ஐபிஎல்லில், ஒவ்வொரு அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் போது, 49 ரன்களைத் தாண்டிவிடுவோமா என்கிற அச்சம் வரும்!
அந்த அச்சம் உள்ளவரை ஐபிஎல்லை #KKR தான் ஆள்கிறான் என்று பொருள்.
இளையராஜா பற்றி கேட்டு கேட்டு புளித்துப் போன பல கதைகள் உண்டு.. கொஞ்சமும் அலுக்காமல் அவரைப் பற்றி பேசிக்கொண்டே இருக்க பலர் உண்டு.. அது எப்படி ஏன் நடக்கிறது..அதை நடத்துபவர்கள் யார் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.
அரை மணி நேரத்தில் 5 பாட்டு
ஒரே நாள்ல 5 -6 படம்..
ஒரே தீபாவளிக்கு 7 - 8 படம் அவர் இசைல ரிலீஸ் ..
இப்படி பல கதைகள் அவரைப் பற்றிச் சொல்வார்கள் அந்த கதைகளெல்லாம் உண்��ைதான் என்றாலும் அவருக்கு நிகராகவே அதைவிட குறுகிய காலத்தில் பல சாதனைகளை செய்த தேவாவை பற்றி யாரும் கடந்த 25 ஆண்டுகளாக மருந்துக்கும் எவரும் பேசவில்லை.
ஒரே நாளில் ஏழு எட்டு படங்களுக்கு தேவாவும் இசையமைத்திருக்கிறார் அரை மணி நேரத்தில் ஐந்தாறு படங்களை தேவாவும் கம்போஸ் செய்திருக்கிறார் ஒரே தீபாவளிக்கு ஏழெட்டு படங்கள் தேவாவிற்கும் ரிலீஸ் ஆகி இருக்கின்றன..
எப்படி அவர் இசை அமைத்த 10-15 ஆண்டுகளில் சுமார் 600 படங்களுக்கு மேல் இசை அமைத்து சாதனை படைத்திருக்கிறார் தேவா.
ஆனால் இதைப் பற்றி எல்லாம் இசை உலகத்திற்கோ பத்திரிகைகளுக்கோ இசை விமர்சர்களுக்கோ எதுவுமே தெரியாது.
அவர்களுக்கு ஆதியும் அந்தமும் இளையராஜா மட்டுமே..
அவரை விட்டால் நேரடியாக ஏ ஆர் ரகுமானுக்கு ஜம்ப் ஆவார்கள்.
இடையில் சாதித்து காட்டிய தேவாவை கண்டு கொள்ளவே மாட்டார்கள் அல்லது திட்டமிட்டே புறக்கணிப்பார்கள்...
இந்த புறக்கணிப்பு பற்றி முன்பே நான் எழுதி இருக்கிறேன்..
தேவா பாடல்களை பாடுவதே ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அவமானம் என்று நினைத்த காலம் ஒன்று இருந்தது.
ராஜ் டிவியில்மட்டும்தான் தேவாவை..
அதுவும் ஒரு கானா பாடல் நிகழ்ச்சியில் நடுவராக அழைத்தார்கள்.
அதற்குப் பிறகு சுமார் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு தேவாவை எந்த டிவி சேனலும் மதித்ததே இல்லை
சமூக வலைத்தளம் குறிப்பாக முகநூல் ப��ரபலமான பிறகு அதில் சிவசங்கரன் சரவணன் போன்ற தேவாவின் ரசிகர்கள் எழுதிக் குவித்த பல கட்டுரைகளும் தேவாவை உண்மையிலேயே உள்வாங்கிய பல உண்மையான இசை ரசிகர்களும் அவரை பேச பேசத்தான் டிவி சேனல்களுக்கு புத்தியில் உரைத்து அவரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் அவரது பாடல்களை நிகழ்ச்சிகளில் பாடவும் அனுமதித்தார்கள்.
இது நடக்க கிட்டத்தட்ட 20 - 25 ஆண்டுகள் ஆகியிருந்தன.
ஆம் நான் சப்த ஸ்வரங்கள் காலத்திலிருந்து சொல்கிறேன்.
ஒரு சிறுவன் "அண்ணா நகர் ஆண்டாளு" பாடலை ஆடிஷனில் பாடினான் என்பதற்காக அந்த சிறுவனை அழைத்து வந்த அவனது பாட்டியை தயவுசெய்து இந்த மாதிரி பாடல்களை எல்லாம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்காதீர்கள் என்று சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சித் தொகுப்பாளணர் ஏவி ரமணன் கடிந்து கொண்டதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.
இப்படிப்பட்ட இசை தீண்டாமையில் இருந்து இப்போதாவது இசையுலகம் கொஞ்சம் விடுபட்டிருக்கிறது என்பது ஆறுதல் தான் என்றாலும்...
அது மீண்டும் மற்றும��ரு புதிய தீண்டாமைக்குள் சென்று கொண்டிருக்கிறது என்பதும் இப்போது பலருக்கு புரிந்திருக்கும்.
தேவாவை பொறுத்தவரை..இத்தனை ஆண்டு கால புறக்கணிப்பை இந்த மனிதர் எப்படி தாங்கினார் என்பதை நினைத்து பார்த்தால் மனம் உண்மையிலேயே வலிக்கிறது...
கதிர் ஆர் எஸ்
21/10/26
இன்ஸ்டாகிராம் influencers ஆட்கள் மூலமாக லக்ஷ்மி கிருஷ்ணா weightloss powder என்று carbo sugar powder வித்து இருக்கானுங்க. அனிதா சம்பத்ல இருந்து 100 பேர் கிட்ட பொய்யா பேசி வித்து இருக்காங்க..scam வெளிய வந்து இருக்கு..முழுசா பாருங்க
தங்களுக்கு தெரியவில்லை எ��்பதற்காக, 300 ஓவாக்கு எங்குமே மட்டன் பிரியாணி கிடைப்பதில்லை என்று அர்த்தமல்ல.
உள்ளிருக்கும் மூளையை எடுத்து, கழுவி சுத்தம் செய்து மீண்டும் உள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள்.
Massive respect for Varun Chakaravarthy‼️
He is not 100% fit yet he is still playing for KKR
He is taking painkillers and injections to reduce the pain
#KKRvMI | #IPL2026 | #KKRvsMI
Saurabh Dubey replaces Varun Chakravarthy, who misses out due to a niggle in his right leg.
Though I’ll miss Pathirana, Kohli’s weakness against left-arm pacers makes Saurabh an exciting prospect tonight.
Hoping for some magic. Let's hope 🤞
#RCBvsKKR#RCBvKKR