சொத்து வாங்க போறீங்களா?
பதிவு பண்றதுக்கு முன்னாடி இந்த 5 முக்கிய Paper-ஐ Check பண்ணாம கையெழுத்து போடாதீங்க!
லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் நாம சம்பாதிக்கிற பணத்தை ஒரு சொத்தா மாத்தி போடுறோம்.
அது நம்ம வாழ்நாள் சேமிப்பு. ஆனா அந்த சொத்தை வாங்குற அந்த 10 நிமிஷத்துல மட்டும் தான் நாம ரொம்ப அவசரப்படுறோம்.
“சார் பத்திரம் ரெடி, கையெழுத்து போடுங்க”னு சொன்ன உடனே பேனாவை எடுத்து போட்டுடுறோம்.
அந்த ஒரு அவசரம் தான், அடுத்த 10 வருஷம் Court, வக்கீல், அலைச்சல்னு கொண்டு போய் விட்டுடும்.
சொத்து வாங்குறது ஒரு கல்யாணம் மாதிரி. பொண்ணு பார்கிற மாதிரி, சொத்தோட எல்லா “ஜாதகத்தையும்” பார்துடனும். அந்த ஜாதகம் தான் இந்த 5 முக்கிய Paper. இதை மட்டும் சரியா Check பண்ண��ட்டா, நீங்க 99% பிரச்சனையில இருந்து தப்பிச்சுடலாம்.
1. தாய்பத்திரம் / Mother Deed - 30 வருட வரலாறு
இதுதான் சொத்தோட பிறப்பு சான்றிதழ்.
இந்த சொத்து முதல்ல யார் பேர்ல இருந்தது? அதுக்கு அப்புறம் யார் யாருக்கு விற்கப்பட்டது?
ஒவ்வொரு பத்திரமும் அடுத்த பத்திரத்தோட சரியா Link ஆகுதா?
உதாரணமா: 1990-ல் ஒருவர் பேர்ல இருந்த சொத்து, 2005-ல் அடுத்தவருக்கு வந்திருக்கு. 2018-ல் மூன்றாவது நபருக்கு விற்கப்பட்டிருக்கு. ���ப்போ அந்த மூன்றாவது நபரிடம் இருந்து நீங்க வாங்குறீங்க. இந்த 3 பத்திரமும் சரியா இருக்கா? இடையில ஏதாவது பத்திரம் Missing-ஆ?
குறைந்தது 30 வருஷம் பின்னோக்கி போய் பார்கனும். ஏன்னா, 29-வது வருஷம் ஏதாவது பிரச்சனை இருந்தா, உங்க பத்திரமே செல்லாம போய்டலாம். வக்கீல் வச்சு “Title Search” பண்றதுக்கு இதுதான் முதல் Paper.
2. வில்லங்க சான்றிதழ் / EC - 30 வருட சுமை இருக்கா?
EC-னா Encumbrance Certificate. இது ரொம்ப முக்கியம். இந்த சொத்து கடந்த 30 வருஷத்துல வேற யாருக்க���வது விற்கப்பட்டதா?
விற்குறவர், அதே சொத்தை Bank-ல அடமானம் வச்சு Loan வாங்கியிருந்தா? இல்ல வேற ஒருத்தருக்கு “விற்பனை ஒப்பந்தம்” போட்டு Advance வாங்கியிருந்தா? இல்ல இந்த சொத்து சம்பந்தமா Court-ல ஏதாவது வழக்கு நடந்துட்டு இருக்கா?
இதெல்லாம் EC-ல தான் வரும். EC-ல “Nil Encumbrance”னு வந்தா மட்டும் தான் சொத்து சுத்தமா இருக்குனு அர்தம். இல்லனா, நீங்க பணம் கொடுதுட்டு, பிறகு பிரச்சனையில் மாட்டிக்க வேண்டியதுதான்.
3. ���ட்டா, சிட்டா, அடங்கல் - அரசு Record என்ன சொல்லுது?
பத்திரம் உங்க பேர்ல இருந்தா மட்டும் போதாது. அரசாங்க Record-லும் உங்க பேர்ல வரனும். அதுக்கு தான் பட்டா முக்கியம்.
பட்டா: இந்த சொத்து யார் பேர்ல இருக்கு?
சிட்டா: இந்த சர்வே எண்ணுக்கு மொத்தம் எவ்வளவு நிலம் இருக்கு?
அடங்கல்: இந்த நிலத்தோட வகை என்ன? நத்தம் புறம்போக்கா? விவசாய நிலமா? வீட்டு மனையா?
விவசாய நிலத்தை வீட்டு மனைனு சொல்லி வித்தா வாங்காதீ���்க. அங்கீகாரம் இல்லாத மனையா இருந்தா, வீடு கட்ட அனுமதி கிடைக்காது. பட்டா மாற்ற முடியாம தவிக்க வேண்டியதுதான்.
4. வரைபடம் / Layout Approval - வீடு கட்ட முடியுமா?
நீங்க வாங்குறது வீட்டு மனைனா, இந்த Paper கட்டாயம். DTCP அல்லது CMDA Approval இருக்கா?
அங்கீகாரம் இல்லாத Layout-ல மனை வாங்கினா, 3 பிரச்சனை வரும். ஒன்னு, Bank Loan கிடைக்காது. ரெண்டு, வீட்டுக்கு EB Connection, குடிநீர் Connection கிடைக்காது. மூனு, நாளைக்கு நீங்க விற்க போனாலும் யாரும் வாங்க மாட்டாங்க.
“Approved Layout”னு சொன்னா மட்டும் நம்பாதீங்க. Original Approval Copy-யை அரசு Website-லயோ, அலுவலகத்திலயோ Verify பண்ணுங்க.
5. வாரிசு சான்��ு மற்றும் NOC - எல்லாரும் சம்மதமா?
இது தான் இன்னைக்கு பல பிரச்சனைக்கு காரணம். விற்குறவர் அந்த சொத்துக்கு ஒரே வாரிசா?
பூர்வீக சொத்தா இருந்தா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மனைவி, பிள்ளைகள் எல்லாருக்கும் பங்கு இருக்கும். ஒருத்தர் மட்டும் வந்து “என் சொத்து”னு விற்றா அது செல்லாது.
அதனால, எல்லா வாரிசுகளும் “எனக்கு ஆட்சேபனை இல்லை, இவர் விற்கலாம்”னு Notarized NOC கொடுதாங்களானு பாருங்க.
கூட்டு பட்டாவா இருந்தா, பாகப்பிரிவினை பத்திரம் போட்ட பிறகு தான் வாங்கனும்.
இல்லனா பிற்காலத்தில் வாரிசுகள் தரப்பில் இருந்து ஆட்சேபனை வர வாய்ப்பு இருக்கு.
இந்த 5 Paper-ஐ வக்கீல் கிட்ட கொடுத்து Check பண்ண ஆகுற செலவு சில ஆயிரம் ரூபாய் தான். ஆனா அது உங்க லட்சக்கணக்கான ரூபாய்க்கு காப்பீடு.
“அவசரப்பட்டு கையெழுத்து போடுற 10 நிமிஷம், உங்க 10 வருஷத்தை தீர்மானிக்கும்.”
சந்தேகம் இருந்தா தயங்காம ஒரு சொத்து வழக்கறிஞரை சந்திங்க. சொத்து வாங்குறது ஆடம்பரம் இல்ல, அது பாதுகாப்பு.
