சைவ சித்தாந்தம் முழுவதும் திருக்குறளில் வள்ளுவர் பெருமான் அருளி உள்ளார்.
திருச்சிற்றம்பலம் 🙏@EURONGREYJOY007@TruthAlone2
விவரங்கள் கீழே உள்ளது 👇
https://t.co/MWv8S4GCSE
It’s 12 midnight and I’ve officially lost count of how many times I’ve hit replay. Sivasri’s rendition of “Thondi Sariya” is absolute fire. The speed is insane, yet her precision is so flawless—she’s deeply locked into the rhythm it’s almost hypnotic. Love this. Listen in.
சப்த விடங்கத் தலங்கள்!
ஏழு வகை நடனங்கள் புரியும் சப்த விடங்கத் தலங்கள்!
சைவ சமய மரபில் "விடங்கம்" என்றால் உளியால் செதுக்கப்படாதது என்று பொருள்.
மனித கரங்களால் செதுக்கப்படாமல், இயற்கையாகவே தோன்றிய ஏழு புனிதமான மரகத லிங்கங்களை, சோழ மன்னன் முசுகுந்த சக்க��வர்த்தி இந்திரனிடமிருந்து பரிசாகப் பெற்று காவிரி டெல்டா பகுதி��ளில் பிரதிஷ்டை செய்தார்.
இவையே சப்த விடங்கத் தலங்கள் என்று போற்றப்படுகின்றன.
இந்த ஏழு ஊர்களிலும் ஈசன் வெவ்வேறு விதமான நடனங்களை (தாண்டவங்களை) ஆடுகிறார். அந்தத் தலங்களின் சிறப்புகள் இதோ:
1. திருவாரூர் - வீதி விடங்கர்: இங்கு இறைவன் 'அசபா நடனம்' ஆடுகிறார். இது மனிதனின் மூச்சுக்காற்றின் அசைவை உணர்த்தும் நுட்பமான நடனம்.
2. திருநள்ளாறு - நாக விடங்கர்: இங்கு ஈசன் பித்தரைப் போல ஆடும் 'உன்���த்த நடனம்' ஆடுகிறார். இது மனக்கவலைகளை நீக்கும் வல்லமை கொண்டது.
3. நாகப்பட்டினம் - சுந்தர விடங்கர்: கடல் அலைகள் ஓயாமல் வீசுவதைப் போன்ற 'வீசி நடனம்' இத்தலத்தின் சிறப்பு.
4. திருக்காராயில் - ஆதி விடங்கர்: இங்கு இறைவன் ஒரு சேவல் நடப்பதைப் போன்ற பாவனையில் 'குக்குட நடனம்' ஆடுகிறார்.
5. திருக்குவளை - அவனி விடங்கர்: வண்டு மலரைச் சுற்றிச் சுற்றி வருவது போன்ற 'பிருங்க நடனம்' இங்கு நிகழ்த்தப்படுகிறது.
6. திருவாய்மூர் - நீல விடங்கர்: தாமரை மலர் மெல்லிய காற்றில் அ��ைந்தாடுவதைப் போன்ற 'கமல நடனம்' இத்தலத்தின் அழகு.
7. வேதாரண்யம் - புவனி விடங்கர்: அன்னப் பறவை கம்பீரமாக அடி எடுத்து வைப்பதைப் போன்ற 'ஹம்சபாத நடனம்' இங்கு நிகழ்கிறது.
சப்த விடங்கத் தலங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்:
இத்தலங்களில் வீற்றிருக்கும் இறைவனைத் தரிசிப்பது ஆன்மீக ரீதியாகவும், லௌகீக ரீதியாகவும் பெரும் நன்மைகளைத் தரும்:
பாவ விமோசனம்: முசுகுந்த சக்கரவர்த்தி வழிபட்ட இ���்த லிங்கங்களை வணங்குவது தீராத வினைகளையும், முன்ஜென்ம பாவங்களையும் நீக்கும்.
தோஷ நிவர்த்தி: குறிப்பாகத் திருநள்ளாறு மற்றும் நாகப்பட்டினம் தலங்கள் நவகிரகத் தொடர்புடையவை என்பதால், ஜாதக ரீதியான தோஷங்கள் விலகும்.
மன அமைதி: பிரபஞ்ச இயக்கத்தைக் குறிக்கும் இந்த ஏழு வகை நடனங்களைச் சிந்திப்பது மனக் குழப்பங்களைத் தீர்த்து நிம்மதியைத் தரும்.
இந்த ஏழு தலங்களும் தமிழகத்தின் கலை ம���்றும் கலாச்சார அடையாளங்கள். வாய்ப்புள்ளவர்கள் இந்த 'சப்த விடங்க யாத்திரை' மேற்கொண்டு எம்பெருமானின் பேரருளைப் பெறுங்கள்!
தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!
நற்றுணையாவது அண்ணாமலையாரே
#சுத்தாத்வைத_சைவசித்தாந்தம்
சிவபெருமான் தம்மை அறியுமாறு கருணை செய்து தமது திருவேடமாகிய விபூதி ருத்ராக்ஷம் முதலிய தமது வடிவத்தை தமது அன்பர்களி��த்துக் கொடுத்து அவர்களிடமாக நின்று அங்கங்கே அறிவு விளக்குகின்றார். விபூதி ருத்ராக்ஷம் அணிந்து திருவைந்தெழுத்து ஓதும் மெய்யடியார்பால் சிவபெருமான் சாந்நித்தயமுற்றிருப்பர். கபடவேடமுடையார் விளங்கமாட்டார். அது தேவாரத்திலே,
"நெக்குநெக்கு நினைபவர் நெஞ்சுளே - புக்குநிற்கும் பொன்னார்சடைப் புண்ணியன் " என்று கூறப்பட்டவாற்றால் உணரப்படும்.
