மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்கப்பட்டதுடன், குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.(12.06.2026)
வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1435-ஆம் பசலி (2025-2026) ஆண்டிற்கான வருவாய் தீர்வாய (ஜமாபந்தி) நிறைவு விழாவில் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டார்.
ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, கலந்தரா பகுதியில் இயங்கி வரும் பொது விநியோக நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய இருப்பில் வைக்கப்பட்டிருந்த குடிமைப் பொருள்களின் தரம் மற்றும் இருப்பு விவரம் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.(11.06.2026)
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, கொரட்டி பகுதியில் நபார்டு மற்றும் கிராம சாலைகள் - ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (2025-26) கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பால பணிகள் பார்வையிடப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. (11.06.2026)
வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1435 -ஆம் பசலி(2025-2026) ஆண்டிற்கான வருவாய் தீர்வாயத்தில்(ஜமாபந்தி) கலந்துகொண்டு , பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. உடன் வட்டாட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் இருந்தனர்.(10.06.2026)
ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, கலந்தரா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் செயல்பட்டு வரும் ஸ்மார்ட் வகுப்பு பார்வையிடப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. (10.06.2026)
வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1435 -ஆம் பசலி (2025-2026) ஆண்டிற்கான வருவாய் தீர்வாயத்தில்(ஜமாபந்தி) கலந்துகொண்டு , பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. உடன் வட்டாட்சியர்(வாணியம்பாடி) மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் இருந்தனர்.(09.06.2026)
வாணியம்பாடி நகராட்சி பகுதியில் அமைந்துள்ள வாணியம்பாடி அரசு மருத்துவமனை பார்வையிடப்பட்டு புறநோயாளிகள் பிரிவு, நோயாளிகள் பதிவு செய்யுமிடம், மருந்தகம் மற்றும் சிகிச்சை பிரிவுகள் பார்வையிடப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.(09.06.2026)
மாவட்ட ஆட்சியரக குறை தீர்வு கூட்டரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் தொடர்பான குறைகளை உடனுக்குடன் தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், தென்மேற்கு பருவமழை-2026 ஐ முன்னிட்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பேரிடர் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்பட்டது. (05.06.2026)
திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கதிரிமங்கலம் ஊராட்சி, என்.எம் கோயில் வட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளப்பட்டதை தொடர்ந்து மரக்கன்று நடப்பட்டது.(05.06.2026)
திருப்பத்தூர் நகரில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மாவட்ட இருப்பு அறை மற்றும் கண்காணிப்பு அறையினை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகளின் முன்னிலையில் திறக்கப்பட்டு காலாண்டு தணிக்கை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.(05.06.2026)
திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையம் பார்வையிடப்பட்டு அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. (05.06.2026)
திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட வள்ளுவர் நகர், மருத்துவ நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதி –1, திருமால் நகர், வெங்கடேஸ்வரா நகர், சுந்தரம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 6 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கந்திலி ஊராட்சி ஒன்றியம், குரும்பேரி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நாற்றாங்கால் பண்ணை வளர்த்தல் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் திட்ட இயக்குநர்( மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) உடனிருந்தார்.(04.06.2026)
கந்திலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட , உடையாமுத்தூர் ஊராட்சி, இரகுபதியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு மதிய உணவு வழங்கபடுவதை பார்வையிட்ட நிகழ்வு.(04.06.2026)
மாவட்ட ஆட்சியரக மக்கள் குறை தீர்வு கூட்டரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் தொடர்பான குறைகளை உடனுக்குடன் தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.(01.06.2026)