ஜீ டீவி ரிப்போர்ட்டர் கபில் ராவ்த் செய்தி சேகரிக்க களத்திற்கு வருகிறார்.
கோபத்தில் இருக்கும் இளைஞர்கள் அவரை அவமானம் செய்கிறார்கள்.
முதலில் தங்கள் நியாயத்தின் பக்கம் நிற்காத மீடியாவின் மீதிருந்த கோபத்தை அவர் மீது இறக்கி அவமதிக்கிறார்கள் போராட்டக்காரர்கள். மொத்த மீடியாவும் சந்திக்க வேண்டிய அவமானத்தை ஒற்றை ஆளாய் அவர் சந்தித்தார்.
ஆனால், மனம் ஒப்பியோ ஒப்பாமலோ அப்படி ஒரு வேலை பார்ப்பதற்கு அவரை நம்பி ஒரு குடும்பம் இருக்குமே என்று கோபம் குறைந்த போது, அந்தப் பிள்ளைகள் புரிந்து கொள்கிறார்கள்.
யாருக்கெல்லாம் தங்கள் அப்பாவின் முகம் நினைவில் வந்ததோ அவர்கள் எல்லோரும், போராட்டத்தின் முடிவில் அவரிடம் மன்னிப்பு கேட்கிறார்கள்.
தன் பிள்ளைகள் தங்கள் தவறை உணர்ந்து வரும்போது மன்னிக்கும் தகப்பன் சாமியைப் போலவே இவரும் புன்னகையுடன் அந்த மன்னிப்பை ஏற்றுக் கொள்கிறார்.
இந்த உலகம் இப்படி நமது சரி தவறுகளின் சமன்களில் தானே வாழ்கிறது.
"என் பெண் அந்த வீடியோ பார்த்து சாப்பிடாமல் அழுதாள்" என்று கலங்கிய கபில் ராவ்த் அவர்கள், இனி அந்தத் தெருவில் நடக்கும் போது, தன் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடும் போது அவமானம் இல்லாமல் இருப்பார். எப்பேர்ப்பட்ட விடுதலை.?
இந்தக் குழந்தைகளும் ஆச்சர்யமானவை. மந்திரியை பதவி இழக்க வைக்கின்றன. சாதாரண மனிதரிடம் மன்னிப்பு கேட்கின்றன.
இவர்களைத்தான் தேச விரோதி என்கின்றனர் வலது சோஷியல் மீடியாக்காரர்கள்.!
💖💖💖
போராடும் இளைஞர்களை பார்த்து தேசதுரோகி, அந்நிய கைக்கூலினு சொன்ன யோகிதலை சங்கி 🌹மவன ஸ்பாட்லயே பொலந்து நீர்பானைய முச்சந்தில போட்டு உடைச்சுட்டானுக பசங்க! 🤣🤣🤣
100% satisfaction.🔥🥰💞
இந்தியா முழுவதும் இளைஞர்களிடம் இதே உணர்வு தான் உள்ளது
எழுதியவர் பேர் தெரியல.... சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வந்துட்டுது...
செம்ம செம்ம.... இவ்ளோ நகைச்சுவையா ஒரு விஷயத்தை விவரிக்க முடியும்னு தெரியும்போது....
எந்நேரமும் விறைப்பாவே திரியுற நமக்கு வெக்கமாத்தான் இருக்கு...
வாழ்தல் இனிது.... ரசித்து வாழ்தல் வரம்....
கொலைப் பசியோடு
ஒரு திருமண வரவேற்பு பந்தியில் அமர்ந்திருந்தேன்.
முதலில் பேப்பர் ரோலை உருட்டினார்கள் .
பின்பு இலைகளை முன்னே வைத்து சென்றார்கள்.
கால் மணி நேரத்திற்கு பிறகு தண்ணீர் மட்டும் வைத்தார்கள்.
முதல் பந்தியே ஆரம்பிக்கவில்லை அதற்குள் தி.நகர் போன்று கூட்டம் நெறிய ஆரம்பித்தது.
நான் ஓர வரிசையில் அமர்ந்திருந்தேன்.
காத்திருப்பவர்கள் எனக்கு பின்னால் வந்து நிற்க ஆரம்பித்தார்கள் .
" வெறும் எலைய எம்மா நேரம்டா உத்து பாக்கறது .. சோத்த போடுங்கடா.."
