திராவிட கட்சிகள் இனி அவ்வளவுதான் - TVK ஆதரவாளர்கள்
திமுக இனி 50 வருஷத்துக்கு அவ்வளவு��ான் - ஊடக விமர்சகர்கள்
அதிமுக கதை இனி அவ்வளவுதான் - ஆதவ் என்கிற செந்தில்
DMK / ADMK Deposit கூட வாங்காது - IUML
திமுக 2 வது இடமாவது வருமா பார்ப்போம் - டாணிக்கம் மாகூர்
இது திமுகவின் அஸ்தமனம் - மதிமுக
நாங்கள் இல்லாமல் திமுக ஓட்டு வாங்க மு��ியாது - "கல்லாபெட்டி கூட்டணி" கும்பல்
விஜய் என்பது இனி அசைக்க முடியாத சக்தி - காங்கிரசு பேரியக்கம்
லஞ்சம் இல்ல,
ஊழல் இல்ல,
Party Fund இல்ல,
தூயசக்தி ,
என எல்லாம் பேசி .
2 நாள் மீட்டிங் அதுல 35 முறை திமுக,திமுக ,திமுக என கத்தி,
2 ரோட் ஷோ
41 பாயிண்ட் ,
மாட்டு வண்டி ஓட்டி,
முருங்கங்காய் திருடி,
Tractor ஓட்டி ,
தெருக்கடையில் Tea குடிச்சு,
வயலுக்கு உள்ள குதிச்சு,
படம் எல்லாம் போட்டு ,
காமாட்சி விளக்கு,
ப��்டு சேலை,
டிபன் பாக்ஸ்
5000 ரூபாய் பணம் எல்லாம் திருட்டு தனமா தந்து ,
பாமக, த.மா.கா, IUML, VCK, பேரியக்கம், Letter pad இயக்கங்கள் என இவ்வளவு கூட்டணி வச்சு .,
வாக்குசாவடிக்கு உள்ள பல "தங்கமணி" களை இறக்கி விட்டு ,
உங்க வீராதி வீரர் " விசய் " முக்கி, முனங்கி, பயந்து, நடுங்கி ஜெயிச்சு இருக்காரு ..
இதை இவனுங்க கொண்டாடிட்டு இருக்கானுங்க ..😆😆🫵
அடேய் 😜😆
த.வெ.க.வின் பதற்றம்!
“நான்கு நாட்கள் இரண்டு தொகுதியிலும் இருந்துள்ளார் முதலமைச்சர். வெளியூரில் இருந்து இறக்கிவிடப்பட்ட ஆட்கள், அவர் போகும் சால���கள் அனைத்தும் வைக்கப்பட்ட பேரிகேட், கொடுக்கப்பட்ட அன்பளிப்புகள், அமைச்சர்களுக்கு மட்டும் எவ்வளவு செலவு செய்துள்ளேன் என்று ஆளும்கட்சி வேட்பாளரே அளித்த வாக்குமூலங்கள் இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது இந்த வெற்றியை அடைய த.வெ.க. எவ்வளவு பதற்றத்தில் இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.”
- இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு!
#DMK #MKStalin #Dharapuram #Maduranthakam #Byelection #TVKFails #CMVijayFails #Tamilnadu #KalaignarSeithigal
முருங்கைக்காய் வேலை செய்யவில்லை
தாராபுரத்தின் - மூலனூர் ஒன்றியத்தில் #முருங்கைக்காய்_முதல்வர்_விஜய் பறிக்க சென்ற இடத்தில்
தவெகவைவிட திமுகவுக்கு 800 வாக்குகள் அதிகம்.
துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி பொய��� பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது!
- கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிக்கை.
நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது ம���மார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு தொகுதியிலும் மிகக்கடுமையாகத் தேர்தல் பணியாற்றிய தொண்டர்கள், முன்னணியினர், உடன்பிறப்புகள், கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் ஆகிய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்றத் தேர்தல் முடிந்த ஐந்தே மாதத்தில் திணிக்கப்பட்டதுதான் இந்த இடைத்தேர்தல். வாக்களித்த மை அழிவதற்கு முன்னால் மக்களின் விருப்பத்தை அழித்துவிட்டு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை விட்டு விலகி, அடுத்த நிமிடமே ஆளும் கட்சியில் சேர்ந்தார்கள். அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை நடந்தது. அதனால்தான் இந்த இடைத்தேர்தல் நடந்தது.
பதவி விலகிய இருவரையே வேட்பாளர்களாக அறிவித்து, தேர்தலைச் சந்தித்தது ஆளும்கட்சி. அதிகார பலம், ஆட்சி பலம், பணபலம், போலீஸ் பலம் ஆகியவற்றைப் பக்கபலமாக வைத்து த.வெ.க. இந்தத் தேர்தலை எதிர்கொண்ட���ு. சினிமா கவர்ச்சி பலத்தை மட்டுமே நம்பி அரசியல் களத்தில் குதித்து - பெரும்பான்மை பலம் இல்லாவிட்டாலும் குதிரை பேரங்களின் மூலமாக முதலமைச்சர் ஆகியுள்ள விஜய், இந்த இடைத்தேர்தலிலும் ரீல்ஸ் காட்சிகளே கைகொடுக்கும் என்று நம்பினார்.
