DMK still did not identify and realize why they lost the 2026 assembly elections.
Videos like these will not help to gain the confidence of public and neutral people. These Genz DMK behaving like group of clowns 🤡
#DMK#TamilNadu
@madraspaiyanda Just answer in simple words. If the bags are distributed from government fund . What is the need to print Madam Jayalalithaa or Kalaingar Karunaanidhi photo on the bag ?
₹3 உயர்வு… ஆனால் ₹300 பாதிப்பு! பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தமிழக மக்களின் வாழ்க்கை எப்படி மாறப்போகிறது?
முதல் காரணம்: சர்வதேச கச்சா எண்ணெய். மேற்கு ஆசியாவில் (West Asia) நடக்கும் போர் காரணமாக, பிப்ரவரியில் பீப்பாயொன்றுக்கு $69 இருந்த கச்சா எண்ணெய், இப்போது $107 வரை உயர்ந்துள்ளது. இந்தியா தனது 90% கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. Strait of Hormuz பிரச்சினைகள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
இரண்டாவது காரணம்: ரூபாய் மதிப்பு. டாலருக்கு எதிராக ரூபாய் ₹96-க்கு அருகில் வரலாற்று குறைந்தபட்ச சரிவை எட்டியுள்ளது. இறக்குமதி இன்னும் விலையாகிவிட்டது.
மூன்றாவது காரணம் - இதுதான் கேள்வி எழுப்பும் பகுதி. தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு விலை உயர்வு வந்திருக்கிறது.
அறிக்கையில் இல்லாத உண்மை பாதிப்பு உண்மையில் ₹3 அல்ல.
ஒரு கணக்கு போடுவோம்.
ஒரு நடுத்தர குடும்பத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கணவர் இரு சக்கர வாகனத்தில் அலுவலகம் செல்கிறார். வாரம் 5 லிட்டர் பெட்ரோல். மனைவி காய்கறி வாங்க, பள்ளியில் குழந்தையை அழைத்துச் செல்ல மற்றொரு 2 லிட்டர். மொத்தம் வாரம் 7 லிட்டர். மாதம் 28 லிட்டர். கூடுதல் செலவு மாதம் ₹84.
“₹84-தானே, பெரிய காரியம் இல்லை!” என நீங்கள் சொல்லலாம்.
இங்கேதான் டீசலின் கதை வருகிறது.
டீசல்தான் உண்மையான வில்லன்
டீசல் ₹3 உயர்ந்தா… உங்க அன்றாட வாழ்க்கையில்:
🥛 பால் ₹1-₹2 ⬆ (could rise )
🥬 காய்கறி கிலோவுக்கு ₹3-₹5 ⬆
🛺 ஆட்டோ பயணம் ₹10-₹20 ⬆
🚖 Ola/Uber surge அதிகம்
🚌 பேருந்து கட்டணம் (விரைவில்) ⬆
🚸 பள்ளி வேன் கட்டணம் ⬆
இந்தியாவின் பொருளாதார ஆய்வுகள் ஒரு உண்மையை சொல்கின்றன: எரிபொருள் விலை அதிர்ச்சிகள் “இரண்டாம் கட்ட பணவீக்கம்” (second-round inflation) என்ற விளைவை ஏற்படுத்துகின்றன. மேலும் சொன்னால் இன்று உயரும் டீசல் விலை, 1-2 மாதங்களில் கோயம்பேடு தக்காளி விலையாக, மளிகை கடை அரிசி விலையாக, வீட்டுச் சமையலறை செலவாக மாறும்.
ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் காய்கறி விலைகள் உயருவதை நீங்கள் கவனிக்க தயாராக இருங்கள். அதற்கான விதை இன்று விதைக்கப்பட்டுவிட்டது.
ஆனால் ஒரு கேள்வி: ₹3 போதுமா?
