சினிமா நடிகரைப் பார்க்க அவரது பிரச்சார கூட்டத்திற்கு வந்துவிட்டு, கொத்து கொத்தாக இறதுபோன அந்த உயிர்களின் மரணத்தை இன்னமும் நம்மில் பலரால் கடந்துபோக முடியவில்லை. ஆனால், அதற்காக, படித்து, கடும் முயற்சி செய்து, அரசு வேலைக்காகவே திரும்பத்திரும்ப கோச்சிங் கிளாஸ் போய்க்கொண்டு, எக்ஸாம் எழுதிக்கொண்டு இருக்கும் ஆயிரக்கணக்கானோர், ஏன், லட்சக்கணக்கானோரை விடுத்து, அந்த 41 குடும்பங்களின் உறுப்பினர்களுக்கு அரசு வேலை என்பதெல்லாம் அதிகார துஷ்பிரயோகம், தமிழ்நாட்டு மக்களுக்கு செய்யப்படும் திரோகம். ஏற்கனவே அந்த குடும்பங்களுக்கு கிடைத்த சலுகைகள் - இன்னாள் முதல்வர் ஒவ்வொருத்தர் காலில் விழுந்ததாக சொல்லப்பட்டது, அரசு கொடுத்த பணம், இன்னாள் முதல்வர் கொடுத்த பணம் என்று எல்லாமே கிடைத்தாகிவிட்ட நிலையில், இதற்கு மேல் அரசு வேலை எதற்கு?
உங்களுக்கு எம்பதி இல்லையா, சிம்பதி இல்லையா என்று வராதீர்கள். இல்லை என்றே வைத்துக்கொள்ளுங்கள்.
அந்த குழந்தையை கூனிக்குறுக வைத்து அதை பொதுவெளியில் போட்டு அவமானப்படுத்தியிருப்பதை சும்மா விடக்கூடாது. அவமானப்படுத்தப் பட்டிருப்பது ஒடுக்கப்பட்ட சமூகங்களில் பிறந்த ஏழைக்குழந்தை(கள்). நமது நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான இத்தகைய குற்றங்கள் தொடர்பாக குறிப்பான சட்டங்கள் இல்லையென்றாலும், இது Bullying , Cyber bullying and sharing private image of a child போன்ற குற்றங்களில் வரும் என்றுதான் நினைக்கிறேன்.
போலீஸ் FIR போடமறுத்தாலும், நீதிமன்றம் கொண்டு சென்று இதை ஒரு பொது விவாதம் ஆக்கினால்தான் இந்த சைக்கோக்களை கொஞ்சமாவது கட்டிப்போட முடியும். யாராவது வழக்கறிஞர்கள் முயற்சி செய்யுங்களேன்.
அரசுப் பள்ளியில் ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் வெளியிட்டு மாணவியை அவமதித்த தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவைக் கண்டித்து கழக மகளிரணி சமூக வலைதளப் பொறுப்பாளர் மரு.யாழினி அவர்களது பத்திரிகையாளர் சந்திப்பு
அமைச்சர் கீர்த்தனா செய்தது Emotional Abuse & Harassment. சமூக புரிதலில்லாமல் குழந்தைகளிடம் அராஜகம் Victim card பிளே பண்ணாதீங்க, அந்த இடத்தில் அந்தக் குழந்தை தான் Victim
தவெக கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தங்களின் பிரச்சாரத்திற்கு குழந்தைகளைப் பயன்படுத்தி பெற்றோர்களைப் பிளாக் மெயில் செய்து வாக்களிக்க வைத்தனர். தற்போதும் தாங்கள் செய்யும் குற்றங்களை மறைக்க குழந்தைகளைக் கேடயமாக பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் தவெக அமைச்சர் சரத்குமார் அவர்கள் போதை பொருளை பயன்படுத்தியது போல ஒரு வீடியோ வெளியானது எதிர்ப்பு கிளம்பியதும் உடனடியாக அவரது குழந்தையை கேடயமாக்கி அதில் இருந்து தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறார். நிறைய தவெக நிர்வாகிகள் தொடர்ச்சியாக குழந்தைகளை இது போன்று எமோஷனலா அப்யூஸ் பண்ணிட்டு இருக்காங்க. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
நேற்று அமைச்சர் கீர்த்தனா அவர்கள் செய்ததும் அந்த மாதிரியான ஒரு ஹராஸ்மெண்ட்தான். அவங்க அரசு பள்ளிக்கு சென்று அவர்களின் கருத்தை நிரூபிப்பதற்காக எல்லோர் முன்பும் ஒரு மாணவியை அவமானப்படுத்தி இருக்காங்க. இது அமைச்சர் கீர்த்தனாவிற்கு அசிங்கமான செயலா இல்லையா.? அது தப்பாவே தெரியலையா அவங்களுக்கு.?
