தமிழ்நாட்டுக்கு வர்ற முதலீடு எல்லாம் எப்படிடா ஆந்திராவுக்கு போகும்
70 வருஷமா இருக்கிற (Royal Enfield) எப்படி உங்க ஆட்சியில் வேறு மாநிலத்துக்கு போகுது
வாக்களித்த தமிழக மக்களுக்கு பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத ஆட்சி?
தொழில் முதலீட்டார்களை ஈர்க்க ரீல்ஸ் போட்ட தெல்லாம் எதற்கு?
அப்படியே ஆந்திராவுக்கு போய்டுங்கன்னு சொல்லவா?
மேகதாதுவில் கர்நாடக அரசு அணைக் கட்டுவதற்கு எதிரான தீர்மானத்திற்கு முழு ஆதரவை அதிமுக அளிக்கிறது...
- கழக பொதுச்செயலாளர் Edappadi K. Palaniswami ஐயா அவர்கள்...
#AIADMK_TRY
ஜெயிச்சிருந்தா தள்ளி நின்னுருப்பேன், But இப்ப இந்த நிலையில அதிமுகவுல இணைஞ்சு வேலை செய்யலாமா ணு நேத்து இருந்து ஒரு யோசனை. சரியா தப்பா ணு தெரியல.
ஆனா ஒரு இயக்கத்தை ஆளுங்கட்சி விழுங்கத் துடிக்கிற இந்த Worst phase ல, அவங்க கூட நிக்கிறது ஒரு தனி கிக் தானே!
பாப்போம்.
”தொடர் தோல்வி பழனிசாமினு விமர்சனம் பண்ணவங்க எல்லாம் தோல்வியை சந்தித்தார்கள்.. நான் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்துல ஜெய்ச்சிருக்கேன்”... இபிஎஸ் பதிலடி
#EPS | #ADMK | #PolimerNews
இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், எளிமை, நேர்மை மற்றும் உண்மையை தன் அடிப்படை குணங்களாக கொண்டிருந்த அப்பழுக்கற்ற அரசியல்வாதியுமான ஐயா கக்கன் அவர்களின் பிறந்த தினம் இன்று
தன்னுடைய அசாத்திய திறமையாலும், அளப்பரிய உழைப்பாலும் கிடைத்த பல்வேறு பதவிகளின் மூலம் அரசியல் உலகின் உச்சத்தை அடைந்தாலும் தன் உயிர் பிரியும் நிலையிலும் எளிமையை மட்டுமே அடையாளமாகக் கொண்டிருந்த ஐயா கக்கன் அவர்கள் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் ஆற்றிய பணிகளை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்
எனது மகன் மிதுன் அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அடிப்படை உறுப்பினராக மட்டும் தான் இருக்கின்றார். அவர் எந்தப் பதவியிலும் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன்.
என்னுடைய மகன் அரசியலுக்கு வரமாட்டார்!
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
அதிமுக தொடர்ந்த குதிரை பேர வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு இதோ:
1.விளக்கம் அளிக்கும்படி சபாநாயகருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டவில்லை என்ற செய்தி தவறானது.
சபாநாயகருக்கு ( R.1 ) நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது!
2.அதிமுக சார்பில் இடைக்கால தடை கேட்டு நீதிமன்றத்தால் அது மறுக்கப்பட்டது என்பதும் பொய்! 29ம் தேதிக்குள் சபாநாயகர் விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றமே குறுகிய கால அவகாசம் அளித்ததால் இடைக்கால தடை கேட்டு அதிமுக தரப்பில் வலியுறுத்தவில்லை!
@AIADMKOfficial@TVKVijayHQ
#குதிரைபேரம்
தவெக அரசு வெளியிட்டது வெள்ளை அறிக்கை அல்ல ஏற்கனவே எல்லோராலும் அடித்துத் துவைத்து வெளுத்துப் போன அறிக்கையே!
தமிழக அரசின் நிதிநிலை குறித்து "வெள்ளை அறிக்கை" வெளியிடுகிறோம் என்ற பெயரில், தமிழ்நாடு நிதியமைச்சர் வெளியிட்டிருப்பது புதிய உண்மைகளையோ, புதிய தீர்வுகளையோ கொண்ட ஆவணம் அல்ல. கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலக் கடன் இரு மடங்காக உயர்ந்திருப்பது, இதுவரை இல்லாத அளவுக்கு வருவாய்ப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது, மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வளர்ச்சி மந்தமடைந்திருப்பது போன்ற தமிழக மக்கள் ஏற்கனவே நன்கு அறிந்துள்ள உண்மைகளுக்கு புதிய அட்டை போட்டு மீண்டும் வெளியிட்டிருக்கும் அறிக்கையாகவே இது அமைந்துள்ளது.