டீ குடித்தார், டிராக்டர் ஓட்டினார், முருங்கைக்காய் பறித்தார், தெருத்தெருவாகப் போனார். எந்தவொரு இடைத்தேர்தலுக்கும், ஒரு முதலமைச்சர் பதவியில் இருப்பவர் இப்படித் தெருத்தெருவாகப் போனது இல்லை. இந்த இரண்டு தொகுதியில் வெற்றி பெற்றால்தான் தனக்கு இனி அரசியல் வாழ்க்கை என்ற முடிவோடு செயல்பட்டார். நான்கு நாட்கள் இரண்டு தொகுதியிலும் இருந்துள்ளார் முதலமைச்சர். வெளியூரில் இருந்து இறக்கிவிடப்பட்ட ஆட்கள், அவர் போகும் சாலைகள் அனைத்தும் வைக்கப்பட்ட பேரிகேட், கொடுக்கப்பட்ட அன்பளிப்புகள், அமைச்சர்களுக்கு மட்டும் எவ்வளவு செலவு செய்துள்ளேன் என்று ஆளும்கட்சி வேட்பாளரே அளித்த வாக்குமூலங்கள் இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது இந்த வெற்றியை அடைய த.வெ.க. எவ்வளவு பதற்றத்தி��் இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.
ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக் கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள். கட்சி, தேர்தல், மக்கள் பணிகள் என்றால் என்னவென்று முதலமைச்சர் விஜய் இனியாவது உணர்ந்து செயல்பட வேண்டும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான் மகளிருக்குக் கட்டணமில்லாப் பயண விரிவாக்கம், தாய்மாமன் தங்கமோதிரம், அண்ணன் சீர் போன்ற திட்டங்களை அவர் அறிவித்தார். இதுவே தேர்தல் நடத்தை விதிகளை மீறியதுதான். இப்படி பல்வேறு விதிமீறல்களைச் ச���ய்தே இந்த முடிவை த.வெ.க. பெற்றுள்ளது.
என்னைப் பொறுத்தவரையில் துரோகத்துக்கு இடைக்கால வெற்றி கிடைத்துள்ளது. அதே நேரத்தில் பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது!
ஜி.பே.யில் பணம் - பரிசுப் பொருட்கள் கொடுத்தார்கள். ஊரையே விலை பேசினார்கள் என்பதை இந்த ஆட்சியை ஆதரிக்கும் கட்சிகளே ஒப்புக்கொண்டு பேட்டி கொடுத்த காட்சிகளையும் நாம் பார்த்தோம். தேர்தலுக்கு முந்தைய இரவு வெளியான ���ீடியோவில் கோடிகளைக் கொட்டிச் செலவிட்டதை வேட்பாளரே ஒப்புக்கொள்ளும் காட்சிகளையும் பார்த்தோம். தூய சக்தியின் வேடத்தை இது அம்பலப்படுத்தியது.
திரைமறைவில், இன்னும் சில கட்சிகளின் வாக்குகளை வாங்கப் பொய்ச்செய்தியைப் பரப்பினார்கள். ஒட்டுமொத்த அமைச்சரவையும் இரு தொகுதிகளுக்குள் மூன்று வார காலம் முடங்கியது. துரோகம் செய்த வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் காவல்துறைய��னரைக் கொண்டு மிரட்டப்பட்டார்கள். 17 வயது இளைஞரைக் கூட கைது செய்தார்கள்.
'ஆளும்கட்சிக்கு வாக்களிக்காவிட்டால் தொகுதிக்கு எதையும் செய்யமாட்டோம்' என பிளாக்மெயில் செய்து வாக்கு வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அரசு ஊழியர்களையும் வாக்குப்பதிவின்போது மிரட்டி ஆதரவாகப் பணியாற்ற வைத்தார்கள். 'சூரியனுக்கு வாக்களிக்கச் சொன்னால் விசிலுக்கு அழுத்தச் சொன்னார்கள்' என்று ஒரு மூதாட்டி வெளிப்படையாகப் பேட்டியே அளித்தார்.
இப்படி, தன் அதிகார பலம் முழுவதையும் இடைத்தேர்தலுக்காகத் தவறாகப் பயன்படுத்தியது த.வெ.க. அரசு.
5 நிமிடப் பேச்சிலேயே அனைத்தையும் விஜய் மாற்றிவிடுவார�� எனக் கட்டமைக்கப்பட்ட போலி பிம்பம் நான்கே மாதங்களில் கிழிந்து தொங்கிவிட்டது. ஆட்சிக்கு வந்த இத்தனை குறுகிய காலத்தில் இப்படி ஒரு சரிவு எந்த முதலமைச்சருக்கும் இதுவரை ஏற்பட்டதில்லை.