நீங்க அந்த வீடியோ பார்த்தாலே தெரியும் அவங்க அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்ற முன் முடிவுடன் அங்கு சென்றிருக்கிறார். அவர் சில ஆங்கில சொற்களுக்கு தமிழ் அர்த்தம் கேட்கிறார் . அதற்கு அந்த குழந்தைகள் பதில் அளிக்கும் முன்பே மாணவர்களுக்கு தெரியவில்லை பார்த்தீங்களா என பேசுகிறார். ஆசிரியர் தெளிவாக மாணவர்களிடம் கேட்கும் போது அதற்கு சரியான தமிழ் அர்த்தம் கூறுகிறார்கள் மாணவர்கள். ஒரு மாணவி எழுந்து எவர்லாஸ்டிங்னா கடைசி வரைக்கும் என பதில் அளிக்கிறார். மாணவி பதில் அளித்ததும், நாம் கூறியதை மாணவிகள் பொய்யாக்கி விட்டனர் என அமைச்சர் பதறுகிறார். ஒரு நல்ல அமைச்சராக இருந்தால் மாணவி பதில் அளித்ததை ஊக்கப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக மாணவி பதில் அளித்ததை தனக்கு நேர்ந்த அவமானமாகக் கருதி உங்க அப்பா என்ன செய்கிறார் என அடுத்த கேள்வியைக் கேட்கிறார். ஒரு சமூக புரிதல் உள்ள யாரும் எந்த மாணவர்களிடமும் உடனடியாக அப்பா பற்றி கேட்க மாட்டார்கள். எத்தனையோ குழந்தைகள் அப்பா இன்றி பள்ளியில் படிக்கின்றனர். அப்பாவின் பணியை வெளியே சொல்ல அசௌகரியமாக நினைக்கும் குழந்தைகள் உள்ளனர். இப்படி கேள்வி கேட்பது அவர்களை உளவியல் ரீதியாக கடுமையாக பாதிக்கும். சமூக புரிதல் இன்றி இப்படி கேள்வி கேட்பது அபத்தமான ஒன்று.
இன்னொன்று அமைச்சரிடம் ஆரம்பத்தில் அந்த மாணவி நார்மலாக நின்று மிக தைரியமாக பேசிக்கொண்டு இருக்கிறார் . ஆனால் அமைச்சரின் நடவடிக்கையால் அந்த குழந்தை பயந்து போய் கை கட்டி பேச ஆரம்பிக்கிறது. நம்ம திராவிட இயக்கத்தில் யார் முன்னாடியும் கை கட்டி நிக்க கூடாது என சொல்லிக் கொடுத்துள்ளோம். இவர்கள் பெரியாரை பெயரளவிற்கு கொள்கைத் தலைவராக வச்சிருக்காங்க ஆனா அந்த விவரம் எதுவுமே அவங்களுக்கு தெரியாது. அந்த குழந்தை பயந்து போய் நிற்கும் போது குழந்தையின் பயத்தை போக்கி இயல்பாக்க கூட அவர் முயற்சிக்கவில்லை. ஆனாலும் அந்த நேரத்தில் மறுபடியும் மறுபடியும் உனக்கு தெரியாது உனக்கு தெரியாது என்று மட்டம் தட்டும் எண்ணத்தோடு நடந்து கொண்டுள்ளார். இந்த சமூகத்தில் உனக்கு படிப்பு வராது படிப்பதற்கு தகுதி உனக்கு இல்லைன்னு சொல்லி படிக்க விடாம இருந்த இந்த சமூகத்துல படிப்பு எல்லாருக்குமானது என்ற கொள்கையை எடுத்து அதற்காக நூற்றாண்டு காலம் போராடி கல்வியை எல்லாரிடமும் கொண்டு போய் சேர்த்திருக்கோம். அப்படி இருக்கிற ஒரு சமூகத்தில் எந்தவிதமான வரலாறும் தெரியாது, என்னென்ன போராட்டங்கள் நடந்துச்சுன்னு எதுவுமே தெரியாம பள்ளிக்கு போய் குழந்தைகளை எல்லார் முன்னாடியும் மட்டம் தட்டி பேசுறீங்க அப்படின்னா உங்களோட நோக்கம் என்ன.?
நல்லா படிச்ச மேதாவிகளுக்கே நிறைய பேர் இருக்கிற இடத்துல பயம் ஏற்பட்டு சில வார்த்தைகள் அவங்களுக்கு மிஸ் ஆகதான் செய்யும் அதுக்குன்னு உடனே அவங்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று சொல்ல முடியாது இல்லையா.? அந்த குழந்தைக்கும் அப்படி தான் ஆசிரியர் கேட்டவுடன் சரியான பதில் அளிக்கிறார். அதற்கு முன்பு வரை தைரியமாக பதில் அளித்து வந்தவர் உங்க அப்பா என்ன செய்யறாங்க என கேட்டவுடன் அதற்கு கூலித்தொழிலாளர் என சொல்லும் போது அவரது குரல் தளர்கிறது. அந்த இடத்தில அந்த குழந்தையை சைக்கலாஜிக்கலா அமைச்சர் எப்படி ட்ரமடைஸ் பண்ணி இருக்காங்க என்று இப்ப வரை அவர்களுக்கு புரியவில்லை.