சரக்கிலிருந்த பெருசு ஒன்று ஆரம்பித்து வைத்தது .
குலாப் ஜாமூன் , வெங்காய பச்சடி , உருளை சிப்ஸ் , வைத்த அடுத்த நொடியில் கபளீகரம் செய்தேன்.
என்னுடைய வரிசையில் கடைசி ஆள் வரை வைத்துவிட்டு திரும்பிய வெங்காய பச்சடிக்காரன் என்னைப் பார்த்து " பச்சடியைக் கூடவடா ..?" என்று மனதில் நினைத்தது அவன் முகத்தில் தெரிந்தது.
அடுத்தது சென்னாவும் , தேங்காய் சட்னியும் , வைத்தார்கள் .
" எப்பதாண்டா சோறு போடுவீங்க ..? "
மறுபடி பெருசு உருமியது.
" சார் தோசையும் சப்பாத்தியும் வந்துட்டே இருக்கு ..அது வரைக்கும் அப்பளம் சாப்ட்ரீங்களா ..?"
அப்பளம் வைத்திருந்தவன் நக்கல் செய்கிறானா , இல்லை மனதில் இருந்துதான் கேட்கிறானா போன்ற ஆராய்ச்சிகளில் இறங்க என் பசி அனுமதிக்கவில்லை.
இதோ வருகிறது அதோ வருகிறது என்று அவர்கள் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த சப்பாத்தியும் தோசையும் வந்தே விட்டது .
படுபாவிகள், எதிர் வரிசையில் வைக்க ஆரம்பித்தனர்.
எனது இடத்திற்கு வரும்பொழுது தோசை தீர்ந்துவிட்டது.
ஒரே ஒரு சப்பாத்தி வைத்தான்.
" தம்பி தோசை வரல .."
" நான் சப்பாத்தி வைக்கிற ஆளு சார் .."
" தெரியுதுப்பா ..
அவர்கிட்ட சொல்ல முடியாதா ..?"
" உள்ள இருப்பான் சார் ..
போனதும் சொல்றேன் .." அவர் மீட்டிங்கில் இருக்கார் இப்போ பார்க்க முடியாது என்று என் காதில் விழுந்தது .
அதற்குள் சாப்பாடு வைக்க ஆரம்பித்தார்கள்.
" பாஸ் ஒரு கரண்டி வைங்க சாப்டுட்டு பொறவு வாங்கிக்கிறேன் " எனக்கு இலையில் டிராபிக் ஜாம் ஆனால் பிடிக்காது என்பதால் அப்படி சொன்னேன்.
" தம்பி அதெல்லாம் வேலைக்கு ஆகாது ,
இப்பவே மொத்தமா வாங்கிக்கங்க ..
அப்புறம் இவங்கள பிடிக்க முடியாது .."
பக்கத்தில் இருந்த அனுபவஸ்தர் கூறினார்.
அவர் கூறியபடியே மொத்தமாக வாங்கி , சாம்பார் , வத்தக்குழம்பு , ரசம் , மோருக்கு என நான்கு பாகங்களாக பிரித்து வைத்தேன்.
எனக்கு பின்னால் வெயிட்டிங்கில் இருந்தவர் அருகில் இருந்தவரிடம் எதோ சொல்லி சிரித்தார்.
அநேகமாக , டாப் ஆங்கிளில் எனது இலையில் நான்கு மலைச் சிகரங்கள் தெரிந்திருக்க வேண்டும் அவருக்கு.
சாம்பார் வாளிக்கு பின்னாலயே ரசம் வாளியும் வந்தது.
" இப்படி வந்தா ஒன்னு சேர வந்துட்றீங்க இல்லனா ஆளே காணாம போயிடுறீங்க ..
சாம்பார் சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள எப்படிப்பா ரசம் சாப்பிடறது ..?"
" சாப்பிடலாம் .. சாப்பிடலாம் .."
எவனோ பின்னாடி இருந்து குரல் கொடுத்தான்.
திரும்பிப் பார்த்தேன், யாரென்று கண்டு பிடிக்க முடியவில்லை.
" தம்பி, புரியாத ஆளா இருக்கீங்களே ..
ரசத்த இப்பவே வாங்கி வச்சுக்கோங்க .." அனுபவஸ்தர் வலியுறுத்தினார்.