சிவபத்தரை மனிதன் என்று கருதாது சிவன் எனவே கருதி மனம் வாக்கு காயம் என்னும் மூன்றினாலும் வழிபடல் வேண்டும். சிவபத்தரை அவமதிப்பவர் தண்டிக்கப்படுவர். விபூதி ருத்ராக்ஷம் முதலிய திருவேடங்கள் உடைமை, சிவோகம் பாவனை, பிராசாதயோகஞ்செய்தல், தம்மின் இரண்டறக் இயைந்த சிவத்தோடு கலந்து நிற்கும் தன்மை ஆகிய காரணங்களால் சிவபத்தர் சிவபெருமான் எனவே வழிபடற்பாலர்.
பட்டணத்துப் பி��்ளையார் , "நல்லாரிணக்கமு நின்பூசைநேசமு ஞானமுமே யல்லாது நிலையுளதோ" என்றருளிச் செய்தார். "
"சிவனடியார் திருகூட்டத்தையே விரும்புவோம். பிள்ளைமைப் பருவத்தும் சிவனடியார் திருவடிப் பொடிகொண்டே வண்விளையாட்டுச் செய்யப்பெற்றோம் " என்றருளுகின்றார் ஸ்ரீ அரதத்தாசாரிய சுவாமிகள்.
குருலிங்கசங்கமம் என்னும் தலைப்பில் அச்சுவேலி சிவஸ்ரீ கு.வைத்தீஸ்வரக் குருக்கள் வரைந்த கட்டுரையின் ஒரு ���குதி...
#சுத்தாத்வைத_சைவசித்தாந்தம்
சிவபெருமான் சீவன்முத்தரிடத்து எவ்வாறு ஒன்றுபட்டு நிற்பன்?
இவ்வுலகில் சீவன்முத்தர் செயல் யாவும் தான் செய்ததாகக் கருதி இவர்களுக்குச் செய்யப்பட்ட செயல்களனைத்தையும் தனக்குச் செய்ததாகவே கொண்டு அவர்களுடன்
கூடித் தயிரில் நெய்போல விளங்குவன்.
இந்நிலைமை எவ்வாறு உண்டானது?
யான் எனதென்னும் அகங்கார மமகாரங்கள் அற்றபோது உண்டாகத் தக்கது. அன்றி நான் செய்தேன்
என்னும் ஆன்மாவுடன் அரன் அநாதி காலந்தொட்டு
அத்வைதப்பட்டிருப்பினும் அவர்களுக்குப் பிரகாசியான்.
அவ்வாறு பிரகாசியாதபோது கன்மம் வேறொரு சரீரத்தை
எடுக்கச்செய்து போகம் புச���க்க விருப்பத்தையும் உண்டாக்குமென அறிக.
இன்னோர் தன்மையை விளக்குக.
“மனத்தகத் தழுக்கறுத்த மௌனயோக ஞானிகள்
முலைத்தடத் திருப்பினும் பிறப்பறுத் திருப்பரே”
எனவும்,
“யான் என்னும் அழுக்கறாதார் வனத்தகத் திருப்பினும்
மனத்தகத் தழுக்கறார் ”
எனவும் உணர்க. அஃது எதுபோல எனில் அக்கினித்
தம்பனஞ் செய்வானை அனல் சுடாதவாறும் மந்திர சித்தபுருஷர்களை விடம் வாதனை பண்ணாதவாறும் ஆம்.
அற்றேல் பிராரத்த கன்ம மாத்திரம் எவ்வாறு
பொருந்தும்?
பெருங்காயம் இருந்த பாண்டமானது அக்காயவாசனை வீசப் பெறுவதுபோலும் குயவன் திகிரி கடஞ் செய்த
பின்னும் தானே நின்று மெல்லமெல்லச் சுற்றிக்கொள்வது
போலும் அறிக.
திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீன வெளியீடான சித்தாந்த சைவ வினாவிடை(1953) என்னும் நூலில் இருந்து.
நூலசிரியர் : திருஞானசம்பந்தசாமி பிள்ளை.
💫மறுபிறவி இல்லாத சிவன் ஆலயம்.🙇♀🍁
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே இந்த திருக்கோவிலில் நுழைய முடியும்.
மற்ற யார் நினைத்தாலும் இந்த ஆலயத்திற்கு செல்ல முடியாது..
செல்ல முடியாத அளவுக்கு
அவ்வளவு தடைகள் வரும்.
வருடத்தின் 365நாட்களும் சூரிய ஒளி சிவன் மீது விழும் ஒரு அதிசய கோவில் இது.
மகாசித்தர் அகத்திய முனிவரே இந்த கோயிலுக்கு வர பலமுறை முயற்சித்தும் வர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வருடத்திறக்கு ஒருமுறை நாகர் (நல்லபாம்பு) இங்கு உள்ள சிவனுக்கு வில்வ பூஜை செய்து தனது தோலை சிவனுக்கு மாலையாக அணிவித்து செல்லும்..
