இவனுங்களும், இவனை சார்ந்தவனுங்களும் வெளிப்படையா ஏகப்பட்டத பேசுவானுங்க.! எதையுமே கண்டுக்க மாட்டானுங்க.! எப்படா ஏதாவது பேசுவானுங்க..ன்னு காத்துக்கிட்டே இருந்து, அந்த ஒண்ண பிடிச்சுக்கிட்டு, நடவடிக்கை எடுப்பானுங்க. ! எல்லோருக்கும் பொதுவாக இருக்கணும். அது தான் உண்மையான அரசு.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்கு எதிராக யார் செயல்பட்டாலும், அவர்கள் மீது த.வெ.க அரசு நிச்சயமாக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கும்.
திரு. உதயநிதி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனில் த.வெ.க. அரசு எந்தவித சமரசமும் செய்யாது என்பதைக் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்கு எதிராக எந்தவிதமான செயலாக இருந்தாலும், அது யாரால் செய்யப்பட்டிருந்தாலும், அவர் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும், இந்த அரசு அதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது.
ஜெயலலிதா அம்மையார் தலைமையிலான அரசுக்குப் பிறகு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது தயக்கமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கும் உறுதியான அரசு த.வெ.க. அரசுதான்.”
அண்மையில் திமுக சார்பில் காவிரி நீர் உரிமைக்காக தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், 'இரட்டுற மொழிதல்' என்னும் வகையில் எள்ளி நகையாடும் கருத்தொன்றைக் கூறியிருக்கிறார்.
எதிர்க்கட்சிகளின் மீது பொய்வழக்குப் போடுவதிலேயே முதலமைச்சரின் கவனம் இருக்கிறது என்று அவர் சொல்லியபோது, ஆங்கே திரண்டிருந்தவர்கள் பிரபல நடிகை ஒருவரின் பெயரைச் சொல்லிக் கூச்சலிடுகின்றனர். அப்போது அவர் கிண்டலாகப் பேசும் முனைப்பில் தவறான பொருள்படும்படி ஒரு கருத்தைப் பேசியுள்ளார். இது ஆங்கில ஊடகங்களில் விவாதிக்கும் அளவுக்கு - கண்டிக்கும் அளவுக்கு தேசிய அளவிலான பிரச்சினையாக மாறியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் என்கிற பொறுப்பு வாய்ந்த இடத்தில் இருப்பவர் இதுபோல இரட்டை பொருள் தரும் 'எள்ளல் நடையில்' பேசும் முறையைத் தவிர்த்திருக்க வேண்டும். ஒரு பெண்ணைக் குறித்து இழிவாகப் பேசும் இத்தகைய அணுகுமுறை அவரது அரசியல் தகுதிக்குப் பொருத்தமானதில்லை. நாகரிக அரசியலுக்கு ஏற்புடையதல்ல.
சூழ்ந்திருப்பவர்களின் சுவைக்கேற்ப சொல்லாடல் செய்வது என்கிற உந்துதலால் உணர்ச்சிவயப்பட்ட - தன்னிலை மறந்த அணுகுமுறையைக் கைவிட வேண்டும். பெண்மையைக் கொச்சைப்படுத்தும் வகையில் புரிதலை ஏற்படுத்திய அந்த அணுகுமுறை கண்டிக்கத் தக்கதாகும்.
நாளை ( ஆக-05) சட்டமன்றம் கூடும் சூழ்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பிலிருப்பவரைச் சிறைப்படுத்துவதைத் தவிர்ப்பது ஆளுங்கட்சியின் மீதான நன்மதிப்பை உயர்த்தும்.
தற்போதைய நிலையில், காவிரிநீர் உரிமைக்காக அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என யாவரும் இணைந்து குரல் கொடுப்பதற்கும்; இந்திய ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கும் இது ஏதுவாக அமையும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.