இன்றுமே அவங்கள தற்காத்துக்க தான் பேசுறாங்க, அவங்களோட தற்பெருமையை மட்டும் தான் பேசுறாங்களே தவிர்த்து அந்த குழந்தை மேல அவங்க உருவாக்கின பாதிப்பு என்ன என அவங்க கொஞ்சம்கூட யோசிக்கவே இல்லை.
இன்னொரு முக்கியமான விஷயம் இரண்டு கேள்விக்கு குழந்தை பதில் சொல்லிய உடன் அமைச்சர் தனக்கு இன்சல்ட் ஆனதாக நினைத்து ‘இதே கேள்வியை கடைசி பெஞ்ச் மாணவர்களிடம் கேட்டால் தெரியாது’ என கூறுகிறார். கடைசி பெஞ்சில் இருக்கும் மாணவர்களுக்கு அது தெரியாது என இவர்களுக்கு எப்படி தெரியும்.? முதல் பெஞ்ச் கடைசி பெஞ்ச் என்ற பாகுபாடு எல்லாம் இருக்க கூடாது என கற்பித்தல் முறையிலேயே மாற்றம் கொண்டு வந்து இப்போது அனைவரும் நன்றாக படிக்கும் சூழலை உண்டாக்கி வருகிறோம். இப்போது வந்து கடைசி பெஞ்ச் மாணவர்களுக்கு தெரியாது அவர்கள் படிக்க மாட்டார்கள் என்பது போல பேசி மாணவர்களை மட்டம் தட்டுகிறார். கடந்த திமுக ஆட்சியின் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இது மாதிரி ஒரு பள்ளிக்கு சென்றிருந்த போது அங்கு மாணவர்கள் மத்தியில் பேச தயங்கிய மாணவனை ஊக்கப்படுத்தி அவரது பயத்தை போக்கி பேசவைத்தார். அதன பிறகு அந்த மாணவனும் அழகா பேசுவார்.
உனக்கு படிப்பு வராது நீ முட்டாள் உனக்கு எதுவுமே தெரியாதுன்னு சொல்றது இந்த தவெக அரசு. உன்னால முடியும் நாங்க இருக்கோம் என தட்டிக்கொடுத்து படிக்க வைத்தது திராவிட மாடல் அரசு.
ரீல்ஸ் மோகம் ரீல்ஸ் ஆட்சினு சொன்னா மட்டும் அவங்களுக்கு கோபம் வருது ஆனா ரீல்ஸ்னால தான் நேற்று மருத்துவர்கள் , செவிலியர்கள் போராட்டம் செஞ்சு இருக்காங்க. தவெக நிர்வாகிகள் ரீல்ஸ் எடுத்து இடையூறு செய்வதால் எங்க வேலையைப் பார்க்க முடியவில்லை என கூறி இந்த ரீல்ஸ் கலாச்சாரத்தை நிறுத்த சொல்லி போராட்டம் செஞ்சிருக்காங்க.
தவெக நிர்வாகிகள் தொடர்ச்சியாக ஹாஸ்பிடல்ஸ், ஸ்கூல்ஸ் என்று அனைத்து இடங்களிலும் போய் ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் போட்டுட்டு இருக்காங்க. அவங்களுக்கு தைரியம் இருந்தால் கமிஷ்னர் ஆபீஸ்ல , கலெக்டர் ஆபீஸ்ல போய் ஆய்வு செய்து ரீல்ஸ் போடுங்களேன் பார்ப்போம். பள்ளிகள் , மருத்துவ மனைகளில் ரீல்ஸ் எடுத்து பதிவிடுவதை உடனே நிறுத்த வேண்டும்.
இப்போது அமைச்சர் கீர்த்தனா விக்டிம் கார்ட் பிளே பண்றாங்க இது எந்த விதமான மனநிலை அந்த இடத்தில் விக்டிம் அந்த குழந்தை தான். அந்த வீடியோவ அந்த குழந்தையின் பெற்றோர்கள் , நண்பர்கள் , உறவினர்கள் பார்த்து என்ன பேசுவாங்க நாளைக்கு அந்த குழந்தைக்கு என்ன கான்ஃபிடன்ஸ் இருக்கும். இந்த அரசால குழந்தைகளுக்கு கான்ஃபிடன்ஸ் பில்ட் பண்ண முடியலனா கூட பரவாயில்லை ஆனால் நாங்க கஷ்டப்பட்டு பில்ட் பண்ணி வச்சிருக்க அந்த கான்பிடன்ஸ தயவு செஞ்சு உடைக்காதீங்க.