ஆச்சரியமான தகவல்: பல துறை வல்லுநர்களின் கருத்துப்படி, இந்த ₹3 உயர்வு உண்மையில் தேவைப்படும் முழு திருத்தத்தில் சுமார் 10% மட்டுமே. அதாவது, கச்சா எண்ணெய் விலை இப்படியே நீடித்தால், மேலும் விலை உயர்வுகள் வரக்கூடும்.
நாம் என்ன செய்யலாம்?
இது தடுக்க முடியாத ஒரு புயல். ஆனால் சுமையை குறைக்க சில வழிகள்:
1.ஒரே பயணத்தில் பல வேலைகள் தனித்தனியாக வெளியே செல்வதை விட
2.பொதுப் போக்குவரத்து சென்னை மெட்ரோ, சப்பர்பன் ரயில் (குறிப்பாக சென்னையில்)
3.கார்பூலிங் : அலுவலகம், பள்ளி பயணங்களில்
4.வாகனப் பராமரிப்பு: சரியான டயர் காற்று, ரெகுலர் சர்வீஸ் = 5–10% எரிபொருள் சேமிப்பு
5.நீண்ட காலத்தில்: EV மற்றும் ஹைப்ரிட் வாகனங்களை பரிசீலித்தல்
பெட்ரோல் பங்கில் ₹3 உயரும்போது அது செய்தித் தலைப்பு. ஆனால் வீட்டுக் கணக்குப் புத்தகத்தில் அது ₹300, ₹500, அல்லது அதற்கும் மேலாக வரும். காய்கறிக்கு, பாலுக்கு, அரிசிக்கு, பேருந்து கட்டணத்துக்கு, ஆட்டோ பயணத்துக்கு - மறைமுகமாக.
சர்வதேச அழுத்தம் இருக்கிறது. ரூபாய் வீழ்ந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் இழப்பில் உள்ளன. இவை அனைத்தும் உண்மை. ஆனால் இறுதியாக இந்த சுமையை சுமப்பது யார்? சாமானியர். அவருக்கு வேறு வழியில்லை.
#Chennai #TamilNadu #CMVijay
திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களின் தோல்வியிலும் தலைமை பண்பு என்றால் இதுதான்! 🌅
தமிழ்நாடு 2026 தேர்தலில் தோல்வி கண்ட பிறகும், மக்களைச் சந்திக்க உடனடியாக கட்சித் தலைமையகம் சென்றார் தலைவர் @mkstalin.
தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் தோற்ற பின்பும், மறுநாளே தொகுதி மக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இன்று (மே 14) அண்ணா அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளர்களைச் சந்தித்து -
“வெற்றியில் பெருமை கொள்ளும் நான், தோல்விக்குப் பொறுப்பேற்பதில் தவறில்லை. யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. கட்சித் தலைவராக இந்தத் தோல்விக்கான முழுப் பொறுப்பையும் ஏற்கிறேன்” என்று மனத்தெளிவுடன் கூறினார்.
தோல்விக்கான காரணங்களை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டு, 20 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். மற்ற கட்சிகளைப் போல எம்.எல்.ஏ.க்களை ரிசார்ட்டில் அடைக்காமல், தோல்வியை நேர்மையாக எதிர்கொள்ளும் முதிர்ச்சி திமுகவுக்கு உண்டு.
மக்களின் குரலைக் கேட்டு, தம்மை மேம்படுத்திக் கொண்டு திரும்பி வரும் DMK 2.0 இதோ உருவாகிறது.
இதுதான் உண்மையான ஜனநாயகத் தலைமை. ❤️🖤
#MKStalin #DMK #TamilNadu
மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதிநிலை குறித்தும், நிதித்துறையின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ
இனி தளபதி விஜய் அவர்களின் காலம் 🎉🎉🎉
“C. JOSEPH VIJAY என்னும் நான் “ ❤️💛❤️
சினிமா ➡️ சட்டமன்றம்
“He is coming” - Day 1 at the TN Secretariat.
#TVKVijay#TVK#CMVIJAY#Tamilnadu