#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #அறிவோம்சட்டம் #சொத்து
உள்ளடக்கம் இல்லாத எண்ணங்கள் வெறுமையானவை, கருத்துக்கள் இல்லாத உள்ளுணர்வுகள் குருடானவை.....!
வாழ்க்கையின் நோக்கத்தைக் க��்டுபிடித்துவிட்டால், இடர்பாடுகள் ஒரு பொருட்டல்ல.....!!
விவாதித்து கொண்டே இருப்பவர்கள், முட்டாள்களை விட ஆபத்தானவர்கள்.....!!
கோபமான விவாதங்கள் சரியான காரணத்திற்காக இருக்க வேண்டும். தேவையில்லாத கோபங்கள், சிந்திக்காமல் கொட்டும் சொற்கள் நம்மைத் தான் பாதிக்கும்......!!!
🙏 காலை வணக்கம் 🙏
பதிவு செய்யாத பாகப்பிரிவினை - பயம் வேண்டாம்!
சட்டப்படி 3 தீர்வுகள்:
நம்ம ஊர்ல 100-ல 90 குடும்பத்துல இதே பிரச்சனை தான்.
அப்பா உயிரோட இருக்கும்போது 3 பிள்ளைங்களுக்கும் சொத்த பிரிச்சு கொடுத்திருப்பார்.
"நீ வடக்க பார்த்த வீடு,
நீ தெற்கு பார்த்த நிலம்,
நீ தோட்டம் வச்சுக்கோ"னு வாய் வார்த்தையா சொல்லிட்டு போயிருப்பார்.
ஆனா பத்திரம் பதிய மாட்டார். "நமக்குள்ள என்னடா பத்திரம்"னு விட்டுடுவார்.
வருஷம் ஓடும். அப்பா-அம்மா இறந்துடுவாங்க. கூட பிறந்த 2 பேரும் இறந்துடுவாங்க.
இப்போ நீங்க மட்டும் தான் உயிரோட இருக்கீங்க. சொத்த விக்க போனா, லோன் வாங்க போனா, பட்டா மாத்த போனா ஆபீஸர் கேட்பார்:
"பாகப்பிரிவினை பத்திரம் எங்க?"
அப்போ தான் தலை சுத்தும். "அய்யய்யோ பத்திரமே இல்லையே, இனி சொத்து ப��ச்சா?"னு பயம் வரும்.
பயப்படாதீங்க. சொத்து போகாது. இந்திய சட்டம் உங்க பக்கம் தான் இருக்கு.
முதல்ல ஒரு அடிப்படை உண்மை தெரிஞ்சுக்கோங்க:
பதிவு செய்யாத பாகப்பிரிவினை செல்லாது இது Registration Act Section 17 சொல்லுது. ₹100 மேல மதிப்பு இருக்கிற அசையா சொத்த பிரிச்சா கண்டிப்பா பதியணும். பதியலனா அந்த பத்திரத்துக்கு சட்டப்படி மதிப்பு கிடையாது.
ஆனா இங்க தான் ஒரு Twist இருக்கு.
Limitation Act, 1963 Section 27 சொல்லுது:
"ஒரு சொத்த ஒருத்தர் 12 வருஷத்துக்கு மேல தொடர்ந்து, தடையில்லாம, வெளிப்படையா அனுபவிச்சா, அந்த சொத்து அவருக்கே சொந்தமாயிடும்." இதுக்கு பேரு Adverse Possession.
அதாவது, பத்திரம் இல்லனாலும் 12 வருஷம் நீங்க மட்டும் தனியா அனுபவிச்சா, EB Bill உங்க பேர்ல கட்டுனா, வீட்டு வரி உங்க பேர்ல கட்டுனா, Voter ID, Ration Card-ல இந்த Address இருந்தா, அந்த சொத்து சட்டப்படி உங்களுக்கு சொந்தம்.
சரி, இப்போ தீர்வுக்கு வருவோம். உங்களுக்கு 3 வழி இருக்கு.
வழி 1: விடுதலை பத்திரம் - Release Deed - ரொம்ப ஈஸி
இது தான் 90% கேஸ்ல Work ஆகும் வழி. இறந்து போன உங்க கூட பிறந்தவங்களுக்கு மனைவி, பிள்ளைங்க இருப்பாங்க இல்லையா?
அவங்க தான் இப்போ சட்டப்படி வாரிசு.
நீங்க அவங்க கிட்ட போய் பேசணு��். "எங்க அப்பா அப்பவே பாகம் பிரிச்சு கொடுத்துட்டார். 20 வருஷமா நான் தான் அனுபவிக்கிறேன். உங்களுக்கு ஆட்சேபனை இல்லனா, என் பேருக்கு ஒரு விடுதலை பத்திரம் எழுதி கொடுங்க"னு கேட்கணும்.
அவங்க சம்மதிச்சா, ஒரு Document Writer கிட்ட போய்
"விடுதலை பத்திரம்"
எழுதணும்.
வாசகம் இப்படி இருக்கும்:
"எங்கள் தகப்பனார் பெயரில் உள்ள சொத்தில் எங்களுக்கு சேர வேண்டிய பாகத்தை, [உங்க பெயர்] அவர்களுக்கு முழுமனதுடன் விட்டுக்கொடுக்கிறோம். இனி அந்த சொத்தில் எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை."
இத எல்லா வாரிசும் கையெழுத்து போட்டு சார் பதிவாளர் ஆபீஸ்ல பதிஞ்சா போதும். Stamp Duty சொத்து மதிப்புல 1% மட்ட��ம் தான். Registration Fee ₹4,000. ஒரு வாரத்துல உங்க பேருக்கு பத்திரம் வந்துடும். பட்டா மாத்திடலாம்.
இதுக்கு தேவையான Document:
1. தாய் பத்திரம்
2. இறந்தவர்களின் Death Certificate
3. வாரிசு சான்று
4. EC
5. உங்க ஆதார், பான் கார்டு
வழி 2: குடும்ப ஏற்பாடு பத்திரம் - Family Arrangement
ஒருவேளை வாரிசுகள் "விடுதலை பத்திரம் வேண்டாம், ஆனா சொத்து உங்களுக்கே இருக்கட்டும்"னு சொன்னா, இந்த வழிக்கு போகலாம்.
எல்லா வாரிசும் ஒண்ணா உக்காந்து பேசி ஒ��ு முடிவுக்கு வரணும். அப்புறம் ₹100 Stamp Paper வாங்கி
"குடும்ப ஏற்பாடு பத்திரம்"
எழுதணும். "குடும்பத்துல சண்டை வரக்கூடாதுனு நாங்க எல்லாரும் சேர்ந்து இந்த ��ுடிவு எடுத்திருக்கோம்.
[சொத்து விவரம்] இனி [உங்க பெயர்] அவர்களுக்கே முழு உரிமையானது"னு எழுதி எல்லாரும் கையெழுத்து போடணும்.
இந்த பத்திரத்த பதிய வேண்டிய அவசியம் இல்ல. ஆனா பதிஞ்சா சட்டப்படி ரொம்ப Strong. இத வச்சே தாசில்தார் ஆபீஸ்ல போய் பட்டா பெயர் மாத்த கேட்கலாம்.
செலவு வெறும் ₹500 தான் ஆகும்.