ரசத்துக்கு என குவித்து வைத்திருந்த குன்றில் ஒரு குழி வெட்டி ரசத்தை அதில் ஊற்றச் சொன்னேன்.
" வத்தக் குழம்பு இல்லையா ..?"
" வரும் சார் .. " 'ஏன் பறக்குறீங்க' என்று கழுத்து வரை வந்து விட்ட வார்த்தையை நல்லவேளை முழுங்கிவிட்டான்.
" தம்பி உங்க ரசம் நம்ம இலைக்கு வருது பாருங்க " அருகில் இருந்தவர் சிரித்தபடி கூறினாலும் அது சிரிப்பதற்காகக் கூறியது அல்ல.
இதற்கு உடனடியாக ஆக்ஷனில் இறங்கியாக வேண்டும்.
மோர் குன்றில் இருந்து கொத்தாக சோற்றை அள்ளி, ரசம் லீக் ஆகும் இடத்தை சுற்றி ஒரு டேம் கட்டினேன் .
அவருக்கு பரம திருப்தி.
அடுத்து திடீரென்று காபி வைத்தார்கள் .
" இன்னும் ரசத்த கூட தாண்டலயேப்பா .. அதுக்குள்ள காபி வச்சா என்ன அர்த்தம் ?"
" சீக்கிரம் முடிச்சுட்டு எந்திரிக்கனும்னு அர்த்தம் .."
மீண்டும் அதே குரல் பின்னாலிருந்து.
காபியை ஆறிப் போய் குடிப்பதும் , குப்பையில் வீசுவதும் ஒன்று.
காபியை இழக்க எனக்கு மனமில்லை.
ரசம் சாப்பிட்டுகொண்டே , நடு நடுவே காபியையும்
ஒரு சிப் இழுத்துகொண்டேன்.
புது காம்பினேஷன். நீங்களும் டிரை பண்ணுங்க மக்கா.
" இவன் இப்பத்தைக்கு முடிக்க மாட்டான் மாப்ள ..
வா அந்த லைனுக்கு போவோம் .."
அந்த இரண்டு பேர் இறுதியாக என்னிடம் தோற்று வெளியேறினார்கள்.
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத்தருவதாக கூறி பணம் பறித்த விவகாரம் தொடர்பாக @chennaipolice_ அறிக்கை வெளியிட்டுள்ளது..
உண்மையில்,மிகவும் நல்ல விஷயம்
ஆனால், நீதிமன்றத்தில் சொன்ன
இதுவரை தமிழ்நாடு காவல்துறை வரலாற்றிலேயே இல்லாத,,
வரலாற்று சிறப்பு மிக்க கைது என்ற வார்த்தையெல்லாம் தான் Missing ஆகிடுச்சி
தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில்
120 தனியார் பள்ளி நிர்வாகிகள்
190 சாட்சிகளிடம் விசாரித்துள்ளதாக
காவல்துறை கூறியுள்ளது
ஆனால்,இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள முத்துக்குமார் என்பவர் வீட்டில் சோதனை நடத்த அனுமதி கோரிய CCB-ன் மனு Dismiss (17-07-2026) செய்யப்பட்ட உத்தரவில் ரூ.7,34,47,000 அளவிற்கு பணப்பரிமாற்றம் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறை நீதிமன்றத்தில் கூறியுள்ளது
நூறு கோடி…நூறு கோடி என்ற மட்டும் ஹைப் குறையாம பார்த்துக்கனும்னு சென்னை மாநகர CCB-ன் விசாரணை அதிகாரிக்கு உத்தரவு போல..
போலீஸ் பீட் பார்க்கும் செய்தியாளர்கள் யாரும் பெரும்பாலும் சம்மந்தப்பட்ட வழக்கின் Court Order எல்லாம் படிக்க மாட்டாங்க..
சென்னை,சேலம்,நாமக்கல் என மூன்று இடங்களில் பதிவு செய்துள்ள FIR-யும் காவல்துறை Block செய்துவிட்டது
அதையும் யாராலும் படிக்க முடியாது
அதனால் என்ன இருக்கவே இருக்கு
“காவல்துறை தகவல்”
“காவல்துறை தகவல்” என்ற வார்த்தை..
அது போதும் இஷ்டத்துக்கு அடிச்சு விடலாம்..
இதுல அறிக்கை வேற வந்துடுச்சி..
