செய்ய வேண்டிய கர்மாக்களை பற்றற்று செய்ய வேண்டும்.
அதனால் உண்டாகும் ஞானம் கர்ம-ஞான யோகமாகும்.இது காலம் கடந்தே பலனளிக்கும்.
ஞானத்தால் உண்டாகும் பலன் இந்திரியங்களுக்குப் புலப்படாதது. சுலபத்தில் மனதிற்கு எட்டாதது.
உன்னிடத்தில் செலுத்தும் பக்தியே நிரந்தரமான இன்பத்தை அளிப்பதாக இருக்கிறது நாராயணா.
உங்கள் நட்சத்திரத்திற்கு எந்த ருத்திராட்சம் போடலாம்?
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உகந்த ருத்ராக��ஷங்கள் நமது அற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆனால் ருத்ராக்ஷத்தைப் பொறுத்தவரை எதை அணிந்தாலும் நிச்சயம் தீங்கு பயக்காது. மிக்க நலத்தையே நல்கும்..
இவற்றை நல்ல நாள் பார்த்து பாலில் நனைத்து தெய்வ சந்நிதியில் அணிவது மரபு.
ருத்ராக்ஷம் அணிய மிக உத்தமமான நட்சத்திரமாக பூசம் என்று நம் அற நூல்களில் குறிப்பிடப்படுகிறது.
இதனுடைய அதிபதி சனி. இந்த நட்சத்திரத்தில் பிருகஸ்பதி உச்சத��தில் இருக்கிறார். ஆகவே வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் கூடிய அதி உ��்னதமான நாளில் ருத்ராக்ஷம் அணிந்தால் மிக சிறப்பாகும்.
வாரம் ஒரு முறை வியாழக்கிழமையும் மாதம் ஒரு முறை பூச நட்சத்திரமும் வந்தாலும் கூட இவை இரண்டும் இணைவது வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ தான்!
ஆகவே அந்த நாளைக் குறித்து வைத்துக் கொண்டு ருத்ராக்ஷம் அணிதல் வேண்டும்.
1) அஸ்வினி - கேது - ஒன்பது முகம்
2) பரணி - சுக்ரன் - ஆறு முகம்
3) கார்த்திகை - சூர்யன் - ஒரு முகம் அல்லது பனிரெண���டு முகம்
4) ரோகிணி - சந்திரன் - இரண்டு முகம்
5) மிருகசீரிஷம் - செவ்வாய் - மூன்று முகம்
6) திருவாதிரை - இராகு - எட்டு முகம்
7) புனர்பூசம் - பிருஹஸ்பதி - ஐந்து முகம்
8) பூசம் - சனி - ஏழு
முகம்
9) ஆயில்யம் - புதன் - நான்கு முகம்
10) மகம் - கேது - ஒன்பது முகம்
11) பூரம் - சுக்ரன் - ஆறு முகம்
12) உத்தரம் - சூர்யன் - ஒரு முகம் அல்லது பனிரெண்டு முகம்
13) அஸ்தம் - சந்திரன் - இரண்டு முகம்
14) சித்திரை - செவ்வாய் - மூன்று முகம்
15) சுவாதி - இராகு - எட்டு முகம்
16) விசாகம் - பிருஹஸ்பதி - ஐந்து முகம்
17) அனுஷம் - சனி - ஏழு முகம்
18) கேட்டை - புதன் - நான்கு முகம்
19) மூலம் - கேது - ஒன்பது முகம்
20) பூராடம் - சுக்ரன் - ஆறு முகம்
21) உத்திராடம் - சூர்யன் - ஒரு முகம் அல்லது பனிரெண்டு முகம்
22) திருவோணம் - சந்திரன் - இரண்டு முகம்
23) அவிட்டம் - செவ்வாய் - மூன்று முகம்
24) சதயம் - இராகு - எட்டு முகம்
25) பூரட்டாதி - சனி - ஐந்து முகம்
26) உத்திரட்டாதி - சனி - ஏழு முகம்
27) ரேவதி - புதன் - நான்கு முகம்
நேத்துல இருந்து இந்த பேரழிவை பார்த்து மனச ரொம்ப பாதிச்சிருச்சி. ஒரே நிமிஷத்துல எத்தனை பேரோட வாழ்க்கையை திருப்பி போட்டு போய் இருக்கு இந்த பேரழிவு.
நேத்து காலைல வரையும் யாராவது நினைச்சிருப்பாங்களா? எல்லாருக்கும் அதுவும் ஒரு சாதாரண நாளா தான இருந்திருக்கும்!
எத்தனை பேரு தன்னோட உறவுகளையும் உடைமைகளையும் இழந்து நிற்கதியா நிக்கிறாங்க.
அற்ப பிறவிகளான நம்ப என்னடான்னா நாமதான் ரொம்ப பெரிய ஆள் மாதிரி தலகால் புரியாம ஆடறோம்.
ஆனா இந்த இயற்கையும், பூமியும் ஒரே ஒரு நிமிஷம் தன்னோட ஆட்டத்தை காட்டுனா நம்ம எல்லாம் இருக்கிற இடம் தெரியாம காணாம போயிருவோம் என்று பல பேருக்கு புரியாம அந்த இயற்கைக்கு எதிரா நம்ம செயல்படுறோம்
எப்போதும் மனிதாபிமான உள்ள மனிதர்களா வாழ கத்துக்கோங்க.
யாருக்கு எந்த நேரத்திலும் என்ன வேணாலும் ஆகலாம் உங்களோட திறமைகளும், உங்களுடைய பெருமைகளும் நீங்க கத்துக்கிட்ட கலைகளும் உங்க���ுடைய எஜுகேஷன் குவாலிபிகேஷன் இல்ல உங்களோட வேலையும் இல்ல உங்களுடைய அந்தஸ்து பணமும் உங்கள கண்டிப்பா காப்பாத்தாது.
நீங்க பண்ற பாவ புண்ணியங்களும் நீங்க பண்ற நல்லது கெட்டதும் தான் உங்க கூட வரும்.
சக மனிதர்களை மனுஷங்களா மதிக்க கத்துக்கோங்க அதே மாதிரி நம்ப அமைதியா வாழறதுக்கு காரணமாய் இருக்கிற இயற்கையை வணங்க கத்துக்கோங்க எல்லாத்துக்கும் மேல அந்த இறைவனுக்கு தினமும் நன்றி சொல்லுங்க. யாரையும் எதுக்காகவோ ஏமாற்றுவதோ இல்ல வஞ்சிக்கிறது இல்லாம முடிஞ்ச வரைக்கும் நல்லது பண்ணுங்க முடியலையா அமைதியா இருந்துட்டு போயிருங்க.
இனிமேலாவது நன்றி உணர்வோடு இருக்க பழகிக்கொள்ளுங்கள்.
நாம பண்ற தவறுகள் நாம மறந்தாலும் இந்த இயற்கையும் காலமும் மறக்காது.