வழி 3: நீதிமன்ற வழக்கு - Declaration Suit - கடைசி ஆயுதம்
வாரிசுகள் ஒத்து வரல. "எங்களுக்கும் பங்கு வேணும்"னு சண்டைக்கு வந்தா, வேற வழி இல்ல. Court தான் போகணும்.
நீங்க Civil Court-ல "Declaration Suit" போடணும். வக்கீல் மூலமா "நான் இந்த சொத்த 12 வருஷத்துக்கு மேல தனியா அனுபவிக்கிறேன். EB Bill, வீட்டு வரி எல்லாம் என் பேர்ல தான் இருக்கு. அதனால Limitation Act படி சொத்து எனக்கே சொந்தம்னு தீர்ப்பு கொடுங்க"னு கேட்கணும்.
Court-ல நீங்க 12 வருஷ அனுபவத்தை நிரூபிக்கணும். பழைய EB Bill, வீட்டு வரி Receipt, Voter ID, பக்கத்து வீட்டுக்காரங்க சாட்சி எல்லாம் கொடுக்கணு��். Judge திருப்தி ஆனா உங்களுக்கு சாதகமா Decree கொடுப்பார். அந்த Decree-அ வச்சு பத்திர ஆபீஸ்ல பதிஞ்சு பட்டா மாத்தலாம்.
இதுக்கு 2 முதல் 5 வருஷம் ஆகும். செலவு ₹50,000 மேல ஆகும்.
அதனால இது கடைசி வழி தான்.
-------------------------------------------------
இப்போ நீங்க உடனே செய்ய வேண்டிய 3 விஷயம்:
1. EC போடுங்க:
https://t.co/0wiZZA0A49 Website-ல போய் இப்போ சொத்து யார் பேர்ல இருக்குனு பாருங்க. அப்பா பேர்ல இருந்தா தான் மேல சொன்ன வழி எல்லாம் Work ஆகும்.
2. வாரிசு சான்று எடுங்க:
இறந்து போன கூட பிறந்தவங்களுக்கு மனைவி, பிள்ளைங்க யாரு இருக்காங்கனு VAO ஆபீஸ்ல கேட்டு வாரிசு சான்று வாங்குங்க.
3. பேசி தீருங்க:
வாரிசுகள் கிட்ட நேர்ல போய் பேசுங்க. "சண்டை வேண்டாம், சுமூகமா முடிச்சுக்கலாம்"னு சொல்லுங்க. 90% பிரச்சனை பேச்சுவார்த்தையில முடிஞ்சிடும்.
கடைசியா ஒரு வார்த்தை:
சொத்து பிரச்சனை வந்தா உடனே Court-க்கு ஓடாதீங்க. முதல்ல குடும்பத்துக்குள்ள பேசி பாருங்க. விடுதலை பத்திரம் மூலமா சுமூகமா முடிக்க பாருங்க. நேரம், பணம், மனநிம்மதி மூணும் மிச்சமாகும்.
சட்டம் தெரிஞ்சா எல்லாமே ஈஸி தான். பயப்படாதீங்க.
#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #பயனுள்ளதகவல் #அறிவோம்சட்டம்
ஒன்னு சொல்றேன்...லைப்ல Delusional Optimism-அ வளர்த்துக்கோங்க.
அதாவது...என்னால எதுவா வேணாலும் ஆக முடியும். என்ன வேணாலும் சாதிக்க முடியும். எவ்வளவு பெரிய விஷயமா இருந்தாலும் ஜெயிக்க முடியும் ன்னு கொஞ்சம் கூட Practicality இல்லாத, Reality-க்கு அப்பாற்பட்ட, பைத்தியக்காரத்தனமான Mindset.
என்னடா இது? Reality-யும் Practical-ஆவும் யோசிக்காம எப்படி ஒரு முடிவு எடுக்க முடியும்?ன்னு கேக்கலாம். ஆமா... அதுல 20% உண்மை இருக்கு, ஆனா Reality-ய மட்ட���ம் யோசிச்சிட்டு இருந்தா, நம்ம வாழ்க்கை முழுக்க குண்டுசட்டியில குதிரை ஓட்டிக்கிட்டுதான் இருக்கணும்.
ஒரு நிமிஷம் யோசிச்சு பாருங்க...
Practical-ஆ யோசிச்சிருந்தா ஒரு மீனவனோட மகன் Scientist ஆகிருக்க முடியுமா? ஒரு பஸ் கண்டக்டர் Super Star ஆகிருக்க முடியுமா? ஒரு டீ கிளாஸ் கழுவுறவர் Prime Minister ஆகிருக்க முடியுமா? Practical-ஆ யோசிச்சா சாதாரண குடும்பத்துல பிறந்த ஆயிரக்கணக்கான Athletes, Artists, Creators, Businessmen, Politicians இன்று இந்த அளவுக்��ு வந்திருக்க முடியுமா? அவங்க எல்லாரும் ஒரு கட்டத்துல Reality-ய தூக்கி போட்டுட்டு,
என்னால இது க��்டிப்பா முடியும்... நான் ஆகியே தீருவேன்னு குருட்டுத்தனமா நம்பினாங்க. அதுதான் Delusional Optimism.
இன்னும் ஆழமா யோசிச்சு பாருங்க...
இந்த உலகத்துலயே Reality-ன்னு ஒன்னு இருக்கா? கோடிக்கணக்கான விந்தணுக்களை ஜெயிச்சுதான் நம்ம பிறந்திருக்கோம். இறந்த நட்சத்திரங்களோட அணுக்கள்தான் இன்று நம்ம உடம்புல இருக்கு.
மரங்கள் மண்ணுக்கடியில ஒன்றுக்கொன்று தகவல் பரிமாறிக்குது.
நம்ம மூளையில ஓடுற Electricity-தான் கனவுகளா, நினைவுகளா, காதலா, ஆசைகளா மாறுது. இதையெல்லாம் யோசிச்சு பார்த்தா...
இந்த பிரபஞ்சமே ஒரு Miracle. இந்த வாழ்க்கையே ஒரு Impossible Story.
அப்படியிருக்கும்போது...
நீங்க மட்டும் ஏன் உங்க கனவுகளுக்கு Limit வைக்கணும்?
அதனால...
பேராசைபடுங்க.
பெருசா கனவு காணுங்க.
பொருளை அடைய துடிங்க.
சாதிக்க வெறி பிடிங்க.
Logic & Reality ஐ உடைச்சு Faith & Belief தான் உங்கள ஜெயிக்க வைக்கும்.
நீங்க ஒரு Goal-ஐ நோக்கி முழு மனசோட ஓட ஆரம்பிச்சா...
வாய்ப்பு��ள், மனிதர்கள், அதிர்ஷ்டம், சூழ்நிலைகள��� எல்லாம் சேர்ந்து உங்களை அந்த இடத்துக்கு தள்ள ஆரம்பிச்சிடும்.
அதனால...
"என்னால இதெல்லாம் பண்ண முடியாது..."
"நமக்கு அதெல்லாம் set ஆகாது"
"இதெல்லாம் கண்டிப்பா நடக்காது..."
"அதெல்லாம் கண்டிப்பா முடியாது..."
ன்னு சொல்ற எல்லா எண்ணங்களையும் தூக்கி எறிஞ்சிடுங்க.
அதுக்கு பதிலா...
