தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் திருமதி இரா.ரேவதி அவர்களை
ர் திராவிடர் கழக பொறுப்பாளர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் முதல் பாகம், வைக்கம் போராட்ட வரலாறு, தந்தை பெரியார் அவர்கள் எழுதிய பெண் ஏன் அடிமையானாள்? ஆகிய நூல்களை வழங்கினர்
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு E E.சுந்தரவதனம் அவர்களை
திராவிடர் கழக பொறுப்பாளர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் முதல் பாகம் நூலை வழங்கி சிறிது நேரம் உரையாடி விடைபெற்றனர் (12-08_2026)
“தந்தை பெரியாரை கொள்கைத் தலைவராக அறிவித்துவிட்டு, பெரியார் திடலில் போலீஸை குவிப்பதா?
நீட் குறித்த தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டில் ஒன்றிய அரசை எதிர்த்து திராவிடர் கழகம் மேற்கொள்ள இருந்த பிரசாரத்தை தடுப்பதா?” -சிதம்பரம் எம்.எல்.ஏ., தமிமுன் அன்சாரி கேள்வி!
திருச்சி மாவட்ட மகளிரணி மகளிர் பாசறை சார்பில் நடைபெற்ற குடும்ப கலந்துரையாடல் கூட்டம் நேற்று மிகவும் சிறப்பாக நடத்திய,ஒருங்கிணைத்த, பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்
மானமிகு சுயமரியாதைக்காரர்
முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் கலைஞர் நினைவு நாளை முன்னிட்டு தஞ்சாவூர் பூபதி நினைவு பெரியார் படிப்பகத்தில் காலை 8-45 மணிக்கு டாக்டர் கலைஞர் சிலைக்கு காலை 9.30 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
*கண்ணந்தங்குடி கீழையூர்*
*பள்ளி வளர்ச்சி குழு ஆலோசனைக் கூட்டம்*
கண்ணந்தங்குடி கீழையூர் பள்ளி வளர்ச்சி குழு, மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் ஆலோசனைக் கூட்டம் 50-08-2026 வியாழன் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது
பெரியார் பன்னாட்டு அமைப்பின்
சமூக நீதிக்கான கி.வீரமணி விருது பெற்ற திராவிடர் கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களை வாழ்த்தி மகிழ்ந்தோம்
(பெரியார் திடல்-02-08-2026)
*எடமேலையூர் லெ.ரூபாவதி* *நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி*
அம்மையார் அவர்களின் படத்திறப்பு நிகழ்வு 2.08.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணி அளவில் எடமேலையூர் அத்தாணியார் தெரு லெட்சுமணன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.
திராவிடர் கழக விருத்தாசலம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. நீட் தேர்வு மற்றும் Ews நீக்கம் செய்ய வலியுறுத்தும் இருசக்கர ஊர்தி பயணத்தில் பங்கேற்பது விருத்தாசலத்தில் பெரியார் குடும்பங்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்கள்கலந்துரையாடல்கூட்டம் அரியலூரில் நடைபெற்றது. பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்திடவும் ,நீட் த ,EWS இட ஒதுக்கீட்டையும் ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற உள்ள இருசக்கர வாகனப் பரப்புரை பயணத்தை நடத்திடுவதென முடிவு செய்யப்பட்டது .(19.7.2026)
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ஆர்எஸ்எஸ் என்னும் டிரோஜன் குதிரை
என்ற நூலின் அறிமுக விழா அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் சிறப்பாக அரியலூரில் நடைபெற்றது . மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் நூலினை வெளியிட்டு உரையாற்றினார் (19.7.2026)