சவூதி அரேபியாவில் இன்று ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை தென்படாததால்,
மத்திய கிழக்கு நாடுகளில் ஈகைத் திருநாள் வரும் வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.!
இலங்கை காலி கடற்கரையில் போர்க்கப்பலில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 84 ஈரானிய மாலுமிகளின் உடல்கள் இன்று மத்தள சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் சிறப்பு விமானம் மூலம் ஈரானுக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளன!
- பாதுகாப்பு அமைச்சகம்
இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு!
எரிபொருள் விலைகள்:
⛽ Octane 92 பெட்ரோல்
ரூ. 24 உயர்வு → ரூ. 317
⛽ Octane 95 பெட்ரோல்
ரூ. 25 உயர்வு → ரூ. 365
🚛 Auto Diesel
ரூ. 22 உயர்வு → ரூ. 303
🚛 Super Diesel
ரூ. 24 உயர்வு → ரூ. 353
🔥 Kerosene – ரூ. 13 உயர்வு → ரூ. 195
Ceypetco fuel prices will be revised from midnight today.
👉Auto Diesel reduced by Rs.6 to Rs.277
👉Petrol Octane 95 reduced by Rs.6 to Rs.335
👉Kerosene reduced by Rs.5 to Rs.180
No change in prices of Petrol Octane 92 & Super Diesel
ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலைக்கு முன்னர், அவரை பின்தொடர்ந்ததாக கூறப்படும் வாகனத்திலிருந்த, இதுவரை அடையாளம் காணமுடியாத நபர் மீகஸ்ஆரே கஜ்ஜா என தெரியவந்துள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!
கொழும்பு கோட்டை பகுதியில் வாகன போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த
பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, குற்றவியல் அழுத்தம் விடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது!
- பொலிஸ்
திருகோணமலை கடற்பகுதியில் நிலநடுக்கம்
இன்று பிற்பகல் வேளையில் திருகோணமலையிலிருந்து வட கிழக்கே கடலில் 60 கிலோ மீட்டர் தொலைவில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது
எனினும் சுனாமி ஆபத்து இல்லை
-GSMB & DMC புவிச்சரிதவியல் திணைக்களம் மற்றும் இடர் முகாமைத்துவ மையம்
மஹிந்த ராஜபக்ஷ கொழும்பிலிருந்து வெளியேறினார்.
இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ரஜபக்ஷ தமக்கு வழங்கப்பட்டிருந்த வீட்டிலிருந்து இன்று உத்தியோகபூர்மாக வெளியேறி சென்றார்.
கத்தார் மீதான இஸ்ரேல் தக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட டாக்டர் கலீல் அல்-ஹையா தலைமையிலான ஹமாஸ் இயக்கத்தின் பிரதிநிதி குழு உயிர் தப்பியது.
- Al-Jazeera சற்று முன் தகவல்
மித்தெனியாவில் மீட்கப்பட்டதைப் போன்ற மற்றொரு இரசாயனப் பொருள், ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. கந்தானையில் உள்ள ஒரு வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
– காவல்துறை.
மன்னாரில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை விதிப்பு!
-மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி
💥Breaking:
போதைப்பொருள் விற்பனை மூலம் கைது செய்யப்படும் நபர்களுக்கு இனிமேல் வாழ் நாள் முழுக்க வெளியில் உலா வரமுடியாத புதிய சட்டங்களை அமுல்படுத்த உள்ளோம்!
-பொலிஸ் ஊடகபேச்சாளர்
பனதுறையில் துப்பாக்கிச்சூடு 🚨
Alubomulla, பனதுறையில் உள்ள கடையொன்றில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். உயிரிழப்போ காயமோ எதுவும் ஏற்படவில்லை என போலீஸ் தெரிவித்துள்ளது.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
- சிறைச்சாலைகள் துறை