தமிழகத்தின் நிதிநிலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எப்படி சரிசெய்யப் போகிறார்கள், அதற்கான தெளிவான செயல் திட்டங்கள் என்ன, வருவாயைப் பெருக்க அரசு எத்தகைய புதிய முயற்சிகளை மேற்கொள்ள உள்ளது என்பதற்கான பதில்கள் இந்த வெள்ளை அறிக்கையில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்புக்கு ஏமாற்றமே பரிசாக கிடைத்துள்ளது.
தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும்?
தவெக ஆட்சியில் மாநிலத்தின் நிதிநிலையைச் சீரமைக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன?
வருவாய்ப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான செயல் திட்டங்கள் என்ன?
மாநிலத்தின் சொந்த வருவாயைப் பெருக்க என்ன புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன?
இப்படி செய்தியாளர்கள் எழுப்பிய அனைத்துக் கேள்விகளுக்கும் நிதியமைச்சர் அளித்த ஒரே பதில் "it will take some time" தான்.
வருவாயைப் பெருக்குவதற்கான புதிய ஆக்கப்பூர்வமான திட்டங்களை அறிவிக்காமல், அரசுத் துறைகளில் உள்ள leakage-களைத் தடுக்க வேண்டும் என்பதையே பிரதான தீர்வாக முன்வைத்திருப்பது, எதிர்காலத்தில் வரிகளையும் கட்டணங்களையும் உயர்த்தும் பாதையை தவெக அரசு தேர்வு செய்துள்ளதோ என்ற அச்சத்தை தமிழக மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
ஒரு வெள்ளை அறிக்கை என்பது பிரச்சினைகளைப் பட்டியலிடுவதோடு நிற்காமல், அவற்றுக்கான தீர்வுகளையும், காலக்கெடுவுடன் கூடிய செயல் திட்டங்களையும் முன்வைக்க வேண்டும். ஆனால், தவெக அரசு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் தெளிவான தொலைநோக்குப் பார்வையும் இல்லை; நம்பிக்கையூட்டும் செயல்திட்டங்களும் இல்லை; காலவரையறையுடன் கூடிய உறுதிமொழிகளும் இல்லை.
எனவே, தவெக அரசு வெளியிட்டிருப்பது வெள்ளை அறிக்கை அல்ல; ஏற்கனவே எல்லோராலும் அடித்துத் துவைத்து வெளுத்துப் போன உண்மைகளையே புதிய அட்டையில் வெளியிட்டிருக்கும் அறிக்கையாகும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
தமிழ் நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும்; அன்றாடம் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவும்; தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிடவும், த.வெ.க. அரசை வலியுறுத்தி செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்!
நாள் : 20.6.2026 - சனிக்கிழமை மாலை 5 மணி
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு
Guys it's more than 12 hrs ..Surgery is still going on...
Just left from 1 lakh rupees...ICU charges is way too costlier in PSG hospital...Please do share and contribute
Please guys...Please do share🥺
Gpay : +91 99641 17119
NAME:Maha Srinivas
Banking name - Mahalakshmi
"வளர்த்த இயக்கத்தை குறை சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கிறது..? அண்ணன் எடப்பாடியார் போட்ட பிச்சை தான் உனக்கு எம்.பி. பதவி.. மறந்து விடாதே.. யார் குடும்ப அரசியல் நடத்துறாங்க..?"
பா.ம.க துணையோடு அ.தி.மு.க வெற்றி பெற்றதாக சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்துக்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆவேசம்
#ADMK | #PMK | #AgriKrishnamoorthy | #CVShanmugam | #PolimerNews
தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் குறு, சிறு விவசாயிகள் பெற்றுள்ள ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், ரூ.75,000-க்கு மேல் பெற்றுள்ள பயிர்க்கடனுக்கு ரூ.35,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் அறிவித்திருப்பது, தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் முரணானதாகும்.
முன்னதாக, RBI வழிகாட்டுதல்கள் மற்றும் அரசின் நிதிநிலையை காரணம் காட்டி ரூ.50,000 வரை மட்டுமே பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதற்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து நடத்திய போராட்டங்களும், பல்வேறு அரசியல் கட்சிகள் எழுப்பிய வலுவான எதிர்ப்பின் காரணமாகவே தற்போது அந்த வரம்பு ரூ.50,000-லிருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இது பிரச்சினைக்கு முழுமையான தீர்வாக அமையாது.