கலியுகத்தில் நடக்கும�� ஒரு அதிசயங்களில் இதுவும் ஒன்று..
இத்தல இறைவன் சிவனை பிரதோஷம் அன்று தரிசிப்பது ஆயிரம் மடங்கு புண்ணியம் தரும்.
ஸ்ரீ விஸ்வாத சுவாமி ஆலயம்.
ருத்ராக்ஷேவரேர் திருக்கோவில்.
இடம் :- தேப்பெருமா நல்லூர். கும்பகோணம்.
தஞ்சாவூர் மாவட்டம்.
ஓம் நமசிவாய.
""புல்லாகி, பூண்டாகி, புழுவாகி, மரமாகி
பல்விருகமாகி பறவையாய், பாம்பாய்
கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்
வல் அசுரராகி செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்
மெய்யே உன் பொன்னடிகள
#சுத்தாத்வைத_சைவசித்தாந்தம்
நமது சமயாசாரிய சுவாமிகளால் விளங்கப்
பட்ட மகத்துவங்கள் என்ன?
திருஞானசம்பந்த சுவாமிகள் திருப்பாச்சிலாச்சிராம
மென்னும் தலத்துக்கு எழுந்தருளியபோது ஒரு ராஜ
குமாரத்திக்குக் கண்டிருந்த குமரகண்டவளியாகிய வியாதியைத் தீர்த்தருளினார். திருமருகல் என்னும் ஸ்தலத்தில்
பாம்பு கடித்து இறந்துபோன ஒரு செட்டிப்பிள்ளை பிழைக்கும்படித் தேவாரம் ஓத அவன் விஷம்நீங்கிப் பிழைத்தான்.
கொங்கு தேசத்தில் திருக்கொடிமாடச் செங்குன்றூர்
என்னும் தலத்துக்கு எழுந்தருளி அ��்த்தநாரீசுவரரைத்
தரிசித்து அவ்விடத்தில் சிலநாள் வசித்திருக்கையில் அந்த
தேசத்தில் வருஷந்தோறும் காணுகிற நளிர்சுரம் திருக்
கூட்டத்தாரையும் தொடரவே சுவாமியைத் தொழுது
பதிகமோதித் தீர்த்தருளினார், இதுவுமன்றி அத்தேசத்தில்
இருப்பவர்களையும் அவ்வியாதி எப்போதுந் தொடாமல்
இருக்கும்படியருள் செய்தார்.
அத்தலத்துக்கு இப்போது திருச்செங்கோடென்று பெயர் வழங்குகின்றது: மதுரைக்கெழுந��தருளின போது பாண்டிய ராஜனுக்குக் கண்டிருந்த
சுரநோய் விப��தியினாலே தீரும்படித் திருநீற்றுப் பதிகம்
கட்டளையிட்டருளினார். அந்த ராஜனுக்கிருந்த கூன் நிமிரவும் பதிகமருளிச்செய்தார். திருக்கொள்ளம்பூதூரென்னும் ஸ்தலத்துக்கு அருகிலிருக்கிற ஆற்றிலே படகு தானே செல்லும்படிப் பதிகமோதியருளினார். திருவோத்தூர் என்னும் தலத்தில் ஆண்பனை பெண்பனையாய்க் காய்க்கும்படி பதிகம் அருளிச்செய்தார். திருமயிலை என்னும்
ஸ்தலத்தில் எலும்பு பெண்ணாகப் பதிக��ருளிச்செய்தார்.
திருநாவுக்கரசு சுவாமிகள் சமணசமயத்தார் சுண்ணாம்புக் காளாவாயிலிடச் சுவாமியைத் தியானித்துத்
தேவாரமோதிப் பிழைத்திருந்தார். பாலில் விஷத்தைக் கலந்து கொடுத்தார்கள்; அதையுண்டு பரமசிவனுடைய
திருவருளினால் பழுதுபடாதிருந்தார். இடரும்படி யானையைச் செலுத்தினார்கள் : அது சமணர்களையே கொன்றது.
கற்றறூணிற்கட்டிக் கடலில் போட்டார்கள்: பஞ்சாக்ஷரப்
பதிகமோதி ஸ்ரீ சாம்பமூர���த்தி கிருபையினால் அத்தூணே தெப்பமாக மிதந்துவரத் திருப்பாதிரிப்புலியூருக்குச் சமீபத்திலிருக்கிற கெடிலநதி முகத்துவாரத்தில் கரையேறினார்.
இதனால் அந்தத் தலத்தில் சுவாமிக்குக் கரையேறவிட்டவர் என்��ு பெயர். பாம்புகடித்து இறந்துபோன திங்களூர் அப்பூதி நாயனாருடைய மூத்தபிள்ளை பிழைக்கும்படித் தேவாரம் அருளினார்.
ஸ்ரீ சுந்தரமூர்த்திசுவாமிகள் திருப்புகலூரில் பதிகம் ஓதிச் செங்கல் பொன்னாகப்பெற்றுக்கொண்டார். விருத்தாசலத்தில் சுவாமி தமக்குக்கொடுத்த பொருளை எல்லாம் மணிமுத்தா நதியில் போட்டுத் திருவாரூர் கமலாலயத் தீர்த்தத்தில் எடுத்தருளினார், திருவையாறு என்னும் தலத்துக்குச் சேரமான் போனபோது காவேரிவெள்ளம் புரண்டு வரக்கண்டு பதிகம் பாடியருளிக் குறுக்கே அணைபோட்டது போல வெள்ளம் நிற்கச்செய்தார். புக்கொளியூர் அவிநாசியில் தாம் எழுந்தருளியதற்குச் சில வருஷங்களுக்கு முன் முதலையுண்ட பிராமணப் பிள்ளையைச் சென்ற வருஷங்களுக்குத் தக்க வளர்ச்சியுடன் முதலை உமிழும் படிப் பதிகமோதி யருளினார்.
