தமிழர் தலைமுறை தலைநிமிரப் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம்!
பல தலைமுறைகள் ஆதிக்கத்துக்குப் பணிந்தன.
ஒரு தலைமுறை பெரியார் நிகழ்த்திய புரட்சியைக் கண்டது.
பல தலைமுறைகள் அதன் மாற்றத்தைக் காண்கின்றன.
ஆனாலும், ஆதிக்கம் இன்னும் முற்றாக அகலவில்லை. அதனை அடையாளம் காண வேண்டியது வரும் தலைமுறைகளின் பொறுப்பும்கூட!
வெளிச்சமற்ற இடம் இருள்; கேள்விகளற்ற சமூகம் அதைவிடப் பேரிருள்.
“ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை, இருள் நம்மை அண்டாது.
பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர், தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும்!
#சமூகநீதிநாள் #SocialJusticeDay #PeriyarForever
மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுத்து
மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்திய நமது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பயணம் 78-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
பேரறிஞர் அண்ணா விதைத்து - தலைவர் கலைஞர் வளர்த்து - நாம் காத்து நிற்கும் தமிழ்நாட்டின் தனித்துவத்தையும் வளர்ச்சியையும் பாழாக்கிட யாரையும் அனுமதியோம்!
மழையில் பிறந்து, புயல்களை வென்ற நாம், சமூகநீதி - சுயமரியாதை -
தமிழ்நாட்டின் உரிமை உள்ளிட்டவற்றில் சமரசமின்றிக் களத்தில் நிற்போம்! பயணத்தில் வெல்வோம்!
#DMK78
பெரியாரைப் படிப்போம்; அவர் விதைத்த சிந்தனைகளை உலகெங்கும் விதைப்போம்; நாளைய உலகை பகுத்தறிவும் சமத்துவமும் நிறைந்த உலகாகப் படைப்போம்!
#SocialJusticeDay#PeriyarForever
பெண்களைத் தலைநிமிர்ந்து, தன்மானத்துடன் நடக்கச் செய்து, தன்னம்பிக்கையையும் பகுத்தறிவையும் ஊட்டிய சாதனை மனிதர்.
சமூக நீதிக்காக வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்த சமூகநீதிக் காவலர் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில் அவர்களின் புகழை போற்றி வணங்குவோம்...!
#DMK#பெரியார் #PeriyarForever
நேற்று முதல் ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் இவை.
தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் voltage பிரச்சினை என மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால், துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதைச் சரிசெய்யும் முயற்சிகளைச் செய்யாமல் தேவையில்லாத அவதூறுகளை உளறிக் கொண்டிருக்கிறார்.
மின்சாரம், ஆவின் பால் விநியோகம் என மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் 'ப்யூஸ் போன' த.வெ.க. அரசு திசைதிருப்பும் வேலைகளை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
எச்சில் பழம் பொறுக்கும் அணில்கள் கண்ணை மூடிக்கொண்டால், உழைப்பாலும் தியாகத்தாலும் கட்டமைக்கப்பட்ட திமுகவின் வரலாறு இருண்டு போய்விடாது! ஊர் முழுவதும் பொய்யைப் பரப்பும் சாக்கடைக் கூட்டத்தை அம்பலப்படுத்த அரசியல் நாகரிகத்தோடு எங்கள் தலைவர் அளித்த விளக்கம், அந்தத் தற்குறிகளுக்கானது அல்ல; அவர்களின் பொய்யை நம்பி அப்பாவி மக்கள் மீண்டும் ஒருமுறை ஏமாந்து விடக் கூடாது என்பதற்காகத்தான்.
வரலாறு, தியாகம் என்றால் என்னவென்றே தெரியாமல், சமூக வலைதளங்களில் பொய்யையும் அவதூறையும் வாந்தியெடுக்கும் Abuser பொறுக்கிகள் நடத்தும் கட்சிதான் தவெக என்பதை மறுபடியும் தாங்கள் எடுத்த வாந்தியால் நிரூபித்து இருக்கிறார்கள்.
மூளையும் மூஞ்சியும் இல்லாமல், தந்தையின் தயவால் சினிமாவில் வளர்ந்து, ஏசி கேரவனுக்குள் பவுடர் பூசி, 'டூப்' வைத்துச் சண்டை போட்ட இந்தத் தற்குறிக்கு, சிறைக் கொட்டடியில் MISA கைதிகள் போலீசாரின் பூட்ஸ் காலால் மிதிபட்டுச் சிந்திய ரத்தத்தின் மதிப்பு எப்படித் தெரியும்?
