எந்தவொரு சலசலப்புக்கும் அடக்குமுறைக்கும் திமுக என்றும் அஞ்சாது! பாசிச தவெக அரசின் பொய் வழக்குகளுக்கும் கைது அச்சுறுத்தல்களுக்கும் திமுகவின் கடைக்கோடி தொண்டன் கூட ஒருபோதும் பயப்பட மாட்டான்.
சட்டமன்றத்திற்குள் நுழையக் கூடாது என்ற அரசியல் உள்நோக்கத்தோடு, பொய் வழக்கு புனைந்து கைது செய்யப்பட்ட மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்களை, உயர்நீதிமன்றத்தின் கொட்டு உத்தரவுக்குப் பின் விடுவித்துள்ளது இந்த பாசிச தவெக அரசு.
நீதிமன்றத்தில் கிடைத்த இந்த வெற்றி, மக்கள் மன்றத்திலும் தொடரும்! நாளை சட்டமன்றத்தில் தவெக அரசின் பாசிசப்போக்கையும் அக்கிரமங்களையும் தோலுரித்துக் காட்டி, மக்களின் உண்மையான குரலாக மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவரின் குரல் என்றும் ஓங்கி ஒலிக்கும்!
#தொடைநடுங்கி_அரசு
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @udhaystalin அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், விவசாய பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யவும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும் வலியுறுத்தி, தவெக அரசைக் கண்டித்து திமுக சார்பில் தஞ்சாவூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
#விவசாயவிரோதிவிஜய்
விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் வேளையில், தவெக அமைச்சர்கள் திரையரங்குகளில் படத்திற்கு கண்ணீர் வடிக்கிறார்கள்!
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @udhaystalin அவர்கள்
#விவசாயவிரோதிவிஜய்
தவெக நிர்வாகிகள் மீது அவங்க கட்சிக்காரங்களே கொடுத்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. மக்களுக்கான ஆட்சியை நடத்தாமல், திமுகவை முடக்குவதிலும் எம்.எல்.ஏ க்களை ஆஃபர் கொடுத்து வாங்குவதிலும் தான் இந்த சோபா மாடல் அரசு 24 மணி நேரமும் பிஸியாக இருக்கிறது.
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
தேர்தலுக்கு முன்பு அஜித்குமார் வீட்டுக்குச் சென்ற விஜய்க்கு, இன்று சபரிவர்மன் வீடு ஏன் இவ்வளவு தூரமாகத் தெரிகிறது?
காவல்துறை சித்திரவதையால் உயிரிழந்த சபரிவர்மன் குடும்பத்தின் கதறல் கண்ணுக்குத் தெரியவில்லையா?
இல்லை, உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையே உங்களுக்கு இன்னும் அனுமதி வழங்கவில்லையா?
அஜித்குமார் வீட்டிற்குச் சென்றது வெறும் தேர்தல் நாடகமா?
சபரிவர்மன் மரணத்திற்கு நீதி பெற்றுத் தருவதாக ஒரு வார்த்தை சொல்லக்கூட உங்களுக்குத் திராணியில்லையா?
கோவில் நிலங்களைச் சூறையாடிய கொள்ளையர்கள் சுதந்திரமாக உலா வருகிறார்கள். அவர்களுக்கு மூளையாகச் செயல்பட்ட நிழல் மனிதர்கள் மீது சட்டத்தின் கரம் பாயவில்லை. அரசு விதிகளையும், அறநிலையத்துறைச் சொத்துகளையும் தாராளமாகத் தாரைவார்த்துப் பத்திரம் பதிவு செய்த பதிவாளர் மீது எந்த கைது நடவடிக்கையும் இல்லை. தன் துறையின் கீழ் நடக்கும் இமாலய ஊழல்களைக் கூடக் கட்டுப்படுத்தத் துப்பில்லாத, நிர்வாகத் திறனற்ற அமைச்சர் சொகுசாகத் தன் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்.
கோவில் சொத்துக்கள் கொள்ளை போவதை, ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் சுட்டிக்காட்டிய ஒரு சாமானியக் குடிமகனை நள்ளிரவில் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது இந்த பாசிச தவெக அரசு.
