ஏதே மாத சம்பளமா.. ஏன்டா டேய் மாதம் unlimited data சொந்த செலவுல வேலை பாக்குறோம்..
ஒரு பைசா கூட வாங்கியது கிடையாது
@TRBRajaa அண்ணனுக்கு தெரியும் நாங்க எப்படி வேலை பார்க்கிறோம் என்று 😁
திமுக தலைமையின் திடீர் திராவிட ஆதரவாளர் திரு.சீமான் @Seeman4TN அண்ணா அவர்களே!
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அண்ணன் ராஜ்மோகன் அவர்கள் மீது காட்டுகிற வன்மம் எத்தகையது என்று தெரியவில்லை.
திமுக ஆட்சிக்காலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு பள்ளிக்கூடங்களின் மேற்கூரைகள் எத்தனை பேயர்ந்துள்ளது என்கிற எண்ணிக்கை விவரம் உங்களுக்கு தெரியுமா?
மேற்கூரைகளில் இருக்கும் கம்பிகள் வெளியே நீட்டி மேற்கூரையிலிருந்து மின்விசிறிகள் கீழே விழுந்ததில் எத்தனையோ மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது உங்களுக்கு தெரியுமா?
கடந்த ஆட்சியில் பல பள்ளிக்கூடங்களில் கழிப்பிட வசதி மாணவர்களுக்கு சுகாதாரமான நிலையில் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா?
கடந்த திமுக ஆட்சி காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தின் மேல் மாடியில் லஞ்சம் வாங்குவதற்கு என்று ஒரு அறை இருந்தது என்று தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் நந்தகுமார் குற்றச்சாட்டை முன் வைத்தாரே. அதற்கு உங்களிடம் இருந்து எந்த ஒரு கண்டனமும் வரவில்லையே திரு.சீமான்?
தனியார் பள்ளிகள் கட்டண கொள்ளையில் ஈடுபடக் கூடாது என ஒரு சாமானியராக எளிய பின்னணியில் இருந்து வந்த ஒருவர் அமைச்சரான பின்பு பெற்றோரின் வலியை உணர்ந்தவராக அண்ணன் ராஜ்மோகன் அவர்கள் தனியார் பள்ளிகளுக்கு கட்டண வரைமுறையை நிர்ணயித்தார். அதை உங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையா திரு.சீமான்?
நாம் தமிழர் கட்சியில் பயணிக்கும் அனைத்து கட்சி நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரைக்கும் தமிழ் பள்ளியில்தான் படிக்க வைக்க வேண்டும் என சொல்லி வரும் நீங்கள் உங்கள் மகனை உலகத் தரத்திலான அமெரிக்கன் பள்ளியில் படிக்க வைப்பதன் நோக்கம் என்ன திரு.சீமான்?
அப்படிப் பார்த்தால் உங்களை நம்புகின்ற நாம் தமிழர் கட்சி தம்பிகளுக்கும்,தமிழ்நாட்டு மக்களுக்கும் தான் உபதேசமா? உங்களுக்கு இல்லையா சீமான்!
இதற்கு முன்பு ஆட்சியாளர்கள் திமுக மற்றும் அதிமுக ஆட்சி காலத்தில் பள்ளி குழந்தைகளுக்கு கொடுக்கும் புத்தகப் பையில் தங்களின் புகைப்படங்களை பெரிய அளவில் அச்சிட்டு கொள்வார்கள். அதை என்றைக்காவது கண்டித்து இருக்கிறீர்களா திரு. சீமான்?
ஆனால் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் புத்தகப் பையில் தமிழ்நாடு அரசின் இலட்சணையும் பள்ளிக் கல்வித் துறையின் பெயர் மட்டுமே இடம்பெற்று புத்தகப் பைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதெல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா திரு.சீமான்?
ஊர் முழுக்க மக்களையும்,
உங்கள் கட்சியில் இருக்கும் தம்பிமார்களையும் ஆடு,மாடு மேய்த்து பயனடையுங்கள் என்று சொல்லும் திரு.சீமான் அவர்களே, உங்கள் மகன்கள் இருவரையும் ஏன் ஆடு,மாடு மேய்க்க சொல்லவில்லை?
உலகளாவிய தமிழர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு உலகத் தமிழ் மாநாட்டைப் பன்னாட்டு அளவில் நடத்தத் தமிழக அரசு ஆயத்தப் பணிகளைத் தொடங்கியுள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகளுக்கு மாண்புமிகு முதல்வர் ச.ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ஆ.ராஜ்மோகன் அவர்கள் ஆலோசனைகள் நடத்த அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழுக்காக நாளும் பொழுதும் உழைத்துக் கொண்டிருக்கிறார் அண்ணன் ராஜ்மோகன்.
அதுமட்டுமல்லாமல் தமிழை உயிராக நேசிக்கிற அண்ணன் ராஜ்மோகன் அவர்கள் மக்களுக்காக நற்பணி செய்யவே அரசியலுக்கு வந்திருக்கிறார். உங்களைப் போல் ஏமாற்றி திரள்நிதி வசூல் செய்ய வரவில்லை திரு.சீமான்!
என்றைக்கு நீங்கள் திராவிட எதிர்ப்பை கைவிட்டு விட்டு தமிழக வெற்றி கழகத்தை எதிர்த்து அரசியல் செய்ய தொடங்கினீர்களோ அன்றைக்கே உங்களது தமிழ் தேசிய அரசியல் தோற்றுவிட்டது திரு.சீமான் அண்ணா.
உங்கள் கட்சியின் வாக்கு சதவீத எண்ணிக்கையும் குறைந்ததன் காரணமாக வாய்க்கு வந்ததை பேசி வருகிறீர்கள்.நிறுத்திக் கொள்ளுங்கள்.
சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் நீங்கள் திருமண விழாவில் கலந்து கொண்டு குலுங்கி, குலுங்கி அருகருகே இருந்து பேசிக் கொண்டதை பார்த்து ஊரே சிரிக்கிறது. நாடே சிரிக்கிறது.
அப்படி குலுங்கி,குலுங்கி சிரித்து திட்டம் போட்டதன் காரணம் தமிழக வெற்றிக் கழக அரசை வசை பாடுங்கள் என்று உங்கள் முதலாளியிடம் இருந்து உத்தரவு வந்துவிட்டதோ என தோன்றுகிறது திரு.சீமான் அண்ணா.
இனிமேல் நீங்கள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அண்ணன் ராஜ்மோகன் அவர்களை விமர்சித்தால் உங்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்பதை நினைவு கூறிக் கொள்கிறேன்.