புதுவை முதலமைச்சரும் அகில இந்திய nr காங்கிரஸ் தலைவரும் என் ஆர் ஐயா அவர்கள். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உடைய நேரலையில் பேச்சை பார்த்து கொண்டிருந்தார்கள்.
இன்று (12.09.2025) புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூன், ஜீவா நகர் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு செங்கழுநீர் அம்மன் மற்றும் அதன் பரிவார ஆலய வருடாந்திர ஆவணி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தேன்
மேலும் இந்நிகழ்வில் கோவில் நிர்வாகிகள், பக்தர்கள், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் கிராமவாசிகள் பங்கேற்றனர்.
என் நெடுங்காட்டு மண்ணின் மைந்தன், மக்கள் ஹீரோ, எங்கள் தம்பி பாலாவின் காந்தி கண்ணாடி திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்று, எங்கள் வீட்டுப் பிள்ளை வெள்ளித் திரையில் உச்ச நட்சத்திரமாய் ஜொலித்திட வாழ்த்துகிறேன்....
(31.08.2025) மேலகாசாக்குடி பஞ்சாயத்து வடபாதி கிராமம் பகுதியில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை *நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி Dr. C. சந்திர பிரியங்கா* அவர்கள் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்...
29.08.2025 ராயன்பாளையம் அருளப்பிள்ளை தெரு பகுதியில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை துவக்கி வைத்த போது. இந்நிகழ்வில் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்....
அகில இந்தியா என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநில பொது செயலாளராக
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.N.S.J. ஜெயபால் (எ) அய்யனார் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் புதிய பொறுப்பில் சிறந்து விளங்கி, கட்சிக்கும் மக்களுக்கும் சிறப்பான சேவைகளை வழங்கிட நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி சார்பாக வாழ்த்துகிறேன்...
இன்று 29.08.2025 பூவம் பகுதியில் மிகுந்த சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விநாயகர் ஊர்வலத்தினை துவக்கி வைத்தபோது. இந்நிகழ்வில் என்.ஆர் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்...
இன்று (24.08.2025) காரைக்கால் மாவட்ட வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளராக புதியதாக பதவியேற்றுள்ள திரு.M.முருகையன் அவர்கள் மரியாதை நிமித்தமாக என்னை நேரில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றார்...
இன்று 22.08.2025 மாண்புமிகு புதுச்சேரி மக்கள் முதல்வர் திரு.N.ரங்கசாமி ஐயா அவர்களின் முதலமைச்சர் நிவாரண நிதி உதவியின் கீழ் ஏழு நபர்களுக்கு ரூபாய்.1,05000 -/ காசோலையினை பயனாளிகளின் இல்லத்திற்கு நேரடியாக சென்று வழங்கினேன். இந்நிகழ்வில் என்.ஆர்.காங்கிரஸ் பொறுப்பாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர்...
இன்று 20.08.2025 புதிதாக காரைக்கால் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள திரு. A.S.P.S. ரவி பிரகாஷ் இ.ஆ.ப. அவர்களை நேரில் சந்தித்து எனது வாழ்த்துகளைத் தெரிவித்தபோது...
இன்று 19.08.2025, நெடுங்காடு கோட்டுச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல குடியிருப்பு பகுதிகளில் தெருவிளக்குகள் பல மாதங்களாக செயலிழந்து இருப்பதுடன், பல மின்கம்பங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனால் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கடும் சிரமத்திற்கும் அபாயத்திற்கும் உள்ளாகி வருகின்றனர்.இந்த பிரச்சினையை தீர்க்க முயற்சிகள் மேற்கொண்டு, பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்திருந்தும், காரணங்கள் கூறி தாமதப்படுத்தப்பட்டு வந்தது.இதையடுத்து, செயலிழந்த தெருவிளக்குகள் மற்றும் சேதமடைந்த மின்கம்பங்களை உடனடியாக சீரமைத்து மாற்ற வேண்டும் என மாண்புமிகு மக்கள் முதல்வர் திரு. N.ரங்கசாமி ஐயா அவர்களிடம் அவர் கோரிக்கை வைத்தேன். அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் அவர்கள், உரிய செயலருக்கு பரிந்துரை செய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்...
இன்று 18.08.2025 இந்திய அரசின் கைத்தொழில் அபிவிருத்தி ஆணையர் அலுவலகம், துணிநூல் அமைச்சகம் நடத்தும் குரு சிஷ்ய ஹஸ்த்ஷில்ப் ப்ரஷிக்ஷன் திட்டம் (GSHPP) ஆறு மாத கால கைத்தொழில் சோலாபித் கைவினை பயிற்சி திட்டத்தின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திட்டத்தைத் துவக்கி வைத்த போது. இந்நிகழ்வில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள், தொண்டர்கள், இளைஞர்கள் மற்றும் மகளிர் அணியினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்...
இன்று 18.08.2025 மாண்புமிகு மக்கள் முதல்வர் N. ரங்கசாமி ஐயா அவர்களின் நல்லாசியுடன் புதுவை அரசு காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு வடமட்டம் அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு மாணவ மாணவியர்களுக்கு சீருடை வழங்கியபோது.இந்நிகழ்வில் பள்ளியின் ஆசிரியர்கள், ஊழியர்கள் மாணவ மாணவியர்கள் மற்றும் N.R காங்கிரஸ் பிரமுகர்கள், தொண்டர்கள், இளைஞர்கள் மற்றும் மகளிர் அணியினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்...