திமுக ஆட்சியின் போது பள்ளிக்குழந்தைகளை பல்வேறு வகையில் ஊக்கப்படுத்தினோம். எண்ணும் எழுத்தும் , இல்லம் தேடி கல்வி, மாடல் ஸ்கூல்ஸ்னு அத்தனை திட்டங்கள் கொண்டு வந்து மாணவர்களின் லிட்ரசிய இம்ப்ரூவ் பண்ணி இருக்கோம். அவங்களை என்கரேஜ் செய்யனும் என்று கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற ஒரு விழாவை எடுத்து அவங்களைப் பெருமைப்படுத்தினோம். ஜாப்பனீஸ், பிரெஞ்சு, கொரியன் எல்லா லாங்குவேஜ்லயும் பேச வச்சிருக்கோம். அவர்களை கல்வி சுற்றுலாவிற்காக வெளிநாடு அழைத்து சென்றோம். அப்படி கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கின அந்த குழந்தைகளோட கான்ஃபிடன்ஸ தயவு செஞ்சு உடைச்சிராதீங்க. உங்க துறையில கவனம் செலுத்துங்க. ஆட்சிக்கு வந்து 50 நாள் ஆயிடுச்சு. இதுவரை என்ன இன்வெஸ்ட்மென்ட் இங்க கொண்டு வந்திருக்காங்க எனற தகவல் இல்லை.
கடந்த ஆட்சியில் தொழில் தொடங்க பணம் கேட்கபட்டது என புகார் சொன்னதற்கு ஆதராம் எங்கே என கேட்டபோது என் ட்வீட்ல ஒருத்தர் கூறினார் அதை ரீ டிவிட் செய்துள்ளேன் பாருங்க என சொல்லும் அளவு நாலேஜ் வச்சிருக்க மினிஸ்டர் எப்படி எங்க ஸ்டூடண்ட்ஸ பார்த்து இந்த மாதிரியான கேள்வி கேட்கலாம். குழந்தைகளை பார்த்து கேட்கறது ஹீரோயிசம்னு நினைச்சுட்டு இருக்கீங்க. அது ஹீரோயிசம் கிடையாது. 2000 கோடி கல்வி நிதி கொடுக்கலனாலும் எங்க குழந்தைகளோட கல்வியை நாங்க பார்த்துப்போம். அவங்களுக்கான திட்டங்களை நாங்க கொண்டு வருவோம்னு சொல்லி குழந்தைகளுக்காக தொடர்ச்சியான திட்டங்களைக் கொண்டு வந்து ஒன்றிய அரசை எதிர்த்து போராடுனார் எங்க கழக தலைவர் அவர்தான் ஹீரோ. ஹீரோயிசம் ரீல்ஸ்ல இல்ல. நிஜமா நீங்க இறங்கி மக்கள் சேவை பண்ணுறது தான் ஹீரோயிசம். சூட்டிங் எல்லாம் பிறகு பார்த்துக்கலாம். குழந்தைகளை தயவு செய்து இந்த மாதிரி ரீல்ஸ்களில் இருந்து கீப் தெம் அவுட்.
***
தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல! அமைச்சரின் பணியும் அதுவல்ல!
மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியப் பெருமக்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து Last Bench என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள்.
தப்போ சரியோ தைரியமாக பதில் சொன்ன அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும் 💐❤️
கடந்த திமுக ஆட்சியில் ஜாபர் சாதிக் என்ற நபர் NCB -ஆல் கைது செய்யப்பட்ட போது
ரூ.2000 கோடி போதை மருந்து கடத்தல் என எந்த ஆதாரங்களும் இன்றி ஊடகங்கள் அடித்து விட்டனர்
அந்த செய்தியை வெளியிட்ட ஒரே ஒரு ஊடகம் கூட அந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்து அறிந்திருக்க வாய்ப்பில்லை
அந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் எந்த இடத்திலும் ரூ.2000 கோடிக்கு கடத்தல் நடந்துள்ளதென NCB கூறவில்லை என்பதும் தெரியாது
உண்மையாவது..பொய்யாவது அப்போதைக்கு அடிச்சு விட
வேண்டியது தான்..
அதே தான் தற்போது,
ஊத்தங்கரை MLA விவகாரத்தில் நடந்து வருகிறது..ரூ.35 கோடி பண பேரம் என்பது தற்போது ரூ.180 கோடியாக மாறி,கார்பொரேட் கம்பெனி களமிறங்கியுள்ளதாக “தகவல்” என்ற கட்டத்திற்கு வந்துள்ளது
அப்போதாவது NCB-ல் பணியாற்றிய ஞானேஸ்வர்சிங் என்ற அதிகாரி முகத்தை காட்டினார்..
அவர் தான் வதந்திகளை திட்டமிட்டு பரப்பினார் என தெரியவந்தது
ஆனால், MLA புகார் விவகாரத்தில்
தகவல்களை பரப்பும் அதிகாரி யாரென்றே
செய்தியை வெளியிடும் ஒரே ஒரு நபருக்கு கூட தெரியாது..
உண்மையில்,
@chennaipolice_ -ல் MLA கொடுத்த புகாரை விசாரிக்கும்
Investigation Officer யார் ?
மேற்பார்வையிடுவது யார் ?