கல்லாப்பெட்டிக் கூட்டணிக் கட்சிகள் என விமர்சித்த கட்சிகளையே, இப்போது தன்னோடு இணைத்துக்கொண்டு தேர்தலைச் சந்தித்த நிலையிலும், அனைத்தையும் மீறி, ‘எப்படியாவது வெற்றி பெற்றால் போதும்’ என்ற மனநிலைக்கு அவர்களைத் தள்ளும் வகையில்தான் இடைத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.
என்ன செய்தும், தி.மு.க. மீதான மக்களின் நம்பிக்கையை எதுவும் செய்ய முடியவில்லை. தி.மு.க.வை மட்டுமே குறிவைத்துப் பேசினார் முதலமைச்சர். ஆனால், தி.மு.க.வின் செல்வாக்கை அவரால் ��சைக்க முடியவில்லை.
இதில் மிகவும் முக்கியமானது, துர்நாற்றமெடுக்கும் துரோக சக்தியான த.வெ.க.வுக்கு எதிராகக் களம் கண்ட அனைத்துக் கட்சிகள் பெற்ற வாக்குகளும் ஆட்சிக்கு எதிரான வாக்குகள் என்பதுதான்! அவைதான் பெரும்பான்மை! இந்த அரசு மீண்டும் பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
குதிரை பேரம், எம்.எல்.ஏ. ஷாப்பிங், பழிவாங்கும் நடவடிக்கைகள், அருவருப்பான பேச்சுகள், அசிங்கமான ச��கைகள், ரீல்ஸ் எடுப்பதில் மட்டும் கவனம் ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு இனியாவது மக்கள் பணிகளில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தேர்தல் வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் கொள்கை - இலக்கு என பயணிக்கும் உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
களத்தில் கடும் போட்டியைக் கொடுத்து, ஆளும்கட்சியின���ை அச்சத்தில் அலையவிட்ட கழக உடன்பிறப்புகளுக்கு நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தோளோடு தோள் நின்று உழைத்த அனைத்துக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தோழர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!
சினிமா கவர்ச்சியை மூலதனமாகக் கொண்டு, அதன் மூலமாக ம���்களை ஏமாற்றி அதிகாரத்துக்கு வந்து கார்ப்பரேட் மாஃபியாக்கள் சிலரின் கைப்பாவையாக ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் விஜய்யின் முகத்திரையைக் கிழிக்கும் பரப்புரைப் பயணத்தை நாம் தினம்தோறும் தொய்வின்றித் தொடர்வோம். தமிழ்நாட்டுக்கு விரோதமான சக்திகளின் பிடியில் அவர் சிக்கி இருக்கிறார். அதை மக்கள் விரைவில் முழுமையாக உணர்வார்கள்.
ஊரான் வீடு நெய்யில வாங்கிய அரசுப் பேருந்திற்கு தன் கட்சிக் கொடி நிறத்தில் பெயிண்ட் அடித்து ஸ்வீட் செய்யத் தெரிந்த டம்மி முதல்வராலும், பொறுப்பேற்றவுடன் சாப்பிடச் சென்று இன்று வரை திரும்பி வராத போக்குவரத்துத் துறை அமைச்சராலும், நிகழும் நிர்வாகச் சீர்கேட்டினால், வாங்கி சில வாரங்களே ஆன அரசுப் பேருந்தைக் கூட முறையாகப் பராமரிக்க இந்த அரசுக்கு வக்கில்லாமல், நடுரோட்டில் பழுதாகி, அதை மக்களே தள்ளும் அவல நிலை வந்துள்ளது.
#TVKFailsTN
இடைத்தேர்தல் களம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக இல்லாததால் தான் முதல்வர் விஜய் தெரு தெருவாக செல்கிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் சண்முக��் கடும் விமர்சனம்
தேமுதிகவுக்கு அதிக இடங்கள் கொடுத்து விட்டார்கள் என்று கோபப்பட்ட கூட்டம் இருக்கிறது ஆனால் கூட்டணி தர்மம் என்றால் என்ன என்பது தெரியாமல் ஓடிப்போன ஓடுகாலிகளுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்.
Watch | "பொட்டி வாங்கிட்டு இந்தக் கட்சிக்கு வந்துட்டு, அடுத்து பொட்டி வாங்கிட்டு இன்னொரு கட்சிக்கு போக மாட்டீங்கனு என்ன நிச்சயம்?”
மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் பரப்புரை செய்யும் இடத்தில் கொந்தளித்த மக்கள்
#SunNews | #TVK | #ADMK | #ByElection
ஆய்வு ! அதிரடி !!
EB control room ல் நாலைந்து சுவிச்சுகள் போடாதிருந்தது கண்டுபிடிப்பு . திமுகவினர் ஆட்சியை விட்டு போகும் போது OFF செய்து விட்டு போனதாக விசாரணையில் அதிரடி திருப்பம் . இடப்பற்றாக்குறை காரணமாக மின்சாரத்தை தேக்கி வைப்பதில் சிக்கல் இருப்பது கண்டுபிடிப்பு . செம்பரம்பாக்கத்தில் விரைவில் 20 ஏக்கர் பரப்பளவில் மின்சாரத்தை தேக்கி வைக்க அதிரடி உத்தரவு . கடுமையான எச்ச���ிக்கை ! ஆடிப்போன அதிகாரிகள் !