சட்டம் - ஒழுங்கு ICU-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்!
😳 ஒரே நாளில் 17 கொலைகள்!
😔 குழிதோண்டிப் புதைக்கப்பட்ட சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பு!
😖 பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக TVK MLA மீது குற்றச்சாட்டு!
இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில்,
குற்றவாளிகளுக்குப் பயமில்லை!
காவல்துறையினருக்குப் பாதுகாப்பில்லை!
த.வெ.க.வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பாடில்லை!
மொத்தத்தில்,
🎯 Part-time முதலமைச்சராகவும், Full-time Content Creator-ஆகவும் இருக்கும் திரு. விஜய் அவர்களுக்குப் பொறுப்பே இல்லை!
#LawAndOrder #TVKfails
வாய், வாய்ன்னு ஒன்னு இருந்தா என்ன வேணா பேசுவீங்களா டம்மி விஜய்?
பெண்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கைக் காக்கத் துப்பு இல்ல; மேடை ஏறி மனப்பாடம் பண்ணி வாந்தி மட்டும் எடுக்க தெரியுது.
#TVKFailsTN
முதலமைச்சர் அவர்கள் இலண்டன் போகிறார், கர்நாடகா போகிறார், ஆந்திரா போகிறார். போகட்டும், அப்படியே உள்ளூரில் உள்ள மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போய், விலைவாசி உயர்வைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
கழகத் தலைவர் திரு.@mkstalin அவர்கள்
#TVKFailsTN
ஊரான் வீடு நெய்யில வாங்கிய அரசுப் பேருந்திற்கு தன் கட்சிக் கொடி நிறத்தில் பெயிண்ட் அடித்து ஸ்வீட் செய்யத் தெரிந்த டம்மி முதல்வராலும், பொறுப்பேற்றவுடன் சாப்பிடச் சென்று இன்று வரை திரும்பி வராத போக்குவரத்துத் துறை அமைச்சராலும், நிகழும் நிர்வாகச் சீர்கேட்டினால், வாங்கி சில வாரங்களே ஆன அரசுப் பேருந்தைக் கூட முறையாகப் பராமரிக்க ��ந்த அரசுக்கு வக்கில்லாமல், நடுரோட்டில் பழுதாகி, அதை மக்களே தள்ளும் அவல நிலை வந்துள்ளது.
#TVKFailsTN
காவிரி நீர்ப் பங்கீட்டு அளவை மறுஆய்வு செய்யக் கோரும் கர்நாடகத்தின் முயற்சியை முறியடிக்க வேண்டும்!
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.
காவிரி நடுவர் மன்றத்தால் ��றுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, `உச்ச நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டுள்ள காவிரி நதிநீர்ப் பங்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று கர்நாடக மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு இருப்பதற்கும், தமிழ்நாட்டு விவசாயிகளின் நலனைப் பாதிக்கும் `மேகதாது அணை கட்டியே தீருவோம்’ என அடம்பிடித்துக்கொண்டிருப்பதற்கும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
1970-ஆம் ஆண்டிலேயே, டாக��டர் கலைஞர் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு, காவிரி நீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, 1990-ல் அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், முதலில் தமிழ்நாட்டிற்கு 205 டிஎம்சி வழங்கும் இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது.
அத்தீர்ப்பைச் செயல்படுத்தாமல் இருக்க “கர்நாடகா காவிரி நீர்ப்பாசனப் பாதுகாப்பு அவசரச் சட்டம், 1991-ஐ” கர்நாடக அ��சு கொண்டு வந்தது. அதனை உச்ச நீதிமன்றம் ரத்துசெய்தது.
இதன்பிறகு, 2007-ல் காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. அதை எதிர்��்தும் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்து- 2018-ல் உச்ச நீதிமன்றமே காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை சில மாற்றங்களுடன் உறுதிசெய்தது.