வழக்கின் விசாரணை விபரங்கள் சொல்லப்படுவது ஆணையருக்கா ?
தனி நபர்களுக்கா ?
ஒரே ஒரு நபரைக்கூட இன்னும் கஸ்டடி எடுத்து விசாரணை மேற்கொள்ளாத சூழலில்
எப்படி இஷ்டத்திற்கு தகவல்கள் கசிகிறது ?
எதிர்க்கட்சிகள் குறித்து மத்திய ஏஜென்சிகள் மூலமாக இஷ்டத்திற்கு பாஜக அரசு அடித்து விடுவது சகஜம்
அதே பாணியை தவெக அரசு தொடங்கியுள்ளதோ எனத் தோன்றுகிறது
உண்மையில் ஆட்சியை கலைக்க சதி செய்வோரை கண்டுபிடிப்பது @tnpoliceoffl காவல்துறையின் நோக்கமா ?
அல்லது தினமும் ஏதாவது வதந்தியை கட்டாயம் பரப்ப வேண்டுமென்பது தான் விசாரணை டீமிற்கு,உயரதிகாரிகள் கொடுத்துள்ள இலக்கா?
ஏதாவது ஒரு தொலைக்காட்சி
வதந்தியை ஒளிபரப்பினால் போதும்,,
மற்ற எல்லோரும் எல்லோருமே ஈயடிச்சான் காப்பி தான்
வாட்சப்பில் Forward ஆவதை ஒரு வரி மாறாமல் Live Report,Breaking News-ஆ
அடிச்சு தள்ள வேண்டியது தான்
No verification No cross check
ஒரு சென்சிட்டிவ்வான வழக்கின் விசாரணை குறித்த கூடுதல் தகவல்களை @chennaipolice_ முறைப்படி அறிக்கையாக வெளியிடுவது தானே சரியாக இருக்கும்
செய்ய மாட்டார்கள்..செய்யவும் முடியாது
MLA இளையராஜாவிடம் முதலில் பேசியது
பத்திரிகையாளர் ராஜேஷ் என்பதே FIR-ல் உள்ள தகவல்
ஆச்சர்யமாக உள்ளது,
ஒரு கார்பொரேட் கம்பெனி தாம்பரத்தை தாண்டி செயல்படாத சாதாரண பத்திரிகையாளரை ஆட்சிக்கலைப்பிற்காக பயன்படுத்தியதா ?
இல்லை செந்தில் பாலாஜி தரப்பினர்
நேரடியாக திருநாவுக்கரசு,ராஜேஷ் வகையறாக்களை பயன்படுத்தினரா ?
இதில் எது உண்மை ?
செந்தில் பாலாஜி,அசோக் சொல்லியே பேரம் பேசியதாக காவல்துறை 01-07-26 அன்று வெளியிட்ட பத்திரிகை செய்திக்கும்,,
கார்பொரேட் கம்பெனியே களமிறங்கியுள்ளதாக காவல்துறை கொடுத்து வெளிவந்துள்ள
தகவலுக்கும் எவ்வளவு முரண் !!
இந்த வழக்கில் தாக்கல் செய்யப்படும் பிரமாணப்பத்திரம் மற்றும் குற்றப்பத்திரிக்கையை படிப்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன்
முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களைக் கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு.
தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?
சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்!
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி திருவைகுண்டம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ‘தூயசக்தி ஆட்சி’, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை?
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா?
அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது?
வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து - விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர்.
“ஆணவம் அழிவிற்கு வழி!”
இப்படியே narrative செட் பண்ணி கிட்டு எப்படியும் ஆட்சியை தொடர்ந்து கிட்டு இருப்பாங்க...
அது பிரச்சனை இல்ல..
நாம என்னதான் கூவி கூவி சொன்னாலும் மக்களுக்கு கவர்ச்சியும் அந்த மாயை கண்ணை மறைக்கும்..
எப்படியும் உங்களுக்கு நிர்வாகம் திறன் கிடையாது பிஜேபி போல..
தமிழ்நாடு அதல பாதாளத்தில் போய் எல்லாம் சோத்துக்கு அலையும் போது தானா கண்ணு தெரிய போகுது..
என்ன ஒரு தலைமுறை நாசமா போச்சு அவ்வளவுதான்...
🥃 முதலில் மதுபானம் போன்ற நிறத்தில் இருக்கும் ஒரு ஜூஸை வேண்டுமென்றே ஊற்றி, "விஜய் பொதுவெளியில் மது குடிக்கிறார்" என்று எல்லோரையும் விமர்சிக்க வைப்பார்கள். பிறகு, சரியாக மூன்று நாட்கள் கழித்து அது சாதாரண ஜூஸ் பாட்டில்தான் என்ற உண்மையான வீடியோவை வெளியிட்டு, "பார்த்தீர்களா, விஜய்யை திட்டமிட்டு பொய்யாகப் பழிவாங்குகிறார்கள்" என்ற அனுதாப அலை பிம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவார்கள்.
