நம் #DravidianModel அரசு கட்டியெழுப்பிய கோவை பெரியார் அறிவுலகம் திறப்புவிழா காண்கிறது
யார் திறந்தால் என்ன? திறந்து வைப்பதா பெருமை?
எதையும் திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை! அப்பெருமை என்றும் கழகத்துக்கே உரித்தானது!
#Kovai#Coimbatore#PeriyarArivulagam
தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும் - முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு.@actorvijay அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.
இந்த நேரத்தில், 17-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரா பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்க கழகத்தலைவர் எங்க உயிரான @mkstalin அவர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளர் மற்றும் கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள், எல்லாத்துக்கும் மேல தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னோட அன்பான நன்றி!
கழகத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் - சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியா மக்களின் குரலை நாங்க எதிரொலிப்போம்.
ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம்.
எங்க தலைவர் சொன்ன மாதிரி, எதிரிக்கட்சியா இல்லாம, ஒரு நல்ல எதிர்க்கட்சியா செயல்படுவோம்.
மக்களுக்கும் - அரசுக்கும் இடையிலான ஊடகமா நாங்க தான் இனி இருப்போம்.
என் மேல நம்பிக்கை வச்சு மக்கள் கொடுத்திருக்க இந்தப் பொறுப்புக்கு நான் 100% உண்மையா இருப்பேன்.
கடுமையாக உழைப்பேன்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
திமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முன்னர் தேசிய கீதத்தை ஆளுநர் ரவி இசைக்கச் சொன்னப்போது அது தமிழ்நாட்டின் மரபு அல்ல என மறுத்து தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் இசைத்தது அன்றைய திமுக அரசு.
முதல்வராக விஜய் பதவியேற்கும் விழாவில் முதலில் வந்தே மாதரம், பின்னர் தேசியக்கீதம் இறுதியாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டுள்ளது.
Left, IUML, VCKதான் உண்மையான கொள்கைக் கூட்டணி என்ற உண்மையையும்,
பதவிக்கு விலைபோகும் பரதேசிதான் காங்கிரஸ் என்ற துரோகத்தையும் வெளிக்கொண்டு வரும் வகையில் தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர். வாழ்த்துகள்.
DMK தன்னை rewire செய்துகொள்ளவும் நல்ல வாய்ப்பு.
ஆட்சி கூட இன்னும் அமைக்கவில்லை. அதற்குள் டாஸ்மாக்கில் ஒரு சாதனையை விஜய் நிகழ்த்திவிட்டதாக ஒரு பிம்பத்தை கட்டமைக்கின்றனர் பார்ப்பன பெருமாள்கள். நம்மவர்கள் உடனடியாக உடைத்துவிட்டனர். இன்னுமிது போல பல பொய்களை சொல்வார்கள். தமிழகம் ஒரு போலி குஜராத் மாடலுக்கு ஆயத்தமாகி இருக்கின்றது. 😃
கொளத்தூருக்கும் எனக்குமான உறவு தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்த உறவு.
15 ஆண்டுகாலம் எனக்கு ஆதரவு நல்கியவர்கள் கொளத்தூர் தொகுதி மக்கள். அதில், 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும், 5 ஆண்டுகள் ஆளும்கட்சியாகவும் என்னால் இயன்ற அனைத்துத் திட்டங்களையும் கொளத்தூருக்குக் கொண்டு வந்து நிறைவேற்றினேன்.
தமிழ்நாட்டின் மாடல் தொகுதியாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றிக் கொடுத்த பெருமிதத்தோடே எனது கொளத்தூர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து இன்று நன்றி தெரிவித்தேன்.
ஒவ்வொரு தெருவிலும் சென்றபோது அங்கு நான் உருவாக்கிய விளையாட்டரங்கம், பூங்கா, முதல்வர் படைப்பகம், நூலகம், திருமண மாளிகை, பேருந்து நிலையம், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றைக் கண்டு என் கடமையைச் சரிவர ஆற்றியிருப்பதில் மனநிறைவு கொண்டேன்.
