இதுதான் அந்த இயக்குநரோட வெற்றி!
படம் முழுக்க பாடம் எடுக்காம கதையோட போக்கிலேயே ஜாலியாகவும், அதே சமயம் சிந்திக்க வைக்கிற மாதிரியும் இயக்கியிருந்தார்.
கடைசியில் மட்டும் வசனம் வைத்து ஒப்பேற்றியதாக எனக்குத் தோன்றவில்லை. படத்தில் நிறைய இடங்களில் நம் சமூகத்தின் மூடப்பழக்க நடைமுறைகளையும், இளம் தலைமுறையினரின் இன்ஃபேக்சுவேசன் புரிதல் இன்மை பற்றியும், தீண்டாமைப் பார்வை பற்றியும், உறவுகளின் பற்றுதல் பற்றியும் போற போக்குல இயக்குநர் டீல் பண்ணியிருந்தார்.
திரு.சேத்தன் அவர்களின் கதாப்பாத்திரம் பேசும் வசனங்கள் நிறைய இடங்களில் யதார்த்தத்தை யோசிக்க வைக்கும்.
சொல்லப்போனால் இயக்குநர், படத்தின் தலைப்பை நாம் காலங்காலமாக புழங்கும் அர்த்தத்தில் வைக்கவில்லை என்றே தோன்றுகிறது. நேரடியான அர்த்தத்தில் வைத்திருப்பதாக தோன்றுகிறது.
திரைப்படத்தின் கதைமாந்தர்கள் நிறைய பேருக்கு அந்த இராத்திரிதான் புத்தி புகட்டிய அல்லது பலநாள் தூக்கத்திலிருந்து எழுந்திட்ட முதல் ராத்திரியாக அமைந்தது.
ஹீரோயின், ஹீரோ, நித்திஸ் தொடங்கி வெங்கடேஸ், பக்ஸ் கேரக்டர் வரை அத்தனை பேரும் அந்த ராத்திரியில் மனமாற்றம் அடைந்திருப்பார்கள்; புதியதாக தங்கள் வாழ்க்கையைத் துவங்கியிருப்பார்கள்; எனவேதான் #மொதராத்திரி !
நல்ல திரைப்படத்தைத் தந்த படக்குழுவினர் பாராட்டப்படவேண்டியவர்கள்!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
#RajaKaruppasamy @iam_rishikanth #ModhaRathiri
@TalkiesFriday படம் பாக்கலாம்.. review build up over தான்..
Logic பாக்காம jolly padam ....
நல்ல படம் list la இல்ல.. jolly படம்...
கிளைமாக்ஸ் ஒரு டயலாக் வச்சி மட்டுமே நல்ல படம் ஆ...
#ModhaRathiri ⭐⭐⭐⭐/5
எவன் டா இந்த படத்தை SCAM-னு சொன்னது? படம் உண்மையாவே நல்லா இருக்கு.
TITLE மட்டும் வேற மாதிரி வைத்திருந்தா இன்னும் FAMILY AUDIENCE-கிட்ட நல்ல SUPPORT கிடைச்சிருக்கும். ஆனா, படத்துக்கு இந்த TITLE-தான் சரியானது.
படத்தோட MUSIC ரொம்ப நல்லா இருக்கு. ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு படத்தோட MUSIC இப்படி நல்லா ஒரு FEEL கிடைச்சது.❤️
RAJA-வோட DEBUT DIRECTION-மும் நல்லா இருக்கு. முதல் படத்திலேயே நல்லா பண்ணியிருக்காரு. 👏
இந்த சந்துல சில பேர் SCAM-னு சொல்லிட்டு இருக்காங்க... அதெல்லாம் ஒன்னும் இல்லை. படம் நல்லாவே இருக்கு.
குடும்பத்தோட பார்த்து ENJOY பண்ணுங்க நண்பர்களே.
இசைக்கெனவே தன்னை அர்ப்பணித்த இசையின் இசை நம் இசைஞானி என் அண்ணனின் 50 ஆண்டு கால இசை சாதனையை பாராட்டி அதனை கொண்டாடும் விதமாக ஆஸ்திரேலியா நாடாளுமன்றம் அவருக்கு தபால் தலை வெளியிடப்பட்டது எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது. இந்தியராக தமிழராக நாம் தலைநிமிர்ந்து நம் நாட்டுக்காரர், நம் மண்ணுக்காரர் என போற்ற வேண்டிய அவசியமான காலகட்டமிது.
வயது ஒரு பொருட்டே அல்ல, இசையே மூச்சென சுவாசிக்கும் இசைஞானி உலகிலுள்ள எல்லா புகழுக்கும் உரித்தானவர் தான் என்பதில் எவருக்கும் ஐயமில்லை.
