இஸ்லாமிய நாடான துபாயில் இன்று பொதுமக்களின் பயனுக்காக,கட்டப்பட்ட இந்து கோயில் திறந்துவிடப்படுகிறது.
ஆனால்,மதச்சார்பற்ற இந்தியாவில் 1947 க்கு முன்புள்ள தொன்மையான மசூதிகள் பறிக்கப்படுகிறது மற்றும் பறிப்பதற்கான சூழலை உச்ச நீதிமன்றத்தின் துணையோடு செயல்படுத்தப்படுகிறது!!
நியூ தில்லிக்கு அருகில் உள்ள ஹரியானவின��� முக்கிய நகரமான ‘குர்கான்’என்ற நகரத்தின் ‘போராகலான்’என்ற பகுதியில் முஸ்லிம்கள் மஃரீப் (மாலை) தொழுகை ந��த்தும்போது அத்துமீறி உள் நுழைந்து தாக்கியும்,மசூதியை சேதப்படுத்துயும் சங்பரிவார் கும்பலைச் சேர்ந்தவர்கள் தப்பி சென்றுள்ளார்கள்.
நீதிஅரசர் துலியாவிற்கு பாராட்டுக்களும்,ஒரு சலிட்டையும் தெரிக்கின்றேன்.
அவர் குறிப்பிட்ட காரணங்கள் சமுக நீதிக்கானது.
பெண்களின் கல்வியை முடக்க நினைத்த கயவர்களுக்கு சவுக்கடி.
ஆம்!ஆறுதல் அடைவோம்!
நீதி இன்னும் கொஞ்சம் இருக்கிறது என்று!!
தமிழர்களுக்கு எதிராக என்றும் பஜக என்பதை மீண்டும் நிருபித்து உள்ளது. ��நாவில்!இலங்கையில் போர்குற்றத்திற்கு எதிரான தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் புறக்கணித்தது. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்க கூடாது என்பதில் உறுதி.
ஒன்றிய அரசு! முஸ்லிம்களுக்கு எதிராக தன்னுடைய ஆசையை படிப்படியாக ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருவதின் பகுதியாக PFI யையும் அதனுடைய சார்பு அமைப்���ுகளையும் தடை செய்து தன்னுடைய பாசிசத்தை வெளிப்படுத்தியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.
முன்பு பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் முதல்வராக இருந்த அமரிந்தர் சிங் முதல்வர் பதவி பரிக்கப்பட்ட பினபு புதிய கட்சி தொடங்கி தேர்தலில் BJP யிடன் கூட்டனி அமைத்து போட்டியிட்டு படு தோல்வி அடைந்து தற்பொழுது BJPகட்சியோடு ஐக்கியமாகி விட்டார் அதுபோல் குலாம் நபி ஆசாத் கட்சி தொடங்கியுள்ளார்.
ஆயுள் தண்டனை கைதிகள் 10 ஆண்டுகட்கு மேற்பட்டவர்கள் விடுதலை ஆகி கொண்டிருக்கும் இத் தருணத்தில் அதில், முஸ்லிம்கள் உண்டா என்று சமுதாயம் தேடுகிறது!
இலவு காத்த கிளி போல் ஏங்குவதை தவிர எதுவும் இல்லையோ? ஆம்! நாம் தான் திமுக வினரின் இதயத்தில் சிறை வைக்���ப்பட்டிருப்பதால் விட மனம் இல்லையோ?
பார தீய அரசு!முன்பே தீர்ப்பை எழுதி வை��்துக்கொண்டு அதற்கு ஆதாரங்களை NIA மூலமாக தேடிக்கொண்டிருப்பதை இன்று நடந்து கொண்டிருக்கும் PFI அலுவலக சோதனை மூலம் அறிய முடிகிறது.ஆம்!நாட்டின் எல்லையை காப்பாற்ற வக்கற்றவர்கட்கு வேறு எதை செய்ய முடியும்.மக்கள் தான் பாடம் படிப்பிக்க வேண்டும்.
BJP ஆட்சியாளர்கள் லடாக் பகுதியில் பல கி.மீ.பகுதிகளை இழந்தது அம்பலம். இதுவரை திரு.ராகுல் காந்தி மட்டும் தான் சொல்லி கொண்டிருந்தார். ஆனால் உள்ளூர் தலைவர்களே!ஆதாரத்��ோடு அம்பலபடுத்தி உள்ளார்கள்! வெட்ககேடு!!
நாட்டை காக்கும் இலட்சணம் பாரீர்!!!!