*பசுமை இயக்கம்* திருப்பூர் மாவட்டத்தில் பசுமை இயக்கத்தின் *ஒரு விதை புரட்சி*நிகழ்விற்காக மரக்கன்றுகளை நடவு செய்து வளர்க்கும் பணியில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக வாகனம் மூலம் தண்ணீர் ஊற்றும் பசுமை இயக்க தெய்வங்கள்... அனைவருக்கும் பசுமை இயக்கத்தின் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்
*பசுமை இயக்கம்*. கோவையில் வருகின்ற 31/07/2021 அன்று காலை 9 மணிக்கு *ஒரு விதை புரட்சி* பசுமை புரட்சியை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவியர் மூலம் செயல்படுத்தும் திட்டத்தை அறிமுகம் செய்ய திருமதி-லீமாரோஸ், DIRECTOR MARTIN GROUP OF COMPANIES, அவர்களை சந்தித்து நிகழ்வுக்கு அழைத்தனர்.
*பசுமை இயக்கம்* சிவகங்கை, தேவகோட்டை வட்டம், மினிட்டாங்குடி ஊராட்சியில் பசுமை இயக்கம் சார்பாக மரம் நடவு செய்து வளர்க்கும் பணிக��காக சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் நிலம் அமைத்துக் கொடுத்துள்ளேன் இப்படிக்கு ஊராட்சி மன்றத் தலைவரும் & தேவகோட்டை ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் ஆகிய R. பழனிவேல்.
*பசுமை இயக்கம்* தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரை அருகில் பல்லாயிரக்கணக்கான மரக்கன்றுகளை நடவு செய்து வளர்ப்பதற்காக தூத்துக்குடி நகராட்சி நிர்வாகம் பசுமை இயக்கத்திற்கு நிலம் வழங்கியுள்ளனர்.. தூத்துக்குடி நகராட்சி கமிஷனர் மற்றும் நிர்வாகத்தினருக்கு நன���றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்..
பசுமை இயக்கம் சார்பாக
5000 மரக்கன்றுகள் காரைக்குடியில் இருந்து செங்கல்பட்டிற்கு இன்னும் சிறிது நேரத்தில் ஏற்ற பட உள்ளது. கன்றுகள் தேர்வு செய்து ஏற்றும் பணியில் நமது பசுமை இயக்கத்தின் செயலாளர் திரு.முருகேஷ்பாபு அவர்கள் காரைக்குடியில் இருந்து.
இன்று பசுமை இயக்கத்தின் சார்பாக ஜூலை 27 அன்று மரம் நட்டு வளர்க்கும் திருவிழாவிற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டு மரம் நடுவதற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட பொறுப்பாளர் திரு.அந்தோணிசாமி அவர்களின் ஆலோசனைப்படி பசுமை இயக்கத்தின் தேசிய இணைச்செயலாளர�� திரு.��ிஜயகுமார் பார்வையிட்டனர்