நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
பேரறிஞர் பெருந்தகை அண்ணா ஆரம்பித்த இயக்கத்தில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்றும் கடுகளவு கூட இல்லாமல் ஆபாச பேச்சுக்களை மக்கள் மத்தியில் பேசி பெண்களை கீழ்த்தரமாக பார்க்கும் ஆபாசநிதிக்கு வன்மையான கண்டனங்கள்!
உங்கள் ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்வது நல்லது, பெருமைமிகு பெண்களை கேவலமாக நினைத்து பேசினால் சுயமரியாதை எனும் தீ உங்கள் ஆணவத்தை சாம்பலாக்கிவிடும்!
#ஆபாசநிதி
தமிழக அரசியலில் சிலர் பேசும் கருத்துக்கள் கவலை அளிக்கக் கூடியதாக இருக்கின்றன.. இன்று காவிரிக்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி @Udhaystalin .. காவிரி போராட்டத்தில் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்றோ தமிழ்நாட்டிற்கான உரிமை கிடைக்கவில்லை என்றோ எந்தவித கவலையும் இல்லாமல்.. கேட்கவே கூசும் அளவிற்கு கொச்சையான வார்த்தைகளை. முதலமைச்சரை @CMOTamilnadu@TVKVijayHQ .. விமர்சிக்கிறோம் என்ற பெயரில்.. மோசமான உள்ளர்த்தம் கொண்ட வார்த்தைகளைப் பேசியிருப்பது கட்சி எல்லை கடந்து அனைவரும் கண்டிக்க த்தக்கது... எவ்வளவு மாற்றுக்கருத்துகள் மாற்று சிந்தனைகள் இருந்தாலும்... விமர்சிக்கும் பொழுது சிந்தனையில் ஒரு தூய்மை தேவை. சிந்தனை இவ்வளவு அழுக்காக இருந்தால்.. அது @arivalayam திமுகவிற்கு நல்லதல்ல.. அவர்கள் தரம் உயரும் என்று எதிர்பார்ப்பதிலும் நியாயம் இல்லை என்றே தோன்றுகிறது.
அரசியல் நாகரிகத்தையும் பேச்சு நாகரீகத்தையும் கடைப்பிடிப்பதே மக்கள் விரும்பும் நாகரீகம்.. மோசமாக விமர்சனம் செய்துவிட்டு சிறையில் இருப்பதையும் ஊழல் செய்துவிட்டு சிறை செல்வதையும் பெருமை என்று நினைக்கும்
இவர்களிடம் வேறு எதைத் தான் நாம் எதிர்பார்க்க முடியும்?
@BJP4TamilNadu@BJP4India@ANI@PTI_News@pibchennai
விவசாய போராட்டம் என்று நாடக போராட்டம் போட்டு ஆயிரக் கணக்கான ஆண்கள் முன்னிலையில் நடிகை த்ரிஷா பற்றி தரங்கெட்ட தனமான அசிங்கமான இரட்டை அர்த்த வார்த்தையை சம்பந்தில்லாமல் பேசிய உதயநிதி !
பெரம்பூரில் கிறிஸ்தவர் வேட்பாளராக நிற்பது மதவாதம்
என்று சொல்பவர்களும் அங்கே ஒரு கிறிஸ்தவரை தான் வேட்பாளராக நிறுத்தி இருக்கிறார்கள் 😄
என்னதான்டா ஆச்சு உங்களுக்கு?
இன்று எனது பிறந்த நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், எனது ஆருயிர் தலைவர் @CMOTamilnadu | @TVKVijayHQ அவர்களை நேரில் சந்திந்து ஆசிகளும் வாழ்த்துகளும் பெற்றேன்.
காலம் உள்ளவரை இந்த வாழ்வை எனக்களித்த தளபதி அவர்களுக்கும், திருவரங்கம் சட்டமன்ற தொகுதி மக்களுக்கும், தமிழ் மண்ணிற்கும் நேர்மையாக உண்மையாக உழைப்பேன்!
இன்று பிறந்தநாள் காணும் திருச்சியின் அடையாளம், திருச்சியின் பொறுப்பு அமைச்சர் அன்பு அண்ணன் மாண்புமிகு
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் @RameshOffcl அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ♥️
இவண்
திருச்சிகல்லக்குடி பேரூர் கழகச் செயலாளர்
K.மணிவண்ணன் MA.
இன்று பிறந்த நாள் காணும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், ஆருயிர் அன்பு தம்பி @RameshOffcl அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். உங்கள் பயணம் அனைத்தும் வெற்றியாக அமைய வாழ்த்துகிறேன் தம்பி 🫶.
கடுமையாக உழைத்து மாண்புமிகு முதல்வர் தலைவர் தளபதி அவர்களின் அன்பைப் பெற்று உயர்ந்து வரும் உன் பயணம் மென்மேலும் உயர்ந்து கொண்டே இருக்கும்.
உன் எல்லா நேரத்திலும், எல்லா நிலையிலும் அண்ணனாக அரவணைத்து நிற்பேன் தம்பி.
உன் வளர்ச்சியை கண்டு பொறுக்க முடியாமல் உனக்கு எதிராக பரப்பப்படும் பொய்கள் அனைத்தும் உன் புன்னகையால் தவிடு பொடியாகி விட்டது.
நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.
நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.
நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
From entertaining hearts to leading the state… some journeys are truly EXTRAORDINARY.
It was an honour to greet our Honourable Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay sir.
From Rasigan Express, to the Vijay Awards stage, to sharing the screen in GOAT… and now, this moment with you, sir. This will always be the most special.
The brotherhood. The bond. It continues… ❤️
@TVKVijayHQ@CMOTamilnadu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
உங்களின் தலைமையில் தமிழகம் ஒரு புதிய பொற்காலத்தை நோக்கிய அடிகளை எடுத்து வைத்துள்ளது. கல்வி, சுகாதாரம், தொழில் மற்றும் உள்கட்டமைப்பு என அனைத்துத் துறைகளிலும் நீங்கள் மேற்கொள்ளும் புரட்சிகரமான மாற்றங்கள் அனைத்தும் என்றும் நீடித்திருக்கக் கூடிய புதிய வரலாற்றைப் படைத்து வருகிறது.
இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் தொலைநோக்குப் பார்வையும், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், குழந்தைகள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் அரவணைத்து, அவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கிய உங்களின் சிந்தனைகள் என்றும் போற்றத்தக்கவை.
நீங்கள் நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்துடனும், நீடித்த ஆயுளுடனும் வாழ்ந்து, நம் மாநிலத்தை தொடர்ந்து வழிநடத்த வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்காக நீங்கள் மேற்கொள்ளும் உன்னதப் பணியில் உங்களோடு இணைந்து பயணிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
வாழ்க தளபதி! வாழ்க வெற்றித் தலைவர்!
நம் தளபதி… நம் தலைவர்… தமிழக மக்களின் நம்பிக்கை! தமிழ்நாட்டின் எதிர்காலம்!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தளபதி!
#HBDCMJosephVijay
@TVKVijayHQ
இந்தக் கல்வி ஆண்டின் முதல் நாளை, புதிய நம்பிக்கையோடு தொடங்கும் என் அன்பிற்குரிய மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
கல்விதான் உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி. உயரிய கனவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள், அதற்கேற்ப கடினமாக உழையுங்கள். பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றமாக இருக்கட்டும்.
மகிழ்ச்சியாக கற்றுக்கொள்ளுங்கள், வெற்றி உங்களைத் தேடி வரும்!
#CMJosephVijay