மாணிக்கவாசக சுவாமிகள் அரிமர்த்தனபாண்டிய ராஜனிடத்தில் மந்திரித் த���ைவராயிருந்து அந்த ராஜனுடைய உத்தரவினால் குதிரை கொள்ளப் போம்போது ஸ்ரீ கைலாயபதி திருப்பெருந்துறையில் குருமூர்த்தமாய் எழுந்தருளி ஞானோபதேசம் செய்தருளப்பெற்றுத் தம் பொருட்டு மதுரையில் சொக்கநாதசுவாமி நரியைக் குதிரையாக���கிப் பாண்டியராஜனிடத்துக்குக் கொண்டு போகவும், பின்பு வைகைநதி வெள்ளம் பெருகிவரச் செய்யவும் அந்த நதிக்கரையை அடைக்கும்படி மண் சுமக்கவுமான மகத்துவங் காண்பித்தருளினார். சிதம்பரத்தில் வாதுசெய்த புத்தர்களைவென்று அந்தச் சமயத்துக்கு உட்பட்டிருந்த ராஜனுடைய குமாரத்தியாகிய ஊமைப் பெண் பேசும்படி மகத்துவங் காண்பித்தருளினார்.
திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீன வெளியீடான சித்தாந்த சைவ வினாவிடை(1953) என்னும் நூலில் இருந்து.
ஆசிரியர் : திருஞானசம்பந்தசாமி பிள்ளை.
பிட்டுக்கு மண் சுமந்த பெருமான்: மதுரையில் நடந்த மகா அதிசயம்!
மதுரை என்றாலே அது திருவிளையாடல்களின் ஊர். சிவபெருமான் தன் பக்தர்களுக்காகப் பலமுறை நேரில் வந்து அருள் புரிந்த தலம். அவற்றில் மிக உருக்கமானதும், இறைவனின் எளிமையைக் காட்டுவதுமான "பிட்டுக்கு மண் சுமந்த படலம்" பற்றி இந்தப் பதிவில் விரிவாகக் காண்போம்.
வைகை ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம்:
பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியன் மதுரையை ஆண்டு வந்த காலம் அது. ஒருமுறை மதுரையில் விடாது பெய்த மழையினால் வைகை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரைகள் உடையும் அபாயம் ஏற்பட்டதால், நகருக்குள் நீர் புகாமல் தடுக்க மன்னன் ஒரு கட்டளையிட்டான். அதன்படி, மதுரையில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்காரரும் ஆளுக்கு ��ரு குறிப்பிட்ட அளவு இடத்தைப் பிடித்து, மண்ணைப் போட்டு வைகை ஆற்றின் கரையை பலப்படுத்த வேண்டும்.
மூதாட்டி வந்தியின் பக்தி:
மதுரையில் வந்தி என்ற மூதாட்டி வாழ்ந்து வந்தாள். அவளுக்கு உறவினர்கள் யாரும் இல்லை. பிட்டு விற்று பிழைப்பு நடத்தி வந்த அவள், சிவபெருமான் மீது அசைக்க முடியாத பக்தி கொண்டவள். தினமும் தான் செய்யும் முதல் பிட்டை இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு, சிவனடியார்களுக்கு தானம் செய்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தாள்.
மன்னனின் கட்டளை வந்திக்கும் வந்தது. ஆனால், வயதான அவளால் மண் சுமக்க முடியாது. கூலிக்கு ஆள் அமர்த்தவும் அவளிடம் வசதி இல்லை. "சொக்கநாதா! உன் கட்டளையை நிறைவேற்ற என்னால் முடியவில்லையே" என்று அழுது இறைவனிடம் முறையிட்டாள்.
கூலி ஆளாக வந்த சிவபெருமான்
பக்தையின் குரலுக்குச் செவிசாய்த்த சிவபெருமான், அழுக்குத் துணி உடுத்தி, தலையில் ஒரு கூடையும் கையில் ஒரு மண்வெட்டியும் ஏந்திய கூலி ஆள் போல வேடம் தரித்து வந்தியின் முன் வந்து நின்றார்.
"அம்மா! உனக்காக நான் வேலை செய்கிறேன். எனக்குக் கூலியாக என்ன தருவாய்?" என்று கேட்டார் இறைவன்.
வந்தி மகிழ்ச்சியுடன், "மகனே! என்னிடம் காசில்லை, உதிர்ந்த பிட்டு மட்டுமே இருக்கிறது" என்றாள். அதற்கு அந்த மாயவன், "எனக்கு அதுவே போதும், அந்த உதிர்ந்த பிட்டை மட்டும் கொடு" என்று கூறிவிட்டு வைகை கரைக்குச் சென்றார்.
