தமிழர்களின் தொன்மத்தை
கீழடி மூலம் கண்டறிந்தவர் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா. இதற்காகவே ஆய்வுப் பணியில் இருந்து வேறு பணிக்கு அவரை மாற்றினார்கள். ராமகிருஷ்ணாவை மீண்டும் ஆய்வுப் பணியில் ஈடுபட வைக்க போராடி வென்றவர் வழக்கறிஞர் கனிமொழி மதி! வாழ்த்துவோம்...
@erasaravanan @varalaam
“ ‘அன்பே டயானா’ படத்தில் உன் பெயர் எப்படி?” - சொல்லி வைத்ததுபோல் எல்லோரும் கேட்கிறார்கள். இதையேதான் தம்பி ‘மில்லியன் டாலர்’ யுவராஜ் கணேசனிடம் நானும் கேட்டேன். அவரின் கோடியளவு உழைப்பில் கொஞ்சநஞ்ச நேரம் உடன் நின்றதைத் தவிர, நான் வேறேதும் செய்ததில்லை. பெருகியோடிய அன்பில் எங்களின் Era Entertainment நிறுவனத்திற்குப் பெருமை சேர்க்கும் விதமாய் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்கிற தகுதியை எனக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் யுவராஜ். அவர் திட்டமிடலில் ‘அன்பே டயானா’ படத்திற்கு ஆதரவு பெருகுகிறது. விநியோகஸ்தர் மத்தியில் மகத்தான வரவேற்பைப் பெற்றிருக்கும் படம், ஓடிடி உள்ளிட்ட வணிகத்திலும் சாதித்திருக்கிறது.
ஒரு படத்தை எல்லோருக்கும் பிடிக்கும் வண்ணம் எப்படி முன்னிறுத்துவது என்பதில் யுவராஜை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. தேநீர்க் கோப்பை தொடங்கி பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட அத்தனையிலும் ‘அன்பே டயானா’ டிசைன்ஸ் பிரதிபலிக்கின்றன. மழைக்கால அடைக்கோழியைப் போல் படத்தைக் கண்ணும் கருத்துமாய்க் கவனித்து நிலை நிறுத்த யுவராஜ் படுகிற பாட்டை, திரைத்துறை நோக்கி வருபவர்களுக்குப் பாடமாகவே வைக்கலாம். அப்பேர்ப்பட்ட உழைப்பு!
‘மில்லியன் டாலர்’ நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கே உரிய ஈர்ப்பும் இதயத் துடிப்பும் ‘அன்பே டயானா’வில் இன்னமும் அதிகம். ‘ஜமா’ பாரி இளவழகன் எழுத்து, இயக்கம், நடிப்பு என முப்பரிமாணத்தில் கலக்க, கதாநாயகி ரம்யா ரங்கநாதன் கண்களில் ஒத்திக்கொள்கிற அளவுக்கு நெஞ்சம் ஈர்க்கிறார். ட்யூப் லைட் வெளிச்சத்தில் படபடக்கும் தட்டானைப்போல் அவர் கண்கள் கடகடவெனப் பேசுகின்றன. ஹாக்கி ஸ்டிக்குடன் அவர் கிளம்பிப்போகிற வேகமும், கண்ணாடிக்குள் விரல் விட்டு போங்கு காட்டுகிற இவர் சேட்டையும் செம. பிரமாதமான எதிர்காலம் இருக்கிறது இந்தப் பெண்ணுக்கு!
ரோஜா மேடம்தான் படத்தின் தூண். மிரட்டி இருக்கிறார். சேத்தன் சாரும் ‘பரிதாபங்கள்’ கோபியும் படம் முழுக்க சிக்ஸர் அடிக்கிறார்கள். ‘சிரஞ்சீவி’ பாத்திரத்தில் தம்பி சுதர்சன் பெரிய பெயர் வாங்கி இருக்கிறார். இஸ்மத் பானுவும் அவர் மகள் பாத்திரமும் தனித்த சிறப்பு!
இசையும் பாடலும் வரிகளும் குரலும் கோடி தகும். எல்லா வகையிலும் ‘அன்பே டயானா’ உங்கள் உள்ளத்தை அப்படியே அள்ளிக் கொள்ளும். ‘மில்லியன் டாலர்’ நிறுவனத்தின் தயாரிப்பில் உடன் நின்ற பெருமை, எனக்கும் எங்கள் நிறுவனத்திற்கும் வாழ்நாளுக்கும் நிலைத்திருக்கும்!
@PariElavazaghan@RamyaRanganathn@Chetan_k_a@RojaSelvamaniRK@AravindhrajaG
Written & Directed by @PariElavazaghan 🎬
A @bharathsankar12 Musical 🎶
@CalistShelley@Editor_Partha@Lyricist_Mohan@soorajslive@muthamilrms@sudharsangandhy@nikhila_sankar_@Ismathbanu1@udaykumar_mix@MillionOffl@Neo_Castle_@erasaravanan@Yuvrajganesan@narentnb@Vivek_5790@shajankafka@divomusicindia@proyuvraaj
‘குட்நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வரிசையில் அடுத்தும் ஓர் அட்டகாச படைப்பு ‘அன்பே டயானா’ ❤️ நிச்சயம் உங்கள் நெஞ்சமீர்க்கும் படைப்பாக இருக்கும். முதல் விநியோகக் குரலே முத்தாய்ப்பாகச் சிலிர்க்க வைக்கிறது 🙏
நிவாஸ் கே பிரசன்னா தமிழ்த் திரையுலகின் தரமான இசை வரவு. வந்த மாத்திரத்திலேயே வசீகரமான குரலாலும் இசையாலும் இளம் நெஞ்சங்களில் தன் இருப்பை அழுத்தமாக நிறுவிய நிவாஸ், ‘பைசன்’ படத்தில் புலியாய்ப் பாய்ந்தார். தமிழகத்தின் அத்தனை திசைகளிலும் தீப்பிடித்த கணக்காய் எதிரொலித்தது அவருடைய ‘தீக்கொளுத்தி’!