"என்னால இங்க எதுவா வேணாலும் ஆக முடியும்." ன்னு ஒரு பைத்தியக்காரத்தனமான Confidence-ஓட ஓட ஆரம்பிங்க.
ஏன்னா...
வரலாறு படைத���தவங்க எல்லாரும் முதலில் மற்றவர்களுக்கு பைத்தியக்காரங்களாதான் தெரிஞ்சாங்க.
Dream like a madman. Work like a machine. Believe like it's already yours.
Delusional Optimism வளர்த்துக்கோங்க வெற்றி நிச்சயம். 💯
Try Karo 😉❤️
- From கரு பழனியப்பன் Facebook
Maatram venum nu sonnavanga ivaruku yen vote pannala?… see his speech.
Vijay will be CM just because of Hero worship and social media hype. Nothing else.
#Seeman#NTK#TVK
*நண்பர்களே இதை அனைவருக்கும் போட்டு காட��டுங்கள்
அனைவரும் ஷேர் செய்யுங்கள்.
இது முக்கியமான விஷயம் தயவுசெய்து யாரும் ஷேர் பண்ணாமல் இருந்து விடாதீர்கள்*!
பாஜகவும், தலெகவும் கூட்டு களவாணிகள் என்பது இ��ிலிருந்து நிருபணம் ஆகிறது..✋✋✋✋
@Seeman4TN சரிபாதி பெண்கள்,
எளிய பிள்ளைகள்,
படித்த பட்டதாரிகள்,
சமூக சே��ையாளர்கள்,
சூழலியல் போராளிகள்
இனி இவர்களுக்கெல்லாம் நாம் தமிழர் கட்சி சீட்டுகள் தரக்கூடாது.
அனைவரும் பாவம்🙃
மனம் ரணமாக வலிக்கின்றது🤕
மக்களுக்கு நேர்மையின் மதிப்பு தெரிவதில்லை 💯
Claude-ல “Skills”ன்னா என்ன? 🤖🔥
இத புரிஞ்சிக்கிட்டீங்கன்னா… next level automation unlock ஆகும்
நாம எல்லாரும் AI-யை எப்படி use பண்ணுறோம்?
👉 Prompt குடுக்குறோம்
👉 Answer வாங்குறோம்
👉 மறுபடியும் repeat
ஆனா…
real power என்னன்னா — “Skills” use பண்ணுறதுல தான்.
🧠 Skillன்னா என்ன?
Simple definition:
👉 Skill = ஒரு folder
👉 அதுக்குள்ள instructions இருக்கும்
��ீங்க அந்த skill use பண்ணும் போது
Claude அந்த instructions-ஐ read பண்ணி work பண்ணும்
⚙️ எப்படி ஒரு Skill create பண்ணுவது?
Step 1️⃣ — Create your own skill
👉 Claude-ல Skills section open பண்ணுங்க
👉 புதிய skill create பண்ணுங்க
Example:
“Research → Deck” (notes-ஐ presentation ஆ மாற்றுறது)
Step 2️⃣ — Instructions add பண்ணுங்க
இதுதான் main part 🔥
உங்க skill எப்படி work பண்ணணும்னு define பண்ணுங்க:
Example:
• Data read பண்ணு
• Main points identify பண்ணு
• Sections-ஆ divide பண்ணு
• Slides create பண்ணு
• Simple language use பண்ணு
👉 Basically, நீங்க ஒரு employee-க்கு explain பண்ணுற மாதிரி எழுதணும்
Step 3️⃣ — Upload to Claude
👉 Skill folder zip பண்ணுங்க
👉 Rename பண்ணுங்க
👉 Claude-க்கு upload பண்ணுங்க
Step 4️⃣ — Chat-ல use பண்ணுங்க
👉 “இந்த skill use பண்ணி இதை complete பண்ணு”ன்னு சொல்லுங்க
Claude உடனே:
✔ Instructions follow பண்ணும்
✔ Workflow execute பண்ணும்
✔ Final output கொடுக்கும்
💡 Example use case
ந���ங்க சொல்றீங்க:
“இந்த research notes-ஐ presentation ஆ மாற்று”
👉 Skill already define பண்ணி இருந்தா
👉 Claude direct-ஆ:
• Analyze பண்ணும்
• Structure பண்ணும்
• Slides ready பண்ணும்
🚀 Why this is powerful?
❌ ஒவ்வொரு தடவையும் prompt எழுத வேண்டாம்
❌ Repeat instructions தேவையில்லை
✔ ஒரே skill → multiple times reuse
✔ Consistent output
✔ Time save
⚡ Real shift
Prompting = temporary
Skills = reusable system
நீங்க skill build பண்ணிட்டீங்கனா…
Claude ஒரு chatbot இல்ல…
👉 உங்க team-ல ஒரு trained employee ஆகிடும். 🔥
AI-யை use பண்ணுறது easy…
AI-க்கு training கொடுத்து வேலை வாங்குறவங்க தான் next level.
We know everyone will remember Sanju Samson for this World Cup victory. Jasprit Bumrah will get the loudest cheers, and Suryakumar Yadav will be remembered as the World Cup–winning captain.
But you, Shivam Dube , your name might be forgotten because there was no half-century from your side. Yet we know you were the one who ensured India’s victory in the most important matches. Those quick-fire innings saved India from defeat. All those small knocks were actually the wall between victory and defeat.
You stood tall and unshaken to secure the win.
Well played, champion 🇮🇳🏆
CCTV Buying Guidance - #jan2#Jan2026#cctv
ரொம்ப நாளா எழுதனும் னு draft செஞ்சுட்டே இருந்தேன். நிறைய தகவல் தேவைபட்டதால் நிறைய நாள் எடுத்துட்டேன் . பொதுவா CCTV னு ஒரே பதிவுல எழுதிவிட முடியாது . அதனால இதை இரண்டாக பிரித்து Home Security (Single Camera -Indoor and outdoor) மற்றும் நாம் எப்போதும் பார்க்கும் CCTV (multiple cameras – Indoor and Outdoor) என்று தனி தனியாக எழுதறேன். முதலில் நிறைய பேர் கேட்டிருக்கும் Home Security/Single Camera பற்றி மட்டும் இந்த பதிவுல பார்ப்போம்.
இப்போ 2026 ல நீங்க ஒரு Home Security CCTV வாங்க வேண்டும் என்றால் நீங்க என்ன எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் னு முதலில் பார்ப்போம் .
1. Purpose and Coverage : முதல் ல நீங்க என்ன காரணத்துக்காக வாங்கறீங்க னு தெளிவா இருக்கனும் . சில பேர் குழந்தையை பார்த்துக்க (Baby monitor) வாங்குவாங்க , சில பேர் Pets monitor செய்ய வாங்குவாங்க , சி�� பேர் வேலை செய்யும் இடத்தில் பாதுகாப்புகாக வாங்குவாங்க . அதனால உங்கள் காரணத்தை புரிந்து தகுந்த மாடல் வாங்க வேண்டும். அதே மாதிரி எவ்ளோ தூரம் cover செய்யனும் னு வாங்கும் முன்னையே தேசிடே செஞ்சிருங்க .
2. Image Quality : இந்த கேமரா MP பார்த்து confuse ஆக வேண்டாம் . நம் தேவையை பூர்த்தி செய்யும் அளவு MP இருந்தால் போதுமானது.