உணர்ச்சிப் பெருக்கோடு என் நன்றியை ஏற்றுக்கொண்ட கொளத்தூர் மக்களுக்காக என்றும் நான் உண்மையாக உழைப்பேன். உங்களோடுதான் நான் என்றும் இருப்பேன்.
#KolathurVisit
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அனைவரின் ஒவ்வொரு வாக்கையும் விலைமதிப்பற்ற நம்பிக்கையாக நான் கருதுகிறேன்.
இப்போது வரை கிடைத்துள்ள புள்ளிவிபரங்களின்படி தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. இம்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலிமையானதாகவே கருதுகிறேன்.
நமக்கு வாக்களித்த மக்களுக்கு நேரடியாகச் சென்று நன்றி தெரிவிக்கும் கடமையை நாம் எப்போதும் செய்து வருகிறோம். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும், உடனடியாக வாக்களித்த மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மக்களாட்சியில் மக்களே நம் வணக்கத்துக்குரியவர்கள். அவர்களுக்காகவே நாம் கட்சி நடத்துகிறோம். அவர்களுக்காகவே நாம் அரசியலில் இயங்குகிறோம். எனவே, அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்க நேரில் செல்லுமாறு அனைத்து வேட்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆறு முறை ஆட்சியில் இருந்துள்ளது. நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் சந்திக்காத தோல்வியும் இல்லை. அரசியல் பொதுவாழ்வில் கொள்கையைக் காக்கும் பயணத்தில் நமது கொள்கை தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதில்தான் நாம் எப்போதும் கவனமாக இருப்போம். வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் அதனைச் சமமாகக் கருதி தனது இலட்சியப் பயணத்தை நடத்துபவர்கள்தான் கழக உடன்பிறப்புகள். அதனால்தான் முக்கியமான மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பேசும்போதெல்லாம், தமிழ்நாடு முழுமைக்குமான தொண்டர்கள் அனைவருக்கும் வணக்கம் வைத்து விட்டுத்தான் நான் தொடங்குவேன். இயக்கத்தின் இரத்த நாளங்கள், வேர்கள் நீங்கள்தான்.
எனக்கு ஆறுதல் சொல்லி பலரும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்து வருகிறீர்கள். உங்களால் உருவாக்கப்பட்ட எனக்கு, உங்களது வலிமையால் வலிமை பெற்ற எனக்கு நீங்கள் உடனிருக்கும் வரை என்ன கவலை? நாம் அனைவரும் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள். அந்த உணர்வோடு தொடர்ந்து நாம் பயணிப்போம்.
உங்கள் உழைப்பால் விளைந்த அறுவடைதான் 1.54 கோடி வாக்குகள். உங்கள் உழைப்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? தலைமைத் தொண்டன் என்ற உணர்வோடு நாம் தொடர்ந்து பயணிப்போம்.
ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுவோம். எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களுக்கான கோரிக்கைகளுக்காகவே போராடுவோம். அந்த வகையில் இப்போது வலிமையான எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கான அரசியலை நாம் தொடர்வோம்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் வழித்தடத்தில், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்தின் கொள்கைகளைச் செயல்படுத்த, இனம் - மொழி - நாடு காக்கும் பயணத்தைத் தொடர்வோம். நமது பயணத்தில் எவரையும் பின்தங்க நான் விட மாட்டேன். மீண்டும் வெல்வோம்!
தோல்வியில் இருந்து கற்பதற்கு திமு கழகத்கிற்கு நிறைய பாடங்கள் இருக்கின்றன. It’s time to Rethink and Rewire. I think my party will be open to new thinking.. அது தான் வரலாறு கழகத்திற்கு வழங்கியுள்ள பக்குவம்.
📌யாரை எல்லாம் அருகில் சேர்க்க வேண்டும், சேர்க்க கூடாது என்பதே ஒரு அரசியல் தான். இந்த ஐந்தாண்டு ஆட்சியில் கழகத் தலைவரை சுற்றி இருந்தவர்கள் அனைவரும் மேட்டுக்குடியினர்(Elites). subaltern கட்சிக்காரர்களை தலைவரை நெருங்கவிடாமல் பார்த்துக்கொண்டது இந்த தரப்பு. இந்த திரையை முதலில் அகற்ற வேண்டும். கட்சிக்காரர்களை அணுகுவது என்பது வெறும் Gimmicks-ஆக அல்லாமல் பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் செய்ததை போல் உள்ளார்ந்த ஒன்றாக இது இருக்க வேண்டும்.