‘தாய்கிழவி’ படத்திலும் இசையாய், குரலாய் புகழின் உச்சாணிக்கொம்பை தொட்டார் நிவாஸ்.
யாராக இருந்தாலும் இந்த உச்சமும் புகழும் நிச்சயம் குணம் மாற வைக்கும். ஆனால், நிவாஸ் முன்பைக் காட்டிலும் இன்னமும் எளிமையாய் பேரன்பாய் உருகி நிற்கிறார். கதாநாயகனாக நடிக்கச் சொல்லி தினமும் அவர் அலுவலகக் கதவு தட்டுகிறார்கள் இயக்குநர்கள் பலர். எதையும் சாதிப்பாகக் கருதாமல் முருகன் வழிபாடு, யோகா, ஆன்மீகம் என இந்தச் சின்ன வயதிலேயே சித்தர் கணக்காக மாறி நிற்கிறார்.
‘தாய்கிழவி’ இசை வெளியீட்டு விழாவில், “அடுத்த படத்தின் வேலைகள் எப்படிண்ணே போகுது?” என்றார் தம்பி சிவகார்த்திகேயன். “ஷூட் முடிந்தது தம்பி. போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டார்ட் பண்ணனும். இசைக்கு தம்பி நிவாஸ் கிடைத்தால் பேருதவியாக இருக்கும்” என என் கோரிக்கையையும் சேர்த்து பதிலாகச் சொன்னேன். “இயல்பாகவே உங்க படம் மண் சார்ந்த பதிவா மிரட்டும். நிவாஸ் மட்டும் கிடைச்சிட்டா உங்க காட்டுல அடைமழை பேய்ஞ்சிடும்ணே…” என்றார் சிவா.
இன்று நிவாஸ்க்கு பிறந்த நாள். வாழ்த்துச் சொல்லிப் பேசினேன். மூன்று நிமிடங்கள் நான் கடகடத்த வாழ்த்திற்கு ‘நன்றி’ என்று மட்டும் சொன்னார் நிவாஸ். வேறொன்றும் பேசவில்லை. அடுத்த சில நிமிடங்களில் அவர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது.
அடைமழைக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி இருக்கின்றன!
நம் உழைக்கும் விளிம்புநிலை மலைவாழ் மக்களின் வாழ்வியல்
மற்றும் யதார்த்தப்பாடுகளைச் சுமந்த கதையை இயக்குநர் திரு.தமிழ் தயாளன் அவர்கள்
"கெவி" என்ற பெயரில்
திரைப்படமாக கூட்டுமுயற்சியில் உருவாக்கிவுள்ளார்கள்.
வருகிற 12.12.2025- முதல் தொடர்ந்து 7 நாட்களுக்கு 3 காட்சிகள் REGENCY PLANT 16 IN
LOS ANGELES IS
7876 VAN NUYS BLVD,
PANORAMA CITY CA 91402-யில் திரையிடப்படுகிறது. அன்பும் நல்வாழ்த்தும் 💪🏿
#SKY_AURA_STUDIOS
#GEVI
#கெவி
நெல் திருவிழாவில் கலந்துகொள்வதாக 6வருடத்துக்கு முன் நெல் ஜெயராமனிடம் உறுதி அளித்தார் சிவகார்த்திகேயன். சொன்னபடியே இந்த வருட நெல் திருவிழாவில் கலந்துகொண்டார்.
புதிய வரவாக #பவன்
புரட்சி படைப்பாக #அமரன்
-நெகிழ்வும் மகிழ்வுமாக இருக்கும் தம்பி சிவகார்த்திகேயனுக்கு நல் வாழ்த்துகள்.
#வருந்துகிறேன்
என்னோடு வயதில் சிறியவன் கடந்த 9 ஆண்டு காலமாக வருடத்திற்கு தோராயமாக 4,500லிருந்து 5000 ரூபாய் என்னை பெற்றவளுக்கும் அவனை வளர்த்தவளுக்கும் தந்து கொண்டிருந்தவன் நேற்று முன்தினம் இடி விழுந்ததில் வேரோடு சாய்ந்து
உயிர் விட்டான்..
பத்து நாட்களுக்கு முன்பு மதில் சுவர் எழுப்ப வந்த மேஸ்திரி இந்த தென்னை மரத்தை அப்புறப்படுத்தினால் 35 ஆயிரம் ரூபாய் செலவு மிச்சமாகும் என்று சொன்னபோது அப்பா 3 லட்ச ரூபாய் செலவானாலும் தருகிறேன் ஆனால் இந்த தென்னை மரத்தை வெட்ட அனுமதிக்க மாட்டேன் என்று சொன்னதை இன்று நினைக்கும் போது கண் குளமாகிறது..