மத்தவங்க 5 நிமிஷத்துல கத்துக்குற ஒரு விசயத்த
நாம கத்துக்க 15 நிமிசம் ஆகுதுனா..
அந்த 10 நிமிசத்துல இந்த உலகம் நம்மள எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ அவ்வளவு அவமானப்படுத்தும் !!
வாழ்வில் ஏதாவது மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடந்து விடக்கூடும் என்று காத்திருக்கிறார்கள். மனிதர்களிடமிருந்து சந்தோஷம் கிடைக்காத போது மழையிடமிருந்து பெற்றுக் கொள்கிறார்கள்
-வண்ணநிலவன்
பயணம் செய். ஆனால்,
யாரிடமும் சொல்லாதே...
அழகான காதல் கதையைப் போல் வாழ். ஆனால், யாரிடமும் சொல்லாதே...
மகிழ்ச்சியாயிரு. ஆனால்,
யாரிடமும் சொல்லாதே...
ஏனென்றால்
மனிதர்கள் அழகான விஷயங்களை அழித்துவிடுவார்கள்.
#கலீல்ஜிப்ரான்