதல் போன்ற தொழில்களையும் மேம்படுத்துவதோடு, அனைத்துத் தரப்பு விவசாயிகளின் நலனையும் வாழ்வாதாரத்தையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்!
#CMJosephVijay
BREAKING NEWS :
செய்தியாளர்களை குறிவைத்து தாக்கும் திமுக குண்டர்கள்!
“ஒரு சில ஊடகங்கள்தான் முதல்வர் விஜய் வெற்றி பெற காரணம்” என்று கூறி, பாலிமர், நியூஸ் தமிழ் 24/7, புதிய தலைமுறை உள்ளிட்ட ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த செய்தியாளர்களை குறிவைத்து திமுகவினர் தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் செய்தியாளர்கள் தாக்கப்பட்டதுடன், அவர்களது சட்டைகள் கிழிக்கப்பட்டு, ஆபாச வார்த்தைகளால் திட்டப்பட்டு அங்கிருந்து வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊடகப் பணியாளர்கள் மீது இதுபோன்ற தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியாகும் தகவல்கள், ஊடகச் சுதந்திரம் குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்புகின்றன.
செய்தியாளர்களை குறிவைத்து தாக்கும் திமுக செயலுக்கு கண்டனங்கள்!
#ஆபாசநிதி
செங்கிப்பட்டியில் செய்தியாளர்கள் மீது தாக்குதல்! திமுகவினருக்கு கண்டனங்கள்!
உதயநிதியிடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊடகப் பணியாளர்கள் மீது சிலர் மது போதையில் தாக்குதல் நடத்தி உள்ளது மனிதத் தன்மையற்ற செயல்!
இந்தச் சம்பவத்தில் நியூஸ் தமிழ் 24×7 செய்தியாளர்கள் சுப்புராமன், அஜய் மற்றும் வாகன ஓட்டுநர் அபிலாஷ் தாக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும் பாலிமர் செய்தியாளர் பிரகாஷ், ஒளிப்பதிவாளர்கள் பாபு மற்றும் பாஸ்கர் உள்ளிட்டோர் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர்.
இவர்களை திமுகவினர் ஆபாச வார்த்தைகளால் இழிவாகப் பேசியதுடன், அந்தக் காட்சிகளைப் பதிவு செய்ய முயன்ற ஒளிப்பதிவாளர்களையும் தாக்கியிருப்பது ஊடகச் சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்.
செய்தியாளர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவது திமுகவிற்கு புதிதில்லை. இதுபோன்ற சட்டவிரோத மற்றும் அராஜகச் செயல்களுக்கு இனி எந்தவித நியாயமும் கற்பிக்க முடியாது.
இந்த வன்முறைச் சம்பவத்தில் தொடர்புடைய திமுக நபர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதி செய்வோம்.
ராஜ்மோகன்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் காணொலி காட்சி வாயிலாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை, விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனை, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனை, பொதட்டூர் பேட்டை அரசு மருத்துவமனை, திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனை, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அரசு மருத்துவமனை, வளவனூர் அரசு மருத்துவமனை உட்பட சுமார் 113 கோடி ரூபாய் மதிப்புள்ள கூடுதல் மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்தார்.
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை மையத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
மேலும் பல நவீன மருத்துவ உபகரணங்களின் செயல்பாட்டையும் தொடங்கி வைத்தார்.
அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை என்ற உயரிய குறிக்கோளை நிறைவேற்றும் வகையில் இந்த அரசு தொடர்ந்து அர்ப்பணிப்போடு செயல்பட்டு கொண்டு வருகிறது.
@HM_TamilNadu | @CMOTamilnadu
#தமிழ்நாடு | #மக்கள்நல்வாழ்வு | #HealthcareForAll |#tndevelopment | #arunraajtvk
அய்யய்யோ, எம்மா எம்மா!
அய்யனாருக்கு வெட்டுவதற்காக அழைத்துச் செல்லப்படும் ஆடு, மஞ்சள் அலங்காரத்தை ரசிப்பதைப் போல, மேகதாது என்றால் என்னவென்றே தெரியாத மோகமாது உதவாநிதி தஞ்சையில் செய்த ஆபாச வக்கிரத்துக்கு சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டிருக்கிறார்.
இந்த தனிமனித வக்கிரத்தை தியாகமாக சித்தரிக்க தமிழ்நாடு முழுக்க பொதுச்சொத்து சேதத்தையும், வன்முறைகளையும், கலவரத்தையும் தூண்டி வருகிறது திமுக.
திமுகவின் இன்றைய தியாக முழக்கம்,
அய்யய்யோ, எம்மா எம்மா!