"கடவுள் தந்த பரிசு"
எங்களுக்கு நீங்கள்!
அன்புத்தம்பி
- ராமராஜன்
#Ilayaraaja
Movie link - https://t.co/75jIWRzytQ
🤝 ஆறு கைகளும் என்னோடது தான்!
छहों हाथ मेरे ही हैं।
इस सीन में तीन आदमी हैं — और तीनों मैं ही हूँ। 'ONE MAN' में हर एक किरदार मैंने खुद निभाया है। तो जब तीनों एक-दूसरे का हाथ पकड़ते हैं — वो छह हाथ आए कहाँ से? ना कोई असिस्टेंट, ना कोई क्रू, ना कोई बॉडी डबल। देखिए वो शॉट असल में कैसे लिया गया। 👇
All six hands are mine.
There are three men in this scene — and all three are me. In ONE MAN I played every single character myself. So when the three of them hold each other's hands, where did those six hands come from? No assistant. No crew. No body double. Here is exactly how that shot was made. 👇
कौन सा सीन अगली बार दिखाऊँ? कमेंट में बताइए।
Which shot should I break down next? Tell me in the comments. 🙏
▶️ पूरी फिल्म / Watch the full film — https://t.co/UrM1RFXx6z
#OneMan #OneManMovie #SankagiriRajkumar #BehindTheScenes #HowItsMade
SoloFilmmaker FilmMaking IndieFilm MovieMagic IndianCinema
OneManCrew VisualEffects FilmmakingTips WorldCinema MadeInIndia
#ஆயிரத்தில்_இருவர் (#Aayirathil_Iruvar) #AI சாத்தியமாகும்போது இதுவும் சாத்தியமே!
அடுத்த திரைப்படத்திற்கு த(தா)யாராகி விட்டார் #பார்த்திபன் சார்...
தலைப்பு... 'ஐ லவ் ஐ (AI)'
கலக்குங்க சார்...
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் கதைப்படி சோழ அரசன் ஈசனின் பக்தன்...
முத்து எம்.ஜி.ஆரின் பக்தன்...
இவர்கள் இருவரின் தெய்வங்களும் உண்மையில் வந்து அவர்களைப் போல நடனமாடினால்... என்ற கற்பனையே இந்த ஏஐ வீடியோ...
ஏஐ யின் வீச்சு நாளுக்குநாள் விண்ணைத் தொடுகிறது...
@MySalemCity@TamilanParthib1 விரைவில் தீர்வு கிடைத்தால் சிறப்பு!
இந்தியன் வங்கிக்கு முன்னால் உள்ள ஆட்டோ நிறுத்தத்திலிருந்து இந்த பக்கம் அபூர்வா உணவகம், ஜிகர்தண்டா கடை வழியாக பாலம் அமைத்திட திட்டமிடலாம். பாலம் அமைத்திட அங்கு கொஞ்சம் இடம் வசதியாக இருக்கும் என்று தோன்றுகிறது.
@TamilanParthib1
மதிப்பிற்குரிய ஐயா,
சேலம், கொண்டலாம்பட்டி பைபாஸ் ரவுண்டானாவில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. பழைய பேருந்து நிலைய வழித்தடத்திலிருந்து சாலையைக் கடப்பது என்பது சிரமமாக உள்ளது. அங்கு ஒரு மேம்பாலம் அமைத்தால் எல்லாரும் பயனடைவார்கள்.
மேலும், சீலநாயக்கன்பட்டி வழியாக வந்து புதிய பேருந்து நிலையம் நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் கொண்டலாம்பட்டி பைபாஸ் ரவுண்டானாவில் கொஞ்சமும் நின்று செல்லாமல் செல்வதால் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கொண்டலாம்பட்டி, நெய்க்காரப்பட்டி, உத்தமசோழபுரம் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையைக் கடப்பதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
அந்த இடத்தில் ஒரு போக்குவரத்துக் காவலரை நிற்கவைத்தால் நன்றாக இருக்கும். ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@Justnow_salem
சேலம், கொண்டலாம்பட்டி பைபாஸ் ரவுண்டானாவில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. பழைய பேருந்து நிலைய வழித்தடத்திலிருந்து சாலையைக் கடப்பது என்பது சிரமமாக உள்ளது. அங்கு ஒரு மேம்பாலம் அமைத்தால் எல்லாரும் பயனடைவார்கள்.
