உதயநிதி ஸ்டாலின் எனும் நம்பிக்கை🖤❤️🔥
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் ஒவ்வொரு காலையிலும், “இன்று உயிரோடு வீடு திரும்புவார்களா?” என்ற அச்சம் பெற்றோரின் நெஞ்சை பிளக்கிறது. பாதுகாப்பாக இருக்க வேண்டிய பள்ளிக்கூடங்களே, பிள்ளைகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத இடங்களாக மாறிவிட்டன.
இந்த அச்சத்தின் மத்தியில், “உண்மைக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுக்க ஒருவர் இருக்கிறார்” என்ற நம்பிக்கை தமிழகத் தாய்மார்களின் மனதில் உருவாகியுள்ளது — அது அண்ணன் உதயநிதி ஸ்டாலின் மீதான நம்பிக்கை.
மாணவன் அமுதனின் தாயின் கண்ணீரும், அவர் பேசிய வார்த்தைகளும் அந்த நம்பிக்கைக்கு சாட்சியாக நிற்கின்றன.
சட்டமன்றத்தில் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அமுதனின் மரணம் குறித்து உண்மையை வெளிக்கொண்டு வராமல் இருந்திருந்தால், ஒரு அப்பாவி மாணவனின் உயிரை வெறும் “கோஷ்டி மோதல்” என்ற வார்த்தைக்குள் புதைத்து, உண்மையை மூடி மறைத்திருப்பார்கள்.
ஒரு மாணவனின் உயிர் ஒரு புள்ளிவிவரம் அல்ல.
ஒரு தாயின் கண்ணீர் ஒரு அரசியல் செய்தி அல்ல.
உண்மையை மறைப்பது இன்னொரு அநீதிக்கு வழிவகுக்கும்.
அந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க,
அமுதனுக்காக பேச,
அமுதனின் தாய்க்காக நிற்க,
தமிழக மாணவர்களின் பாதுகாப்புக்காக போராட —
உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார் என்ற நம்பிக்கை இன்று தமிழக மக்களிடம் இருக்கிறது.
அந்த நம்பிக்கையை எந்த அதிகாரமும் மௌனமாக்க முடியாது.
தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில புதுசா Delimitation கொண்டுவந்தா, அது எவ்வளவு பெரிய ஆபத்தாக அமையும் என்பதை இந்தியாவிற்கே முதன்முதலா சொன்ன இயக்கம் எங்களுடைய திராவிட முன்னேற்றக் கழகம், எங்களுடைய கழகத் தலைவர் அவர்கள்தான்.
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில், கழகத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவித் தொகையாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 25 பேருக்கு, கழக இளைஞர் அணிச் செயலாளர் - மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் ரூ.6,25,000/- மதிப்பிலான காசோலைகளை வழங்கினார்.
அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்தில் நிதி உதவிகளைப் பெறும் பயனாளிகளின் விவரம் வருமாறு:
#கழக_இளைஞர்_அணி
விவசாயிகளின் துயர் துடைக்க வக்கற்ற #SofaModel அரசு, பிரச்சினைகளை திசைதிருப்புவதற்காக என்னை கைது செய்திருக்கிறது.
தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் தேவையற்ற வார்த்தைகளை நான் பயன்படுத்தியதாக ஆளுங்கட்சியின் Abusive warriors-ஐ வைத்து என் மீது அவதூறு பரப்பினார்��ள்.
பொய் வழக்குகளைப்பதிவுச் செய்து சென்னையில் இருந்து தஞ்சைக்கு அலைக்கழிப்பதாக நினைத்து, யாரையோ திருப்திப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.
என்னைக் கைது செய்ததும் மீடியாவைப் பார்த்து, இந்தக் கைதை காமடியாகப் பார்க்கிறேன் என்று கூறிவிட்டுத்தான் வந்தேன்.
போலீஸைப் பார்த்து பயந்து ஓடிப்போய் விடவில்லை.
ஆனால் இன்றைய முதலமைச்சர் கரூரில் 41 பேர் இறந்தபோதும் அவர்கள் குடும்பத்தாரையும் பார்க்காமல், மீடியாவையும் பார்க்காமல் கைது செய்து விடுவார்களோ என்று அச்சத்தில் தலைதெறிக்க ஓடியதை நாடறியும்.
கரூரில் அத்தனை உயிர்கள் பலியான போதும் - அடுத்த ஒரு மாதத்தில் பட விளம்பரத்துக்காக மலேசியா போய் குத்தாட்டம் போட்டவர்தான் இவர்.
முதலமைச்சர் வேண்டுமானால் கைதுக்கு பயப்படலாம். நான் அதற்கெல்லாம் அஞ்சமாட்டேன். நான் கலைஞரின் பேரன். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் மகன்.
விவசாயிகளுக்காகப் போராடி கைதாவது என்றால், ஒருமுறை அல்ல 100 முறை கூட கைதாவேன்.
விவசாயிகளின் நலனுக்காக 300 கிலோ மீட்டர் அல்ல 3000 கிலோமீட்டருக்கு மேல் அழைத்துச் சென்றாலும், நான் செல்லத்தயார்.
உங்கள் அடக்குமுறை எங்கள் மக்கள் பணிகளை ஒரு நாளும் தடுக்காது!