இறைவனின் லீலை:
கரைக்குச் சென்ற இறைவன், அங்கு வேலை ஏதும் செய்யவில்லை. வந்தி கொடுத்த பிட்டை வயிறார உண்டுவிட்டு, மரநிழலில் படுத்து உறங்���ினார். மற்றவர்கள் கடினமாக வேலை செய்தபோது, இவர் மட்டும் பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் மற்ற வேலைக்காரர்களை வம்பு இழுத்துக்கொண்டும் இருந்தார்.
மாலையில் வேலைகளைப் பார்வ��யிட மன்னன் வந்தான். அனைவரும் தங்கள் பகுதியை முடித்திருக்க, வந்திக்கு ஒதுக்கப்பட்ட இடம் மட்டும் மண் போடப்படாமல் அப்படியே இருந்தது. இதைக் கண்ட மன்னன் ஆத்திரமடைந்து, அங்கு நின்று கொண்டிருந்த கூலி ஆளை (இறைவனை) அழைத்து, பிரம்பால் அவர் முதுகில் ஒரு பலமான அடி கொடுத்தான்.
ஒரு அடி... அகிலமெல்லாம் விழுந்தது!
மன்னன் அடித்த அந்த ஒரு அடி, உலகிலுள்ள அனைத்து உயிர்கள் மீதும் விழுந்தது!
மன்னனின் முதுகில் தழும்பு ஏற்பட்டது.
அங்கிருந்த மக்கள், விலங்குகள் என அனைவர் முதுகிலும் அந்த அடி விழுந்தது.
கருவறையில் இருந்த சொக்கநாதரின் திருமேனியிலும் அந்த தழும்பு விழுந்தது.
அப்போது அந்த கூலி ஆள், ஒரு கூடை மண்ணை எடுத்து உடைந்த கரையில் கொட்டினார். என்ன ஆச்சரியம்! அந்த ஒரு கூடை மண்ணிலேயே உடைந்த கரை முழுமையாக அடைக்கப்பட்டது. அடுத்த நொடியே அந்த கூலி ஆள் மறைந்து போனார்.
தன்னை அடித்��து சாட்சாத் சிவபெருமானே என்பதை உணர்ந்த மன்னன் நடுங்கினான். தன் தவறை உணர்ந்து இறைவனை வேண்டினான். வந்திப் பாட்டியின் தூய பக்தியை உலகிற்கு உணர்த்தவே இறைவன் இந்த திருவிளையாடலை நிகழ்த்தினார். இறுதியில் வந்திப் பாட்டியை அழைத்துச் செல்ல சிவலோகத்திலிருந்து விமானம் வந்தது.
நீதி: இறைவன் பக்தியால் மட்டுமே வசப்படுவார். அன்போடு தரும் ஒரு பிடி பிட்டு, அகிலத்தையே ஆளும் இறைவனை மண் சுமக்க வைக்கும் என்பதற்கு இந்தக் கதையே சாட்சி.
உங்களுக்குத் தெரியுமா?
இன்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழாவின் போது, இந்த 'பிட்டுக்கு மண் சுமந்த' லீலை மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
சொக்கநாதரின் அருள் அ��ைவருக்கும் கிடைக்கட்டும்! 🙏🙏🙏
#பக்தி
#தமிழ்எங்கும்
#FortalezaTamizhan
🙏 *அருள்மிகு ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயில், திருவாருர்.*
*மார்கழி 30 (14-01-2026) புதன்கிழமை அன்று*
*தை மாத பிறப்பு (உத்தராயண புண்ணியகாலம்) முன்னிட்டு,*
*இரண்டாம்கால அளவில் இரவு 7 மணிக்கு மேல் ஸ்ரீ தியாகராஜ பெருமானுக்கு*
*"மகா அபிஷேகம்" நடைபெறும்.*
ஆரூரா தியாகேசா..! 🙏
#சுத்தாத்வைத_சைவசித்தாந்தம்
எழுவகைப் பிறப்பினுள்ளும் எந்தப் பிறப்பு அருமையுடையது?
பசுபதியாகிய சிவபெருமானை அறிந்து வழிபட்டு முத்தியின்பம் பெற்றுய்தற்குக் கருவியாதலால் மனிதப் பிறப்பே மிக அருமையுடையது.
மனிதப் பிறப்பை எடுத்த ஆன்மாக்களுக்கு எப்பொழுது அம்முத்தி சித்திக்கும்?
அவர்கள், தங்கள் தங்கள் பக்குவத்துக்கு ஏற்பப் படிமுறையினாலே, பிறவிதோறும் பெளத்தம் முதலிய புறச்சமயங்களில் ஏறி, ஏறி, அவ்வச் சமயத்துக்கு உரிய நூல்களில் விதிக்கப்பட்ட புண்ணியங்களைச் செய்வார்கள்; பின்பு அப்புண்ணிய மேலீட்டினாலே வைதிக நெறியை அடைந்து, வேதத்தில் விதிக்கப்பட்ட புண்ணியங்களைச் செய்வார்கள்; பின்பு அப்புண்ணிய மேலீட்டினாலே சைவ சமயத்தை அடைவர்கள்; சைவ சமயத்தை அடைந்து, சிவாகமத்தில் விதிக்கப்பட்ட சரியை கிரியை யோகங்களை விதிப்படி மெய்யன்போடு அநுட்டித்தவருக்குச் சிவபெருமான் ஞானாசாரியரை அதிட்டித்து வந்து சிவஞானம் வாயிலாக உண்மை முத்தியைக் கொடுத்தருளுவர்.