3. Night Vision
4. Storage and Recording Option
5. Remote monitoring: இப்போ வருகிற அனைத்து மாடல்கள் CCTV யும் remote monitoring அதாவது நீங்க எங்க இருந்து வேண்டுமானாலும் உங்க CCTV யில் நடப்பதை பார்த்து கொள்ளலாம் .
6. Motion Detection Alerts : இப்போ வந்திருக்கும் latest மாடல்கள் எல்லாம் Human Identity AI வரைக்கும் இருக்கு . அதாவது உங்க CCTV coverage area ல மனித நடமாட்டம் இருந்தால் அதுவே detect செய்து உங்களுக்கு alert message அனுப்பிவிடும் . இரவு பாதுகாப்புக்கு ரொம்ப பயன் உள்ளதா இருக்கும் .
7. Service : கடைசி point . ஆனா இது தான் முதலில் நீங்க consider செய்யனும். நாளைக்கு சர்வீஸ் னு கூ��ிட்டா அடுத்த நாளே வந்து சரி செஞ்சு கொடுக்கும் அளவுக்கு service support இருக்கனும் .
ஒரு நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால். உடனடியாக நாம் என்ன செய்ய வேண்டும்..!
1.முதன் முதலில் computerized EC 1975 முதல் போட��டு பார்க்க வேண்டும் 1975 முதல் பின்னோக்கி 1908 அல்லது 1858 வரை manual EC கட்டாயம் போட்டு பார்க்க வேண்டும்.
Zero value நிலம் EC யில் நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூமிதான நிலம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம் எனவே zero value நிலம் வாங்காதீர்.
2.Double Document நிலம்.
Power of attorney(POA) double document
அதாவது power யில் வரும் நிலத்தை வாங்காதீர் இது double டாக்குமெண்ட் க்கு இட்டு செல்லும்.
POA நிலதை வாங்கியே தீர வேண்டும் என்றால் Power கொடுத்தவர் உயிரோட சுய நினைவோட இருக்கிறாரா என்று கண்டுபிடியுங்கள் POA agreement நகல் வாங்கி அதில் குறிப்பிடப்படுள்ள அட்ரஸ் இல் power கொடுத்தவரை நேரில் சந்தித்து விசாரியுங்கள்.
��டுத்து அந்த power பத்திரம் செல்ல கூடியாதா என்று கேளுங்கள் அதாவது power பத்திரம் எழுதி கொடுத்தவர் அதை ரத்து செய்து விட்டாரா என்றும் கேளுங்கள் முகவரும் (agent )விற்கலாம், principal (power எழுதி கொடுத்தவர்) ளும் விற்கலாம் விற்றால் அது double டாக்குமெண்ட்.
3.உயில் பத்திர நில double document.
உயில் மூலம் உரிமை மாறி இருக்கா
உயில் பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வரும் நிலமெனில்.
எது இறுதி/கடைசி உயில் என்று கவனமாக பார்க்க வேண்டும் பதிவு செய்யபட்ட உயில் மூலம் விற்பனை நடந்தால் அது ஒரு நில விற்பனை பத்திரம்.
��திவு செய்யப்பட்ட உயிலுக்கு பிறகு ஏதாவது பதிவு செய்யாத உயில் இருக்கான்னு நிலம் விற்பவரின் உறவினர்களை கேட்க வேண்டும் இந்த பதிவு செய்யப்படாத உயில் மூலம் விற்பனை செய்யப்பட்டு இருந்தால் அது double டாக்குமெண்ட்.
4.Settlement பத்திர நிலம் double document .
Settlement பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வந்தால் செட்டில்மெண்ட் ரத்து செய்ய பட்டு இருக்கிறதா என்று கவனமாக பார்க்கவும் 1990 முதல் 2015 வரை ரெஜிஸ்டர் ஆபீசில�� செட்டில்மெண்ட் ரத்து செய்து நிலத்தில் மேலும் சொத்தை சிக்கல் ஆக்கிவிட்டர்கள்.
செட்டில்மெண்ட் பத்திரத்தை civil கோர்ட் மூலியமாக தான் ரத்து பண்ண முடியும் பத்திர ஆபீசில் செய்யும் ரத்து பத்திரம் சொல்லாது.
EC யில் SRO=Sub register Office)மூலம் ரத்து ஆகி இருந்தால் அந்த நிலத்தை வாங்காதீர்.
உயில் பத்திரம் தாய் பத்திரம் ஆக இருந்தால் அந்த தாய் பத்திர உயில் மூலம் கிரயம் நடைபெற்று இருந்தால் அந்த கிரய பத்த���ரத்துக்கு லிங்க் கவனமாக இறங்கியதா என்று பார்க்க வேண்டும்.
5. Update ஆகாத பட்டா மூலம் கிரயம்-double document.
1987-UDR, 1995-நத்தம் நிலவரி திட்டம் முன்பு நிலம் பத்திரத்தின் மூலம் வாங்கியவர் அதை revenue record எனப்படும் பட்டாவில் தான் தான் தற்போதைய உரிமையாளர் அதாவது current owner என்பதை update செய்யாமல் இருந்தால் 1987முந்தைய owner & அவரின் வாரிசுகள் பழைய பட்டா மூலம் கிரயம் செய்தால்.
அடுத்து நிலம் வாங்கி பட்டாவில் update செய்யாமல் விட்டுவிட்ட அசல் (எ ) original owner றோ இல்லை அவரின் வாரிசுகள் விற்று கிரய பத்திரம் ஆகி இருந்தால் அதுவும் double document.
6.Layout frame, வடிவம், உருவாமாற்றம் மாற்றிய நிலமா?
அடுத்து அந்த நிலம் நத்தம் நிலமா, layout பிளாட் ஆஹ் என்று பாருங்கள்.
DTCP approved or CMDA approved என்றால் DTCP & CMDA website யில் approval நம்பர் போட்டு approval ஒரிஜினல் தானா என்று உறுதி படுத்தி கொள்ளலாம். Website லே கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நேரில் LPA(local planning authority என்னும் DTCP அல்லது CMDA அலுவலகத்திற்கு சென்று நிலத்தின் approval சரிதானா என்று கேளுங்கள்.
அது பழைய approved layout ஐ திருட்டுதனமாக redraw செய்து விற்பனைக்கு வந்திருக்கும் layout ஆஹ் என்றும் விசாரியுங்கள்.
Layout ப்ளூ பிரிண்ட் இருந்தால் கொண்டு சென்று park, ஸ்கூல் க்கு இடம் விட்டுட்டு layout போட்டு இருக்கிறார்களா என்றும் கேளுங்கள் நிறைய land ப்ரோமோட்டார்ஸ் park, ஸ்கூல் இடத்தை காட்டி approval வாங்கி விட்டு layout வரை படத்தை மறுபடியும் திருட்டுதனமாக வரைந்து(எ ) redraw செய்து park, ஸ்கூல் இடத்திலும் மனை போட்டு விடுவார்கள்.
எனவே ஜாக்கிரதை.
பஞ்சாயத்து approved இடங்கள் வாங்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் வாங்கிய பின்பு நீங்கள் தான் நிலத்தை frame work scheme இன் கீழ் வரையறை செய்ய அலைய வேண்டி இருக்கும்.