📌 Consultancies-ஐ தூக்கி எறியுங்கள். அரசியலில் கட்சிக்காரனை காட்டிலும் மிகசிறந்த Consultant என்று ஒருவர் இல்லவே இல்லை. அவர்களின் ஆலோசனைகளுக்கு செவிமடுங்கள். வெறும் எண்களை கொண்டு ஏமாற்றும் வியூக வகுப்பாளர்கள் திமுக போன்ற 75 ஆண்டு கால கட்சிக்கு அவசியம் இல்லை. கழகத்திற்கு உள் இருக்கும் ஆற்றலும் நிபுணத்துவமும் Consultancies-ஐ விட பன்மடங்கு பெரியது. அதை உணர்க. நமக்கு தேவை முரசொலி மாறன்களே தவிர, பிரசாந்த் கிஷோர்கள் அல்ல.
📌 சமூக வலைதளத்தில் களமாட உறுதியான அமைப்பை கட்சியின் ஒரு அங்கமாகவே நிறுவி கொள்ளும் முயற்சியில் ஈடுபடுங்கள். அதை மேலும் வலுப்படுத்துங்கள். Influencer-களை சாராமல் கட்சி உறுப்பினர்களை இந்த தளத்திற்கு ஏற்றவர்களாக தரப்படுத்துங்கள்.
📌 தலைவரை பதற்றபடாமல் வைத்திருக்க நினைக்கும் மாய வலை அதிகார மையங்களின் தொடர்பை துண்டித்து கொள்ளுங்கள். யதார்த்ததை முறையாக உள்வாங்கி கொள்ள விடாது தடுக்கும் இந்த வர்க்கம் தி.மு.கழக தலைமைக்கு ஒரு சாபக்கேடு.
📌 இளம் தலைமுறையை குறிப்பாக இளம் பெண்களை கட்சிக்குள் கொண்டு வர ஒரு புதிய திட்டம் தேவை. வெறும் உறுப்பினர் சேர்க்கை என்ற எண்ணிக்கை ஜால திட்டமாக அல்லாமல், அமைப்பு சார்ந்த முன்னெடுப்பாக அது திகழ வேண்டும். சார்பு அணிகளை Reform செய்யுங்கள். கட்சியின் அணுகுமுறையில் Rigidity குறைந்து Flexibility அதிகரிக்க வேண்டும். கட்சிகார்கள் தலைவர்களை அணுகுவதிலும் இது வெளிப்பட வேண்டும். தலைமை அதை நோக்கி நகர வேண்டும்.
📌 பல கோடி செலவில் - பல்லாயிரம் உடன்பிறப்புகளின் உழைப்பில்- பல லட்சம் கட்சிகாரர்களை பெரும் திரளில் கூட்டி கணக்குகாட்ட ஏற்பாடு செய்யப்படும் கந்துடைப்பு மாநாடுகள் இனியும் வேண்டாம். சலிப்பூட்டும் அரசியல் யுக்தி அது. எண்ணிக்கை அரசியலில் இருந்து வெளியேறுவோம்.
கழகம் தன்னை அடுத்த பாய்ச்சலுக்கு தயார்படுத்தி கொள்ள இவை எல்லாம் அடிப்படையாக நாம் மேற்கொள்ள வேண்டிய அவசியமான மாற்றங்கள் என்று கருதுகிறேன்.
என் பார்வையில் பிழை இருக்கலாம், குறைபாடு இருக்கலாம், மாற்று கருத்து இருக்கலாம் அவற்றை சுட்டிக்காட்டினால் உரையாட தயார்.
உறக்கமற்ற உடன்பிறப்புகளுள் ஒருவனாகவே இதை எழுதி இருக்கிறேன். துவண்டு போகவில்லை. மீண்டெழுவோம் அதுதான் உதயசூரியனின் குணம்.
#DMK @mkstalin@Udhaystalin@arivalayam #Re_Thinking