புறச்சமயங்களின் வழியே ஒழுகினவர்களுக்கு யாவர் பலங் கொடுப்பார்?
புறச்சமயிகளுக்கு, அவ்வவரால் உத்தேசித்து வழிபடப் படுந் தெய்வத்தைச் சிவபெருமானே தமது சத்தியினாலே அதிட்டித்து நின்று, அவ்வவ் வழிபாடு கண்டு, பலங் கொடுப்பார்.
ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் இயற்றிய சைவவினாவிடை - இரண்டாம் நூ��ில் இருந்து...
அருட் பேதம் அல்ல காரண���்…!
ஆதித்தன் தோன்ற வரும்பது மாதிகள் பேதித்த தம்வினை யாற்செயல் சேதிப்ப ஆதித்தன் தன்கதி ரால்அவை சேட்டிப்பப் பேதித்தப் பேதியா வாறுஅருட் பேதமே.
விளக்கம்:-
கதிரவன் உதித்ததும் பல பத்மங்கள் மலரும். சில பத்மங்கள் மலரா. கதிரவனின் ஒளி ஒரு போன்றே அவைகளின் மீது இருந்தாலும் மலர்களின் தன்மையின் வேறுபாட்டினால் இங்கனம் நிகழும். சீவர்கள் அடையும் மாறுபட்ட பக்குவமும் அவர்களின் மாறுபட்ட ���குதியினால் நிகழ்வதே அன்றி அவர்களுக்கு நேசத்துடன் ஈசன் புரியும் அருளில் உள்ள பேதத்தினால் அல்ல.
#தினம்_ஒரு_திருமந்திரம்
#நோக்கம்சிவமயம்
#வீரசைவம்
எம்பெருமான் ஆர்த்தி
தரிசனத்துடன் சிவ சொந்தங்களுக்கு காலை வணக்கங்கள் 🙏
சிவத்துடன் தங்கும்….!
தானே அறியான் அறிவிலோன் தானல்லன் தானே அறிவான் அறிவு சதசத்தென்று ஆனால் இரண்டும் அரனரு ளாய்நிற்கத் தானே அறிந்து சிவத்துடன் தங்குமே.
விளக்கம்:-
ஆன்மா தன் உண்மை வடிவைத் தானே அறிந்து கொள்ள முடியாது. அதே சமயம் ஆன்மா அறிவு அற்றவனுன் அல்லன். ஆன்மா தன் உண்மை வடிவத்தை அறிந்து கொண்ட பின்பு தான் அறிவும் அறியாமையும் கலந்தவன் எடன்றுஅறிந்து கொள்வான். அருள் சக்தியால் இந்த இரண்டு நிலைகளையும் அறிந்த பின்பு சிவத்துடன் பொருந்திப் பேரின்பம் அடைவான்.
#தினம்_ஒரு_திருமந்திரம்
#நோக்கம்சிவமயம்
#வீரசைவம்
எம்பெருமான் ஆர்த்தி தரிசனத்துடன் சிவ சொந்தங்களுக்கு காலை வணக்கங்கள் 🙏
#சுத்தாத்வைத_சைவசித்தாந்தம்
சைவசமயத்தின் மாண்பு :
திரு சாக்கிய நாயனார் பௌத்த சமயத்தைச் சார்ந்தவர்.
பல சமயங்களையும் ஆராய்ந்தார்.
உலக இயல்பைக் கொண்டே உண்மையை ஆராய்ந்தறிய முற்பட்டார். இவ்வுலகமானது மெய்,வாய்,கண், மூக்���ு, செவி என்னும் ஐம்பொறிகளாலும் தொட்டும்,சுவைத்தும், கண்டும், நுகர்த்தும் கேட்டும் நுகரப் படுவதேயாம். அவ்வாறு நுகரப்படுகின்ற இன்பதுன்பங்களோ ஒவ்வொரு உயிர்க்கும் தனித்தனி.
காரணம் என்ன? ஆராயலானார். காரணம் இன்றி எக்காரியமும் நிகழ்வதில்லை. ஒவ்வொரு உயிர்களும் அனுபவிக்கின்ற இன்பதுன்பங்களுக்கு காரணம் ஒன்று இருத்தல் வேண்டும். நாம் செய்கின்ற வினைகளுக்கு ஏற்பப் பயன் பின்னால் விளைவதைக் காண்பதால் இன்று அனுபவிக்கின்றதாகிய இன்பதுன்பங்களுக்குக் காரணம���ன வினை ஒன்று முன்னால் உண்டாகி இருத்தல் வேண்டும். எனவே ஒவ்வொரு உயிருக்கும் முன் செய்வினை என்பது ஒன்றுண்டு என்பது பெறப்படவே செய்வான் ஒருவன் உண்டு என்பதும் தெளிவாயிற்று.செய்வானாகிய உயிர்கள் இன்று அநுபவிக்கின்ற இன்பதுன்பங்களுக்கேற்ப செய்வினைகள் எக்காலம் செய்யப்பட்டன? இப்பிறவியிலேயே என்று துணிதற்கு இடமில்லை.
