Rapido போன்ற பைக் டாக்சிகள் தங்கள் பிழைப்பில் மண்ணை போடுவதாக கூறி ஆட்டோ ஓட்டுனர்கள் அவ்வப்போது போராட்டம் நடத்துகிறார்கள்.
ஏழை, நடுத்தர மக்களுக்கு ஷேர் ஆட்டோ, பைக் டாக்சிபோன்றவைதான் குறைந்த கட்டணத்தில் இருக்கின்றன.
பல்லாண்டுகாலம் மீட்டர் பொருத்தாமல் ஆட்டோக்கள் இயங்குவது மட்டும் சரியா? அவர்கள் சொல்வதுதான் கட்டணமா?
சிலகிலோ மீட்டருக்கே 150, 200 ரூபாய் என மனதில் படுவதை இவர்கள் கேட்பது ஏன்?
ஆட்சிகள் மாறினாலும்.. ஆட்டோ கட்டணம் மட்டும் ஏன் பல ஆண்டுகளாக ஒழுங்குபடுத்தப்படவில்லை?
கேரளாவில் அரசாங்க App மூலம் நியாயமான கட்டணத்தில் ஆட்டோக்கள் இயங்குகின்றன.
பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களில் மனசாட்சியுடன் கட்டணம் வாங்குகிறார்கள்.
ஆனால் சென்னை மற்றும் இதர தமிழக நகரங்களில் ஏன் முறையான கட்டணங்கள் இல்லை? ஏன் மீட்டர் இல்லை?
2013 ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்... தமிழக ஆட்டோக்கள் மீட்டர் கட்டணத்தை மட்டுமே வாங்க வேண்டுமென உத்தரவிட்டது. அது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் கலைப்பு செய்தியாகவும் வந்தது.
சென்னை உயர்நீதிமன்றம் கூட இதுகுறித்த உத்தரவை பிறப்பித்தது.
ஆனால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்நிலை தொடரும்?
பைக் டாக்சியும் இல்லாமல், நியாயமான ஆட்டோ கட்டணமும் இல்லாமல்.. எளிய மக்கள் அவதிப்படுவது ஏற்புடையதா?
சில தினங்களுக்கு முன் நடந்த விவாத நிகழ்ச்சியில் விஜய்யை கூத்தாடி என கோவமாக சாடினார் விசிக எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ்
விவாத நிகழ்ச்சிகளில் நாகரீகமாகவும், அமைதியாகவும் பேசும் மிகச்சிலரில் இவரும் ஒருவர். ஆனால் இம்முறை பொறுமை இழந்து இப்படியொரு வார்த்தையை பேசியுள்ளார்.
சினிமா நடிகர்களை கட்சியில் சேர்ப்பது, பிரச்சாரத்திற்கு அழைப்பது, வெற்றிக்காக வாய்ஸ் தர சொல்வது, கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் அருகே அமர வைப்பது, அவர்களின் படங்களை ப்ரிவியூ ஷோ பார்ப்பது.
..அரசியல். மேடைகளில் நடிகர்களை போல உள்ளவர்களை ஆட வைப்பது.. என அனைத்திற்கும் அவர்களை ஏன் அழைக்கிறீர்கள்?
உங்கள் தலைவர் கூட படங்களில் படித்துள்ளார். ப்ரிவியூ ஷோ பார்த்து விமர்சனம் சொல்கிறார்.
தனது பிறந்தநாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு திரையுலகினரை அழைத்து பேச சொல்கிறார்.
அப்போதெல்லாம் நடிகர்கள் மீது உங்களுக்கு கோவம் வரவில்லையா?
கூத்தாடி எனும் வார்த்தை எப்படி உங்களைப்போன்ற சட்டம் படித்தோருக்கு கூட இழிவான சொல்லாக மாறியது?
வேறு துறையை அல்லது சமூகத்தை சேர்ந்தோரை இப்படி பேசியிருந்தால்.. போராட்டம் வெடித்திருக்கும். நீங்களும் உடனே மன்னிப்பு கேட்டிருப்பீர்கள்.
ஆனால் சினிமாக்கரர்களிடம் ஒற்றுமை இல்லாததால். இப்படி பேசியுள்ளீர்கள்.
இதை கண்டிக்க ஒரு நடிகருக்கும் திராணி இல்லை. அதில் ஆச்சர்யமும் இல்லை.
நேற்றுநடந்த சினிமா நிகழ்ச்சியில் இயக்குனர்கள் ஆர்.வி. உதயகுமார், பேரரசு ஆகியோர் மட்டும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
வரும் தேர்தலில் சினிமா சம்மந்தப்பட்ட எவரும் உங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிக்கு பிரச்சாரம் செய்ய வேண்டாம், எங்களுடன் மேடையேற வேண்டாம்.
இனி சினிமா சார்ந்த நிகழ்வுகளில் நாங்கள் பங்கேற்பதில்லை என உறுதியளிக்க இயலுமா?
தங்கள் பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பீர்களா?