மேலும், சீலநாயக்கன்பட்டி வழியாக வந்து புதிய பேருந்து நிலையம் நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் கொண்டலாம்பட்டி பைபாஸ் ரவுண்டானாவில் கொஞ்சமும் நின்று செல்லாமல் செல்வதால் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கொண்டலாம்பட்டி, நெய்க்காரப்பட்டி, உத்தமசோழபுரம் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையைக் கடப்பதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
அந்த இடத்தில் ஒரு போக்குவரத்துக் காவலரை நிற்கவைத்தால் நன்றாக இருக்கும்.
#Salem #Kondalampatti #Bypass #SalemCity
சிறப்பான கருத்து!
ஒரு ரஜினிதான்!
ஒரு கமல்தான்!
புதிய திறமைசாலிகளை புதியதாக சொல்லி பாராட்டுவோம்!
என்னைக்கேட்டால் திரு.ரஜினிகாந்த் போல வந்திருக்க வேண்டிய சிறந்த நடிகர் என்றால் அது அமரர் திரு.டேனியல் பாலாஜி அவர்கள்தான்!
நடிப்பாகட்டும், ஸ்டைலாகட்டும், ஸ்வேகாகட்டும்... எல்லாமே கச்சிதமாக பெற்றிருந்த நடிகர்!
சூப்பர் ஸ்டாரின் பயோபிக்கில் அவர் நடித்திருந்தால் அவ்வளவு பொருத்தமாக இருந்திருக்கும்! முள்ளும் மலரும் தொடங்கி பில்லா வரை அனைத்து பன்முக கதாப்பாத்திரங்களுக்கும் பொருந்தக்கூடிய முகம்.
வில்லன், குணச்சித்திரம், நாயகன் என அனைத்திலும் அவரும் ஜொலித்தவர். தமிழ் சினிமா தவறவிட்ட சூப்பர் ஸ்டார்... திரு. டேனியல் பாலாஜி.
@Dir_Vetrimaaran@menongautham #DanielBalaji
எல்லோரும் #மொத_ராத்திரி நாயகன் @iam_rishikanth-ஐ @rajinikanth அவர்களோடு ஒப்பிட்டு எழுதி தள்ளுகிறார்கள்.
ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் ரஜினிகாந்தை ஆழமாக வேரூன்றி ரசித்ததால்தான், இன்று அதே இள வயதில் ரஜினிகாந்தின் முக ஜாடையுடன் ஒருவர் வரும்போது, அந்தப் பழைய ரஜினிகாந்தைப் பார்க்க வேண்டும் என்ற ஓர் ஏக்கம் உங்கள் மனதில் மீண்டும் எழுகிறது. அதன் விளைவுதான் நீங்கள் எழுதும் இந்த ஒப்பீட்டுப் பதிவுகள்.
காலம் மாறிச் செல்வதை உங்களால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அதே நேரத்தில், சிறுவயதில் ரஜினிகாந்தைப் பார்த்துக் கொண்டாடிய அந்த மனதையும் தொலைக்கத் தயாராக இல்லை.
அதனால், இனி வரும் நாயகர்களிடம் அந்தக் கொண்டாட்டத்தை எதிர்பார்த்தவர்களே, ரஜினிகாந்தின் முக அமைப்பும், தலைமுடி அமைப்பும் பொருந்தி வரும் ரிஷிகாந்திடம் ரஜினிகாந்தைப் பார்க்கத் தொடங்கி விட்டீர்கள்.
அதன் விளைவுதான் இந்த இருவரையும் ஒப்பிட்டு எழுதித் தள்ளும் பதிவுகள்.
இது இப்போது எங்கே போய்க்கொண்டிருக்கிறது தெரியுமா?
“ரஜினியை விட ரிஷிகாந்த் இன்னும் அதிகமாகக் கவர்கிறார்” என்ற அர்த்தம் வரும் அளவுக்கு, சிலரது எழுத்துகள் நிலைமீறிச் செல்கின்றன.
அது எப்படி?
இரண்டு, மூன்று தலைமுறைகளாக மக்களை மகிழ்வித்து வந்த ஒரு நாயகனை, நேற்று வந்த ஒரே ஒரு படத்தில் நடித்து வெற்றி பெற்ற ஒரு இளம் நாயகனோடு ஒப்பிட முடிகிறது?
சினிமா பார்த்து வளர்ந்தவர்கள் நாம்.
நம் நடையிலும், கை அசைவிலும், குரலிலும், ரசனையிலும், நம்மை அறியாமலேயே ஏதோ ஒரு வகையில் ரஜினிகாந்த் இருக்கிறார்.
அவ்வளவு ஆழமாக நம் நினைவுகளுக்குள் பதிந்திருக்கிறார் அவர்.