அய்யய்யோ எம்மா எம்மா!
#ஆபாசநிதி
திமுகவின் ரவுடியிசம்!
பொது இடங்களில் திமுகவினர் சாலை மறியல் என்ற பெயரில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு, அதனை கேள்வி கேட்ட மக்களையும் அதிகாரிகளையும் தாக்கி ரவுடியிச செயலில் ஈடுபடுவதும், ஆபாச வார்த்தைகளால் தரக்குறைவாக பேசுவதும் கடுமையான கண்டனத்துக்குரியது.
திமுக வரலாறே இது போல மக்கள் விரோத ரவுடியிச செயலில் ஈடுபடுவது தான் என மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளது.
சட்டம் தன் கடமையை செய்யும்!
#ஆபாசநிதி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (4.8.2026) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் காணொலிக் காட்சி வாயிலாக 113 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டடங்களைத் திறந்து வைத்து, நவீன மருத்துவ உபகரணங்களின் பயன்பாட்டையும் தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay
பொதுமக்களை தாக்கும் திமுகவினர்!
மக்களுக்கு இடையூறாக சாலை மறியல் செய்ய வேண்டாம் எனக் கூறிய இருசக்கர வாகன ஓட்டியை, திமுகவினர் சரமாரியாக தாக்கும் காட்சி அதிர்ச்சி அளிக்கிறது!
அடுத்தடுத்து பெண்களை தரக்குறைவாக பேசி வந்த திமுகவினர் தற்போது வன்முறையை கையில் எடுக்கிறார்கள். பேச்சில் வன்கொடுமையும், செயலில் வன்முறையும் மிகவும் மோசமானது. இவர்களின் அச்சுறுத்தல் காரணமாக பொது மக்கள், பெண்கள், வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள்.
இது ஏற்புடையது அல்ல. சமூக ஒழுங்கை சீர்குலைத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால்..
சட்டம் தன் கடமையை செய்யும்!
#ஆபாசநிதி
தமிழ்நாடு விவசாயிகளின்- பொதுமக்களின் வாழ்வாதார பிரச்சனையான காவிரி நீர் பிரச்சனையில்... நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சட்ட நடவடிக்கைகள் உட்பட பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வரும் நிலையில்,
நாங்களும் போராடுகிறோம் என ஷோ காட்டும் விதமாக ஆகஸ்ட் 3-ஆம் தேதி தஞ்சாவூரில் திமுக நடத்திய ஆர்பாட்டத்தில் தனது சுய ரூபத்தை வெளிக்காட்டி விட்டார் மாண்பு இல்லாத எதிர்க்கட்சித் தலைவரான ஆபாசநிதி.
சுட்டுப் போட்டாலும் எங்களுக்கு நாகரீகமாக பேச வராது என்பதை தஞ்சாவூரில் மேடை போட்டு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் ஆபாசநிதி.
காவிரியை நம்பி இருக்கும் ஒட்டுமொத்த விவசாய பெருமக்களையும், ஒட்டுமொத்த பெண்களையும், ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையே இழிவுபடுத்துகிற வகையில் அவருடைய ஆபாச மேடைப் பேச்சு அருவெறுப்பூட்டுகிறது. மிகவும் கண்டிக்கத்தக்கது.
இதுதான் DMK @arivalayam வின் DNA.
காவிரி பிரச்சனையில் ஆபாசநிதியின் கண்ணோட்டம் எப்படி இருக்கிறது என்பதையும்... அவருடைய சாக்கடை சிந்தனையின் துர்நாற்றத்தையும் தமிழ்நாடு உணர்ந்து கொண்டு விட்டது.
பெயர் தான் U வில் தொடங்குகிறது. மற்றபடி அவரது சிந்தனை செயல்பாடு எல்லாமே A தான்.
இப்படிப்பட்ட ஆபாச நிதியின் கைகளில் தான் பேரறிஞர் அண்ணா தொடங்கிய திமுக சிக்கப் போகிறது என்பது அண்ணாவையே அவமானப் படுத்துவதாகும்.
சிங்கப் பெண்கள் நிறைந்த தமிழகத்தில்... அசிங்க அரசியல் செய்யும் ஆபாச நிதி மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நேரம் இது!
@TVKVijayHQ | @TVKHQITWingOffl | @BussyAnand | @TVKPartyHQ
#ஆபாசநிதி
#ஆபாசநிதி
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை ஆபாசமாக பேசியுள்ள ஆபாசநிதியை கண்டிக்கிறேன்.