இனி Live Report தூள் பறக்குமே 😊
அண்ணாமலை மீதான திமுக பதிவு செய்த அவதூறு வழக்கை வாபஸ் பெறக்காரணம் என்ன? 2021-26 ஆண்டுகாலத்தில் அண்ணாமலை மீது Piyush Manush கொடுத்த வழக்கின் மீதும் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என அவர் இன்றளவும் சுட்டிக்காட்டுகிறார். தீவிர ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கல்யாணராமன் என்பவர், பெரியார் சிலையை உடைப்பேன் என தொடர்ந்து பேசியவர், குண்டர் சட்டத்தில் கைதானவர், அண்பாமலை செய்த ஊழல்கள், மோசடிகள் குறித்து ஆதாரங்களோடு 2 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்தார். அவை இன்றளவும் பொதுவெளியில் உள்ளது. இவற்றின் மீது எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அண்ணாமலையின் மதவெறி தூண்டும் பிரச்சார பயணத்திற்கு எவ்வுத தடையுமில்லாமல் அனுமதியளித்தது மட்டுமல்லாமல், அண்ணாமலைக்கான உதவிகளை திமுகவின் மூத்த பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் செய்தார்கள் எனும் குற்றச்சாட்டு பலமாக தோழர்கள் பலர் முன்வைத்தார்கள். இன்று தவெகவை எதிர்கிறார்கள் என்பதற்காக , திராவிடத்தை இழிவு செய்த மாரிதாஸ், சாட்டை துரைமுருகன் போன்றோரின் வீடியோக்களை திமுக ஐ.டி விங் குடுவின் மூத்தவர்கள் பலர் ஆதரிக்கிறார்கள், பரப்புகிறார்கள், பகிர்கிறார்கள். இது என்னவகையான அரசியல்?
இதே ஆதரவை இங்குள்ள முற்போக்கு இயக்கங்களுக்கு திமுக கொடுத்ததில்லை. மே17 இயக்கம் இன்றளவும் அதிமுக-பாஜக ஆட்சிகாலத்து வழக்குகளை சுமக்கிறது. ரவுடிப்பட்டியலில் என்னுடைய பெயரை கடந்த 5 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் வைத்திருந்தது திமுக. என்மீதான அநீதியான சிறப்பு விசாரணைகளை தொடர்ந்து நடத்தியது. இதுபோல பல செயற்பாட்டாளர்கள் போராட்ட வழக்குகளைச் சுமக்கிறார்கள். ஆனால் அண்ணாமலைக்கு முழு பாதுகாப்பை கொடுக்கிறார்கள், ஆதரவு கொடுக்கிறார்கள்.
தன் கழுத்துக்கு கத்தி வைப்பது ராஜதந்திரம் ஆகாது. திமுகவின் எதிர்கால தலைவரை வீழ்த்தும் வலிமையை அண்ணாமலைக்கு ஊட்டி வளர்க்கிறது திமுக. இதுகுறித்து நாம் கவலைபப்டப்போவதில்லை. ஆனால், தமிழ்நாட்டின் சீரழிவு சக்தியான அண்ணாமலையை எதிர்த்து நின்று போராடுவது மிக முக்கியமானது. ஆர்.எஸ்.எஸ்சின் கள்ளக்குழந்தையை ஆதரிப்பது, பாம்புக்கு பால்வார்க்கும் முட்டாள்தனத்திற்கு ஒப்பானது. திமுக பைல்ஸ், அறிவாலயத்தை செங்கல்-செங்கல்லாக பிரிப்பேன் எனும் அண்ணாமலையின் கருத்துகளை திமுக ஏற்கிறதா என்பதை அவர்கள் தான் விளக்க வேண்டும்.
இதுபோன்ற நடவடிக்கைகளையும் தலித்முரசுவும், காட்டாறு அதிதீவிர பெரிதாரிஸ்டும் கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்? சாதியை ஒழிக்கும் வழியை அண்ணாமலை வாயிலாக நடைமுறைப்படுத்துகிறார்களா? திமுக் ஆட்சிகாலத்தின் போது கைகட்டி மெளனம் காத்து திராவிடத்தை காக்கிறோம் என்ற சான்றோர்கள் அண்ணாமலை குறித்து வாய்திறக்காமல் மெளனம் காத்தது எதனால் என தெரியாது. ஆனால் மே17 இயக்கம் பெரியாரிய-திராவிட அரசியலுக்கான போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்தே வருகிறது, இனிமேலும் முன்னெடுக்கும். ஆளும்வர்க்கத்தின் தொங்குசதையல்ல பெரியாரியமும், திராவிடமும் என்பதை நன்கு அறிந்தவர்கள் மே17 இயக்கத்தினர்.
