தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் மீது சொந்தக் கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகியே பாலியல் புகார் அளித்து, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தமிழகம் முழுவதும் அக்கட்சியின் நிர்வாகிகள் தொடர்ச்சியாகப் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவது, தமிழக வெற்றிக் கழகம் பாலியல் குற்றவாளிகளின் சரணாலயமாக மாறிவிட்டது என்பதைத் தோலுரித்துக் காட்டுகிறது!
#பொய்க்கால்_குதிரை_அரசு
ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பாளருக்கு டெல்லி சிறப்பு பிரதிநிதியாக பதவி கொடுத்து புதுமை படைத்திருக்கிறார் முதலமைச்சர் விஜய்.
இன்னும் கொஞ்ச நாட்களில் அவரது Makup Man - க்கும் பதவி கொடுத்துவிடுவார்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
ஒரு குட்டி கதை சொல்லட்டுமா சார்!
@actorvijay
ஒரு ஊர்ல ஒரு குதிரை..
இல்லல்ல..
ஒட்டகம்...
குட்டிக்கதைக்கே!
குட்டிக்கதையா!
நல்லா இருக்கே இது😊
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
NLC நிறுவனத்தின் பங்குகளை விற்க முயலும் மத்திய அரசுக்கும், NLC நிர்வாகத்திற்கும் கண்டனம்!
இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களைப் போல், NLC பங்குகளை தமிழ் நாடு அரசே வாங்க TVK அரசின் முதலமைச்சருக்கு வலியுறுத்தல்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
NLC நிறுவனத்தின் பங்குகளை விற்க முயலும் மத்திய அரசுக்கும், NLC நிர்வாகத்திற்கும் கண்டனம்!
இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களைப் போல், NLC பங்குகளை தமிழ் நாடு அரசே வாங்க TVK அரசின் முதலமைச்சருக்கு வலியுறுத்தல்!
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
#NLC
2013-ல் மாண்புமிகு அம்மா அவர்கள் NLC பங்குகளை வாங்கியதன் மூலம், NLC பங்குகள் தனியார் வசம் போவது தடுக்கப்பட்டது; தொழிலாளர் நலன் காக்கப்பட்டது மற்றும் தமிழக அரசிடம் இருக்கும் பங்குகளின் மதிப்பு இன்று பலமடங்கு உயர்ந்துள்ளது என்பதை உணர்ந்து
NLC பங்குகளை மத்திய அரசு தனியாருக்கு விற்பதைத் தடுக்க உடனடி நடவடிக்கைகளை TVK அரசின் முதலமைச்சர் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
#NLC
அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழும் புகார்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளவும், இளைஞர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பேராசிரியர் பணியிடங்களுக்குத் தகுதியானவர்களை நியமிக்கவும் TVK அரசுக்கு வலியுறுத்தல்!
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தலைவர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
தொடரும் மின்வெட்டால் திண்டாடும் மக்கள்!
அதெல்லாம் விடுங்க…. முதல்வர் ரஞ்சிதமே ஸ்டைல்ல ஒரு Flying Kiss கொடுத்தாரு பாருங்க என்று கொண்டாடும் ஆச்சரியக்குறிகள்!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் எச்சரிக்கையை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல், பள்ளிகளில் அத்துமீறி நுழைந்து, கல்வி கற்கும் இடங்களில் அரசியல் அநாகரிகச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தவெக நிர்வாகிகள்!!
#பொய்க்கால்_குதிரை_அரசு
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே பள்ளி வகுப்பறையில் 'ரீல்ஸ்' எடுத்த தவெக ஒன்றிய செயலாளர் ராஜேஷின் செயலுக்குத் தமிழகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்த நிலையில்
பள்ளிக்கூடங்களுக்குள் அத்துமீறி நுழைந்து கட்சி நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இரண்டு நாட்களுக்கு முன்பு எச்சரித்திருந்தார். அமைச்சரின் பேச்சைச் சற்றும் பொருட்படுத்தாமல், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தொடர்ந்து பள்ளிக்கூடங்களில் அத்துமீறி நுழைந்து மாணவர்களின் கல்விச் சூழலுக்கு இடையூறு செய்து வருகின்றனர்.
அரசின் உத்தரவையும், அமைச்சரின் கண்டிப்பையும் சொந்தக் கட்சி நிர்வாகிகளே மதிக்காத இந்தச் செயல், பொய்க்கால் குதிரை அரசின் நிர்வாகச் சீர்குலைவை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!!
செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை, கோவையில் இளம் பெண் சடலமாக மீட்பு எனத் தமிழகத்தில் தொடர்ச்சியாக அரங்கேறும் கொடூரச் சம்பவங்கள், தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருப்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன.
சட்டமன்றத்தில் யாரோ எழுதிக் கொடுப்பதை வாசிப்பதோடு தன் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறாரா பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர்?
பெண்கள் பாதுகாப்பு என்பது வெறும் காகிதத்தில்தான் இருக்கிறதா? சட்டமன்றத்தில் ரீல்ஸ் எடுப்பதற்காக ஒத்திகை பார்க்கும் நேரத்தைப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் செலவிடுங்கள் @CMOTamilNadu
தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி வழங்குவதற்கே பணம் வாங்குவதாக, ஆளுங்கட்சியைச் சேர்ந்த நிர்வாகியே தனது சொந்தக் கட்சியின் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மீது குற்றம் சாட்டியுள்ளார். 'ஆட்சிக்கு வந்த மூன்றே நாட்களில் ஊழலை ஒழித்துவிட்டோம்' என வெறும் வாயால் வடை சுட்டவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?
#பொய்க்கால்_குதிரை_அரசு
முதல்வர் ரீல்ஸ் எடுக்கணும்….
Wait பண்ணுங்க மக்களே…
என்ன மக்களே கேள்வி எல்லாம் கேக்குறீங்க?
6 மாசத்துக்கு எந்த கேள்வியும் கேக்க கூடாது ன்னு முதல்வர் சொல்லிருக்காரு தெரியும்ல?
“அண்ணன் வர்றார் வழி விடு” ன்னு சொன்னது
அப்போ புரியல…
இப்போ புரியுது!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்