நத்தம் நிலம் என்றால் VAO வை பார்க்க வேண்டும் உங்கள் சர்வே நம்பர் இன் UDR காலத்து 1987 ஆம் ஆண்டின் சிட்டா அடங்கலை, FMB நேரில் சென்று கேளுங்கள்.
இனாம் கிராமம் ஆக இருந்து இனாம் ஒழிப்பின் மூலம் நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் பட்டா வழங்கபட்ட நிலமா என்றும் பார்க்க வேண்டும். அந்த பட்டா UDR காலத்து சிட்டா அடங்கல் ரெஜிஸ்டர் இல் ஏறி இருக்கா னும் பார்க்கணும்.
VAO நேரில் கேட்டும் கொடுக்கவில்லை என்றால் RTI மனுவில் கேளுங்கள் RTI யில் கட்டாயம் கொடுக்க வேண்டும்.
4. EB, சொத்து வரி விற்பவர் பெயரில் இருக்கா என்று பாருங்கள்.இல்லை என்றால் மாற்றி, பின்னர் விற்க சொல்லுங்கள் .
5.பட்டா விற்பவர் பெயரில் இருக்கானு பார்க்கணும்.
கூட்டு பட்டா நிலம் எனில், நிலம் பங்குதாரர்கள்குள் யாருக்கு எவ்வளவு இடம் & எந்த இடம் என்று பிரித்திருக்க வேண்டும் இல்லை என்றால் வாங்கும் உங்களுக்கு சிக்கல். விற்பவருக்கு உரிமை இல்லாத நிலத்தை விற்க வாய்ப்பு இருக்கு
பட்டா வாங்குறது பெரிய process, நிறைய அலைச்சல் & கஷ்டம்.
அதனாலே விற்பவர் பெயரில் பட்டாவை மாற்ற சொல்லுங்கள் அதன் பின்பு நிலத்தை வாங்குங்கள்.
6. நிலத்தின் வகைப்பாடு கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
நஞ்சை, புஞ்சை, நத்தம், நத்தம் புறம்போக்கு, மேய்ச்சல், வாய்க்கால், ஓடை புறம்போக்க்கா, நெல் போராடிக்கும் இடமா, park, விளையாட்டு திடல்,கோயில் க்கு ஒதுக்கப்பட்ட நிலமா,பொதுவில் மாடு கட்ட விடப்பட்ட இடமா, நிலவியல் பாதை(அரசு நிலம் ), நிலவியல் ஓடை etc.என்று பார்க்கிவேண்டும்.
7. பட்டாவின் பயனாளி யார்?.
முன்னோரு காலத்தில் அது ஜமீன் நிலமா அல்லது இனாம் நிலமா அல்லது ரயட்டுவாரி நிலமா ஆஹ் என்று பார்க்க வேண்டும்
மேஜர் இனாம்
ராயட்டு வாரி
1802 காலத்தின் permanent settlement record காலத்தின் ஜாகிர் இனாம் , ஜமீன் நிலமாக இருந்து ராயட்டுவாரி யாக மாற்றம் பெற்றதா என்றும் பார்க்க வேண்டும்.
வெள்ளைக்காரன் காலத்துல இனாம் ஒழிப்பில் இருந்து ஜமீன் நிலமாக மாறியதா என்றும் ஆராய வேண்டும்.
இதற்கு VAO, தாலுகா & கலெக்டர் அலுவலகத்தில் record section இல் இருக்கும் B-record, OSR, RSR, SLR இன் நகல் தேவை உங்கள் நிலத்தின் சர்வே நம்பர் குற��ப்பிட்டு ஒரு மனு கொடுத்து, 50 ரூபாய் கட்டி வாங்கி கொள்ளலாம்.
------------
Minor இனாம்
சுதந்திரத்திற்கு முன் பிரிட்டிஷ்காரர்கள் கொடுத்த DC land (எ) (Depressed Class) நிலமா? என்று பார்க்க வேண்டும்
தொழில் முறை இனாம் நிலம்
----
தச்சர், கருமான், நாவிதர், காவக்காரன்,கர்ணம்,தலையாரி,
வெட்டியான், சக்கிலியர்,புதிரை வண்ணார் இனாம் நிலமா? என்றும் பார்க்க வேண்டும்.
வெள்ளைக்காரன் காலத்தில் மணியமாக அங்கீகாரிக்க பட்ட ஊழிய மானியங்களான பூசாரி, தேவதாசி,பூ கட்டும் மானியம் நிலமா? என்று பார்க்க வேண்டும்.
சோஸ்திராம் மானியம் ஒழிக்கப்பட்ட நிலமா?என்றும் பார்க்க வேண்டும்.
ஹாஜி இனாம் ஒழிக்கப்பட்ட நிலமா? என்றும் பார்க்க வேண்டும்.
------------
DC அல்லாத பிற இனதவர்க்கு கொடுக்கப்பட்ட குறவர், கள்ளர்(குற்றபரம்பரை)
settlement etc யா என்று பார்க்க வேண்டும்.
மேற்சொன்ன வகை பாடு அனைத்தும் வெள்ளைக்காரன் காலத்தாவை.
---------
சுதந்திரத்திற��கு பின் கொடுக்கபட்ட Assigment land.
Assignment land (எ ) ஒப்படை பட்டா நிலங்கள் எனில் அதற்கு உண்டான (HSD பட்டா , D-பட்டா, நமுனா பட்டா, TKT பட்டா,F-பட்டா, B-memo பட்டா, அனுபந்த பட்டா, Assignment land என்னும் ஒப்படை நிலம் ) யா என்று பார்க்க வேண்டும்.
SC & ST பிரிவினற்கு கொடுத்த AD assignment Land (Adi Dravidar )பட்டா உள்ள நிலமா என்றும் பார்க்க வேண்டும்.
F-பட்டா.
இது நிலசீர்திருத்த துறையால் வழங்க பட்டது.நிலசீர்திருத்த துறை வேறு revenue டிபார்ட்மென்ட் வேறு.
ஜமீன் ஒழிப்பில் இருந்த நிலங்களை பயனாளிக்கு கொடுத்தது என்பதை உறுதி படுத்தும் ஆவணமே F-பட்டா.
1970-B-Memo land =பீமா பட்டா.
B memo பட்டா நிலம் விற்பனை க்கு வந்தால் வாங்காதீர். ஏன் என்றால் B-memo என்பது நில உரிமை பட்டா அல்ல. ��து நீ ஒரு அரசின் புறம்போக்கு நிலத்தின் ஆக்கிரமிப்பு செய்தவன் என்ற govt நோட்டீஸ் மட்டுமே. B-memo நிலத்தில் குடி இருப்பவர்களை எந்நேரமும் அரசு காலி செய்ய சொல்லும்.
Assignment பட்டாவில் உள்ள கண்டிஷன் பார்க்க வேண்டும். கண்டிஷன் பார்க்காமல் வாங்காதீர்.
ஒப்படை நிலங்களை அரசாங்கமே திருப்பி எடுத்து கொண்டு விட்டாதா என்றும் பார்க்க வேண்டும்.
--------
1956-பூமி தான நிலம்
Manual EC
கட்டாயம் 1950-1965 வரை manual EC போட்டு பார்��்க வேண்டும்.
manual EC யில் மட்டும் தான் பூமி தான போர்டுக்கு நிலங்களை பெரும் நில சுவாந்தார்கள் தான பத்திரம் (கிரயபத்திரம்) கொடுத்த அந்த entry காட்டபட்டு இருக்கும்.