அண்ணாமலை மீதான வழக்குகளை திரும்பபெற்று, அவருக்கு சாதகமான நகர்வுகளைச் செய்யும் திமுகவின் முடிவுகளுக்கு மே17 இயக்கத்தின் வன்மையான கண்டனங்கள்.
சிறுமியை அமைச்சர் அநாகரிகமாக தொட்டது?தவறான புரிதல்
அமைச்சர் பவுடர் நுணுக்கியது
-தவறான புரிதல்
மாணவர் அடையாள அட்டையில் சாதியைச் சேர்ப்பதாக அமைச்சர் சொன்னது?
தவறான புரிதல்.
எல்லாவற்றையும் தவறாகவே புரிந்து கொள்ளும் இந்த மக்களை வைத்துக்கொண்டு அமைச்சர்கள் படும் பாடிருக்கே..பாவத்த.
Fact Check for fun:
3 கி.மீ மாரத்தான் ஓடுன ஒரே முதல்வர் விஜய் அண்ணாதான்! - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக இன்று நடந்த மாரத்தான் போட்டியில் முதல்வர் விஜய் ஓடியது குறித்து கருத்து
ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் முதல்வர் ஓமர் அப்துல்லா 21 கிலோமீட்டர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு 2 மணி நேரத்தில் அதை முழுமையாக முடித்தார். பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களுக்கு மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வதற்காகவே பயணம் செய்யக் கூடியவர் ஒமர் அப்துல்லா
ஹரியானா மாநில முதல்வர் நயாப்சிங் சைனி மாதத்திற்கு ஒரு மாரத்தான் போட்டியில் ஆவது கலந்து கொள்வார்
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் என நிறைய முதல்வர்கள் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடியவர்கள்! Fit to core Chief ministers.
தவறான தகவல்களைக் கொண்ட செய்திகள் எதிர்கால சந்ததிகளின் காதுகளுக்கு போய் விடக்கூடாது.அதற்கு தான் இது!
#CMVijay | #AdhavArjuna | #StartRunStopDrugs
யோவ் நடிகர் கேனையன் சிவக்குமாரே...
ராமாயண, மகாபாரத கதைகளை சொல்லி வாழ்க்கையை ஓட்டு.!
அதை விட்டுட்டு, உனக்குத் தெரியாத அரசியல் பேசுறத விட்டுடு.!
தமிழக அரசியலில் எளிமையான அரசியல் தலைவர் யார்:
1. பெருந்தலைவர் காமராஜரா?
2. பேரறிஞர் அண்ணாவா?
காமராஜர் - ஒடுக்கப்பட்ட நாடார் சமூகம்.
அண்ணா- ஆதிக்க முதலியார் சமூகம்
காமராஜர்- 3ம் வகுப்பு வரை படித்தவர்.
அண்ணா- MA Honors
காமராஜர்- தமிழ் இலக்கிய புலமை இல்லை.
அண்ணா- தமிழ் இலக்கியத்தில் பெரும் புலமை உடையவர்.
காமராஜர்- ஆங்கில புலமை இல்லை.
அண்ணா- ஆங்கிலத்தில் பெரும் புலமை உடையவர்.
காமராஜர்- சட்ட நுண்ணறிவு, அதிகம் இல்லை.
அண்ணா- சட்ட நுண்ணறிவு உடையவர்.
காமராஜர்- திருமணமாகாதவர்.
அண்ணா- திருமணமானவர், மனைவி, இரண்டு பையன்கள் (தத்தெடுத்த பிள்ளைகள்) என்ற குடும்பம்.
காமராஜர்- அமைச்சரவையில், பஸ், மில், வங்கி, நில முதலாளிகள் இருந்தனர்.
அண்ணா- அமைச்சரவையில் எளிய மனிதர்கள்தான் இருந்தனர்.
காமராஜர்- தியாகராயர் நகர், திருமலைப்பிள்ளை 60 அடி சாலையில் உள்ள, AC பொருத்தப்ப்பட்ட அறைகள் உள்ள பெரிய பங்களாவில் வசித்து வந்தார்.
