இருப்பதை விடவும் கொடூரமானது புதிய சட்டம்! இரட்டை வேடம் போடுகிறதா அரசாங்கம்?
மக்களுக்கு அளித்த வாக்குறுதியை மீறி, ஒரு கட்சி ஆட்சியை நிலைநிறுத்தும் நோக்கோடு கொண்டு வரப்படும் இந்தச் சட்ட மூலத்தை நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு முழுமையாக எதிர்க்க வேண்டும்!
#RepealPTA#Srilanka
எவரையும் கைது செய்யலாம், எதற்கும் கைது செய்யலாம், எதற்கும் கைது செய்துவிட்டு அதை பயங்கரவாத வரைவிலக்கணத்துக்குள்ளே கொண்டு வரலாம்.
இது சட்டத்தின் ஆட்சி அல்ல; சட்டத்தைக் கொண்டே ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் அதிகாரத் திமிர்!
Repeal PTA No to PSTA
LTTE சின்னங்களோ, பெயரோ இல்லாத பாடலுக்காக கலைஞர் சங்கீதன் கணேஷ்குமார் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டது நீதியின் எந்தப் பக்கத்தில் சேரும்? கருத்துச் சுதந்திரத்தையும் கலை வெளிப்பாட்டையும் அச்சுறுத்தும் இத்தகைய சட்டங்கள் தொடர்வது ஆபத்தானது.
#PSTA#PTA
போராட்டத்திற்காகக் கைது… இறுதியில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு!
2022 மாணவர் போராட்டத்தில் வசந்த முதலிகே PTA சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டதை, "அடிப்படை உரிமை மீறல்" என 2026 மார்ச் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. M.A. சுமந்திரன் PC உள்ளிட்ட வழக்கறிஞர்களின் வாதத்தால் வென்றது நீதி!