இப்பயன்களுக்கு ஏதுவாகிய செய்வினை நிகழ்ந்த முன்னைப் பிறவி உண்டு ���ன்பதையும் அதன் பயனே இப்பிறவி என்பதையும் இப்பிறவியால் செய்யும் வினையின் பயன் மறுமை என்பதையும் தெளியவே செய்வினை அதன் பயன் ஒன்றுண்டு என்பதையும் கண்டார். செய்வினை, செய்வான் அதன் பயன் என்னும் ஒன்றும் உன்டு என்று அனுபவத்தால் உறுதிப்படவே செய்வான் செய்தவினையை அறிந்து அதன் பயனைச் சேர்ப்பான் ஒருவன் வேண்டாவோ என்று சிந்திக்கலானார். உயிர்கள் தாமே தம் வினையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள��ம்; உயிர்களோடு வினையைச் சேர்ப்பான் ஒருவன் தேவையில்லை எனின்; எந்த உயிர்களும் துன்பத்தை விரும்புவதில்லை, துன்பப்பயனை நீக்கி இன்பப் பயனை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் என்பது துணிபு.
செய்வினை, செய்வான், அதன் பயன், சேர்ப்பான் எனும் நான்கும் எச்சமயத்தில் கூறப்படுகின்றன என்று ஆராயலானார். சைவ நெறி ஒன்றிலேயே அவை பொருந்த விளக்கப்பட்டிருத்தலைக் கண்டார். அதுவே மெய்��்நெறி எனக் கொண்டார். அந்த ஞான உணர்வு பெற்ற நிலையிலேயே சிவனருள் கைகூட சேர்ப்பானாகிய உண்மைப் பொருளும் சிவனே என்பதை உணர்ந்து அறிந்தார். உணர்ந்து அறிதல் என்பது அநுபவ அறிவு பெறுதல். இதனை ஸ்ரீ சேக்கிழார் பெருமான்,
செய்வினையுஞ் செய்வானும்
அதன்பயனுங் கொடுப்பானும்
மெய்வகையால் நான்காகும்
விதித்தபொரு ளெனக்கொண்டே
இவ்வியல்பு சைவநெறி
அல்லவற்றுக் கில்லையென
உய்வகையாற் பொருள்
சிவனெ��்றருளாலே யுணர்ந்தறிந்தார்
சாக்கிய நாயனார் புராணம் (5) இல் அருளிச் செய்தார்.
"செய்வானும் செய்வினையும் சேர்பயனும் சேர்ப்பவனும்
உய்வானும் உளன்என் றுணர்" என்று திருவருட்பயனில் ஸ்ரீ உமாபதிசிவம் அருளிச் செய்தார்.
இத்தகைய உணர்வைப் பெற்று சிவத்தை அடைதற்குச் சைவம் காட்டும் வழி நான்கு. அவை சரியை,கிரியை, யோகம், ஞானம்.
"புறச்சமய நெறிநின்றும் அகச்சமயம் புக்கும்
புகன்மிருதி வழிஉழன்��ும் புகலும்ஆச் சிரம
அறத்துறைகள் அவையடைந்தும் அருந்தவங்கள் புரிந்தும்
அருங்கலைகள் பலதெரிந்தும் ஆரணங்கள் படித்த���ம்
சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும் வேத
சிரப்பொருளை மிகத்தெளிந்தும் சென்றால் சைவத்
திறத்தடைவர் இதிற்சரியை கிரியா யோகம்
செலுத்தியபின் ஞானத்தால் சிவனடியைச் சேர்வர் "
ஸ்ரீ அருணந்தி சிவம் அருளிச் செய்த சிவஞான சித்தியார்.
இவ்வாறு படிப்படியாக அனைத்துயிர்களையும் அரனடியை அடைவிப்பது சைவத்திறம்.அவ்வாறு அடைவிக்கின்ற திறத்திலே சிவபெருமான் அவரவர் நிலைக்கேற்றவாறு உள்ளில் நின��றும் புறத்து நின்றும் உணர்த்தி உணர்த்தி, சிவாநுபவத்தை ஊட்டி ஊட்டி தன்னடியே சார்விக்கின்ற அருளாட்சி சைவ சமய மாண்பு.
1964ஆம் ஆண்டு ஜூலை மாத சித்தாந்தம் இதழில் "சைவசமயத்தின் மாண்பு" என்னும் தலைப்பில் சைவத்திரு சி குமரேசப் பிள்ளை அவர்கள் வரைந்த கட்டுரையின் ஒரு பகுதி..
#திருவிரிஞ்சை#வழித்துணைநாதர்சிவனடியார்_திருகூட்டத்தர் வருட வருடம் கடை ஞாயிறு திருவிழாவை முன்னிட்டு பல ஆயிரம் பக்���ர்கள் அடியார்களுக்கு அன்னதான சேவை செய்யுவர்கள்,இந்த வருட கடை ஞாயிறு திருவிழா வருகிற 13/12/25 & 14/12/25 அன்று வெகு விமர்சையாக நடைபெற உள்ளது, நிதி பற்றக்குறையால்
1/2
#சுத்தாத்வைத_சைவசித்தாந்தம்
திரு மெய்கண்ட தேவநாயனாரால் அருளிச் செய்யப்பட்ட சிவஞானபோத ��ூலிற் கூறப்படுவன கடவுள், உயிர், உலகம் என்னும் முப்பொருள்கள், இம்முப்பொருள்கள் பற்றியன்றி மக்களால் அறியப்படும் உண்மைகள் ஒன்றும் இல்லை. இந்த முப்பொருள்களைப் பற்றி அறிதற்கு அடிப்படையாக நூலறிவு வேண்டப்படும். நூலறிவு மாத்திரம் நூலைச் சொன்னவருடைய அறிவு ஆகுமேயல்லாமல் அதனை ஒதுகிறவர்களது அறிவு ஆகாது. நூலறிவு ஓதுகிறவர்களுடைய அறிவாக ஆதற்கு முதலாவது ஆராய்ச்சி அறிவு வேண்டப்படும். ஆராய்ச்சி அறிவுக்குத் துணையாயுள்ளன இலக்கண நூலும் அளவை நூலும் ஆம்.