அண்ணா- நுங்கம்பாக்கம், 20 அடி சாலையில் உள்ள சிறிய வீட்டில் வசித்து வந்தார்.
காமராஜர்: விலை உயர்ந்த Chevrolette car வைத்திருந்தார்.
அண்ணா: கார் இல்லை.
காமராஜர்: ஒரு நாளைக்கு 20-30, 555 சிகரெட் புகைப்பார்.
அண்ணா: மூக்கு பொடி போடுவார்.
காமராஜர்- இறந்த பொழுது, வங்கியில் சில ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது. சில வேட்டி, சட்டைகள் இருந்தன.
அண்ணா- இறந்த பொழுது, சிறிது கடன். இரண்டு அழுக்கு வேட்டி, சட்டை, ஒரு பொடி டப்பா.
ஆதிக்க சாதியில் பிறந்த, தமிழ், ஆங்கில இலக்கிய புலமை உடைய ஒரு முதுகலை பட்டதாரி, எந்த ஒரு பகட்டோடும் இல்லாமல், எளிய, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவே தனது வாழ்நாள் முழுவதும் பணியாற்றி, சிறிய வீட்டில் வாழ்ந்து சிறிது கடனுடன் தனது வாழ்வை முடித்துக் கொண்ட அண்ணாவைப்பற்றி...
RSS ஊதுகுழல்களான துக்ளக், ஆனந்தவிகடன், குமுதம், கல்கி, தினமணி, தினமலர், தி ஹிந்து, எக்ஸ்பிரஸ் எல்லாம் எதிர்மறை பதிவுகளை மட்டுமே தங்களுடைய பத்திரிக்கைகளில் வெளியிட்டு வந்துள்ளது.
ஆனால், காமராஜரை மட்டுமே எளியவர் என்று போற்றி வந்தது. ஏன்!
யார் எளிமையானவர் என்று உங்கள் முடிவுக்கே விடுகிறேன்!
இதுதான் RSS சூழ்ச்சி. இதனை அறியாமல், நம்மை நாமே இகழ்ந்து வருகிறோம்.
இந்த RSS WhatsApp University கதையைத்தான் கேனையன் சிவக்குமார் பேசித் திரிகிறான்.!
@mkstalin சாதி அரசியல் மத அரசியல் போன்றதே கவர்ச்சி அரசியல் என்பதும் என்பதை எளிதாக விளங்கும்படியான நகைச்சுவை உணர்வு உள்ள ரீல்ஸ்களாக சென்று சேர்க்க வேண்டும்
@mkstalin இளையோர்களின் உலகம் வேகத்தை ஏற்பது பெண்களின் உலகம் வதந்திகளை ஏற்பது ஆண்களின் உலகம் தங்களின் அங்கிகாரத்தை எதிர்பார்ப்பது அவரவர் நெஞ்சில் இடம்பிடிக்கும்படியான செயல்களில் ஆர்வம் காட்டுவது
@mkstalin இனியும் பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றை ஆயுதத்தை நம்பியிராமல் எதை எதை நமது ஆயுதமாக்கலாம் எதிரி நம்மீது எந்த மாதிரியான ஆயுதத்தை பயன்படுத்தும்படியான வாய்ப்பு தரலாம் என்பதிலும் கவனம் வேண்டும்
@mkstalin@skybluekrishna துதிபாடும் நபர்களை அதீத தன்னம்பிக்கை கொண்டவர்களை கொஞ்சம் தள்ளி வைக்க வேண்டும். கையில் இருக்கும் ஃபோன்கள் மூலம் இப்போது கூடுமான வரை எல்லோரும் அரசியல் வாதிகள் ஆகிவிட்டதால் அவர்கள் அடுத்தடுத்து அவர்களில் இருந்து ஒருவரை எதிர்பார்ப்பதாலும் நம்மையும் update செய்து கொள்ள வேண்டும்
@mkstalin@skybluekrishna எதிரியை எப்போதும் குறையே சொல்கிறோம் என்றில்லாமல் வஞ்ச புகழ்ச்சி செய்து அதில் இப்படியான குறைபாடுகள் உள்ளது என மக்கள் ஏற்றுக்கொள்ளும்படி சொல்லவேண்டும்