மேடைப்போட்டு பதிலுக்கு நாங்கள் பேசினால் உங்களால் தாங்க முடியாது.
நாங்கள் பேச விரும்பவில்லை. எங்களை எங்கள் தலைவர் நாகரிகமான முறையில் வழிநடத்துகிறார்.
கண்ட நேரத்தில் இன்ஸ்டாகிராமில் கண்டதை நோண்டும் ஆபாசநிதிக்கு முதல்வரை பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது.
பேரறிஞர் பெருந்தகை அண்ணா ஆரம்பித்த இயக்கத்தில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்றும் கடுகளவு கூட இல்லாமல் ஆபாச பேச்சுக்களை மக்கள் மத்தியில் பேசி பெண்களை கீழ்த்தரமாக பார்க்கும் ஆபாசநிதிக்கு வன்மையான கண்டனங்கள்!
உங்கள் ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்வது நல்லது, பெருமைமிகு பெண்களை கேவலமாக நினைத்து பேசினால் சுயமரியாதை எனும் தீ உங்கள் ஆணவத்தை சாம்பலாக்கிவிடும்!
#ஆபாசநிதி
எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பும் மரபும் மிக்க மிகப்பெரிய பொறுப்பை உணராமல், வாய்க்கு வந்தபடி பேசிய ஒருவரை என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. தன் தாத்தாவும் தந்தையும் வகித்தும்கூடவா முதல்வர் பதவியின் தகுதியும் தராதரமும் தெரியாமல் ஒருவர் இருக்க முடியும்?.
அவை அடக்கமும் நாவடக்கமும் இல்லாத ஒருவரா நம் தமிழகத்தின் துணைமுதல்வராக இருந்திருக்க முடியும்?. மக்கள் மத்தியில் இத்தகையக் கேள்விகள் இமாலய அளவிற்கு எழுந்துள்ளன. எல்லை மீறி இழிவாகப் பேசியவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் ?.
Decent Approach - Decent Attack கற்றுக்கொடுத்து எங்களைக் கட்டுப்படுத்தி வளர்க்கும் மக்கள் விரும்பும் முதல்வரான நம் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இப்படி அநாவசியமாகவும் அநாகரிகமாகவும் தொட்டவர்கள் நிலை என்னவாயிற்று என்பதை யாராக இருந்தாலும் உணர்ந்தே ஆக வேண்டும். மக்கள் உணர்த்தியே தீருவர். அதில் மாற்றமும் இல்லை. மாற்றுக் கருத்தும் இல்லை.
அமைதி காக்கச் சொல்லி எங்கள் தலைவர் தளபதியின் நாகரிக வளர்ப்பு எங்களைத் தடுக்கிறது. வேறு என்ன சொல்ல?.
அறிஞர் அண்ணா பாணியில் ‘வசவாளர்கள் வாழ்க’ என்று சொல்லலாம்.ஆனால், ஆபாசநிதிகளை?.
மாண்பும் மரியாதையும் தகுதியும் தராதரமும் மிக்க எங்கள் தலைவர் தளபதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சொல்வதுபோல மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். யாரும் மறந்துவிட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்.
#ஆபாசநிதி
கொத்துஸ் ஐடி விங் கவனத்திற்கு.
பிசினஸ் ஸ்டாண்டர்ட் நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை குறித்து சில உண்மைகளை மக்களின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
முதலில், அந்தக் கட்டுரை முழுவதும் ப்ராஜெக்ட்ஸ் டுடே (Projects Today) என்ற தனியார் இணையதளத்தின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. ஆனால் அந்த இணையதளத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் முழுமையாகவும், தற்போதைய நிலவரத்திற்கேற்பவும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் முதலீடுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை பராமரிக்கும் மாநில அரசின் முதலீட்டு மேம்பாட்டு முகமையான வழிகாட்டி நிறுவனம் வெளியிடும் தரவுகளே நம்பகமானவை.
தவெக அரசு பொறுப்பேற்ற முதல் காலாண்டிலேயே தனது முதல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) L&T குழுமத்துடன் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ₹18,600 கோடி முதலீடும், 8,200 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக உள்ளது. இதே நேரத்தில், முந்தைய திமுக அரசு தனது முதல் காலாண்டில் (Q1 FY21) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கூட கையெழுத்திடவில்லை என்பது அதிகாரப்பூர்வ பதிவுகளில் உள்ளது. எனவே, தவெக அரசின் செயல்பாடு குறித்த தவறான தகவல்களை பரப்பும் முயற்சிகள் உண்மைக்கு புறம்பானவை என்பது இதன்மூலம் தெளிவாகிறது.