உண்மையை அறிகிறவனுக்கு ஆராய்ச்சி அறிவு மாத்திரம் உண்மை அறிவைக் கொடுத்து விடாது. ஆராய்ச்சி அறிவில் ஐய ���ணர்வு திரிபு உணர்வுகளாகிய குறைபாடுகள் உள்ளன. ஆராய்ச்சி அறிவானது இந்தக் குறைபாடுகளினின்று முற்றிலும் நீங்கி, துணிந்து தெளிந்து அறிவதாகிய உண்மை அறிவாக ஆதற்கு, ஆராய்கிறவனுடைய உள்ளமானது தன் முனைப்பு (தற்போதம்) நீங்கித் தூய்மையுடையதாய் விளங்கல் வேண்டும். உள்ளத் தூய்மையாதற்குச் சாதனம் வேண்டப்படும். இவ்வாறு தூய்மையான உள்ளத்தில் இறைவனுடைய நிறைவு அறிவு (வியாபக அறிவு) சேர்ந்து வி��ங்கும்.இறைவனுடைய நிறைவு அறிவு ஆராய்வானுடைய தூய அறிவிற் சேர்ந்து அத்துவிதமாய் (இரண்டற) விளங்குதலாலே அவன் அறியும் அறிவே உண்மை அறிவாகும். இந்த உண்மை அறிவு மெய்யுணர்வு என்றும், திருவடி ஞானம் என்றும், பதிஞானம் என்றும் கூறப்படும்.
சிவஞான போத நூலானது முதல் ஆறு ��ூத்திரங்களை கடவுள், உயிர், உலகம் என்னும் முப்பொருள்கள் உண்மையையும், அவற்றின் இலக்கணத்தையும் கருதல் அளவை (அனுமானப் பிரமாணம்) ஆராய்ச்சி வழியில் உணர்த்தும்.
இவ்வாறு உணர்த்தப்படுவது பொது இலக்கணம் அல்லது தடத்த இலக்கணம் ஆகும். பின் ஆறு சூத்திரங்களும் தூய உள்ளமுடைய ஒருவர் தம்முள்ளே உணரும் உணர்வு வழியில் முப்பொருள்களின் உண்மை இலக்கணத்தை உணர்த்தும்.
இந்த உண்மை இலக்கணம் சொரூப இலக���கணம் என்றும் கூறப்படும். உண்மை இலக்கணம் உள்ளுணர்வில் உணர்தற்கு இலக்கண நூலும் அளவை நூலும் வேண்டப் படா.
வேண்டப்படுவன, ஒருவன் தானே செய்யும் சாதனங்களாகும். அச் சாதனங்கள் இவை என்பதும் அச்சாதனங்களால் அடையும் பயன்கள் இவை என்பதும், அப்பயனை அடைந்தோர் தன்மைகள் இவை என்பதும் பின் ஆறு சூத்திரங்களிற் கூறப்படும்.
ஒவ்வொரு சூத்திரமும் இரண்டு முதல் ஏழு அதிகரணங்களை உடையது. அதிகரணம் என்பது கூறு. ஒவ்வொரு சூத்திரத்திலுள்ள அதிகரணங்களும் ஒன்றுக் கொன்று ஏதுவும் பயனுமாய்ச் சங்கிலித் தொடர்போல் ஒரு பொருள் மேல் வருவன. ஒவ்வொரு அதிகரணத்துள்ளும் ஐந்து உறுப்புகள் அமைந்துள்ளன.
அவை
1 மேற்கோள்,
2 ஐயப்பாடு,
3 பிறர் கூறும் பக்கம்,
4 பிறர்பக்கத்தை மறுத்துரைக்கும் சித்தாந்தம்,
5 இயைபு என்பன.
மேற்கோள் என்பது அதிகரணத்தில் எடுத்துக் கூறப்படும் பொருள். ஐயப்பாடு என்பது அ��்படி எடுத்துக் கூறப்படும் பொருள் உண்டோ இல்லையோ என்று மனதில் எழும் ஐயம் (சந்தேகம்), பிறர் கூறும் பக்கம் என்பது சித்தாந்தவாதி அல்லாத பிறவாதிகள் கூறும் கருத்து.
பிறர் பக்கத்தை மறுத்துரைக்கும் சித்தாந்தம் என்பது அப்படிப் பிறவாதிகள் கூறுங்கருத்தை ஏதுக்களுடன் மறுத்து உரைத்துச் சித்தாந்தத் துணிவை நிலை நாட்டுதல்.
இயைபு என்பது அந்தச் சித்தாந்தத் துணிவுக்கு எடுத்துக் காட்டும் திருட்டாந்தம்.
செந்தமிழ்ச்செல்வி - 1930 9இதழில் சைவத்திரு மா.வே நெல்லையப்ப பிள்ளை அவர்கள் .