பத்திரிகையாளர்களை நேருக்கு நேர் சந்திக்கத் துப்பில்லாமல், சட்டமன்றத்தில் கேட்ட கேள்விக்கான பதிலுரைக்கு மூன்று நாட்கள் மனப்பாடம் செய்து, கேமரா முன்னால் கத்தி, கதறி நடிக்கும் தற்குறிக்கு நிஜ வலிகளின் உணர்வு எப்படிப் புரியும்? மிசா தியாகம் என்பது, சினிமாவில் நடிப்பது போல, பின்னாடி கையை வைத்து தடவிக்கொண்டு பஞ்சு மெத்தையில் உருள்வதல்ல; அது கொள்கை உறுதி மாறாமல், சிறைச்சாலையின் இரும்புக் கம்பிகளுக்கிடையே ரத்தம் சிந்திய நிஜம்!
Call sheet காப்பியையும், வருமானத்தை மறைத்து வாங்கிய 'IT Raid' காப்பியையும், வசனகர்த்தாக்கள் எழுதிக்கொடுக்கும் Script பேப்பரையும் மட்டுமே பார்த்துப் பழகிய மூளையே! உனக்கு எமர்ஜென்சி காலத்தில் நடந்த மிசா கொடூரங்களை ஆவணப்படுத்திய இஸ்மாயில் கமிஷன் அறிக்கை எனும் வரலாற்று ஆவணத்தைப் படித்துப் புரிந்துகொள்ளும் வக்கு எங்கே இருக்கப் போகிறது?
முத்தமிழறிஞர் கலைஞர் அணிந்திருந்த 'மஞ்சள் துண்டு', இந்த மாநிலத்தின் சமூகநீதியைக் காத்த சுயமரியாதைக் குறியீடு! ஆனால், இந்த 'டம்மி' முதலமைச்சரின் மேக்கப்பை கலைத்துவிட்டால், உள்ளே மிஞ்சுவது வெற்று அரசியல் சூனியமும், நிர்வாகத் திறமையின்மையும்தான்.
நீங்கள் விமர்சிக்கும் அந்த 'கட்டுமரம்', இந்தியாவின் பல அரசியல் சுனாமிகளையே நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொண்டு தமிழ்நாட்டைக் காத்தது மாபெரும் வரலாறு! அதில் ஒன்றுதான் எங்கள் தலைவரும் கழக உடன்பிறப்புகளும் MISA சிறைவாசத்தை எதிர்கொண்ட எமர்ஜென்சி எனும் நெருக்கடி நெருப்பாறு.
கொள்கை, சித்தாந்தம் எதுவும் இல்லாமல், தியாகிகளைக் கொச்சைப்படுத்தி அரசியல் செய்ய நினைக்கும் உங்கள் அநாகரிகச் சாக்கடையிலேயே, தவெக எனும் காகிதக் கப்பல் மூழ்கும்.
இதோ அந்த எமர்ஜென்சி காலத்து மிசா சிறைவாசம் தொடர்பான வராலற்று ஆதாரங்கள். குரைக்கும் விலங்குகளே கவ்விக் கொண்டு ஓடுங்கள்.
வரலாற்றில் நிலைத்து நிற்கும் மாபெரும் தியாகத்தை உருவ கேலி செய்த உங்களின் கேடுகெட்ட அற்பத்தனத்தை தமிழ்நாட்டு மக்கள் காரித் துப்புகிறார்கள்.
காரணம், இந்த ஆவணங்களில் உள்ள பதிவுகளை அவர்கள் தங்கள் நெஞ்சில் பதிய வைத்திருக்கிறார்கள்.
தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை அரங்கேறி இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது.
‘கடன் தொல்லை கொடுக்கிறார்கள்’ என பாதுகாப்பு கேட்ட பிரதீப்ராஜ் எனும் இளைஞரை, ‘உயிரோடு இருக்க மாட்ட.. பொய் Case போட்டு உள்ள தள்ளுவேன்’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மிரட்டியதாக சம்பந்தப்பட்ட இளைஞரே நேற்று முன் தினம் வீடியோ வெளியிட்ட நிலையில், நேற்று அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
‘CM-ட்ட வேணும்னா போய் சொல்லு. என்னைய ஒன்னும் பண்ண முடியாது’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சொன்னதாகவும் கொலையாவதற்கு ஒரு நாள் முன்பு பிரதீப்ராஜ் கூறியுள்ளார்.
காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரை காவல்துறையினரே DUMMY CM ஆக நினைக்கிறார்களா?
காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றை இந்த Circus ஆட்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.
சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி கேட்டால், ‘1974-இல் என்ன நடந்து தெரியுமா,, ED என்ன பண்ணுச்சு தெரியுமா’ என்று Divert செய்யும் முதலமைச்சர், இந்த கொலைக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்.
இந்த வழக்கில் திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்வதோடு, சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
தலைநகரில் மீண்டும் ஒரு கொலை நடக்காமல் இருப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும்.
சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராகத் துணிச்சலுடன் போராடி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகத் தன் இன்னுயிரைத் தியாகம் செய்த விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாள் இன்று.
அவரது போராட்டங்களையும் தியாகங்களையும் போற்றி நினைவு கூர்வோம்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக அவசர செயற்குழு கூட்டம் கலைஞர் அரங்கில் வைத்து இன்று நடைபெற்ற போது.
உடன் தலைமை கழக பிரதிநிதிகள் நல்ல சேதுபதி,தமிழ் கா அமுதரசன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ஆனந்தசேகரன்,தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி,மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும் கூட்டத்தில் தூத்துக்குடி தொகுதி கழக மாநகர பகுதி செயலாளர்கள்,
விளாத்திகுளம் தொகுதி ஒன்றிய பேரூர் கழக செயலாளர்கள்,
கோவில்பட்டி தொகுதி நகர ஒன்றிய பேரூர் கழக செயலாளர்கள், மற்றும் மாவட்ட அணி அமைப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
#DMK
இன்று கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாள்.
நாட்டின் விடுதலைக்காகத் தம் வாழ்வையே அர்ப்பணித்து, வாய்த்த வழிகள் அனைத்திலும் விடுதலை வேட்கையோடு போராடியவர் அவர். தன்னாட்சி உரிமைக்காக துணிவுடன் குரல் கொடுத்து, தியாகமே தம் வாழ்வின் அடையாளமாகக் கொண்ட வ.உ.சி. அவர்களின் பணிகளை இந்நாளில் போற்றிடுவோம்.
தியாகத் திருவுளம் வ.உ. சிதம்பரனார் பிறந்தநாள்
நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்தார், செந்நீர் சிந்தினார், ஆங்கிலேயரை எதிர்த்துக் கப்பல் விட்டார். இது மட்டுமா வ.உ.சி.?
திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார், தொல்காப்பிய உரையைப் பதிப்பித்துள்ளார், ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார், அந்நாளிலேயே தொழிலாளர் உரிமைக்காகப் போராடியுள்ளார்.
இத்தகைய பன்முக ஆளுமையான வ.உ. சிதம்பரனாரின் வாழ்வும் பணிகளும் எல்லோரையும் சென்றடையும் வகையில் கடந்த 5 ஆண்டுகால #DravidianModel பல நடவடிக்கைகளை மேற்கொண்டு செக்கிழுத்த செம்மலுக்குச் சிறப்பு சேர்த்தோம்.
அவற்றுடன், 1908 திருநெல்வேலி எழுச்சிக்கான நினைவுச் சின்னத்தையும் அறிவித்தோம். தற்போதைய அரசும் அதனைக் கைவிடாமல், நிறைவேற்றிட வேண்டும் எனத் தமிழர்தம் சிந்தையில் இருந்து என்றும் அகலாத சிதம்பரனாரின் பிறந்தநாளில் கேட்டுக் கொள்கிறேன்!
தேச விடுதலைக்காகவும், தமிழர் உரிமைக்காகவும் தன் வாழ்வையே அர்ப்பணித்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது...!
#DMK
ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக அஞ்சாமல் களமிறங்கி, சுதேசி உணர்வை தமிழர்களின் நெஞ்சில் விதைத்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளில் அவர்களின் புகழை போற்றி வணங்குவோம்...!
#Voc#DMK