பொய் சொல்வது மட்டுமே தவெகவின் பொழப்பாக இருக்கிறது. இந்த வீடியோவிலேயே தெளிவாகத் தெரிகிறது, கதவு உள்பக்கம் இருக்கிறது என்று ஆனாலும்
எவ்வளவு கொழுப்பு! எவ்வளவு திமிரு! பொய் சொல்வதற்கு மக்களை எப்பேர்ப்பட்ட முட்டாள்களாக நினைத்தால் இப்படிப் பொய் பேசுவார்கள்?
தலைவனைப் போலவே கட்சியிலும் பொய் சொல்லி ரீல்ஸ் எடுத்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறது இந்த வெட்டிக் கழகம்.
#TVKExposed #TVKScam
இன்று (12.09.2026), புதுக்கோட்டை திலகர் திடலில் புதுக்கோட்டை வடக்கு தெற்கு மாவட்ட கழகங்களின் சார்பில் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் ஆணவப் பேச்சைக் கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோம்.
திமுக ஆட்சிக் காலத்தில் காவிரியில் செழுமையாகத் தண்ணீர் பாய்ந்து, விவசாயத்தின் மேன்மையால் தமிழ்நாட்டின் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர்.
ஆனால், நிர்வாகத் திறனற்ற தவெக அரசுப் பொறுப்பேற்ற பிறகு, அவர்களிடம் முறையான தொ���ைநோக்குப் பார்வையும் இல்லை, அண்டை மாநிலத்துடன் சுமுகமாகப் பேசி, நம் மாநிலத்தின் உரிமையான தண்ணீரைப் பெற்றுத் தரும் திறமையும் வக்கும் இல்லை. இதன் காரணமாகவே இன்றைக்குக் காவிரி ஆறு முற்றிலும் வறண்டு, பாலைவனம் போல் காட்சியளிக்கிறது!
கற்றனைத்து ஊறும் அறிவு
2018-இல் தி.மு.க. தலைவராகப் ப��றுப்பேற்றதில் இருந்து, என்னைச் சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து, சால்வைகளுக்குப் பதிலாகப் புத்தகங்களையே அன்பளிப்பாக வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
இதுவரை இப்படி பெறப்பட்ட 6 இலட்சம் நூல்களைத் தமிழ்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ��ள்ள நூலகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்.
இதன் தொடர்ச்சியாக, பாளையங்கோட்டை சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்காகவும், தாம்பரத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள நூலகத்துக்காகவும் மேலும் 5 ஆயிரம் புத்தகங்களை இன்று வழங்கினேன்.
புத்தகங்கள் தேவைப்படும் கல்வி நிறுவனங்கள், நூலகத்தினர், படிப்பகத்தினர் கடிதம் எழுதினால் அவர்களுக்கும் புத்தகங்களை வழங்கத் தயாராக இருக்கிறோம்.
வாசி���்பு பெருகினால்தான் தமிழ்நாடு தன் அடையாளத்தை இழக்காமல் பாதுகாக்கப்படும்!
#DonateBooks #DonateKnowledge #ReadShareRepeat
புதுக்கோட்டை மாவட்டம் செல்லுக்குடி, பெருஞ்சுணை பகுதியைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் என 35 பேர் பரம்பூர் பகுதியில் நடக்கும் உறவினர்கள் காது குத்து விழாவிற்கு போய்விட்டு திரும்பி வரும்போது சீகம்பட்டி என்ற இ��த்தில் மினி லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, விபத்தில் காயமடைந்தவர்களை இன்று புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டேன்.
“டீக்கடையில நின்னு நிம்மதியா டீ கூட குடிக்க முடியல, வெட்டிட்டு போயிடுறானுங்க,
இது நாடா இல்லை காடா
ஒரு அடிப்படை பாதுகாப்பை கூட கொடுக்க முடியலனா எதுக்கு இந்த ஆட்சி?”
— திரு.விஜய், தவெக தலைவர்.
பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு.
தேர்தல் பிரச்சாரத்தின் போது,
5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள்.
ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்��ுபடி என்று சொல்லி இருக்கிறார்கள்.
இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி.
ஏற்கனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள்.
இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள்.
இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM saar?
ஆட்சிக்கு வந்ததுல இருந்து ஒரே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த கூட துப்பு இல்லையா என மக்கள் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க CM Sir...
சூடு, சொரணை இருந்தால் வாயை திறந்து பேசுங்க விஜய்!
#TVKFails
என் வீட்டுத் தோட்டத்துத்
தென்னை
கூனி வளைந்து
எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில்
அதற்குப் பெயர்
”முடத்தெங்கு”!
அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்?
வாழ்க தமிழ்!
தமிழ்நாட்டுக்கு பெரும் தலைகுனிவு வந்துவிட்டது.
Sofa model ஆட்சி நடத்தும் திரு @TVKVijayHQ தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிதியமைச்சர் மரிய வில்சனின் இலட்சணத்தை பாருங்கள். வீடு புகுந்து ரவுடிசம் செய்தவரை அமைச்சராக்கி அழகு பார்ர்கிறார் முதல்வர் விஜய்.
இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா சார்?
#TVKFails
என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம்.
நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் எ���்றும் சொல்லியிருந்தேன்.
அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்ப��ன்” எனத் தெரிவித்தேன்.
ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது.
எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன்.
கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைக��த்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.
இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக��கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்ட��� வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் ��ன்மை அடைய வழிவகை செய்துள்ளோம்.
தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும்.
மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.