பொது வெளியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக வெளியான வீடியோ தொடர்பாக த.வெ.க அமைச்சர் சரத்குமார் பதவி விலக வலியுறுத்தி, தென்காசியில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. மற்றும் மாவட்ட மாணவரணி சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெற்றது.
#dmk#dmk4tn#tenkasi
பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்துவது போல வீடியோ வெளியிட்ட த.வெ.க. அமைச்சர் திரு. சரத்குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தி.மு.க. மாணவர் அணி சார்பில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்ததோடு, கழகத்தினரை அராஜகமாக கைது செய்திருக்கிறது தவெக அரசு.
தங்களை தாங்களே ஜனநாயகசக்தி என்று சொல்லிக்கொள்ளும் தவெக அரசு, எதிர்க்கட்சியினர் அறவழியில் போராட்டம் நடத்தவே அனுமதி மறுக்கிறது.
கைது செய்யப்பட்ட திமுகவினரை உடனடியாக விடுதலை செய்வதோடு, குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!
த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!
- இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம்
நீண்டகாலம் நீடிக்காது!
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!
“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!
மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. @VanniTamizhVCK அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்!
தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.
பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.
"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்"
"சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்"
என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?
மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?
கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?
மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?
இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?
#WhySilentCM?
@timesofindia
பெரம்பூர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எனத் தொகுதிதோறும் தி.மு.கழகத்திற்கு மக்களின் ஆதரவு அலை வீசுகிறது!
தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியிடம் அடகு வைத்த கூட்டத்திற்கு முடிவுரை எழுத, மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் எழுச்சி முழக்கமிட்டார். வஞ்சிக்கும் சக்திகளை வேரறுப்போம்; திராவிட மாடல் கோட்டையைத் தகர்க்க எவராலும் முடியாது!
#VoteForDMK
தூத்துக்குடி சிதம்பரநகர் பிரதான சாலையில் நமது கழகத்தின் வெற்றி வேட்பாளர் திருமிகு. @geethajeevandmk அவர்களை ஆதரித்து வாக்குச் சேகரித்தேன். நம் தூத்துக்குடி மக்களின் பேரன்பு எப்போதுமே என்னை பெரும் நெகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.
திராவிட மாடல் அரசின் தொடர் வளர்ச்சித் திட்டங்கள் மீண்டும் இந்த மண்ணில் தடையின்றித் தொடர, உங்கள் பேராதரவை 'உதயசூரியன்' சின்னத்திற்கு அளியுங்கள்!
#VoteForDMK
கலவரம் செய்வது மட்டுமே இவர்களது ஒரே அஜெண்டா!
பா.ஜ.க. கூட்டணி உள்ளே நுழைந்து உருப்பட்ட ஒரு மாநிலம் கூட இந்தியாவில் இல்லை.
சங்கிப்படை உள்ளே நுழைந்தாலே சர்வநாசம்தான்! பா.ஜ.க. ஒரு அழிவுசக்தி!
#VoteForDMK#SayNoToNDA#DMKWinningBig#KrishnagiriWithDMK
ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி பகுதியில், கழகத்தின் வெற்றி வேட்பாளர் திரு. @PmRamajeyam அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
தொழில் வளர்ச்சியில் முன்னோடியாக விளங்கும் ஓட்டப்பிடாரம் மேன்மேலும் வளர வாக்களிப்பீர் உதயசூரியனுக்கு!
#VoteForDMK