என்னுடைய கைதை கண்டித்த தோழமை இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், தமிழ்நாடு முழுவதும் எனக்கு ஆதரவாக ஒற்றுமையை வெளிப்படுத்திய கழக உடன்பிறப்புகளுக்கும் ��ன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@mkstalin @arivalayam
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை, சென்னை - ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீ��்டில் சந்தித்த பல்வேறு கிறித்துவ சமயப் பெரியோர்கள் பலர் அவரைச் சந்தித்து, FCRA திருத்த மசோதாவை எதிர்த்து தி.மு.க. மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குத் தங்களது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தனர்.
கழகத் தலைவர் அவர்களைச் சந்தித்தவர்களின் விவரம் வருமாறு:
1. Archbishop Chinappa
2. Evangelist Paul Dinakaran, Jesus Calls
3. Evangelist Pastor Mohan Sellaraja, Assembly of God
4. Father Francis, Deputy General Secretary TN Bishop Council.
5. Rev. Sam Britto Francis - Director, Department of Youth & Dalit Board, CSI Synod
6. Rev. Jebasingh Samuvel - Director, CSI SEVA & EMS Head Unit India
7. Rev. Jeba Daniel - Director, Department of Communications, CSI Synod
8. Rev Mr Ebenezer - Communication Executive, CSI Synod
9. Rev Mr Parthiban - CSI Synod
10. Bishop Alwin Prabhu, Admin of Pentecostal Church, Irumbliyur
11. Bishop David, Pentecostal Church, Irumbliyur
12. Rev Duraiswamy, Treasurer, Evangelical Church of India
13. Rev Noah James, National Missionary Society of India
14 Bishop Esther Kathiroli, Secretary, Tamil Nadu Christian Council
15. Premnath Samuel, Chennai Transformation Network - Leader & Calvary Community Ministries - Senior Pasto Pentecost.
16. John Joseph, Victorious Ministries - Founder & Director
ஈரோட்டில் நாடாளுமன்ற அலுவலகத்தை மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்த நாள் இன்று.
அன்றும்... இன்றும்... என்றும்...
மக்கள் பணியே முதன்மை என்ற எண்ணத்துடன், உங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகிறேன்.
@mkstalin
#KEPrakash #DMK #Erode #ErodeMP
மேகதாது அணை மற்றும் காவிரிப் பிரச்சினையில் தவெக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை 24 மணி நேரத்திற்குள் முதலமைச்சரும் அமைச்சரும் பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும்.
- திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் திரு. @iparanthamen அவர்கள்
கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் திரு. தளபதி முருகேசன் அவர்களின் தாயார் திருமிகு.மணியம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தி வருத்தமளிக்கிறது.
அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கழகத்தின் இராணுவம் – திமுக இளைஞர் அணி!
இலட்சியத்தை நெஞ்சில் சுமந்து, சமூகநீதியை வழிகாட்டியாகக் கொண்டு, கழகத்தின் வலிமைமிக்க படையாக செயல்பட்டு வரும் திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி, வெற்றிகரமாக 46 ஆண்டுகளை நிறைவு செய்து, 47ஆம் ஆண்டில் அடியெடு���்து வைக்கிறது.
இந்த மகத்தான பயணத்தில் உழைத்த முன்னோடிகளுக்கும், இன்று உறுதியுடன் களத்தில் பணியாற்றி வரும் கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு அனைத்து இளைஞர் அணி நிர்வாகிகளுக்கும், தோழர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
@mkstalin
#KEPrakash #DMK #Erode #ErodeMP
கழகம் நெருக்கடியில் இருந்த நேரத்தில், கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான #MISA_Batch-ஐ கொண்டு தொடங்கப்பட்ட நம் @dmk_youthwing , இன்றைக்கு 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
கொள்கைப் பணி-மக்கள் பணிகளைக் களத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார்ப் போல் முன்னெடுக்கக் காத்திருக்கும் கழக இளைஞர் அணியின் அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா..!
#DMKYW #47_Years_of_DMKYW
தேர்தல் 2026 தொடர்பாக அமைக்கப்பட்ட திமுக கள ஆய்வுக்குழுவின் பணிக்கிணங்க, தொகுதிவாரியாக கழக நிர்வாகிகள், உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் கள நிலவரங்களை விரிவாக கேட்டறிந்தோம்.
அவ்வாறு பெறப்பட்ட கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை ஒருங்கிணைத்து தயாரிக்கப்பட்ட அறிக்கையை, மாண்புமிகு கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, நான் மற்றும் பொறியாளர் அணி செயலாளர் திரு. கருணாநிதி ஆகியோர் வழங்கினோம்.
மக்களின் மனநிலையையும், கள யதார்த்தங்களையும் பிரதிபலிக்கும் இந்த அறிக்கை, வரவிருக்கும் தேர்தலில் கழகத்தின் வெற்றிப் பயணத்திற்கு உறுதியான அடித்தளமாக அமையும்.
களத்தில் இருந்து கிடைக்கும் ஒவ்வொரு கருத்தும், கழகத்தின் வளர்ச்சிக்கும், மக்கள் நலச் செயல்பாடுகளுக்கும், தேர்தல் வெற்றிக்கும் வழிகாட்டும் சக்தியாக இருக்கும். மக்கள் நம்பிக்கையே கழகத்தின் மிகப்பெரிய வலிமை. அந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி, மக்களின் பேராதரவுடன் வெற்றியை நோக்கி கழகம் உறுதியுடன் முன்னேறும்.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு; மீண்டும் வருவோம், வென்று வருவோம்!
@mkstalin
#KEPrakash #DMK #Erode #ErodeMP