@
#வாழ்த்துகள்_தோழர்...!!
மூத்த கம்யூனிஸ்ட் தோழர் மகேந்திரன் தவெகவில் இணைந்து இருப்பது மிக்க மகிழ்ச்சி.
இளைய சமுதாயமும், அனுபவசாலிகளும் இணையும் போது வலுவான, ஆரோக்கியமான தமிழகத்தை கட்டமைக்க முடியும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சொன்னோம். தவெக தான் தமிழகத்தின் எதிர்கால நம்பிக்கை என்று.
தற்குறி என்றார்கள்.
இப்போது தமிழகமே சொல்கிறது புதிய நம்பிக்கை என்று.
#எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது
பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி.
#இயக்குனர்_கே_ராஜன்_மறைவு...
#ஆழ்ந்த_இரங்கல்...
சிறு பட்ஜெட் திரைப்பட தயாரிப்பாளர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவரும், தமிழ் திரைப்படத் துறையில் தனித்துவமான கருத்துகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவருமான K.ராஜன் அவர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
திரைத்துறையின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து துணிச்சலாக தனது கருத்துகளை வெளிப்படுத்தி வந்த அவர், தயாரிப்பாளர்களின் உரிமைக்காக இடையறாது போராடியவர். அவரது மறைவு தமிழ் திரைப்பட உலகிற்கு பெரும் இழப்பாகும்.
ஒவ்வொரு உயிரும் மதிப்புமிக்கது…
தற்கொலை ஒரு முடிவு அல்ல,
பேசிக் கொள்ளுங்கள்… உதவி தேடுங்கள்… நம்பிக்கை இழக்காதீர்கள்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரைப்படத் துறையினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எஸ். எஸ். ஹாரூன் ரசீது
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
வருந்துகிறோம்.
'''''''''''""""""""""""""""""
மஜகவின் துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த அன்பு அண்ணன் மண்ணை செல்லச்சாமி அவர்களின் மரணம் வருத்தம் அளிக்கிறது.
அன்னாரின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரது குடும்பத்திற்கு ஆறுதலையும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் .
வருத்தத்துடன்...
எஸ். எஸ். ஹாரூன் ரசீது
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#வருந்துகிறோம்..
#பிரார்த்திக்கிறோம்..
::::::::::::::::::::::::::::::::::::::::
மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை மாவட்ட, முன்னாள் துணைச் செயலாளர் பண்டாரவாடை இப்ராஹிம் அவர்களின் மரணச் செய்தி வேதனை அளிக்கிறது.
மென்மையான குணம், பேரார்வம் கொண்ட சமுதாய பணிகள் என அவரின் தன்மை தனித்துவம் ஆனது.
எல்லாம் வல்ல இறைவன் அவரின் நற்பணிகளை ஏற்று உயர்ந்த சுவனத்தை வழங்க பிரார்த்திக்கிறோம்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஆறுதல் தெரிவிக்கிறோம்.
இவண் :
எஸ்.எஸ். ஹாரூன் ரசீது
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#வருந்துகிறோம்...
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் - பிள்ளையார்பட்டி சாலையில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.
உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
இவண் :
எஸ்.எஸ். ஹாரூன் ரசீது
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#வருந்துகிறோம்...
#பிரார்த்திக்கிறோம்...
சவுதி அரேபியாயில் மதினா நகருக்கு புனிதப் பயணம் சென்ற 45 இந்தியர்கள் விபத்தில் மரணம் என்ற செய்தி வேதனை அளிக்கிறது.
ஹைதராபாத்தில் இருந்து சென்ற அந்த புனிதப் பயணிகளை இழந்து வாடும் அவர்களது குடும்பத்திற்கு எல்லாம் வல்ல இறைவன் அழகிய பொறுமையை வழங்குவானாக...
விபத்தில் இறந்தவர்களுக்கு இறைவனின் கருணையும், சுவனத்தில் நிரந்தர இடமும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
இவண் :
எஸ் எஸ் ஹாரூன் ரசீது
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
வாழ்த்திப் பிரார்த்திக்கிறோம்...
...............................................
மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க ( MJVS ) மாநில துணைச் செயலாளர் செரியன் நகர் A.R. அப்துல் கதிர் அவர்களின் மகன் K. முஹம்மது யாசிர் அவர்கள் கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டி இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.
கே. முகமது யாசிர் மென்மேலும் பல வெற்றிகளைக் குவிக்க மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வாழ்த்துவதோடு, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
.....அன்புடன்.....
எஸ் எஸ் ஹாரூன் ரசீது, பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.