மாவட்டதுணைத்தலைவர்
தகவல்தொழில்நுட்பபிரிவு
வேலூர் புறநகர் மாவட்டம்🌱
ஒ இ செயலாளர் மகளிர்அணி
கே வி குப்பம் மே ஒன்றிய அஇஅதிமுக
(#இலையின்_தோழி)
#ADMK_VLR_PN
ஈரோட்டில் காதலிக்க மறுத்த 19 வயது இளம்பெண்ணை நடுரோட்டில் கத்தியால் குத்திய நபர்.
கல்லிடைக்குறிச்சி அருகே சிறுவன் உட்பட இருவர் கொலை.
தஞ்சாவூர் பூதலூர் அருகே காணாமல் போன 17 வயது சிறுமி கிணற்றில் சடலமாக மீட்பு.
ஆற்காடு அருகே கஞ்சா போதையில் 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை!
திருச்சி அருகே கஞ்சா புகைப்பதை தட்டிக்கேட்டதால் அரிவாள் வெட்டு.
சட்டம் - ஒழுங்கு????
@CMOTamilnadu.
#பொய்க்கால்_குதிரை_அரசு
ஒரு பெண்ணை பொதுவெளியில் கொடூரமாகத் தாக்கும் அளவுக்கு தவெக நிர்வாகிகளுக்கு துணிச்சலைக் கொடுப்பது யார்? ஆளுங்கட்சி என்ற அதிகார போதையா, அல்லது சட்டத்தின் மீதான அச்சமின்மையா??
#பொய்க்கால்_குதிரை_அரசு
ஒருபுறம் White Powder புகழ் அமைச்சர், மறுபுறம் பொய்சொல்வதையே தன் தொழிலாக கொண்டு நிழல் முதலமைச்சராக செயல்படுவதாக சொல்லபடும் மற்றொரு அமைச்சர், இதற்கிடையில் அரசு வழக்கறிஞர்கள் நியமனங்களுக்காக சொந்தக் கட்சியிலேயே லஞ்சம் வசூலிக்கப்படுவதாக புகாருக்குள்ளாகியிருக்கும் மூத்த அமைச்சர் – ஊழலை ஒழிப்போம் என கொக்கரித்த முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் சொன்ன தூய சக்தி அரசியல் இதுதானா?
தொட மாட்டேன், தொட்டவர்களையும் விடமாட்டேன் என கடந்த சில தினங்களுக்கு முன்பாக சட்டமன்றத்தையே சூட்டிங் ஸ்பாட் ஆக மாற்றிவிட்டார்களோ என்று எண்ணும் அளவிற்கு, சினிமா வசனங்களை ஒரே டேக்கில் அள்ளிவிட்ட முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் பொதுவெளியில் போதைப் பொருள் பயன்படுத்துவது போல வீடியோ வெளியாகி சர்ச்சைக்குள்ளான White Powder புகழ் அமைச்சர் மீது இதுவரை விசாரணை கூட நடத்த முன்வராரது ஏன்?
கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவம் தொடர்பாக உச்சநீதி மன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், காவல்துறையின் மூலமாக பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டதாக கூறி முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையினரையும், அவர்கள் ஆற்றும் மக்கள் பாதுகாப்பு பணிகளையும் கொச்சைப் படுத்தும் வகையில் பேசி, அவ்வழக்கின் விசாரணையை திசைதிருப்பும் நோக்கில் செயல்படும் பொய்த்துறைக்கென்றே பிரத்யேகமாக நியமிக்கப்பட்டவராக சொல்லப்படும் அமைச்சரின் அரைவேக்காட்டுத் தனத்தை உண்மையான முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் கண்டும் காணாமல் இருப்பதன் மர்மம் தான் என்ன ?
வாணியம்பாடியில் ஆடு திருட்டு வழக்கில் தொடர்புடையவருக்கு அரசு வழக்கறிஞர் பதவி, அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க சொந்தக் கட்சி நிர்வாகிகளிடமே வசூல் வேட்டை என அடுத்தடுத்துபுகார்கள் ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகளாக வருவது, தூயசக்தி எனும் பெயரில் மறைந்திருக்கும் ஊழல் சக்திகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன.
குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு விரைந்து தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரீல்ஸ் கண்டெண்டுக்கு ஏற்றவகையில் பொதுவெளியில் கர்ஜித்துவிட்டு, தற்போது அதற்கு முரணாக குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களையும், லஞ்சப் பணம் கொடுப்பவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக நியமிப்பதன் மூலம், ஏற்கனவே தங்களால் வெள்ளாவி வைத்து வெளுக்கப்பட்ட ஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை தவெக அரசும், அதன் முதலமைச்சரும் பாதுகாக்க முனைகிறார்களோஎன்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல தவெக ஆட்சியில் புகாருக்கு உள்ளாகியிருக்கும் இந்த வழக்கறிஞர் நியமன ஊழலே அடுத்த ஐந்தாண்டு கால தவெக ஆட்சியின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
ஆகவே, அரசு வழக்கறிஞர் நியமனத்தில் ஏற்பட்டிருக்கும் குளறுபடிகளை கலைந்து, வெளிப்படையான நியமன நடைமுறைகளை மேற்கொண்டு தகுதியுடைய வழக்கறிஞர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்திட வேண்டும் என வலியுறுத்துவதுடன், இந்த நியமனத்தில் புகாருக்கு உள்ளானவர்கள் மீது விசாரணை மேற்கொண்டு ஊழல் முறைகேடுகளுக்கான முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
@CMOTamilnadu@TVKPartyHQ
அண்ணா திமுக உணர்வுள்ள தொண்டன்
மகிழ்ச்சி அளிக்கிறது🌱 வாழ்வதும் ஒரு எண்ணத்தோடு வாழ வேண்டும்
அதுதான்
மனிதனுடைய கொள்கை கொள்ளை அடிக்க கொள்கையை
கொட்டையில் போட்டு கோடிக்கு ஓடும் குள்ளநரிகள் ஓடட்டும் உன்னை போல் என்னை போல் தொண்டங்கள் உள்ள வரைக்கும்
#அண்ணா_திமுக மிகப்பெரிய #ஆலமரம்🙏
தவெக அரசு குதிரை பேரம் மூலம் அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்ததன் காரணமாக, காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை முடியும் வரை இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்று, அஇஅதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் திரு. @IInbadurai அவர்கள் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார்.
அடுத்த கட்சி MLA-க்களை வலைவீசி
குதிரை பேரம் பேசி இழுப்பதற்கும், “கல்லாப்பெட்டி கூட்டணி” என்று தேர்தலுக்கு முன் சொன்ன கட்சிகளை எல்லாம் தங்கள் “Sofa கூட்டணி”க்குள் நுழைப்பதற்கும் முயற்சி செய்யும் பொய்க்கால் குதிரை அரசு,
சட்டம் ஒழுங்கை காப்பதற்கு ஏதேனும் முயற்சியாவது செய்யுமா?
@CMOTamilnadu
#பொய்க்கால்_குதிரை_அரசு
இப்போ சொல்லுங்கடா இவனுங்களுக்கு துணை பொது செயலாளர் குடுத்தும் ஆட்சி அதிகாரம் பதவி வெறி வேணும்னு EPS மேல பலி போட்டு ஓடனும்னு முடிவோட இருக்கவனுங்களா எப்படி நிறுத்த முடியும் ????
இனி எவனாவது தலைமை சரி இல்லை EPS மேல தப்புன்னு சொல்லுங்க செருப்பு பியும் உங்களுக்கு .
@EPSTamilNadu ❤️💪
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அருகே 1144 ஹெக்டேர் நிலப்பரப்பில் அணுக்கனிமச் சுரங்கம் அமைக்க ஆதரவு அளிக்கும் வகையில், இத்திட்டத்திற்கான ஒதுக்கீட்டு ஆணையை ஓராண்டிற்கு நீட்டித்து தவெக பொய்க்கால் குதிரை அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
இதே திட்டத்தை, கடந்த 03.11.2024 அன்று நடந்த அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
அந்த தீர்மானத்தில் இத்திட்டத்தை தென் தமிழகத்தை பாழ்படுத்தும் முயற்சி என்று குறிப்பிட்டுள்ள இன்றைய ஆளுங்கட்சி, இதனை அபாயம் விளைவிக்கும் நாசகார நச்சுத் திட்டம் என்று கூறி இதனை கைவிட வலியுறுத்தி உள்ளது.
தற்போது அந்த நிலைப்பாட்டில் என்ன மாற்றம் வந்துவிட்டது? ஆட்சிக்கு வருவதற்கு முன் நாசகார நச்சுத் திட்டமாக இருந்தது, இப்போது நன்மை பயக்கும் நலத்திட்டம் ஆகிவிட்டதா @CMOTamilNadu ?
எதற்கு இந்த இரட்டை வேடம்?
மேலூர் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் பிரச்சனையை சட்டமன்றத்தில் எழுப்பி, பல ஆதாரப்பூர்வமான கேள்விகளை அரசை நோக்கி கேட்டு மக்களுக்காக நின்றவன் நான். “மக்கள் பிரச்சனைக்கு உயிரைக் கொடுத்து காப்பாற்றுவோம்” என்று சட்டப்பேரவையிலேயே முழங்கினேன் நான். இந்த வரலாறெல்லாம் இன்றைய ஆட்சியாளர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அடுத்த கட்சி MLA-க்களை வலைவீசி, குதிரை பேரம் பேசி இழுப்பதற்கும், “கல்லாப்பெட்டி கூட்டணி” என்று தேர்தலுக்கு முன் சொன்ன கட்சிகளை எல்லாம், தங்கள் “Sofa கூட்டணி”க்குள் நுழைப்பதற்கும் இடையே இப்படி ஒரு அரசாணை வெளியிட்டால் அதனை கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைத்தீர்களா?
மக்களுக்கான பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து, மக்களுடன் நிற்பது மட்டும் தான் @AIADMKOfficial-ன் ஒரே பணி!
அது ஒருநாளும் மாறாது!
நச்சுத் திட்டம் என்று இன்றைய ஆளுங்கட்சி சொன்ன திட்டத்தை இப்போது செயல்படுத்த முனைவது குறித்த காரணத்தை இன்றைய முதலமைச்சர் விளக்க வேண்டும்; உள்ளபடியே அது நச்சுத் திட்டம் தான் என்றால் இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial