இது கேரள மாநிலம் வைக்கம் சிவன் கோயிலில் (வைக்கத்தப்பன் கோயில்) இருந்து... விளக்கை ஏந்திய ஒருவர் "இரவு உணவில்லாமல் யாராவது இருக்கிறார்களா" என்று கேட்கிறார்... இரவில் கோயில் மூடுவதற்கு முன்பு கோவிலில் இது ஒரு வழக்கமான தினசரி வழக்கம்... வைக்கத்தில் அனைவரும் இரவு உணவு சாப்பிட்டார்களா என்று பார்க்க சிவபெருமான் தனது பிரதிநிதியை அனுப்புகிறார்... பிறகு இறைவன் மட்டுமே தூங்கச் செல்வார்... இந்த சடங்குகள் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன, அந்த நேரத்தில் யாராவது உணவுக்காக வந்தால் அவருக்கு "ஊட்டுப்புர" (சமையலறை) எடுத்துச் செல்லப்பட்டு உணவு ..பிரசாதம் வழங்கப்படும்... பிறகு கருவறை மட்டும் மூடப்படும்..🙏
என்ன ஒரு உணர்வு...
ஓம் நமசிவாய...🙇♂️🙏
கடந்த 1962 ஆம் ஆண்டு வெளியான சினேகதீபம் எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஒன்னாம் தரம் பலூன் தரான், ஒரு நல்ல பிபி தரான்’ எனும் பாடல் 63 வருடங்கள் கழித்து இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது...
டிரைவிங் லைசென்ஸ் தொலைந்துவிட்டதா? இலவசமாக ஆன்லைனில் உடனடியாக பெறுவது எப்படி?
டிரைவிங் லைசென்ஸ் தொலைந்துவிட்டால், சில நிமிடங்களில் டிஜிட்டல் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வாகனம் ஓட்ட, உங்களிடம் ஓட்டுநர் உரிமம் (Driving License) இருக்க வேண்டும். இருப்பினும், உங்கள் டிரைவிங் லைசென்ஸை மறந்துவிடுவது அல்லது தொலைத்துவிடுவது எதிர்பாராத நேரங்களில் நடக்கும். இந்த சூழல் உங்களுக்கும் மிகவும் தர்மசங்கடமான நிலையாக இருக்கும்.
இருப்பினும் இப்படியான இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும் உடனடியாக அதில் இருந்து நீங்கள் மீள முடியும். டிரைவிங் லைசென்ஸை நீங்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உங்கள் ஓட்டுநர் உரிமத்தின் நகலை உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய இரண்டு வழிகள் உள்ளன.
1. ஒன்று டிஜிலாக்கர் (Digi Locker)
2. இன்னொன்று போக்குவரத்துறை இணையதளம்.
இந்த இரண்டில் இருந்து உங்கள் டிரைவிங் லைசென்ஸை பதிவிறக்கம் செய்வது எப்படி?
Digi locker:-
DigiLocker என்பது அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட இணையதளம் ஆகும்.
இது குடிமக்கள் பல்வேறு முக்கிய ஆவணங்களின் டிஜிட்டல் பதிப்புகளை பாதுகாப்பாக சேமிக்கலாம். டிஜிலாக்கரில் ஓட்டுநர் உரிமத்தைச் சேர்க்க, முதலில் டிஜிலாக்கர் செயலியைப் (Mobile App) பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
இந்த செயலியை பதிவிறக்கிய பிறகு, உங்கள் ஆதார் அட்டை அல்லது மொபைல் எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும். இதனையடுத்து நீங்கள் "Documents" பகுதிக்குச் சென்று "Driving license" என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.
அப்போது, உங்கள் ஓட்டுநர் உரிம எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும். உங்கள் ஓட்டுநர் உரிமத்தின் டிஜிட்டல் பதிப்பு DigiLocker-ல் சேர்க்கப்படும்.
இவ்வாறு செய்து வைத்திருந்தால் உடனடியாக ஆபத்து காலத்தில் இந்த ஆப்சனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
2. போக்குவரத்து சேவைகள் இணையதளம்:
போக்குவரத்து சேவைகள் இணையதளத்திற்குச் சென்று உங்கள் ஓட்டுநர் உரிமத்தின் நகலை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம். அந்த இணையதளத்துக்கு சென்ற பிறகு நீங்கள் "Online Services" பகுதிக்குச் சென்று "Driving License" என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
உங்கள் ஓட்டுநர் உரிம எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும். உங்கள் ஓட்டுநர் உரிமத்தின் டிஜிட்டல் பதிப்பு பதிவிறக்கம் செய்யக் கிடைக்கும்.
கட்டணம் செலுத்த வேண்டியதில்லை (No Fees)
ஓட்டுநர் உரிமத்தின் ஆன்லைன் நகலை பதிவிறக்கம் செய்ய நீங்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
உங்கள் ஓட்டுநர் உரிமத்தின் ஆன்லைன் நகல் செல்லுபடியாகும்.
காவல்துறை மற்றும் பிற அதிகாரிகளால் இதனை நிராகரிக்க முடியாது.
நீங்கள் செய்ய வேண்டியவை:
உங்கள் ஓட்டுநர் உரிமத்தின் டிஜிட்டல் பதிப்பை உங்கள் தொலைபேசி அல்லது கணினியில் பதிவிறக்கம் செய்து வைக்கவும். உங்கள் ஓட்டுநர் உரிமத்தின் டிஜிட்டல் பதிப்பை ஜெராக்ஸ் எடுத்து உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.
உங்கள் ஓட்டுநர் உரிமத்தின் டிஜிட்டல் பதிப்பை யாருடனும் பகிர வேண்டாம். ஓட்டுநர் உரிமத்தின் அசல் கார்டு தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து பெற வேண்டும்.
#KHByte #DrivingLicense #Driving #Download #Online #Process
#ShivFlix - Celebrating Talents - இசையமைப்பாளர் சிற்பி ❤️
பெயருக்கு ஏற்றார் போல பல Hit பாடல்களை செதுக்கி இருப்பார் சிற்பி.
அவர் இசையமைத்த காலத்தில் அவருக்கு இருந்த போட்டியைப் பார்த்தாலே மலைப்பாக இருக்கும். இளையராஜா, தேவா, ரஹ்மான், வித்யாசாகர், எஸ் ஏ ராஜ்குமார் என அனைவரும் சரிக்கு சமமாய் ஹிட் பாடல்களை கொடுத்துக் கொண்டிருந்த காலம்.
கடும் போட்டிக்கு மத்தியிலும் நிறைய ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார்.
#கலைஞர் ஒரு பொது கூட்டத்தில் பேசியது:
"நீதி" க்கு முன்பு 'அ' போட்டால் என்ன வரும்?
மக்கள் சொன்னார்கள் "அநீதி"
"நியாயத்திற்கு "முன்னால் ' அ' போட்டால்? மக்கள் சொன்னார்கள் 'அநியாயம்".
"சுத்தம்" முன்னாடி ' அ' போட்டால்?
மக்கள்; "அசுத்தம்".
மீண்டும் கலைஞர் கேட்டார் "யோக்கியன்" முன்னாடி 'அ' போட்டால்?
மக்கள்: "அயோக்கியன்".
இப்போது சொல்லுங்கள் உங்களுக்கு 'அ' போட்டது வேண்டுமா? 'அ' போடாதது வேண்டுமா?
மக்கள் சொன்னார்கள் 'அ' போடாதது தான் வேண்டும்.
அப்போது கலைஞர் சொன்னார். சிந்தியுங்கள் மக்களே..
"அதிமுக"விற்கு முன்னால் 'அ' போட்டிருக்கிறார்கள்.
திமுக வா?
அதிமுக வா?
இதை கேட்ட எம்.ஜி.ஆர் ஓடிப்போய் தன் கட்சியின் பெயரை அஇஅதிமுக என்று மாற்றியது வேறு கதை.
Lyrics புரியாம அந்த காலத்துல எல்லாரும் Soniya Soniya nu பாடிக்கிட்டு இருந்தோம் 🤧
இந்த Furniture aa எவனும் ரீமிக்ஸ் செய்றேன்னு செஞ்சு விட்டுறாதீங்க டா..🙏
. ஆஞ்சியோகிராம் இல்லாமல் மற்றும்மருத்துவமனைஇல்லாமலே ,இரண்டேநிமிடத்தில்,இருதயஅடைப்பை கண்டறியக் கூடியஅதி நவீன CT -700 என்றஇயந்திரம்கண்டறியப்பட்டு உள்ளது.
இது சென்னையில் இரண்டு இடங்களில் உள்ளது. இதற்கு செலவோ மிகக் குறைவு.
முன் கூட்டியே இருதய அடைப்பை கண்டறியும் போது ஆரம்ப கட்டத்தில் மாத்திரைகள் மூலமாகவே அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தி கொள்ள வாய்ப்பு உள்ளது.
இதன் மூலமாக பல லட்சக்கணக்கான சக்கரை நோயாளிகளை மாரடைப்பு இல்லாமல் காப்பாற்றலாம்.
மேலும் விவரங்களுக்கு,
DR. Vivekanandan,
Sri Vivekananda Hospitals,
No. 15, P. S. Siva Samy Street,
Mylapore.
(Opposite to ICICI Bank, Back Side of Nilgiri's)
Tel: 95000 37040, 72006 48296, 98401 25472, 44 4319 2129, Chennai.
எவருக்கு தேவையோ, அவருக்கு இந்த பகிர்வு உதவியாக இருக்க கூடும்.
கோயில் 🛕 நிலத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா கிடைக்குமா?
தமிழ்நாட்டில் உள்ள சட்டம் என்ன?
1. கோயில் நிலம் என்றால் என்ன?
தமிழ்நாட்டில் கோயில்களின் நிலங்கள் பெரும்பாலும் ஹிந்து அறநிலையத் துறை (HR&CE Department) கட்டுப்பாட்டில் உள்ளவை. இவை தனியார் சொத்துகள் அல்ல. இந்த நிலங்கள் “Trust property” ஆகும் — அதாவது, மக்கள் நலத்திற்காக வைத்திருக்கும் சொத்துகள்.
2. கோயில் நிலத்தில் வீடு கட்டி இருப்பவர்கள் — சட்டப்படி அவர்களுக்கு பட்டா கிடைக்குமா?
பொதுவாக இல்லை.
ஆனால், சில விதிவிலக்குகளுடன் அரசு நேர்முக அனுமதியுடன் மட்டும் பட்டா வழங்கப்படும்.
3. தமிழக அரசு மற்றும் சட்டச்சூழல்:
தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு —
கோயில் நிலங்களை தனிநபர்களுக்குச் சொந்தமாக்க முடியாது என்று கூறுகிறது.
⬇️ முக்கியமான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள்:
1. The Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Act, 1959
• இந்தச் சட்டத்தின் படி கோயில் சொத்துகள் மக்கள் நலத்திற்காகவே பாதுகாக்கப்பட வேண்டும்.
• தேவஸ்தான நிலங்களை விற்பது அல்லது நிரந்தர உரிமை வழங்குவது சட்டவிரோதமாகும், அரசு அல்லது நீதிமன்ற அனுமதி இல்லாமல்.
2. G.O. Ms. No. 299, Tamil Nadu Revenue Department, dated 3.9.2001
• இந்த அரசாணையின்படி, அரசு அல்லது கோயில் நிலங்களை அங்கீகரிக்க வேண்டாம் என்று Revenue துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
• இதன் பொருள்: கோயில் நிலத்தில் வீட்டுகள் இருந்தாலும், சட்டபூர்வமான பட்டா கொடுக்க முடியாது.
3. Encroachment Act & HR&CE Department Guidelines
• கோயில் நிலத்தில் பத்திரமின்றி வசிப்பவர்கள் தெளிவாக சட்டப்படி “Encroacher” என வரையறைக்கப்படுகிறார்கள்.
• இவர்கள் சட்டப்படி அந்த நிலத்திற்கு உரிமை கோர முடியாது.
• அறநிலையத்துறை அவசியம் என்றால் அந்த நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கலாம்.
4. நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
• உங்கள் வீடு கோயில் நிலத்தில் இருக்கிறதா என்பதை தாலுகா அலுவலகம்/வட்டாட்சியர் அலுவலகம் வழியாக சரிபார்க்கவும்.
• அறநிலையத் துறை (HR&CE) அருகிலுள்ள அலுவலரை நேரில் சந்தித்து நிலத்தின் நிலை (lease, patta, encroachment) பற்றி கேட்டறியவும்.
• நில உரிமை பெற விரும்பினால், சட்ட ஆலோசனை பெறவும் (உங்கள் பகுதியில் நில உரிமை வழங்கப்படும் வகை உள்ளதா என்பதை அறிய).
📃 கோயில் நிலம் பட்டா குறித்து சமீபத்தில் வெளியான தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
வருவாய் துறை சார்பாக 'பட்டா' வழங்கப்படுகிறது. நிலா உரிமையாளர்கள் அனைவரும் வைத்திருக்க வேண்டிய இந்த ஆவணத்தில் சர்வே எண், நிலம் அமைந்துள்ள பகுதி, நில உரிமையாளரின் பெயர் மற்றும் வகை ஆகிய முக்கியமான தகவல்கள் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில் புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்குவது தொடர்பான நடவடிக்கை எடுத்து வருகிறது தமிழ்நாடு. இதுக்குறித்து சமீபத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் வீடு, மனைகளுக்காக ஒதுக்கீடு பெற்று வாழ்ந்து வருபவர்களுக்கு பட்டா, கிரையப்பத்திரம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
நிலையான வழிகாட்டுதல்களுடன் வெளியான இதில் யாருக்கெல்லாம் பட்டா வழங்கப்படாது என தெளிவுப்படுத்தப்பட்டது. அதன்படி கோவில் வகைப்பாட்டில் வசிப்போருக்கு பட்டா கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், கோவில்கள், தேவாலயங்கள், வக்பு வாரியம் பெயரில் உள்ள நிலங்களில் மற்றும் நீர் நிலைகள் ஆகியவற்றில் வசிப்போருக்கு, பட்டா பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 'கோவில்' வகைபாட்டில் உள்ள புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கும் பட்டா வழங்கப்படாது என தெளிவுப்படுத்தப்பட்டு உள்ளது.
#KHBYTE #patta #Temple #Land #Tamilnadu
அறிவோம் உள்ளாட்சி நிர்வாகம்:
கிராம நத்தத்தை பற்றி புரியாமல் அவதிப்படும் இளையதலைமுறையினர்களுக்கான விளக்கங்கள்!
1. நத்தம் என்று வகை படுத்தப்பட்ட நிலங்கள் எல்லாம் குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்டது. டிடிசிபி,சிஎம்டிஏ அங்கீகார குடியிருப்பு மனைகள் சமீபங்களில் வந்தது.அதற்கு முன் எல்லாம் நத்தம் நிலங்கள் தான் வீட்டு மனைகள்!வெள்ளையர்கள் தமிழகத்தை ஒட்டு மொத்தமாக சர்வே செய்து நிலத்தை வகைபடுத்தும்போது பயிர் செய்யும் நிலங்கள் நஞ்சை,புஞ்சை,மானாவாரி,தரிசு என வகைப்படுத்தி விட்டு, அப்பொழுது அங்கு இருந்த பூர்வீக குடியிருப்புகளையும்,அதனை சுற்றி எதிர்காலத்தில் குடியிருப்பு தேவை அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு காலியாக உள்ள இடங்களையும் சேர்ந்தது “நத்தம்” என்று வகைப்படுத்தி வைத்தனர்.
2.சிஎம்டிஏ,டிடிசிபி உருவாகவில்லை என்றால் நத்தம்தான் இன்றுவரை வீட்டு மனை தேவைகளை நிறைவேற்றி கொண்டு இருக்கும்.ஒன்றே ஒன்று நினைவில் வைத்து கொள்ளுங்கள் நத்தம் என்றால் குடியிருப்புக்கான நிலம் ஆகும்.
3. நத்தத்தை பொதுவாக கிராம நத்தம் என்று சொல்வார்கள்.இன்னும் ஆழமாக கவனித்து பார்த்தால் ஊர் தெருவில் இருப்பது ஊர் நத்தம் என்றும் சேரியில் இருப்பதை சேரி நத்தம் என்றும் இன்றளவும் மக்களிடையே புழங்கி வருவதை காணலாம்.
4. கிராமத்தில் உள்ள நத்தம் இடம் அனைத்தையும் ஒரே புலபடமாக வரைந்து அதற்கு ஒரு சர்வே எண்ணை கொடுத்தோ அதிக பரப்பு இருந்தால் 2,3 சர்வே எண்களை கொடுத்து வகைப்படுத்தி இருப்பார்கள். பெரும்பாலும் 1ஹெக்டேர் இல் இருந்து 10 ஹெக்டர் பரப்புவரை நத்தம்நிலங்களை பிரித்து இருப்பர்
5. உதாரணமாக திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் சேவூர் கிராமம் என்று எடுத்துக்கொண்டால் அதில் இருக்கும் பழைய குடியிருப்புகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் நத்தமாக வகைபடுத்தி சர்வேஎண் 625 என்றும் அதன் விஸ்தீரணம் 6ஏக்கர் என்றும் வைத்து கொள்வோம்.
6. மேற்படி 6ஏக்கர் பரப்பில் 50 குடும்பம் தனது வீடு , தோட்டம் வழி என 2.5ஏக்கரில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். மீதி இருக்கிற இடங்கள் 3.5 ஏக்கர் காலியாக இருக்கும். இப்படி ஆட்கள் யாரும் இல்லாமல் இருக்கின்ற நிலங்களை “நத்தத்தில் புறம்போக்கு” என்று கூறுவார்கள் விட்டனர். 7. இப்படி நத்தத்தில் புறம்போக்காக இருக்கிற பகுதிகள் அரசினுடையது ஆகையால் ஆரம்ப பள்ளி , சுகாதார நிலையம், பஞ்சாயத்து அலுவலகம், நூலகம் ரேசன்கடை, பால் உற்பத்தியாளர் சங்கம் என்று அரசு உயர் பயன்பாட்டுக்கு எடுத்து கொள்ளும்.இன்னும் மீதம் இருக்கிற இடங்கள் யார் கைபற்றிலும் இல்லாமல் காலியாகவே இருக்கும் 8.மேற்படி 625 சர்வே எண்ணில் 2.5 ஏக்கரில் 50 குடும்பங்கள் இருப்பதாக சொன்னேன் அல்லவா, அந்த 50 குடும்பங்களும் 2.5 ஏக்கர் நத்தம் நிலத்தை சரிசமமாக பகிர்ந்து தலா 5 சென்ட் என்று கைப்பற்றுதலில் வைத்து இருக்க மாட்டார்கள். ஒருவர் 10 சென்டுக்கும் , ஒருவர் 8 சென்ட் மற்றொருவர் 4 சென்ட் இன்னொருவர் 1 சென்டுக்கு இன்னொருவர் 2 சென்ட் என்று ஆளுக்கு ஒரு விதமாய் கைப்பற்றுதலிலும் அனுபவித்தலிலும் இருப்பார்கள் 9. மேற்படி 50 நபர்களும் ஆளுக்கொருவிதமாய் கிரய(விடுதலை/செட்டில்மெண்ட் பாகபிரிவிணை) பத்திரங்கள் வைத்து வைத்திருப்பார்கள்.சில இடங்களில் கிரைய(விடுதலை/செட்டில்மெண்ட்/பாகபிரிவிணை) பத்திரங்களும் இல்லாமல் பூர்வீக அனுபவத்தில் இருப்பர். 10. உங்க வீட்டுக்கு பத்திரம் இருக்கே பட்டா இல்லையா? என்று கேட்டால் இது கிராம நத்தம், பட்டா தேவையில்லை , பட்டா கிடையாது பத்திரம் மட்டும்தான் என்று எல்லாம் சொல்வார்கள் 11.. நத்தம் நிலத்தில ஆரம்ப காலம் முதல் தொட்டே கிரயம், தானம்,விடுதலை, செட்டில்மென்ட் உட்பட அனைத்து சொத்து பரிமாற்ற பத்திரங்களும் சார்பதிவகத்தில் பதியப்பட்டது.அப்பொழுது நத்தம் நிலத்திற்கு பட்டா இருந்தால் பத்திரம் பதிவார்கள் என்ற நிலை இல்லை.இப்பொழுதும் நத்தம் சர்வே நடக்காத கிராமங்களிலும் பட்டா இல்லாமல் பத்திர பதிவு நடக்கிறது. 12.மேற்படி பத்திர பதிவுகள் எல்லாம் முழுபுலத்தின் சர்வே எண்ணை் வைத்துதான் நடக்கும். அதற்கு உட்பிரிவு சர்வே எணகள் இருக்காது.நான்கு மால் எல்லை (அ) ஜமாபந்தியில விவரிப்பதன் மூலமாக தான் ஒரு தனிப்பட்ட சொத்தை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.பிற சொத்துக்களில் உட்பிரிவு சர்வே எண்ணை வைத்து தெளிவாக அடையாள் கண்டு கொள்ள முடியும். 13.கிராம நத்தத்தை பற்றி விவரம் தெரிந்தவர்கள் காலியாக இருக்கும் நத்தம் புறம்போக்கு இடங்களை மடக்கி அனுபவித்து கொண்டு இருக்கின்றனர்.சில ஊர்களில் அதனை வீட்டு மனைகளாக பிரித்து ஊரில் இருப்பவர்கள் எல்லாம் சரிசமமாக பங்கு போட்டு கொண்டனர். ஒரு சில இடங்களில் அரசே காலியாக இருக்கும் இடங்களை பிரித்து நிலமற்றவர்களுக்கு , அடித்தட்டு மக்களுக்கு வீட்டு மனை ஒப்படையாக வழங்கி உள்ளது.
14. மேற்படி அரசு கொடுத்த ஒப்படைகள் ஆவணங்கள் கிராம அ.பதிவேடுகளில் நத்தம் கணக்குகளில் இன்று வரை ஏற்றபடவே இல்லை. எல்லா ஒப்படைகளும் முன்பு சொன்னது போல்தான் ஒரே முழுபுலசர்வே எண் தான்.ஒவ்வொரு நில ஒப்படைகளின் மனை உட்பிரிவு செய்து தனி எண்கள் கொடுக்கப்படவில்லை.புலபடத்தில் உட்பிரிவு (Fmb cut) வெட்டி வரையாமலே இருக்கின்றனர்.
15.சுதந்திரம் அடைந்த 1947ஆம் ஆண்டு முதல் 1990வரை கிராம நத்தம் என்றால் மேற்சொன்ன விஷயங்கள் தான் நடந்தது. 1990 to 1995 வரை தமிழக கிராமங்களில் உள்ள நத்த நிலத்திற்கு நத்தம் நிலவரித் திட்டம் கொண்டுவரப்பட்டது.
16.நத்தம் நிலவரி திட்டம் என்றால் இருக்கின்ற நத்தம் நிலங்களை துல்லியமாக அளந்து யார் யாரிடம் எவ்வளவு இடம் இருக்கிறது. என வரைப்படம் வரைந்து போது இடங்களை தனியாக வகைப்படுத்தி வழிகளை ஒழுங்குபடுத்தி அளந்து அதனை எல்லாம் ஒரு படமாக வரைந்து ஒவ்வொன்றுக்கும் உட்பிரிவு எண் கொடுப்பார்கள்.
17. உதாரணமாக முன் குறிப்பிட்ட திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், சேவூர் கிராமத்தில் சர்வேஎண் 625 க்கு 50வீடுகள் 2.5 ஏக்கர் பரப்பில் இருந்தது என்று சொல்லி இருந்தேன்.அவை நத்தம் நிலவரி திட்டத்திற்கு பிறகு 625/1, 625 /2, 625/3, 625/4…..625/49,625/50 வரை உட்பிரிவு செய்து நத்தம் புலப்படத்தில் மேற்க்கண்ட 50 உட்பிரிவுகளை குறிப்பிட்டு நத்தம் FMB தயாரிப்பர்.
18. சர்வே செய்ய வரும்போது யார் யார் நத்தத்தில் அனுபவத்தில் இருந்தார்களோ அல்லது யார் கிரயப்பத்திரங்கள் வைத்து இருக்கிறார்களோ அவர்களின் பட்டியல் தாயாரிக்கப்பட்டு நத்தம் பதிவேடு உருவாக்கப்பட்டு அந்த மக்களுக்கு நத்தம் பட்டாவும் வழங்கப்பட்டது.
19. மேலும் நத்தம் நிலவரி திட்ட தோராய பட்டா, நத்தம் நிலவரி திட்ட தூய பட்டா என இரண்டு படி நிலையான நடைமுறைகள் நத்தம் நிலவரி திட்ட சர்வேயில் பின்பற்றபடுகின்றன.
20. நத்தம் நிலவரி திட்ட தோராய பட்டாவில் , பிழைகள் ,தவறுகள் விஸ்தீரண அளவுகளில் சிக்கல்கள் இருந்தால் அதனை சரி செய்து கொள்ள மனு செய்வதற்கு கால அவகாசம் கொடுப்பார்கள்.
21.மேலும் ஒருவர் நத்ததில் 10 சென்ட் அனுபவத்தில் இருந்தால் 10 சென்ட்டுக்கும் நத்தம் பட்டா கொடுக்கமாட்டார்கள்.3 செண்டுக்கோ அல்லது 4 செண்டுக்கோ நத்தம் தோராய பட்டா தருவார்கள்.மீதி இடத்தை அரசு இடமாக அறிவித்துவிடுவர்.அதனை ஆசேபிப்பவர்கள் அரசிடம் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் மனு செய்யலாம்.இந்த பட்டா ஒரு தற்காலிக பட்டா ஆகும்.
22. தோராய பட்டாவில் முழுமையாக விவரங்கள் மக்களிடம் இருந்து வந்த பிறகு தவறுகள் எல்லாம் களைந்து இறுதியான பட்டாவாக கொடுப்பது நத்தம் நிலவரி திட்ட தூய பட்டா ஆகும். இந்த பட்டா தாயாராகும் போதே நத்தம் தூய அடங்கல் பதிவேடும் தயாராகிவிடும்.
23. 1990 க்கு பிறகு தான், கிராம நத்த நிலத்திற்கு நத்தம் FMB நத்தம் தூய அடங்கல்,நத்தம் தோராய பட்டா, நத்தம் தூய பட்டா போன்ற ஆவணங்கள் உருவாகின. இதனால் தான் யார் யார் எந்த ஏந்த நிலத்தை வைத்து இருக்கிறார்கள் என துல்லியமாக கணக்கெடுக்கப்பட்டது. அதற்கென தனி சர்வே எண் உட்பிரிவுகளும் வந்ததால் புதிதாக பதியப்படும் கிரைய பத்திரங்கள் மற்றும் பிற பரிவர்த்தனைகளிலும் சர்வே எண்ணும் அதன் உட்பிரிவு எண்களும்ஆவணப்படுத்தபட்டன.
24. இதுவரை கிராம நத்தம் வரலாறு கோர்வை படுத்தி இருக்கிறேன். இனி கிராம நத்தம் நிலத்தில் என்னென்ன சிக்கல்கள் இருக்கிறது என்பதனை பார்க்கலாம்.
25. கிராம நத்த ஆவணங்களில் FMB தூய அடங்கல் தோராய பட்டா போன்றவை இன்றுவரை கணினி மயமாக்கப்படவில்லை. அதனால் இன்னும் ஆன்லைன் ஆகவில்லை. இன்றைய தலைமுறையினர் கிராம நத்த பட்டாவை ஆன்லைனில் தேடுகின்றனர். இவையெல்லாம் தற்போது ஆன்லைனில் கிடைக்காது என்பதே உண்மை.
26. இன்னும் பல கிராமங்களில் ஆரம்ப கட்ட நத்தம் நிலவரி திட்ட சர்வேக்களே செய்யாமல் இருக்கின்றனர். அதனால் நத்தம் FMB நத்தம் பட்டா இல்லாமல் வீட்டுகடன் வங்கிகடனுக்கு வாய்ப்பில்லாமல் அவதி பட்டு கொண்டு இருக்கினர்
27. மேலும் தமிழகத்தின் பல கிராமங்களில் நத்தம் நிலவரி திட்ட தோராய பட்டா மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இறுதி பட்டாவான நத்தம் நிலவரிதிட்ட தூய பட்டா நடைமுறை அப்படியே கிடப்பில் இருக்கிறது.
28. மேலும் பல கிராமங்களில் நத்தம் நிலவரி திட்ட தூய பட்டா வந்தாலும், அதில் பல தவறுகள் இருக்கிறது. உரிமையாளர் பெயர் தவறுதலாக உள்ளது. உரிமையாளர் கிரைய பத்திரம் வைத்து இருந்தும், வேறு நபர் மீது தூய பட்டா கொடுக்கப்பட்டு இருக்கிறது. தூய பட்டாவில் எங்கள் இடத்தை சேர்த்து பக்கத்து வீட்டுக்காரர் தூயபட்டாவில் ஏற்றிவிட்டார்கள். என் இடத்தை புறம்போக்கு என வகைப்படுத்தி விட்டனர். என பல குளறுபடிகள் நத்தம் நிலவரிதிட்ட தூய பட்டா கொடுத்த சர்வேயிலும் இருப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
29. தவறுதலாக நத்தம் பட்டாவில் பெயர் ஏறியவர் அல்லது பெயர் எறியவரின் வாரிசுகள் மேற்படி பட்டாவை வைத்து எங்களுடைய நிலம் என்று வழக்கு போடுகின்றனர். உண்மையான நில உரிமையாளர் மலங்க மலங்க முழித்துகொண்டு நீதிமன்ற வாயில் நின்று கொண்டு இருக்கிறார்கள்.
30. நத்தம் நிலவரி திட்ட சர்வே நடக்காத கிராமஙக்ளில் முழு புலத்தின் உட்பிரிவு செய்யபடாத ஒரே சர்வே எண்ணை வைத்து ஒரே இடத்திற்கு வேறு வேறு நபர் பெயரில் இரண்டுக்கு மேற்பட்ட பத்திரங்கள் பதியப்பட்ட்டு ஓர் இடம் இரு பத்திரங்கள் என்ற பிரச்சனையாகி இரண்டு நபரும் நீதிமன்றத்தில் மல்லுகட்டி கொண்டு இருக்கிறார்கள்.
31.நத்தம் நிலவரி திட்ட சர்வேயில் நிலத்துக்கான பத்திரங்கள் நில உரிமையாளர் வைத்து இருந்தாலும் புறம்போக்கு என நிலவரிதிட்ட சர்வேயில் வகைப்படுத்திவிட்டால் பட்டா இடமாக மாற்ற வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தவம் இருக்கிறார்கள்.
32.பல கிராம நத்த இடத்தை அரசு இலவசமாகவோ பணம் வாங்கி கொண்டோ ஒப்படையாக வழங்கி இருக்கும்.நத்தம் சர்வே இதுவரை நடக்காத கிராமங்களில் மற்றும் சர்வே நடந்த கிராமங்களின் கிராம கணக்கில் குறிப்புகளாக கூட ஒப்படை பற்றிய விவரங்கள் இருக்காது. அரசு புறம்போக்கு ஆக்கிரமிப்பு என்று 10,20 ஆண்டுகளுக்கு பிறகு யாராவது வழக்கு தொடுத்தால் ஒப்படை நிலம்தான் என்று நிரூபிக்க அரசிடம் இது சம்பந்தப்பட்ட தனது BACK END கோப்புகள் தேடி எடுக்க முடியாமல் தவித்து கொண்டு இருக்கின்றனர்.
33.நத்தம் இடங்களில் உங்களுக்கு சிக்கல்கள் இருந்தால் முதலில் அங்கு நத்தம் நிலவரிதிட்ட சர்வே நடந்ததா?
என்று பார்க்க வேண்டும்.அப்படி நடந்தால் தோராய பட்டாவில் உள்ளதா தூயபட்டாவில் உள்ளதா என பார்க்க வேண்டும்.நத்தத்தில் அரசு நில ஒப்படை கொடுத்து இருந்தால் அரசிடம் அது சம்மந்தபட்ட கோப்புகள் இருக்கிறதா என்று ஆராயவும்.அதன் பிறகு ஆவண நிலவரங்களுக்கு ஏற்றவாறு மாவட்ட ஆட்சியருக்கு மனுவோ நீதிமன்ற வழக்குககளுக்கோ செல்ல வேண்டும்.
#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #உள்ளாட்சிநிர்வாகம் #நத்தம்
தமிழ்நாட்டில் நத்தம் புறம்போக்கு பட்டா வாங்குவது எப்படி?
⬇️ அதற்கான வழிமுறைகள் என்ன?
1. நத்தம் என்றால் என்ன?
“நத்தம்” என்பது ஒரு பழைய தமிழ் சொல். அரசு ஆவணங்களில் இது “Natham Land” என்றே குறிப்பிடப்படுகிறது.
✔️ நத்தம் என்பது பழமையான கிராமப்புறங்களில் குடியிருப்பிற்காகப் பயன்படுத்தப்படும் அரசு நிலம்.
✔️ இது பொதுவாக மக்களின் வீடுகள் அமைந்துள்ள இடங்கள், ஆனால் தனியுரிமை (patta) இல்லாமல் வசித்து வருபவர்கள் அதிகம்.
✔️ இந்த நிலம் புறம்போக்கு நிலம் என அரசு வகைப்படுத்தியிருந்தாலும், மக்கள் நீண்டகாலமாக குடியிருப்பாக பயன்படுத்தி வருகின்றனர்.
2. நத்தம் புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்குவது எப்படி?
தமிழ்நாட்டில் நீண்ட காலமாக குடியிருப்பாக பயன்படுத்தப்படும் நத்தம் நிலத்திற்கு பட்டா பெற கீழ்க்கண்ட செயல்முறைகளை பின்பற்ற வேண்டும்:
3. நத்தம் புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறும் வழிமுறை:
அடிப்படை தகுதிகள்:
✔️ குறைந்தது 10 ஆண்டுகள் அந்த நிலத்தில் தொடர்ந்து குடியிருப்பதாக இருக்க வேண்டும்.
✔️ நிரந்தர வீடு, வீட்டில் குடிநீர் / EB connection போன்றவைகள் இருக்க வேண்டும்.
✔️ நிலத்தில் எந்தவிதமான உரிமை உரையாடல் அல்லது வழக்குகள் இருக்கக்கூடாது.
⬇️ வழிமுறை (Procedure):
1. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகுதல்:
• உங்கள் ஊரின் VAO (Village Administrative Officer), RI (Revenue Inspector), அல்லது தாசில்தார் அலுவலரை சந்திக்க வேண்டும்.
• அவர்கள் வழிகாட்டுதலுடன் நீங்கள் பட்டா பெற விண்ணப்பம் செய்யலாம்.
2. விண்ணப்பித்தல்:
• நத்தம் பட்டா விண்ணப்பப் படிவம் நிரப்ப வேண்டும் (இது பொதுவாக தாலுகா அலுவலகத்தில் கிடைக்கும் அல்லது ஆன்லைனிலும் செய்யலாம்).
• விண்ணப்பத்துடன் கீழ்கண்ட ஆவணங்கள் இணைக்க வேண்டும்:
• வசிப்புத் தகவல் ஆதாரம் (Ration card, Aadhaar, EB bill)
• நிலத்தை நீண்ட காலமாக பயன்படுத்திய ஆதாரங்கள்
• வீட்டின் புகைப்படம்
• வரி செலுத்திய ரசீதுகள் (Property/water/house tax)
3. நில சரிபார்ப்பு:
• அதிகாரிகள் உங்கள் நிலத்தை நேரில் பார்வையிட்டு, பொதுப் பயன்பாட்டில் இல்லையா, தனியாக உபயோகிக்கப்படுகிறதா என்பதை சரிபார்க்கிறார்கள்.
4. பரிசீலனை மற்றும் அனுமதி:
• நிர்வாக அதிகாரிகள் (Tahsildar, DRO) பரிசீலித்து, உரியால் பட்டா வழங்க முடியும் என்றால் Collector அனுமதி பெறப்படும்.
5. பட்டா ஒதுக்கீடு:
• அனுமதி கிடைத்த பிறகு, உங்கள் பெயரில் பட்டா (Patta) வழங்கப்படும்.
•அதன் பிறகு, அந்த நிலத்தை உங்கள் சொத்து என பதிவு செய்து, வரி செலுத்தலாம்.
⬇️ முக்கிய குறிப்புகள்:
• பொதுப்பணிகளுக்கான புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா தரப்படுவதில்லை (e.g., ரோடு, குளம், கோவில் நிலம்).
• அரசு சில சமயங்களில் நத்தம் நிலங்களுக்கு பட்டா வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்துகிறது — அவற்றில் கலந்து கொள்ளலாம்.
• ஆன்லைனில் https://t.co/dRJpKpIvjl என்ற அரசின் இணையதளம் மூலமும் விவரங்களை பெறலாம்.
📝 தேவைப்படும் ஆவணங்கள் (Documents Required):
✔️ இருப்பிட ஆவணங்கள் :
• ஆதார் அட்டை
• வாக்காளர் அட்டை
• ரேஷன் கார்டு
✔️நில உபயோகத்தின் ஆதாரங்கள்:
• மின் (EB) connection bill (குறைந்தது 10 ஆண்டுகளுக்கு மேல் இருப்பது சிறப்பு)
• குடிநீர் connection bill
• வீட்டு வரி ரசீது (property tax)
• வீட்டு புகைப்படம் (நிலத்தில் இருக்கும் வீடு)
✔️ புறம்போக்கு நிலம் தொடர்பான வரலாறு:
• நிலத்தில் நீண்டகாலமாக வசித்து வருவதை நிரூபிக்கும் சாட்சியங்கள் (ஊராட்சி சான்று, பெரியோர் சான்று)
• வில்லேஜ் நகல் / புறம்போக்கு நில காப்பியல்
✔️ VAO/RI சான்றுகள் (இவை உங்கள் கோரிக்கையை ஆதரிக்க அதிகாரிகளால் பெறப்படும்)
தகவலை அறிந்துக்கொள்வதற்கு மட்டுமே. சில நடைமுறைகளில் மாற்றம் இருக்கலாம். மேலும் இதை சார்ந்த அலுவலர் மற்றும் அலுவலகங்களை தொடர்பு கொண்டு மேலும் தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.
#KHByte #Useful #Information
#பயனுள்ள_தகவல்
மனித உடலை பாதுகாக்க சித்தர்கள் சொன்ன உணவு முறைகள்:
மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த சில எளிய வழிகள்
மூளை:
கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.
குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.
வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.
தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.
கண்கள்
பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.
தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும்.
அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரை சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்.
வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டைகாய் மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது.
தினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்னைகள் வராது.
தினமும் 5 பாதாம்களை சாப்பிட்டு வரவேண்டும் கண் பலப்படும்.
பற்கள்
மாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.
கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.
செவ் வாழைப்பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது.
பல் உறுதியாக, உணவை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். கேரட், கரும்பு, ஆப்பிள் போன்றவற்றைப் பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
நரம்புகள்
சேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நரம்புகள் பலம் பெறும்.
இரண்டு அத்திப்பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வர நரம்புகள் பலம் பெறும்
மாதுளைப் பழச்சாற்றில் தேன் கலந்து 48 நாள்கள் குடித்து வர நரம்புகள் வலுப்பெறும்.
இலந்தைப் பழத்தை அவ்வப்போது சுவைத்து வர நரம்புகள் பலம் பெறும்.
கரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நரம்புகளுக்கு நல்லது.
ரத்தம்
வாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும்.
திராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.
தினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.
அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.
இரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு 10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.
சருமம்
தேகம் பளபளப்பாக மாற ஆவாரம் பூ டீ குடித்து வரலாம். ஆரஞ்சுப் பழத்தையும் சாப்பிட்டு வரலாம்.
முட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்
சந்தனக் கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசினால் பருக்கள் நீங்கும். முகம் பிரகாசமாகும்.
ஆரோக்கியமான உடல், பொலிவான முகம், பளபளப்பான சருமம் பெற அறுகம்புல்லை நீர் விட்டு அரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறைக் குடித்து வர வேண்டும்.
நுரையீரல் & இதயம்
தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலமாகும்.
கரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லது.
ஆர்கானிக் ரோஜாப்பூ, பனங்கற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியம் போல கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலமாகும்
இஞ்சி முரப்பா, இஞ்சிச்சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும்.
சுண்டை வற்றலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
கருப்பு திராட்சை ஜூஸ், கருப்பு உலர் திராட்சையை சாப்பிட இதயம் பலம் பெறும்.
முள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.
ஆளிவிதைகள், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு இருப்பதால் இதயத்துக்கு நல்லது
வயிறு
காலையில் எழுந்ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு சிறிதளவு தயிரையும் குடிக்க வேண்டும். வயிறு சுத்தமாகும்.
மாதுளம்பூவை தேநீராக்கிக் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.
வறுத்துப் பொடித்த சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடிக்க வேண்டும்.
வாரத்தில் இரண்டு நாள்கள் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்துக் குடித்து வருவதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் எதுவும் வராது.
சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ள தொப்பை கரையும்.
வாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும்.
வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிடக் கெட்டக் கொழுப்பு கரையும். தொப்பையும் குறையும்.
கல்லீரல் & மண்ணீரல்
கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும்.
மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்.
திராட்சை பழச்சாற்றை அருந்தி வந்தால் கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.
மலக்குடல்
அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும்.
பப்பாளிப் பழத்தை வாரம் மூன்றுமுறை சாப்பிடுவது நல்லது.
அடிக்கடி முளைக்கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வரலாம்.
மாலை ஆறு மணி அளவில், மாம்பழ சீசனில் மாம்பழத்தைத் தொடர்ந்து சுவைத்து வரலாம்.
மாதுளைப்பூ சாறு 15 மி.லி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேளையும் குடித்து வரவேண்டும்.
பாதம்
விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்
லேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.
வாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும்.
இரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி - மடக்கும் பயிற்சியைச் செய்து வரவேண்டும். ரத்த ஓட்டம் சீராகும்.
#இன்றயதகவல் #தெரிந்துகொள்வோம்