மேலும், காவிரி ஆற்றுப்படுகையில் 50 சதவிகித நம்பகத்தன்மை அடிப்படையில், அனைத்து அம்சங்களையும் ஆய்வுசெய்து, பயன்படுத்தக்கூடிய மொத்த நீரின் அளவு 740 டிஎம்சி என நடுவர் மன்றம் நிர்ணயித்ததை ஏற்றுக்கொண்டது.
நீர்ப் பங்கீட்டில் மட்டும் சிறிய மாற்றத்தைச் செய்து, ���மிழ்நாட்டிற்கு 404.25 டிஎம்சி மற்றும் கர்நாடகாவிற்கு 284.75 டிஎம்சி என நீர்ப் பங்கு ஒதுக்கீட்டை உறுதிசெய்தது.
எனவே, காவிரி நதிநீர்ப் பங்கீடு என்பது முடிவு பெற்ற - இறுதியான ஒதுக்கீடு. ஆகவே, அப்படி உறுதிசெய்யப்பட்ட காவிரி நீர்ப் பங்கீட்டை மறுபரிசீலனை செய்யவும், மறுபங்கீடு செய்யவும் கர்நாடகா கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதே போல, மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு எதிராகத் தமிழ்நாடு ���ட்டமன்றத்தில் பலமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், “அணை கட்டியே தீருவோம்” என்று கர்நாடக அரசு தொடர்ந்து வீண் பிடிவாதம் செய்துவருவது, இரு மாநில நல்லுறவுகளுக்கும் ஏற்றதல்ல.
ஏற்கெனவே, `மேகதாது அணை கட்டுவது தொடர்பான பிரச்சினைக்கு 1956-ஆம் ஆண்டு பன்மாநில நதிநீர் தாவாச் சட்டத்தின் கீழ் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்’ என கடந்த மார்ச் 4 அன்று, அன்றைய முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் தலைமையில், ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகத்திடம் விரிவான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 19 அன்று, தமிழ்நாடு சட்டபேரவையில் `மேகதாது திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இப்பிரச்சினைக்கு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்’ என்று தீர்மானமும் நிறை��ேற்றப்பட்டுள்ளது.
காவிரி ஆறு, தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதிக்கு உயிர்நாடியாக உள்ளது. இலட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமும், தமிழ்நாட்டின் வேளாண் பொருளாதாரமும் காவிரி நீரைச் சார்ந்துள்ளன.
எனவே, ஏற்கெனவே சட்டரீதியாகத் தீர்மானிக்கப்பட்ட இறுதி வடிவம் பெற்ற காவிரி நீர்ப்பங்கீட்டை மறுபரிசீலனை செய்ய முயல்வது, தமிழ்நாட்டின் நலன்களைப் பாதிக்கக்கூடிய மேகதாது அணை திட்டத்தை மேற்கொள்வதை முதலமைச்சர் வேடிக்கை பார்க்கக் கூடாது.
கர்நாடகாவின் இந்த முயற்சியை முதலமைச்சர் உறுதியாக எதிர்க்க வேண்டும்.
இது தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கு குறித்து உடனடியாக அதிகாரிகளுடன் ஆய்வுசெய்து, மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, தமிழ்நாட்டின் உரிமை எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தமிழ்நாடு வரும் ம���ண்புமிகு பிரதமர் அவர்களிடம், `மேகதாது அணை கட்ட நடுவர் மன்றம் அமைக்கும் கோரிக்கையை வலியுறுத்த வேண்டும்’ என்று கேட்டுக்கொள்கிறேன்.
அன்று வள்ளுவர் கோட்டம் போல, இன்று சென்னை மெட்ரோ
🚇 பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் அக்டோபர் 11 அன்று மக்கள் பயன்பாட்டுக்கு வருவது கண்டு, வயிற்றில் சுமந்த குழந்தை அடியெடுத்து வைப்பதைக் காணும் தாய்போல் மகிழ்ச்சியும் மனநிறைவும் கொள்கிறேன் நான்.