அதுமட்டுமல்ல, திமுக அரசு தனது முதல் ஆறு மாதங்களில் (H1 FY21) மொத்தம் ₹21,021.54 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மட்டுமே கையெழுத்திட்டது. ஆனால் TVK அரசு வெறும் 50 நாட்களிலேயே அந்த அளவை எட்டும் வகையில் செயல்பட்டுள்ளது. மேலும், 2026 ஜூலை மாதத்தில் Hitachi Energy, Vikram Solar, Chubb, Nordex, MotiveLink, University of Western Australia உள்ளிட்ட உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்களையும் சேர்த்துக் கணக்கிட்டால், இதுவரை தவெக அரசு ₹35,062 கோடி மதிப்பிலான முதலீட்டு உறுதிமொழிகளைப் பெற்றுள்ளது. இது முந்தைய அரசின் செயல்திறனை ஏற்கனவே கடந்துவிட்டது என்பதையே அதிகாரப்பூர்வ தகவல்கள் காட்டுகின்றன.
மேலும், 2026 செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும் முதல் அரையாண்டிற்குள் இந்த முதலீட்டு எண்ணிக்கை இன்னும் கணிசமாக உயரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதன்பிறகு, தவெக அரசின் முதலீட்டு ஈர்ப்பு சாதனை மேலும் வலுவாக வெளிப்படும்.
எனவே, ப்ராஜெக்ட்ஸ் டுடே இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ₹7,143.23 கோடி என்ற முதலீட்டு விவரம் முழுமையற்றதும், தற்போதைய அதிகாரப்பூர்வ தகவல்களுடன் பொருந்தாததுமாகும். முதலீடு தொடர்பான விவரங்களை மதிப்பிடும்போது மாநில அரசின் அதிகாரப்பூர்வ அமைப்பான வழிகாட்டி நிறுவனம் வெளியிடும் தரவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
TRUCK OWNER-INFLUENCER BOOKED AFTER VIDEO AT ELAVUR CHECK POST
Arambakkam police registered a case against Rajasthan-based truck owner and Instagram influencer Shyam Lal Nokha, 35, after he claimed to have conducted a sting operation exposing illegal money collection at the Elavur Integrated Check Post near Gummidipoondi in Tiruvallur district. He was arrested and later released on station bail.
Police said Shyam Lal operates the Instagram page “trucked shyamlal”, which has more than 2.06 lakh followers. He regularly posts videos highlighting issues faced by truck drivers and raising complaints about illegal collections at toll plazas and check posts.
According to the police, Shyam Lal recorded a video while passing through Elavur check post on Friday. In the video, he claimed officials were collecting money illegally from truck drivers and urged bystanders to record the incident. The footage later went viral on social media.
Following a complaint lodged by a Regional Transport Office inspector, Arambakkam police registered a case against him for criminal intimidation and causing damage to public property at the check post. Police said Shyam Lal had not produced evidence to support his allegations.
Officials also clarified that the Elavur Integrated Check Post does not have a FASTag payment facility and that the prescribed user fee is collected in accordance with the established procedure.
The case assumes significance as the Directorate of Vigilance and Anti-Corruption recently conducted a raid at the same check post and seized ₹4.32 lakh in cash. A separate case was registered in connection with that operation. Police said further investigation into the case against Shyam Lal was underway.
#Chennai #ChennaiUpdates #CrimeSelvaraj #ChennaiCityPolice #ChennaiPolice #TiruvallurPolice #Instagram #TruckedShyamlal
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுகின்றன. இதர விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
As per the directions of the Hon’ble Chief Minister of Tamil Nadu, all cases registered against students who protested against the NEET examination will be withdrawn. Further details will be announced shortly. Heartfelt gratitude to the Hon’ble Chief Minister of Tamil Nadu.
- Rajmohan
It has been a thoroughly amazing and emotional journey with you through JanaNayagan, Leo, Beast, Master and Kaththi 📈
Thank you @actorvijay sir for the unlimited trust and memories that I will cherish forever 🤗
The music lives on ❤️
Happy Pongal 😊
Anna you became the first order of a true ‘Jananayagan’ way before our votes counted, this movie is only the biggest celebration for your authenticity and demeanor as our favorite actor. So our dearest Hon’ble Chief Minister @actorvijay Anna, may this movie soar and live through our hearts.
Congratulations and Blessings from the heavens.
#JanaNayaganFromToday
@TheKVNofficial@KvnProductions #HVinoth @hegdepooja@anirudhofficial@thedeol@_mamithabaiju@Jagadishbliss@LohithNK01@RamVJ2412
#JanaNayaganFromToday