🎯 இதன் மூலம் விஜய்யைக் கேள்வி கேட்ட, விமர்சித்த அனைவரையும் பொய்யர்கள் என்றும், விஜய் மட்டும்தான் உண்மையானவர், யோக்கியர் என்றும் மக்கள் குருட்டுத்தனமாக நம்பும்படி ஒரு மாயை கட்டமைக்கப்படும்.
💊 இந்தச் சாதகமான அலையைப் பயன்படுத்திக்கொண்டு, முன்பு உண்மையாகவே விஜய் காரில் மதுபாட்டிலுடன் சென்ற அசல் வீடியோவையும், தற்போது அமைச்சர் 'கில்லி' சரத் ஸ்டேடியத்தில் பவுடர் நுணுக்கியதாக வெளியான அந்த வைரல் வீடியோவையும் கூட, "அன்று விஜய் விஷயத்தில் பொய் சொன்னது போலத்தான், இன்று இதிலும் பொய் சொல்கிறார்கள்" என்று மிக சாதாரணமாக நியாயப்படுத்தி, அவர்கள் இருவரையும் உத்தமர்களாகக் காட்டத் துணிவார்கள்.
🕸️ அதாவது, ஒரு பொய்யான குற்றச்சாட்டைத் தாங்களே திட்டமிட்டு பரப்பி, பிறகு அதைத் தாங்களே ஆதாரத்தோடு மறுத்து, அதன் மூலம் தாங்கள் செய்த பழைய உண்மையான தப்புகளையும், தற்போதைய பெரிய குற்றங்களையும் கூட மொத்தமாகப் பொய்யென மக்களை நம்ப வைக்கும் இந்த ஆபத்தான அரசியல் தந்திரத்திற்குப் பெயர்தான் 'ரூட் மாஃபியா' (Route Mafia).
#Dude படத்திற்கு Vikatan Awards 2025-ல் ஏன் இவ்வளவு விருதுகள்? 🤔
#Dude படத்திற்கு Best Actor, Best Actress, Best Screenplay உள்ளிட்ட பல முக்கிய விருதுகள் வழங்கப்பட்டிருப்பது பல சினிமா ரசிகர்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த ஆண்டில் #Sirai, #TouristFamily, #Bison, #Kudumbasthan போன்ற படங்கள் நடிப்பு, திரைக்கதை, உணர்வுகள் மற்றும் கதைக்களம் என பல அம்சங்களில் தனித்துவமாக கவனம் பெற்றிருந்தன.
அப்படியிருக்க,
- Best Actor – ஏன் #Dude?
- Best Actress – ஏன் #Dude?
- Best Screenplay – ஏன் #Dude?
என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
ஒரு படம் வெற்றி பெறலாம். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறலாம். ஆனால் விருதுகள் வழங்கும்போது, அந்த ஆண்டின் அனைத்து படங்களையும் சமமான அளவில் மதிப்பீடு செய்து, நடிப்பு, திரைக்கதை, கதாபாத்திரத்தின் ஆழம், தொழில்நுட்பத் தரம், படைப்புத் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும்.
#Sirai, #TouristFamily, #Bison, #Kudumbasthan போன்ற படைப்புகளும் பல்வேறு பிரிவுகளில் வலுவான போட்டியாளர்களாக இருந்தன. அப்படியிருக்க, முக்கிய விருதுகளில் பெரும்பாலானவை #Dude படத்திற்கே சென்றிருப்பது பல ரசிகர்களுக்கு ஆச்சரியமாக உள்ளது.
இது #Dude படத்தின் வெற்றியை குறைத்து மதிப்பிடுவதற்காக அல்ல. ஆனால் இந்த ஆண்டில் மற்ற படைப்புகளுக்கும், கலைஞர்களுக்கும் இன்னும் அதிக அங்கீகாரம் கிடைத்திருக்க வேண்டுமென்ற எண்ணத்தை மறுக்க முடியவில்லை.
விருதுகள் ஒரு படத்தின் பிரபலத்தையோ, வசூலையோ மட்டும் பிரதிபலிக்காமல், அந்த ஆண்டின் சிறந்த கலைநயம், நடிப்பு மற்றும் படைப்பாற்றலையும் சமநிலையுடன் கௌரவிக்க வேண்டும். அதுதான் ஒரு விருதின் உண்மையான மதிப்பு.