🚇 தான் பார்த்துப் பார்த்து கட்டிய வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவில் தலைவர் கலைஞர் கலந்துகொள்ள முடியாதபோது,
“சரித்திரத்தில் நமக்குக் கிடைக்கிற இடம் சலுகையால் பெறக்கூடியது அல்ல! எது நேர்ந்தாலும் என்ன நேர்ந்தாலும் மறைக்க முடியாத இடம்” என்று சொன்னார்.
🚇 சென்னை மெட்ரோவின் உருவாக்கத்தில் கழக அரசின் இடமும் அத்தகையதுதான்! தமிழ்நாட்டின் ஒவ்வொரு உட்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டத்தின் வரலாற்றிலும் தி.மு.க.வின் பெயர் என்றும் நிலைபெற்றிருக்கும்!
#ChennaiMetro #CMRL @CMRLOfficial #Porur #Poonamalle #Vadapalani #MetroRail #DMK
துரோகத்துக்கு இடைக்க���ல வெற்றி கிடைத்துள்ளது. அதே நேரத்தில் பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது!
கழகத் தலைவர், திரு. @mkstalin அவர்கள்
#TVKFailsTN
துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி
பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது!
நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்க���ளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு தொகுதியிலும் மிகக்கடுமையாகத் தேர்தல் பணியாற்றிய தொண்டர்கள், முன்னணியினர், உடன்பிறப்புகள், கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் ஆகிய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்றத் தேர்தல் முடிந்த ஐந்தே மாதத்தில் திணிக்கப்பட்டதுதான் இந்த இடைத்தேர்தல். வாக்களித்த மை அழிவதற்கு முன்னால் மக்களின் விருப்பத்தை அழித்துவிட்டு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை விட்டு வில���ி, அடுத்த நிமிடமே ஆளும் கட்சியில் சேர்ந்தார்கள். அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை நடந்தது. அதனால்தான் இந்த இடைத்தேர்தல் நடந்தது.
பதவி விலகிய இருவரையே வேட்பாளர்களாக அறிவித்து, தேர்தலைச் சந்தித்தது ஆளும்கட்சி. அதிகார பலம், ஆட்சி பலம், பணபலம், போலீஸ் பலம் ஆகியவற்றைப் பக்கபலமாக வைத்து த.வெ.க. இந்தத் தேர்தலை எதிர்கொண்டது. சினிமா கவர்ச்சி பலத்தை மட்டுமே நம்பி அரசியல் களத்தில் குதித்து - பெரும்பான்மை பலம் இல்லாவிட்டாலும் குதிரை பேரங்களின் மூலமாக முதலமைச்சர் ஆகியுள்ள விஜய், இந்த இடைத்தேர்தலிலும் ரீல்ஸ் காட்சிகளே கைகொடுக்கும் என்று நம்பினார்.
டீ குடித்தார், டிராக்டர் ஓட்டினார், முருங்கைக்காய் பறித்தார், தெருத்தெருவாகப் போனார். எந்தவொரு இடைத்தேர்தலுக்கும், ஒரு முதலமைச்சர் பதவியில் இருப்பவர் இப்படித் தெருத்தெருவாகப் போனது இல்லை. இந்த இரண்டு தொகுதியில் வெற���றி பெற்றால்தான் தனக்கு இனி அரசியல் வாழ்க்கை என்ற முடிவோடு செயல்பட்டார். நான்கு நாட்கள் இரண்டு தொகுதியிலும் இருந்துள்ளார் முதலமைச்சர். வெளியூரில் இரு��்து இறக்கிவிடப்பட்ட ஆட்கள், அவர் போகும் சாலைகள் அனைத்தும் வைக்கப்பட்ட பேரிகேட், கொடுக்கப்பட்ட அன்பளிப்புகள், அமைச்சர்களுக்கு மட்டும் எவ்வளவு செலவு செய்துள்ளேன் என்று ஆளும்கட்சி வேட்பாளரே அளித்த வாக்குமூலங்கள் இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது இந்த வெற்றியை அடைய த.வெ.க. எவ்வளவு பதற்றத்தில் இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.
ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா ���ோட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக் கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள். கட்சி, தேர்தல், மக்கள் பணிகள் என்றால் என்னவென்று முதலமைச்சர் விஜய் இனியாவது உணர்ந்து செயல்பட வேண்டும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான் மகளிருக்குக் கட்டணமில்லாப் பயண விரிவாக்கம், தாய்மாமன் தங்கமோதிரம், அண்ணன் சீர் போன்ற திட்டங்களை அவர் அறிவித்தார். இதுவே தேர்தல் நடத்தை விதிகளை மீறியதுதான். இப்படி பல்வேறு விதிமீறல்களைச் செய்தே இந்த முடிவை த.வெ.க. பெற்றுள்ளது.
என்னைப் பொறுத்தவரையில் துரோகத்துக்கு இடைக்கால வெற்றி கிடைத்துள்ளது. அதே நேரத்தில் பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது!
ஜ���.பே.யில் பணம் - பரிசுப் பொருட்கள் கொடுத்தார்கள். ஊரையே விலை பேசினார்கள் என்பதை இந்த ஆட்சியை ஆதரிக்கும் கட்சிகளே ஒப்புக்கொண்டு பேட்டி கொடுத்த காட்சிகளையும் நாம் பார்த்தோம். தேர்தலுக்கு முந்தைய இரவு வெளியான வீடியோவில் கோடிகளைக் கொட்டிச் செலவிட்டதை வேட்பாளரே ஒப்புக்கொள்ளும் காட்சிகளையும் பார்த்தோம். தூய சக்தியின் வேடத்தை இது அம்பலப்படுத்தியது.
திரைமறைவில், இன்னும் சில கட்��ிகளின் வாக்குகளை வாங்கப் பொய்ச்செய்தியைப் பரப்பினார்கள். ஒட்டுமொத்த அமைச்சரவையும் இரு தொகுதிகளுக்குள் மூன்று வார காலம் முடங்கியது. துரோகம் செய்த வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் காவல்துறையினரைக் கொண்டு மிரட்டப்பட்டார்கள். 17 வயது இளைஞரைக் கூட கைது செய்தார்கள்.
'ஆளும்கட்சிக்கு வாக்களிக்காவிட்டால் தொகுதிக்கு எதையும் செய்யமாட்டோம்' என பிளாக்மெயில் செய்து வாக்கு வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அரசு ஊழியர்களையும் வாக்குப்பதிவின்போது மிரட்டி ஆதரவாகப் பணியாற்ற வைத்தார்கள். 'சூரியனுக்கு வாக்களிக்கச் சொன்னால் விசிலுக்கு அழுத்த��் சொன்னார்கள்' என்று ஒரு மூதாட்டி வெளிப்படையாகப் பேட்டியே அளித்தார்.
இப்படி, தன் அதிகார பலம் முழுவதையும் இடைத்தேர்தலுக்காகத் தவறாகப் பயன்படுத்தியது த.வெ.க. அரசு.
5 நிமிடப் பேச்சிலேயே அனைத்தையும் விஜய் மாற்றிவிடுவார் எனக் கட்டமைக்கப்பட்ட போலி பிம்பம் நான்கே மாதங்களில் கிழிந்து தொங்கிவிட்டது. ஆட்சிக்கு வந்த இத்தனை குறுகிய காலத்தில் இப்படி ஒரு சரிவு எந்த முதலமைச்சருக்கும் இதுவரை ஏற்பட்டதில்லை.
கல்லாப்பெட்டிக் கூட்டணிக் கட்சிகள் என விமர்சித்த கட்சிகளையே, இப்போது தன்னோடு இணைத்துக்கொண்டு தேர்தலைச் சந்தித்த நிலையிலும், அனைத்தையும் மீறி, ‘எப்படியாவது வெற்றி பெற்றால் போதும்’ என்ற மனநிலைக்கு அவர்களைத் தள்ளும் வகையில்தான் இடைத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.
என்ன செய்தும், தி.மு.க. மீதான மக்களின் நம்பிக்கையை எதுவும் செய்ய முடியவில்லை. தி.மு.க.வை மட���டுமே குறிவைத்துப் பேசினார் முதலமைச்சர். ஆனால், தி.மு.க.வின் செல்வாக்கை அவரால் அசைக்க முடியவில்லை.
இதில் மிகவும் முக்கியமானது, துர்நாற்றமெடுக்கும் துரோக சக்தியான த.வெ.க.வுக்கு எதிராகக் களம் கண்ட அனைத்துக் கட்சிகள் பெற்ற வாக்குகளும் ஆட்சிக்கு எதிரான வாக்குகள் என்பதுதான்! அவைதான் பெரும்பான்மை! இந்த அரசு மீண்டும் பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
குதிரை பேரம், எம்.எல்.ஏ. ஷாப்பிங், பழிவாங்கும் நடவடிக்கைகள், அருவருப்பான பேச்சுகள், அசிங்கமான சைகைகள், ரீல்ஸ் எடுப்பதில் மட்டும் கவனம் ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு இனியாவது மக்கள் பணிகளில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தேர்தல் வெ��்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் கொள்கை - இலக்கு என பயணிக்கும் உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
களத்தில் கடும் போட்டியைக் கொடுத்து, ஆளும்கட்சியினரை அச்சத்தில் அலையவிட்ட கழக உடன்பிறப்புகளுக்கு நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தோளோடு தோள் நின்று உழைத்த அனைத்துக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நி��்வாகிகள், தோழர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!
சினிமா கவர்ச்சியை மூலதனமாகக் கொண்டு, அதன் மூலமாக மக்களை ஏமாற்றி அதிகாரத்துக்கு வந்து கார்ப்பரேட் மாஃபியாக்கள் சிலரின் கைப்பாவையாக ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் விஜய்யின் முகத்திரையைக் கிழிக்கும் பரப்ப���ரைப் பயணத்தை நாம் தினம்தோறும் தொய்வின்றித் தொடர்வோம். தமிழ்நாட்டுக்கு விரோதமான சக்திகளின் பிடியில் அவர் சிக்கி இருக்கிறார். அதை மக்கள் விரைவில் முழுமையாக உணர்வார்கள்.
என்ன செய்தும், தி.மு.க. மீதான மக்களின் நம்பிக்கையை எதுவும் செய்ய முடியவில்லை. தி.மு.க.வை மட்டுமே குறிவைத்துப் பேசினார் முதலமைச்சர். ஆனால், தி.மு.க.வின் செல்வாக்கை அவரால் அசைக்க முடியவில்லை. தேர்தல் வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் கொள்கை - இலக்கு என பயணிக்கும் உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
-கழகத் தலைவர், திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்
சிம்மக் குரலாலும் செழுந்தமிழ் உச்சரிப்பாலும் கம்பீர நடையாலும் திரையுலகை ஆண்ட நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களது பிறந்தநாள்!
இந்நாளில், நடிகர் திலகத்துடன் பழகிய அழகிய தருணங்களையும், ஈடு இணையற்ற அவரது நடிப்பாற்றலையும் நினைவுகூர்ந்து போற்றுகிறேன்!
#SivajiGanesan
படத்திற்கு ஜனநாயகன் என பெயர் வச்ச முதலமைச்சர், குதிரை பேரம் பேசி இடைத் தேர்தலை உருவாக்கி, இப்ப ஜனநாயகத்தின் வில்லனாக மாறி இருக்கிறார்
கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள்
#TVKFails