பூமி தான போர்டு பெயரில் பட்டா, சிட்டா ஆகியவை மாறிவிட்டு இருந்தால் VAO அலுவலகத்தின் A-Record இல் காட்டும்.
ஏர் உழவன் பட்டா=பூமி தான நிலத்திற்கு ஆன குத்தகை பட்டா.
Manual EC யில் கிடைக்காத பூமி தான நிலங்களை பற்றிய தகவல்கள் revenue record யில் தான் கண்டுபிடிக்க முடியும்.
பூமி தான நிலம் என்றால் மெட்ராஸ் சைதாப்பேட்டை யில் உள்ள பனகல் மாளிகையில் உள்ள பூமி தான board க்கு சென்று வாங்க விரும்பும் நிலத்தின் சர்வே நம்பர் பூமி தான வரையறைக்குள் வருகிறதா என்று பார்க்க வேண்டும். Master ர��ஜிஸ்டர் பார்க்க வேண்டும்.
பூமி தான நிலம் வாங்காதீர்.
பூமி தான நிலத்தை பயனாளி விற்கு அதிகாரம் இல்லை. பயனாளிக்கு குத்தகை உரிமை மட்டுமே உண்டு.
எனவே அது பூமி தான நிலம் என்று தெரியவந்தால் வாங்காதீர்.
-----------
Zero value நிலம்
-EC யில் நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூதிதானம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம்.
-----------
கோயில் நிலம் -HR&CE நிலமா
வாங்க விரும்பும் நிலம் கோயில் நிலம் ஆஹ் என்று பார்க்க வேண்டும்.
கோயில் நிலம் என்றால் பயந்து விட கூடாது அது இறையிலி(100% கோயிலுக்கு சொந்தம்), தேவதானம், தர்மதாயம் ஆக இருக்க கூடாது அவ்வளவே.
கோயில் நிலத்தில் கட்டளை என்று ஒரு பிரிவு உண்டு இதையும் வாங்க கூடாது. கட்டளை எப்படி உடைக்க வேண்டும் என்று தெரிந்தவர்கள் மட்டுமே வாங்கலாம்.
கோயில் மணியமாக இருந்து ரயத்துவாரி நிலமாக 1963 இல் மாறி இருந்தால் அது கண்டிஷன் பட்டாவா என்று பார்க்கனும்.
இந்த நிலம் வாங்கும் போது கவனம் தேவ���. ஏன்னா HR&CE நிறைய நிலங்களை திருப்பி எடுத்து கொண்டு உள்ளது.
-----------
ஜமீன் & மானியம் முற்றாக ஒழித்தது 1950 to 1960 களில்.
land reforms act.
இதற்கு நில சீர்திருத்தம் என்று பெயர். ஜமீன் இடம் இருந்து அரசு எடுத்த உபரி நிலம் கிராம கணக்கில் B register லே இருந்து A-register க்கு மாறும் போது உபரி நிலம் , அனாதீனம், உரிமையாளர்கள் பெயர்கள் மாறி உள்ளது போன்ற சிக்கல் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.
-----
1963 minor இனாம் ஒழிப்பு சட்டம்
இனா��் ஒழிப்பு to ரயட்டுவாரி பட்டா. உழுபவனுக்கே நிலம் சொந்தம் scheme.
RSLR இல் "கிராமத்தார்" என்று பட்டா தாக்கல் செய்யப்பட்டு 1963 minor இனாம் ஒழிப்பு சட்டம்
மூலம் ரயட்டுவரி பட்டாவாக மாறி பின்பு 1987 UDR இல் மீண்டும் RSLR இல் உள்ளது போன்று "கிராமத்தார்" என்று மாறி இருந்தால் அந்த நிலத்தை வாங்காதீர்.
அது தனி நபர் பட்டா என்று மாறி இருக்கா என்றும் பார்க்க வேண்டும்.
-------
1963 கோவில் நிலம் (இனாம் ஒழிப்பு சட்டம், ஒழி��்பு மற்றும் ரயட்டுவாரியாக மாற்றுதல்) சட்டம்
தேவதாசி மானியம் to நிபந்தனை பட்டாவாக உள்ள நிலத்தை பயன்படுத்தி கொள்ளலாமே தவிர சொந்தம் கொண்டாட முடியாது.
ஊழிய மானிய நிலங்கள் கண்டிஷன் பட்டா வா இல்லை normal ராயட்டுவாரி பட்டா நிலமா? ன்னு பார்க்கணும்.
இந்த நிலம் வாங்கும் போது மிகுந்த கவனம் தேவை. தமிழ் நாட்டின் நில நிர்வாக பற்றிய அறிவு உள்ள ஒரு சிவி��் லாயர் தான் உங்களை காப்பாற்ற முடியும்
--------
1961(center)to 1972(TN)Land ceiling act நிலம்
நில உச்சவரம்பு வரையறைகுள் மாட்டிக்கொண்ட நிலமா என்று பார்க்க வேண்டும்.
UDR லே celing இடம் என்று இருக்கானு பார்க்கணும்.
Section 37B இல் வந்த நிலாமா என்று பார்க்க வேண்டும்.
--------
1976 களின் Urban land seiling act
ULC ஆக்ட் இல் மாட்டி கொண்ட ULC நிலமா என்று பார்க்க வேண்டும். ULT என்று note இருந்தால் மெட்ராஸ் பரங்கிமலை ரயில் நிலையம் அருகில் உள்ள உச்சவரம்பு ஆப��சில் சர்வே நம்பர் கொடுத்து விசாரிக்கணும். Innocent buyer என்று சொல்லி land கமிசினர் க்கு மனு செய்யனும்.
ULC நிலம் தவறுதலாக நீங்கள் வாங்கினாலும் நிலத்திற்கு revenue department(டாசில்தார், VAO )பட்டா மாற்றம் செய்து கொடுக்க மாட்டார்கள். எனவே ஜாக்கிரதை.
8. கோர்ட் attached property வாங்காதீர்.
9. டிவோர்சஸ் கேஸ் உள்ளவரிடம் நிலம் வாங்காதீர்.
அந்த நிலத்தை அவர் மனைவி maintenance (ஜீவனாம்சம்) வேண்டி மனு செய்து இருந்தால் நீங்கள் போட்��� பணம் காலி.
எனவே விற்பவர் இடம் இந்த விவரத்தை கேளுங்கள். ஒரிஜினல் பத்திரதை காட்டச்சொல்லி பத்திரத்தின் பின் புறம் கோர்ட் சீ��் இருக்கா என்று பாருங்கள்.
---------------
10.அடுத்த step, அந்த நிலத்தின் சர்வே என்னை கொண்டுபோய் நிலம் அமைந்துள்ள கிராம VAO கிட்ட அந்த நிலத்தோட FMB, பட்டா, சிட்டா, A ரெகார்ட் வாங்குங்கள்.