காலநிலை மாற்றம், எதிர்பாராத இயற்கை பாதிப்புகள், அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டுகள் உள்ளிட்ட காரணங்களால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், தாங்கள் பெற்றுள்ள பயிர்க்கடன் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை இருப்பதாகவும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தள்ளுபடிக்குப் பிறகும் மீதமுள்ள தொகையை செலுத்த இயலாத நிலையில் இருப்பதாகவும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், தற்போதுள்ள பயிர்க்கடனை முழுமையாகச் செலுத்தினால் மட்டுமே புதிய பயிர்க்கடன் கிடைக்கும் என்ற சூழல் நிலவுவதால் குறுவை சாகுபடியை தொடங்க முடியாத நிலை உருவாகி, விவசாய உற்பத்தியும் கேள்விக்குறியாகியுள்ளது.
மிக முக்கியமாக, தேர்தலுக்கு முன்பு தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்; 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களின் பயிர்க்கடனில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்று தெளிவாக வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், விவசாயிகளின் போராட்டத்திற்கு பின்னர் தள்ளுபடி வரம்பை சிறிது சிறிதாக உயர்த்துவது, விவசாயிகளை ஏமாற்றும் செயலாகும்.
போராடினால்தான் உரிமைகளைப் பெற முடியும் என்ற நிலை தொடருமானால், "மாற்றம்" கொண்டு வருவதாக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் என்ன? மக்களின் நலனுக்காக ஆட்சி செயல்பட வேண்டுமே தவிர, ஒவ்வொரு கோரிக்கைக்கும் மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய சூழல் ஏற்படக் கூடாது.
எனவே, தமிழக விவசாயிகளை வஞ்சிக்காமல், தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் குறு, சிறு விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனை முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனில் 50 சதவீதத்தையும் தள்ளுபடி செய்து உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசையும், முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
கும்பகோணத்தில் அஇஅதிமுக தொண்டர்களின் உழைப்பால் வென்று கவுன்சிலர் ஆன ஆதிலட்சுமி, சமீபத்தில் குதிரை பேரக் கட்சியில் சேர்ந்த நிலையில், அஇஅதிமுக தொண்டர்கள் வியர்வை சிந்தி கொடுத்த கவுன்சிலர் பதவியை நீக்கக் கோரிய கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. ராம. ராமநாதன் அவர்களின் வீட்டைச் சூழ்ந்து அடியாட்களோடு தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
வெறும் கவுன்சிலர் பதவி சுகத்திற்காக இந்த இயக்கத்தின் தொண்டர்ளின் உழைப்பைச் சுரண்டி எடுத்துவிட்டு, இன்றைக்கு அதிகாரம் எங்கே இருக்கிறது என தேடி செல்பவர்கள், இந்த கட்சி கொடுத்த பதவியை துறந்துவிட்டு செல்வதில் என்ன தயக்கம்? இப்படி இன்னொரு கட்சி கொடுத்த பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பது ஒட்டுண்ணித்தனம் இல்லையா?
கழகத்தின் மீதுள்ள உணர்வோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கேட்ட கேள்விக்கு ஜனநாயக ரீதியாக பதில் சொல்ல வக்கில்லாமல், ஆட்களை ஏவி வீட்டை மறித்து தாக்குவது தான் இன்றைய ஆளுங்கட்சி அங்கீகரிக்கும் மாற்று அரசியலா?
எதிரிகள் தீர்மானிக்கும் ஆயுதங்களை எடுக்க எங்களுக்கும் நேரம் ஆகாது. மாண்புமிகு அம்மா அவர்களின் வளர்ப்பு நாங்கள் என்பதால் அரசியல் நாகரீகத்தோடு எதையும் எதிர்கொள்ளும் உறுதியோடு இருக்கிறோம்.
வீணாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு நிர்வாகியையோ, தொண்டரையோ சீண்டிப் பார்க்க நினைத்தால், அதற்கான உரிய அரசியல் எதிர்வினைகளை இன்றைய கத்துக்குட்டி ஆளுங்கட்சி சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறோம்.
கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. ராம ராமநாதன் அவர்கள் வீட்டை மறித்து தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சுமை தூக்கும் ஒட்டகத்தை அதன் முதலாளி ஏமாற்றுவதுபோல், தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் TVK அரசுக்கு கண்டனம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்