#VikatanAwards2025
தினமும் ஒரு அதிமுக எம்எல்ஏ ராஜினாமா பண்ணிட்டு தவெகல இணையுறான், அதை சகஜமாகதான் எடுத்துக்குது பொதுஜனம்.. ஆனா தவெக எம்எல்ஏவை விலை பேசினர்னு ஒரு புரளியை கிளப்பி 5 பேரை கைது பண்ணி களத்தை தங்களுக்கு சாதகமாக வச்சிக்குறானுக..திமுக கூட்டணியையே களீபரம் பண்ணி புது கூட்டணி அமைக்குறானுக, அதை விடுத்து ஸ்டாலினோட பேச்சை பேசுப்பொருள் ஆக்குறானுக.. பொதுஜனமும் அதைதான் பேசுது.. ஓபனாக போதைப்பொருள் யூஸ் பண்ணிருக்கான் அமைச்சர் அதையும் எவனும் கண்டுக்கல..ஸோ இவர்களுக்கு இப்ப இதுதான் தேவை, இவர்களுடைய ஆட்சியைதான் விரும்புகின்றனர்.. போடுற எபோர்ட் பூரா வீண்தான்.. நாலரை வருசம் கம்னு இருந்து கடைசியாக களமிறங்கி ஜெயிக்கலாம்னா நாம ஜெ இல்ல.. சரி இப்பவே குரல் கொடுப்போம்னா எதுனா பண்ணி அதுக்கு எபக்ட் இல்லாம பண்ணிடுறானுக.. டெலிகேட் பொசிசன் ட்டூ டிஎம்கே… வாட் ட்டூ டூ
🎬 குதிரை பேரம் – Director's Cut 🍿
கவர்னரிடம் புகார் கொடுத்த சில மணி நேரங்களிலேயே...
"BREAKING... எங்களையும் வாங்க வராங்க!" என்ற புதிய அரசியல் டிரெய்லர்!
மக்கள் கேட்பது சில எளிய கேள்விகள்:
❓ஒரே ஒரு MLA மட்டும் புகார் கொடுத்தாராம்... மற்றவர்கள் யார்?
❓₹50 கோடி என்ற எண்ணிக்கைக்கு ஆதாரம் என்ன?
❓புகார் வந்த உடனே நடவடிக்கை... மற்ற புகார்களிலும் இதே வேகம் இருந்ததா?
❓விசாரணை முடியும் முன்பே Press Meet ஏன்?
❓ஆதாரங்கள் நீதிமன்றத்துக்கா... இல்லை முதலில் TV-க்கா?
❓மக்கள் கேட்டது ஆதாரம்... கிடைத்தது Press Meet. ஏன்?
❓இது உண்மையை கண்டுபிடிக்கும் விசாரணையா... இல்லை அரசியல் Narrative உருவாக்கும் முயற்சியா?
🎭 Climax
✅ Breaking வந்துவிட்டது...
❌ ஆதாரம் இன்னும் வரவில்லை.
✅ Press Meet வந்துவிட்டது...
❌ கேள்விகளுக்கு பதில் இன்னும் வரவில்லை.
மக்கள் தீர்ப்புக்கு முன், ஆதாரங்களை எதிர்பார்க்கிறார்கள் அதை கொடுத்து முடித்து விட்டு toolkit Active பண்ணுங்க.
கரூர்ல Drama பண்ண அப்ப தான் வசதியா இருக்கும்.
#குதிரைபேரம் #TamilNaduPolitics #BreakingNews #PoliticalSatire
குதிரை பேரத்திற்காக கைது செய்யப்பட வேண்டிய நபர் நடிகர் விஜய் தான்.
தனது ஆட்சியை தக்க வைக்கவும், பெரும்பான்மையை அதிகப்படுத்தவும் நடிகர் விஜய் ஈடுபட்ட குதிரை பேரங்களின் பட்டியல் பெரியது.
1.அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜிடம் கையெழுத்து வாங்கும் வீடியோ வெளியானது. அவரே பின் ஒப்புக்கொண்டார்.
2.அதிமுக 6 MLA கள் ராஜினாமா செய்துவிட்டு உடனே TVK கட்சியில் இணைகிறார்கள்.
3.வைகோ நேரடியாக பத்திரிக்கையாளரிடம், விஜய் தனது சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய சொன்னார், நானே இடைத்தேர்தலில் பரப்புரை செய்வதாக சொன்னார்.
இதெல்லாம் குதிரை பேரமில்லையென்றால் இதற்கு பெயர் என்ன?
திமுகவும், அதிமுகவும் இணைந்தாலும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை.
தவெக உறுப்பினர்களை தூக்குவதால் திமுகவுக்கு எந்தப் பயனும் இல்லை. ஆட்சி அமைக்கப் போவதுமில்லை.
நடிகர் நடத்தும் குதிரை பேரத்தை திசைதிருப்ப, மக்களிடம் அனுதாபம் தேட, மேற்கொள்ளப்பட்ட முயற்சியே 3 பேர் கைது.
நடிகர் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் புகாருக்கு கைது என்றால்,
டிடிவி தினகரன் புகாருக்கு,
வைகோ வெளிப்படையாக கூறியதற்கு,
யாரை கைது செய்வீர்கள்?
50 ஆண்டு காலம் அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரரான திமுக தலைவர் அரசியலை விட்டே விலக வேண்டுமென்று,
5 கட்சி மாறிய ஒரு அற்பப்புழு பேசுகிறான்.
நாவை அடக்கு!