அதேபோல, நடிப்புத் துறையில் முயன்று மேலே வரத் தொடங்கியிருக்கும் ரிஷிகாந்துக்குள்ளும், அவருக்குப் பிடித்த ஒரு ரஜினிகாந்த் இருக்கலாம்.
ஆனால், ரிஷிகாந்தின் ஒல்லியான உடல்வாகு, முக அமைப்பு, ரஜினிகாந்தைப் போன்ற தலைமுடி அமைப்பு ஆகியவற்றைப் பார்த்துவிட்டு, அவரை “இன்னொரு ரஜினிகாந்த்” என்று பார்க்கத் தொடங்குவது, அவருக்கே தேவையில்லாத ஒரு சுமையை உருவாக்கிவிடும்.
இதை நல்லதாக எடுத்துக்கொள்வதா என்று தெரியவில்லை.
நன்றாக வர வேண்டிய பையன் அவர்.
அவருடைய பயணத்தை அவருடைய திறமையோடும், அவருடைய படங்களோடும் சேர்த்து பாருங்கள்.
தயவுசெய்து, மூத்தவர்களுடன் ஒப்பிட்டு, இன்று எழுந்து வரும் இளைய தலைமுறையினரை முளையிலேயே கிள்ளி விடாதீர்கள்.
ரிஷிகாந்த் நன்றாக வர வேண்டும். அவர் இன்னும் பல உயரங்களைத் தொட வேண்டும். அப்படி அவர் நன்றாக வளர்ந்து வந்தால், அவருக்கு முதல் வாழ்த்து ரஜினிகாந்த் அவர்களிடமிருந்துதான் வரும்.
அதுதான் ஒரு மூத்த கலைஞரின் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
ஆகவே, அவரவர் படங்களை அவரவர் இடத்தில் வைத்து கொண்டாடுங்கள்.
படத்தைப் பார்த்துவிட்டு, ரசித்துவிட்டு, உங்கள் பிழைப்பைப் பார்க்கப் போங்கள்.
இப்படி தேவையில்லாத ஒப்பீடுகளை எழுதி ஒரு சஞ்சலத்தை உருவாக்கி, சினிமாவை நாசமாக்காதீர்கள்.
நீங்களும் நாசமாகிப் போகாதீர்கள்.
ரஜினிகாந்த் ஒரு தலைமுறையின் நினைவு.
ரிஷிகாந்த் இன்னொரு தலைமுறையின் புதிய நம்பிக்கையாக இருக்கட்டும்.
ஒருவரை ரசிப்பதற்காக இன்னொருவரை ஒப்பிட வேண்டிய அவசியமே இல்லை.
#Rajinikanth
#TamilCinema

#ஜமா இவரோட நடிப்புத்திறனுக்கு நல்ல தீனி போட்ட திரைப்படம்.
நிறைய க்ளோஸ்-அப் காட்சிகள் + கண்களிலேயே வில்லத்தனத்தைக் காட்டும் நடிப்பு குட்டி கமல்ஹாசன் போல விளையாடியிருந்தார்.
க்ளைமேக்ஸ் காட்சியில் வசனமேயில்லாமல் நடிப்பை அற்புதமாக வழங்கியிருந்தார்.
#மொதராத்திரி திரைப்படத்தில் வசன உச்சரிப்பு + முகபாவனைகளில் அநாயசமாக நடித்திருக்கிறார்.
#வதந்தி2 வெப் தொடரிலும் நன்றாகவே நடித்திருக்கிறார்.
#அன்பே_டயானா கதாப்பாத்திரமெல்லாம் ஜஸ்ட் லைக் தட் என்று தட்டுவிட்டு சென்றிருந்தார்.
அனைத்துமே வித்தியாசமான, ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத கதாப்பாத்திரங்கள்.
திரு. #சேத்தன் அவர்கள் இயக்குநர்களின் எண்ணப்படி தன்னை தகவமைத்துக் கொள்ளும் ஒரு நடிகராக இருக்கிறார்.
@PariElavazaghan
சமீபத்தில் #சேத்தன் நடித்த ராம் அண்ட் லீலா, மொத ராத்திரி, அன்பே டயானா — இந்த மூணு படங்களையும் அடுத்தடுத்து பார்க்க நேர்ந்தது.
மூணு படங்களும் முடிஞ்ச பிறகு எனக்கு தனியா மனசுல நின்ன ஒரு விஷயம் — சேத்தன் எந்த character கொடுத்தாலும் அதை “நடிக்கிறேன்”னு தெரியாத அளவுக்கு casual-ஆ எடுத்துட்டு போறார். ❤️
குறிப்பாக #அன்பே_டயானா.