11.அடுத்து VAO கிட்ட govt அந்த இடத்தில் ரோடு போட , டேங்க் அமைக்க .i e., பிற்காலத்தில் govt project க்கு எடுத்து கொள்ளுமான்னு கேளுங்கள்?.பாலுமாகேந்திரவின் "வீடு " படத்தை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
அவர்(VAO) டாக்குமெண்ட் தர வில்லை என்���ால்,
12. மேற்கூறிய டாக்குமெண்ட் அனைத்தின் அட்டெஸ்ட் copy வேண்டும் என்று VAO office மற்றும் டாசில்தார் ஆபீஸில் RPD போஸ்ட் அல்லது நேரடி மனுவோ அல்லது RTI யில் கேட்டு டாக்குமெண்ட் நகல் வாங்கி கொள்ளுங்கள்.(கண்டிப்பாக attest copy வேண்டும் )
13.அடுத்து நிலத்தின் 1858 காலத்து OSR, RSR A-Record எடுக்க முடிந்தால் இன்னும் நல்லது.
1908,1936 ஆண்டின் SLR, RSLR A- Record, FMB ஒரு 80 to 100 வருடத்திற்கு வேண்டும்.
1987 ஆம் ஆண்டின் FMB, A-record, சிட்டா அடங்கல் கட்டாயம் எடுக்கணும்.
இதன் நகல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேளுங்கள்.இது ஏன் கேட்க சொல்றோம் என்றால்
1.அது வெள்ளைக்காரன் காலத்தில் DC land @பஞ்சமி நிலம் ஆக இருந்தால் போட்ட பணம் எல்லாம் காலி. சுப்ரீம் கோர்ட் போனாலும் கேஸ் நிக்காது.
2. அடுத்து அது ஜமீன் ஒழிப்பு & கோயில் மானிய ஒழிப்பில் அரசால் எடுக்கப்பட்டு ஆனால் revenue record இல் அரசு நிலம் என்று பதிவேற்றம் செய்யப்படாமல் இருக்கும் நிலமா என்று பார்க்க வேண்டும்.
ஏன் என்றால் இவர்கள் revenue record இல் பதிவேற்றம் செய்யாத ஓட்டையை பயன்படுத்தி UDR சர்வே செய்ய வந்த தனியார் கம்பெனி அதிகாரிகளை கரெக்ட் செய்து UDR இல் திரும்பவும் ஜமீன் பெயரே ரயத்துவாரி யாக மாற்றி கொண்டார்கள்.
14.அடுத்து ரெஜிஸ்டர் ஆபிசில் அந்த நிலத்தின் மீது யாராவது பத்திரம் பண்ண கூடாதுனு தடை மனு கொடுத்து இருக்காங்களா கேட்டு confirm(உறுதி )பண்ணிக்கணும்.
15..அடுத்து அந்த பத்திரம் முழுமையானா ஆவணமா அதாவது பத்திரம் முழுமையான ஸ்டாம்ப் டூட்டி கட்டி இருக்கிறதா என்று confirm பண்ணுங்க.
16.அடுத்து நிலம் இருக்கும் இடத்தை கு��ைந்தது 10தடவை பாருங்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் நிலத்தின் மீது ஏதாவது பிரச்சனை, வில்லங்கம், ஆக்கிரமிப்பு இருக்கிறதா என்று கேளுங்கள் இதை ஏற்கனவே யாராவது வாங்கி இருக்கிறார்களா தற்போதைய owner யார் என்றும் கேளுங்கள்
17.அடுத்துநிலம் விற்பவர் வீட்டுக்கு அருகில் இருப்பவர்களிடம் அவருக்கு எத்தனை உடன்பிறத்தோ��்,மனைவி, குழந்தைகள், விற்பவருக்கு இந்த நிலம் எப்படி வந்தது . அந்த சொத்தில் விற்பவரின் உடன் பிறந்தோர் க்கு பங்கு இருக்கா?என்று கேளுங்கள்
18.அடுத்து நான் கூறிய டாக்குமெண்ட் எல்லாம் வாங்கி விட்டு உங்கள் நிலத்தின் ரெஜிஸ்ட்டர் ஆபிஸ் ஏரியாவின் நல்ல சிவில் lawyer பாருங்கள்.
நல்ல லாயர் எப்படி கண்டு பிடிப்பது?.
உங்களுக்கு lawyer refer செய்கிறவரிடம்,
லாயர் எங்கு படித்தார் எந்த ஆண்டில் இருந்து practice ���ெய்கிறார் எத்தனை பத்திரம் பதிந்து இருக்கிறார், எத்தனை லீகல் ஒப்பீனியன் கொடுத்து இருக்கிறார் போன்ற கேள்விகள் கேளுங்கள் புரோக்கர் சொல்லும் லாயர் இடம் செல்லாதீர்.
மேற்கூறிய கேள்விகளுக்கு உங்களால் பதில் கண்டுபிடிக்க முடியும் என்றால் நல்ல லாயாரை கண்டுபிடித்தீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம்.
கண்டுபிடிப்பது உங்கள் சாமர்த்தியம்.
Lawyer க்கு பணம் கொடுக்க அழுக கூடாது. அந்த பணம் தான் நிலத்தின் முதலீடு நீங்கள் விற்பவருக்கு கொடுக்கும் பணம் அல்ல.
19. எல்லாம் சரியாக அமைந்து விட்டால் அடுத்து ஒரு govt registered surveyor பாருங்க. அவர் நிலத்தை அளந்து, encroachment, deviation எல்லாம் சொல்லுவார் பின்பு படத்தை வரைந்து தருவார்.
20. தயவு செய்து டாக்குமெண்ட் writer வைத்து பத்திரம் எழுதலாம��� என்று நிதானமாக யோசிக்கவும்..பத்திரம் எழுதிற license govt 1990களில் இருந்து தரவில்லை என்று கேள்வி . சந்தேகம் என்றால் லைசெஸ் நம்பர் கேளுங்கள்.
பாதி பேர் 10வது தாண்டதவர் . மீதி பேர் காலேஜ் ஹே போகாமல் 700KM தள்ளி இருக்கும் ஆந்திர, கருநாடகவில் பணம் கொடுத்து LLB டிகிரி வாங்கினவர் எல்லாம் பழைய டாக்குமென்டில் இருந்து copy paste செய்கிறார்கள் உங்களுக்கு என்று draft செய்வது குறைந்த நபர்களே.
========
காசு போனாலும் நல்ல சிவில் லாயர் வைத்து எழுதுங்கள்.சில ஆயிரம் advocate பீஸ் க்கு கஞ்ச படாதீர்கள். கொஞ்சம் மிஸ் ஆனாலும் பல லட்சம், கோடி நஷ்டம்.
திரும்பவும் சொல்றேன் நல்ல லாயர் கண்டு பிடிப்பது உங்கள் சமர்த்தியம்.
========
நாம் டாக்குமெண்ட் வேண்டி govt ஆபிஸ் க்கு நடப்பது நமது வருங்கால நன்மைக்கே நான் சொன்ன ஆவணங்கள் இல்லாமல் நிலம் வாங்காதீர்.
அடுத்து லாயர், surveyor consulting, நிலம் விற்கும் நபரின் அண்டை வீட்டார், நிலம் இருக���கும் இடத்தின் அண்டை வீட்டார் இடம் பேசாமல் இல்லாமல் புதிய சொத்து வாங்காதீர்.
இதுதான் நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை...
#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #நிலம்வாங்கும்முன்
With the high competition for the opener’s role, should India give opportunities to other batters considering Shubman Gill’s poor form in T20Is? 🇮🇳👀
Who would you pick as India’s opener: Jaiswal, Samson, or Gaikwad? 🤔
#ShubmanGill#SKC#India#T20Is#Sportskeeda