அமமுக MLA வை நேரடியா தவெக தூக்குனப்ப அது தவறா தெரியல,
அதிமுக MLA க்கள் ரிசைன் பண்ணிட்டு தவெகக்கு வந்தப்ப ஒரு விமர்சனமும் எழல,
குதிரைப்பேரத்தை மறைமுகமா வைகோ தெரிவிச்சப்ப எந்த மீடியாவும் அதை ஆராயல,
2016ல 89 MLA வை வச்சிருந்தும் குறுக்குவழில எதுவும் செய்யாத திமுக, இப்போ 59 MLA வை வச்சு குறுக்குவழில ஆட்சியை பிடிக்க முயற்சி செய்யுதாம்.
அதை நாம நம்பணுமாம்..
சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கட்சி மாறி வாக்களிக்க தவெக எம்எல்ஏக்கள் பேரம் பேசப்பட்டதாக ஒரு செய்தி
107 எம்எல்ஏக்களில் 71 பேர் எதிர்த்து வாக்களித்தால் தான் அவர்களது பதவி தப்பும். இல்லை என்றால் அவர்கள் மீது கட்சி தாவல் சட்டம் பாயும்
இந்த அடிப்படை கூட தெரியாதவர்கள் யாரோ தான் இப்படி ஒரு முயற்சியை செய்து இருக்க வேண்டும்.
ஏற்கனவே அதிமுக எம்எல்ஏக்களில் 32 பேருக்கு பதிலாக 25 பேரை எதிர்த்து வாக்களித்த வைத்தது நினைவு இருக்கலாம்.
குதிரை பேரம் தொடர்பாக தவெக மீது திமுக இன்று புகார் கொடுத்து உள்ள நிலையில் இப்படி ஒரு பரபரப்பு கிளப்பப்பட்டு இருப்பதையும் கவனிக்க வேண்டும்.
தமிழ்நாடு இதுவரை கண்டு இராத மிக கேவலமான ஒரு அரசியல் விளையாட்டை நிகழ்த்தி கொண்டு இருக்கிறார்கள்
எதை சொன்னாலும் மக்கள் அப்படியே யோசிக்காமல் நம்பிவிடுவார்கள் என பலமான நம்பிக்கை இருக்கும் போல
இதில் இனி என்ன நடக்கிறது.. இந்த நாடகம் யாரால் எதற்காக நடத்தப்படுகிறது என்றெல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்
தவெக அரசை கவிழ்ப்பதற்காக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசுகிறார்கள் திமுகவினர் என அமைச்சர் @CTR_Nirmalkumar ஆதாரமற்ற குற்றசாட்டை முன் வைத்திருக்கிறார். அவருடைய பேட்டியில் “Only Sound No Substance”
நமக்கு எழும் கேள்விகள்.
1. ஊத்தங்கரை எம்எல்ஏ மட்டுமே புகார் கொடுத்திருக்கிறார்.
வேறு எந்தெந்த எம்எல்ஏக்கள் என்ற விவரத்தை வெளியிட்டிருக்க வேண்டுமா, இல்லையா?
2. பணம் ஏதாவது கைமாறியதா? தகவல் இல்லை.
சபா நாயகரை பதவி நீக்கும் தீர்மானம் ஏதாவது நிலுவையில் உள்ளதா?
இல்லை.
3.புகார் 29ஆம் தேதி கொடுக்கப்பட்டிருக்கிறது, இதே அவசரம் அமைச்சர் சரத் மேலெழுந்திருக்கும் புகார் மீது காட்டப்பட்டதா?
இல்லை
4. யாரோ ஒரு நபர் ஒரு எம்எல்ஏவை தொடர்பு கொண்டார் கைது செய்திருக்கிறீர்கள், ஏன் பின்னர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கை கைது செய்யவில்லை? ஆதாரம் ஏதும் இல்லை என்பதால் தானே?
5. மீடியாவில் ஆதாரமற்ற தகவல்களை பரப்பி, திமுக மீது அவதூறு செய்வது ஏன்?
6. நாளை ஊழலில் ஊறி திளைத்த 2 விஜயபாஸ்கர்களையும் கட்சியில் இணைக்க இது “டேக் டைவர்ஷனா?”
7. குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் முதல்வர் என வைகோ பொது வெளியில் போட்டுடைத்ததால் நடத்தப்படும் இமேஜ் க்ளினிங் முயற்சியா இது?
8. அதிமுகவின் 5 எம்எல்ஏக்கள் பதவி விலகல், குதிரை பேரம் தானே?
பதில் உண்டா?
TVK ஆட்சி நிலைக்காது என்று
திமுக நண்பர்கள் சொல்வது மக்களிடையே வெறுப்பைதான் தூண்டும்
திமுகவினர் வாயை பொத்திக் கொண்டு சும்மா இருந்தால் போதும்
TVK ஆட்சியால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு அவர்களாகவே
ஆட்சிக்கு எதிராக கொதித்து எழுவர்
TVK ஆட்சியின் கேவலங்களை மக்களிடம் கொண்டு செல்வோம்