இதுல அவரை ரொம்பவே ரசிச்சேன். வீட்டுக்குள்ள ஒரு அப்பா இருக்கிறார் என்பதைவிட, பிள்ளைகளோட வயசு வித்தியாசமே மறந்து பழகுற ஒரு நண்பன் இருக்கிற மாதிரி அந்த character feel ஆகுது.
அம்மா ஒரு பக்கம் rules, discipline, seriousnessன்னு வீட்டை ஒரு கட்டுப்பாட்டுக்குள்ள வைத்திருக்கும்போது, சேத்தனுடைய character அந்த வீட்டுக்குள்ள இருக்கிற pressure-ஐ சின்ன சின்ன reactions, பேச்சு, timing மூலமா loosen பண்ணிக்கிட்டே இருக்கு.
அதுல முக்கியமா எனக்கு பிடிச்சது அவருடைய comedy.
Comedy scene வந்ததும் தனியா gear மாத்தி “இப்ப சிரிக்க வைக்கணும்”னு perform பண்ணுறது கிடையாது. சாதாரணமா ஒரு dialogue சொல்வார்… ஒரு look கொடுப்பார்… அடுத்தவர் பேசுறதை கேட்டு ஒரு reaction கொடுப்பார்… அதுவே சிரிப்பு வந்துடும்.
ஒரு நல்ல comedy actor joke-ஐ மட்டும் deliver பண்ண மாட்டார்; அந்த situation-க்குள்ளேயே comedy-யை கண்டுபிடிப்பார். சேத்தனிடம் அந்த quality நல்லாவே தெரியுது.
#மொத_ராத்திரி படத்துல மறுபடியும் வேற shade.
பூசாரி characterனு சொன்னதும் அதை caricature மாதிரி பண்ணுவதற்கான வாய்ப்பு நிறைய இருக்கு. Body language, dialogue delivery எல்லாத்தையும் over பண்ணி easy-ஆ comedy வாங்கியிருக்கலாம்.
ஆனா சேத்தன் அந்த வழியை எடுக்காம, அந்த ஆள் இப்படித்தான் இருப்பான் என்று நம்ப வைக்கிற அளவுக்குள்ளேயே humour-ஐ வைத்திருக்கிறார்.
அதனால சில இடங்களில் அவர் சொல்லுற dialogue-ஐவிட, அவர் சொல்லுற விதமும் அதுக்குப் பிறகு கொடுக்கிற reaction-ம்தான் அதிகமா வேலை செய்யுது.
அதேபோல #ராம்_அண்ட்_லீலா.
இங்கேயும் பெரிய சத்தம் போட்டு screen-ஐ எடுத்துக்கணும்னு முயற்சி பண்ணாம, கிடைக்கிற space-க்குள்ளேயே presence தெரிய வைக்கிறார்.
Actually இந்த மூணு படங்களையும் சேர்த்து பார்த்தப்போதுதான் சேத்தனைப் பற்றி இன்னொரு விஷயம் புரிஞ்சது.
சில actors-க்கு ஒரு குறிப்பிட்ட mannerism இருக்கும். எந்த character பண்ணினாலும் அந்த actor முதல்ல தெரிவார்; character அடுத்ததா தெரியும்.
சேத்தனிடம் பல நேரங்களில் அது reverse.
அவர் screen-க்கு வந்ததும் “சேத்தன் வந்துட்டாரு”னு நினைக்கிறதைவிட, கொஞ்ச நேரத்துல அந்த character-ஐ accept பண்ண ஆரம்பிச்சிடுறோம்.
அதுதான் character actor-க்கு பெரிய strengthனு நினைக்கிறேன்.
அன்பே டயானாவில் ஒரு relaxed அப்பா.
மொத ராத்திரியில் ஒரு பூசாரி.
ராம் அண்ட் லீலாவில் இன்னொரு flavour.
மூணுமே comedy touch இருக்கக்கூடிய characters என்றாலும், மூணையும் ஒரே மாதிரி செய்யாமல் சின்னச் சின்ன body language, dialogue delivery, reaction மூலமா தனித்தனியா காட்டியிருக்கிறார்.
ஒரே வாரத்துல மூணு படங்கள்…
மூணு வேறு characters…
ஆனா மூணு படம் முடிஞ்ச பிறகும் மனசுல நிக்கிற ஒரே பெயர் —
சேத்தன். ❤️
இன்னும் நல்ல நல்ல character roles இவருக்கு தொடர்ந்து கிடைக்கணும். குறிப்பாக comedy + emotion இரண்டையும் சேர்த்து carry பண்ணுற roles கிடைச்சா இன்னும் வேற level-ல ரசிக்கலாம். ❤️