இன்று என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர் ,சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் ,வருங்கால தமிழகமுதல்வர் அண்ணன் எடப்பாடியார் அவர்களை சென்னையில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற மகிழ்ச்சியான தருணம்..
நியாயமான விமர்சனங்களை ஏற்றுக் கொள்வோம்.அதே நேரம் எங்கள் இயக்க தலைவர்களை தூஷண வார்த்தைகளாலும்,கீழ்த் தரமான சித்தரிப்புகளாலும் வசை பாடுவோரை குறித்து வைத்துக் கொண்டு கண்காணிப்போம்! போலி முகவரியானாலும்,ஓடி ஒளிந்தாலும் தேடி வந்து வட்டியும் முதலுமாய் திருப்பித் தருவோம். பகையே காத்திரு!
நான் உண்மையான விவசாயியா ? நீங்கள் உண்மையான விவசாயியா?' நீங்கள்தான் போலி விவசாயி என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள். எனவே, எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினுக்கு இல்லை.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" @EPSTamilNadu அவர்கள்
சட்டப்பேரவையில் முதல்வர்,அமைச்சர்கள் பேசும் போதும் மட்டும் நேரலை செய்கிறார்கள்.
பேரவையில் எதிர்கட்சியினர் பேசுவது முழுவதுமாக நேரலை செய்யப்படுவதில்லை.
அதிமுகவினர் பேசுவதை நேரலை செய்ய வலியுறுத்தி பலமுறை வெளிநடப்பு செய்திருக்கிறோம்.
சபாநாயகராக @AppavuSpeaker சரியாக செயல்படவில்லை,
ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்.
நடுநிலையோடு பேரவையை நடத்தக் கூடியவர் தேவை.
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
மக்களுக்கு ஒன்றுமே இல்லாத வெற்று பட்ஜெட்டை மறைக்க,
ஒரு வீடியோஷூட் நடத்தி வெளியிட்டுள்ளார்,
"FAILURE மாடல்அரசின் விளம்பர மாடல்”
திரு. @mkstalin.
உலகப் பொருளாதார அறிஞர்களுடன் இணைந்து இந்த பட்ஜெட்டை தயாரித்ததாக அவர் கூறியிருப்பது, இந்த பொருளாதார ஆண்டின் நல்ல நகைச்சுவை.
தன் பட்ஜெட் பற்றி நாளேடுகள் என்ன சொல்கின்றன என்பதை ஆர்வத்தோடு படித்துக் காட்டும் இவர், அதே நாளேடுகளில் நாள்தோறும் வருகின்ற இந்த ஆட்சியின் அவலங்கள் குறித்த செய்திகளை இதே அர்ப்பணிப்புடன் படித்துக் காண்பிப்பாரா?
உலகத்திலேயே தன் கட்சியின் ஐ.டி. விங்கைச் சேர்ந்தவர்களின் பதிவுகளையே ,
மக்கள் கருத்தாகக் கருதி புளகாங்கிதம் அடையும் ஒரே முதலமைச்சர் திரு. ஸ்டாலின் தான்!
தன் பட்ஜெட் பற்றி தலைமைச் செயலக ஊழியர்கள் நினைப்பது என்ன? ஆசிரியர்கள் நினைப்பது என்ன? இதர அரசு ஊழியர்கள் நினைப்பது என்ன? விவசாயிகள், தொழில் முனைவோர், உழைக்கும் மக்கள் நினைப்பது என்ன என்பதே அறியாமல்,
"ரூ" போட்டதால் பட்ஜெட் ஹிட் ஆகிவிட்டது என்று சினிமா வசனம் பேசுகிறார்!
பட்ஜெட் ஹிட் ஆவது என்பது அறிவிப்பதில் இல்லை- செயல்படுத்துவதில் என்பதே உண்மை. அப்படி பார்த்தால்,
திமுக ஆட்சிக்கு வந்து போட்ட 5 பட்ஜெட்டுமே UTTER FLOP தான்!
72 ஆண்டுகால தமிழ்நாட்டு
ஆட்சிகளின் மொத்த கடனையும்
4 ஆண்டுகளில் வாங்கி, கடன் வாங்குவதில் Record Break மற்றும் Blockbuster சாதனை செய்த ஒரே முதலமைச்சர் திரு. @mkstalin தான்!
இந்த பட்ஜெட் தான் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் "தி.மு.க.-வின் இறுதி பட்ஜெட்" என்பது மக்களின் கருத்து .
இந்த பட்ஜெட்…, SIMPLY WASTE..!
#StalinBudget_SimplyWaste
@AIADMKOfficial