ஏன் இந்த நடுக்கம், சிஎம் அங்கிள் ஒரு சாதாரண இன்ஸ்டாகிராம் பதிவைக் கண்டே உங்கள் ஆட்சி அதிகாரம் நடுநடுங்கிப் போய்விட்டதா? ஒரு போஸ்ட்டைப் பார்த்தே இப்படித் தொடை நடுங்கிப் போய், அடக்குமுறையை ஏவி விடுவதுதான் நீங்கள் பேசும் ஜனநாயகமா? உங்கள் அரசை விமர்சித்தால், தவறுகளைச் சுட்டிக்காட்டினால் சிறைவாசம் தான் பரிசா?
ஆட்சியைத் திறம்பட நடத்தத் துப்பில்லை, ஆனால் விமர்சிப்பவர்களை வேட்டையாட மட்டும் காவல்துறை ஏவல்துறையாகப் பயன்படுத்தப்படுகிறது. இது தான் உங்கள் மாற்றமா.?
இந்த அவசரக் கைதுகள் காட்டுவது உங்கள் அதிகார பலத்தை அல்ல; உங்கள் பலவீனத்தையும், மக்கள் மீது நீங்கள் கொண்டுள்ள பயத்தையும்தான்.
கைது செய்வதிலும், வாய்பூட்டுப் போடுவதிலும் காட்டும் இந்த அசாத்திய ஆர்வத்தை, உருப்படியாக ஆட்சி நிர்வாகத்தை நடத்துவதில் காட்டுங்கள். தவறுகளைச் சுட்டிக்காட்டினால் அதைத் திருத்திக் கொள்ளப் பாருங்கள், அதைவிடுத்து, விமர்சிப்பவர்களின் குரல்வளையை நசுக்கப் பார்த்தால், மக்கள் மன்றம் உங்களுக்குப் பாடம் புகட்டும் காலம் வெகுதொலைவில் இல்லை.
அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம், உரிமைக் குரல் ஓயாது, தொடர்ந்து தவெக அரசின் ஊழல், லஞ்சம் நிர்வாக திறன் குறித்து கேள்வி எழுப்பி கொண்டே இருப்போம்.
#Justice_For_Vinoth
தினமும் ஒரு ஊழல், தினமும் ஒரு அராஜகம் - இதுவே இன்றைய தமிழகத்தின் நிலை!
"யார் லஞ்சம் கேட்டாலும் என் பெயரைச் சொல்லுங்கள்" என்று மேடையில் உத்தமர் வேடமிட்டு நாடகமாடிய விஜய், இன்று தனது கட்சியின் ஊழல்களைக் கண்டு மௌனம் காப்பது அவரது போலித்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
1. செங்கல் சூளைகளில், மணல் அள்ள என மிரட்டிப் பணம் பறிப்பது.
2. டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 30 ரூபாய் கமிஷன் வசூலிப்பது.
3. விவசாயிகளின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய மூட்டைக்கு 60 ரூபாய் லஞ்சம் வாங்குவது.
4. நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு 20 முதல் 30 லட்சம் வரை Party Fund வாங்குவது!
5. 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலத்தை 2 கோடி ரூபாய்க்கு தனிநபருக்கு விற்பனை செய்வது.
இதற்கெல்லாம் CM Uncle என்ன விளக்கம் அளிக்கப் போகிறார் என கேட்டால் டேஷ் கொத்து பரோட்டா என கண்டதை வாந்தி எடுப்பார்.
மேடைகளில் தூய சக்தி என்று புளுகித் தள்ளும் தவெக, உண்மையில் விஷவாயு நிரம்பிய ஊழல் சாக்கடையாகச் சீரழிந்து கிடக்கிறது.
ஐந்து அரசுப் பள்ளிகள் மூடிவிட்டு, 15 சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க தடையில்லா சான்றிதழும், 10 தனியார் பள்ளிகளுக்கு தொடக்க அனுமதி ஆணையும் வழங்கியுள்ளது த.வெ.க அரசு.
குதிரைப் பேரம் மூலம் ஆட்சியமைத்து, களவாணித்தனம் செய்வதையும், தனியார்மயத்தை ஊக்குவிப்பதை மட்டுமே கொள்கையாக கொண்டுள்ள த.வெ.க அரசும், மகா யோக்கியரைப்போல பேசும் விஜயும் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்?
இது தூய ஆட்சியென்றா? இல்லை துயர ஆட்சியென்றா?