நீட் ஒழிப்புப் போராளி தங்கை அனிதாவின் சகோதரர் மணி ரத்னம் அவர்களின் ஏற்பாட்டில், நீட் ஒழிப்பு கூட்டியக்கம் முன்னெடுக்கும் நாடு தழுவிய அளவிலான கையெழுத்து இயக்கத்தில் மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று கையெழுத்திட்டார்.
#BanNEET
*Dharapuram Makkale... Get Ready! 🖤❤️🔥*
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தாராபுரம் தொகுதி கழக வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் எஸ்.சுகன்யா அவர்களை ஆதரித்து, கழக இளைஞர் அணிச் செயலாளர் - மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
மம்தா தொகுதி: 51,000 வாக்குகள் நீக்கப்பட்டன. அவர் 15 K வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
மு.க. ஸ்டாலினின் தொகுதி: 1 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டன. அவர் 9k வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
“என் மிசா கைதை உங்க எவனுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்ல! என்னோட தியாகத்துக்கு மார்க் போட உங்க எவனுக்கும் தகுதி இல்ல!” - கழகத் தலைவர் @mkstalin அவர்கள்.
#MKStalin#முப்பெரும்_விழா#DMK4TN
இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (Airport Authority of India) கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை வேறொரு நிறுவனத்திடமோ அல்லது தனியாரிடமோ மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த அரசுகள், அந்தந்த மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களைத் தனியார் வசம் ஒப்படைக்கக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு தாமாக முன்வந்து விமான நிலையத்தைத் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசைக் கோருவது கடும் கண்டனத்திற்குரியது.
சென்னை விமான நிலையத்தின் செயல்பாடுகள், உட்கட்டமைப்பு மற்றும் பயணிகள் வசதிகளில் குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில், அதனை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காண வேண்டுமே தவிர, பொதுத்துறை நிறுவனத்தைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறுவது ஏற்புடையதல்ல.
பொதுமக்களுக்குப் பாதுகாப்பான, தரமான மற்றும் குறைந்த செலவில் சேவைகளை வழங்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் வசம் ஒப்படைக்கும் பட்சத்தில், லாபமே முதன்மை நோக்கமாக மாறும் என்பதோடு, பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடும் என்ற விமர்சனமும் பரவலாக எழத் தொடங்கியுள்ளது.
எனவே, சென்னை விமான நிலையத்தைத் தனியார் வசம் ஒப்படைக்கக் கோரி மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் கடிதம் எழுதியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகளில் உண்மை இருக்கும் பட்சத்தில், அத்தகைய முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
தவெக = பாஜக!
சென்னை விமான நிலைய நிர்வாகத்தை 'AAI'-யிடம் இருந்து பிடுங்கி, தனியாருக்குத் தாரைவார்க்கக் கோரி கடந்த ஆகஸ்ட் மாதமே ஒன்றிய அரசுக்கு ரகசியக் கடிதம் எழுதியுள்ளார் டம்மி முதலமைச்சர் விஜய் என்ற செய்தி உண்மையா? மக்கள் நலன் என நாடகமாடும் தவெக அரசு, இந்தத் துரோகக் கடிதத்தை ஒரு மாதம் முழுவதும் மக்களிடம் மறைத்தது ஏன்?
பாஜகவைக் கொள்கை எதிரி என நாடகமாடிவிட்டு, அதே பாஜகவின் மக்கள் மற்றும் தொழிலாளர் விரோத 'தனியார்மயமாக்கல்' கொள்கையைத் தமிழ்நாட்டில் செயல்படுத்த நினைப்பது தான் தவெக-வின் கொள்கையா?
ஒரு முதலமைச்சரின் வேலை பொதுத்துறைச் சொத்துகளையும் மாநில உரிமைகளையும் பாதுகாப்பதா? அல்லது தனியார் லாபத்திற்காகத் தரகு வேலை பார்ப்பதா?
தவெக-வினரை விட அதிகம் முட்டுக்கொடுக்கும் தோழமைக் கட்சிகளே, உங்களுக்கும் ஒரு பங்கு கிடைத்துவிட்டது என்ற காரணத்திற்காக, தமிழ்நாட்டையே கூறுபோட்டு விற்றாலும் உங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை அப்படித்தானே?
#TVKGovernment #TVKFails #TVKVijayFails
தமிழ் அரசியல் அடையாளமாய், மாநில உரிமைக் குரலாய், சாமானிய மக்களின் சரித்திர நாயகராய், உடன்பிறப்புகளின் ஒப்பற்ற தலைவராய் திகழ்ந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் இன்று!