பாத்திஹா,ஆலஇம்ரான்,பகரா,ஆயத்துல் குர்ஸீ,பகராவின் கடைசி இரு வசனங்கள்,கஹ்பு அத்தியாயம்,அத்தியாயம், ஃபலக், னா��் அத்தியாயங்கள், இதா ஸுல்ஸிலத், குல்யா அய்யுஹல் காஃபிருன், தபாரகல்லதி தவிர மற்ற அத்தியாயங்களின் சிறப்பு பற்றிக் கூறப்படும் ஹதீஸ்கள் யாவும் இட்டுக்கட்டப்பட்டவை.
ஆஷுரா நாளைப்பற்றிக் கூறப்படும் சிறப்புகள் அடங்கிய ஹதீஸ் (அந���நாளில் மூஸா நபி காப்பாற்றப்பட்டார்கள். அந்நாளில் நோன்பு நோற்க வேண்டும் என்பது மட்டும் தான் ஆதாரப்பூர்வமானவை)
ரஜப் 27க்கு சிறப்புத் தொழுகை, நோன்பு நோற்பது.
ஷஅபான் 15ம் இரவில் நூறு ரக்அத் தொழுவது மற்றும் அந்த இரவின் சிறப்பு ப���்றிய ஹதீஸ்கள்.
ரஜப் மாதத்தின் சிறப்பு பற்றிய ஹதீஸ்கள். குறிப்பிட்ட பகல், குறிப்பிட்ட இரவுக்கென்று குறிப்பிட்ட வணக்கங்கள்.
நகங்களை இன்னின்ன நாட்களில் வெட்ட வேண்டும். முதலில் இந்த விரலில் ஆரம்பிக்க வேண்டும் என்றெல்லாம் ஏராளமான ஹதீஸ்கள்.
முஹம்மத் என்ற பெயரைத் கேட்டவுடன் கட்டை விரல் நகங்களால் கண்களில் தடவுதல்.
தலைப்பாகை அணிந்து தொழுவது தலைப்பாகை இல்லாமல் தொழும் இருபத்தி ஐந்து தொழுகைகளை விடச் சிறந்தது.
தலைப்பாகை அணிந்து ஒரு ஜும்ஆ தொழுகை தொழுவது தலைப்பாகை இல்லாமல் தொழும் எழுபது ஜும்ஆக்களைவிடச் சிறந்தது.
நூஹு பின் அபீ மர்யம் என்பவர் திருக்குர்ஆனின் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தனித்தனி சிறப்புகளைக் கூறும் ஸதீஸ்களைத் தயாரித்ததை இத���்கு உதாரணமாகக் கூறலாம்.
மோதிரம் அணிந்து தொழுவது மோதிரம் அணியாமல் தொழும் எழுபது தொழுகைகளை விடச் சிறந்தது.
மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களுக்கு குர்ஆனிலும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும் எவ்வளவோ சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. அவை இவர்களுக்கு போதாததால் அந்த வணக்கங்களுக்கு இல்லாத சிறப்புகளை உருவாக்கினார்கள்.
ஹதீஸ் கலை - அறிமுகக் குறிப்பு தொடர்ச்சி
ஆ) ஆர்வக் கோளாறு
மார்க்கத்தில் ஆர்வமிருந்தும் அறிவு இல்லாத மூடக் கூட்டத்தினர் நல்ல நோக்கத்தில் ஹதீஸ்களை சுயமாகத் தயாரித்தனர்.
இவற்றைப் பார்க்கும்போது இவ்வாறு கூறியவர் சிந்தனை தெளிவில்லாதவராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அவர் கொண்டு வந்த மார்க்கத்தின் மீதும் சந்தேகம் ஏற்படும் என்ற நோக்கத்தில் தான் மேற்கண்ட செய்திகள் புனையப்பட்டன.
நீல நிறக்கண்கள் படைத்தவர்கள் தரித்திரம் பிடித்தவர்களாகவும் இருப்பார்கள். இரவு, பகல், ஏற்பட்ட பின்தான் ஆஷுரா நாளோ வேறு நாளோ ஏற்படும். அதற்கு முன்னாக ஆஷுரா நாளும் வேறு எந்த நாளும் இருந்திருக்க முடியாது.
ஓடுகின்ற தண்ணீருக்குப் பக்கத்தில் வசிப்பவர்களும், ஊட்டியில் பசுமையான இடங்களை அன்றாடம் பார்பவர்களும், அழகான முகம் படைத்த மனைவியை பெற்றவர்களும் பார்வைக் குறைவுக்கு ஆளாகுகின்றனர்.
பருப்பு சாப்பிடுவதற்கும் இதயம் இளகுவதற்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. (பருப்பு சாப்பிடும் கூட்டம் தான் பள்ளிவாசலை இடித்தனர்) கீரைக்கும் ஷைத்தானுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அர்ஷுக்கு கீழே பாம்பும் கிடைய��து. அதிலிருந்து பால்வெளி படைக்கப்படவும் இல்லை.
இப்படி ஏராளமான பொய்களை நபிகள் நாயகத்தின் பெயரால் இட்டுக்கட்டினார்கள். நடை முறையில் இவை யாவும் பொய் என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது. கத்திரிக்காய் அனைத்து நோய்க்கும் மருந்த��க இல்லை. மீ��் சாப்பிடுவது உடலைப் பலவீனப்படுத்துவதும் இல்லை.
பெண்களிடம் ஆலோசணை கேளுங்கள்! ஆனால் அதற்கு மாற்றமாக நடங்கள்.
கோழிகள் என் சமுதாயத்தின் ஏழைகளுக்கு ஆடுகளாகும்.
160 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதை விட நாயை வளர்ப்பது மேலாகும்
ஆஷுரா நாளில் அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்தான்.
கண்கள் நீலநிறமாக இருப்பது ஒரு பாக்கியமாகும்.
மீன் சாப்பிடுவது உடலைப் பலவீனப்படுத்தும்.
சாக்கடையில் விழுந்த ஒரு கவள உணவை யாரேனும் கழுவிச் சாப்பிட்டால் அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்.
முட்டையும் பூண்டும் சாப்பிட்டால் அதிகமான சந்ததிகள் பெற முடியும்.
தர்மம் செய்ய ஏதும் கிடைக்காவிட்டால் யூதர்களையும் கிறிஸ்துவர்களையும் சபியுங்கள்! அது தர்மம் செய்ததற்கு நிகராக அ��ையும்.
பசுமையான பொருட்கள், ஓடுகின்ற தண்ணீர், அழகிய முகம் ஆகியவற்றை பார்ப்பது பார்க்கும் திறனை அதிகரிக்கும்.
அழகான முகத்தை பார்ப்பது ஒரு வணக்கமாகும்.
உங்கள் உணவில் கீரைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! ஏனெனில் அது ஷைத்தானை விரட்டியடிக்கும்.
ஆகாயத்தில் உள்ள பால் வெளி, அர்ஷின் கீழ் இருக்கும் பாம்பின் வியர்வையினால் படைக்கப்பட்டது.
சூரிய வெளிச்சத்தில் சூடாக்கப்பட்ட தண்ணீரில் குளிக்காதே! அது வெண்குஷ்டத்தை ஏற்படுத்தும்
கத்திரிக்காய் சாப்பிடுவது எல்லா நோய்களுக்கும் மருந்தாகும்.
பருப்பை உணவில் சேர்��்துக் கொள்ளுங்கள். அது இதயத்தை மென்மையாக்கும்.
நெல், ஒரு மனிதனாக இருந்தால் அது மிகவும் சகிப்புத்தன்மையுடையதாக இருந்திருக்கும்.